மதம் என்ற சொல்லாடல் முழுமுதல் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் அது பல்வேறு விதமான குறிப்பீட்டிற்குள் போய் நின்றிருக்கிறது. இயற்கையின் சார்பாக வாழ்ந்த ஆரம்ப கால மனிதனுக்கு மதம் என்ற சொல்லாடல் அறியப்படாதிருந்தது. அவனின் நனவிலி மனத்திற்குள் கூட அது வரவில்லை. புறவய உலகம் அனிச்சையாக இருந்தது. இயற்கையின் நடவடிக்கைகளான இடி, மின்னல், மழை, வெள்ளம் போன்றவற்றை அவன் வெறும் புலன்சார் அனுபவமாகவே குறுக்கிப் பார்த்தான். இனக்குழுவாக வாழ்ந்த மனிதன் தன் அடையாளங்களை அங்கங்களற்ற உடல் மீது வரைந்து கொள்வதற்கு முன் இயற்கையின் நடவடிக்கைகள் அவனுக்குள் ஒருவித பயச்சிக்கலை உருவாக்கின. நமக்கு சமகாலத்தில் மழை என்பது தேவைகளை நிறைவேற்ற கூடியதாக இருக்கிறது. அவனுக்கு நேர்மாறாக இருந்தது. அவனால் அதனை புரிந்து கொள்ள முடியாமல் போன போது அதனை தணிவிக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டான். இவைகள் தான் மந்திரங்கள். இதனை நீட்டித்துக் கொண்டு பல்வேறான தணிவிப்புகள் நடந்தன. அவையே நம்பிக்கைகளாக, சடங்குகளாக, யாகங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டன. ஆரம்பல கால மனிதனால் விளங்கி கொள்ள முடியாமல் போன சில கருதுகோள்களுக்கு பின் காரணம் இருப்பதாக யூகித்தான். காரண-காரிய நிலையோடு இவற்றை உட்படுத்தினான். அவன் காரணமாக கருதியது இறைவன் என்று அர்த்தப்படுத்தப்பட்டது. இதன் பின் தான் இறைவன் உலகையும் மற்ற இனங்களையும் படைத்தான் என்பது உணரப்பட்டது. ஆன்மா, மறுபிறப்பு, கர்மவினை போன்ற கருதுகோள்கள் இதன் பின்னர் வெளிவந்தன. உலகின் இருபெரும் மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் மூல கருத்தியல் இவ்வாறானது தான். அறிவின் படைப்பு ஏற்படுவதற்கு முன் அறியப்படாத ஒன்று தான் இருந்தது. விலக்கப்பட்ட கனி என்பதிலிருந்து தொடங்கும் அவற்றின் மூலக்கருத்தியல் அக்கனியை உண்டது மூலம் ஆதாம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். புறப்பொருட்கள் மீதான நம் புலன்களின் செயல்பாடே அறிவு என்பது. இங்கு கனி என்பது புறப்பொருள். அதை உண்பது என்பது புலன் நடவடிக்கை. அறிவின் படைப்பே இது தான். சாத்தான் என்பது புலணுணர்வின் தூண்டல். மனித உடலின் இருப்பு இதிலிருந்து தான் ஆரம்பமாயிற்று. மத்தின் தோற்றம் பற்றிய மேற்கண்ட அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் புத்தர். புத்தர் தன் கோட்பாட்டிற்கு தம்மம் என்று பெயாிட்டார். மதம் - அதாவது ரிலீஜியன்ஸ் என்ற சொல் குறிப்பிடுவது இவ்வுலகம் சாராது. மதம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவைப் பற்றி குறிப்பிடும். ஆனால் தம்மம் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயான உறவைப் பற்றி குறிப்பிடும். மதம் மறு உலகைப் பற்றி குறிப்பிடும். தம்மம் இவ்வுலகைப் பற்றி குறிப்பிடும். தம்மம் என்பதே பிரக்ஞை தான். மதம் பிரக்ஞையற்றது. மதத்தின் நோக்கம் வேறு. தம்மத்தின் நோக்கம் வேறு. ஒரு தடவை புத்தருக்கும் சுநக்கத்தருக்கும் இது குறித்து உரையாடல் நடந்தது. சுநக்கத்தர் புத்தரிடம் இப்போது நான் மேன்மை தங்கிய தங்களை விட்டு நீங்கி விடுகிறேன். இனி தங்களை என் போதகராக நான் ஏற்க போவதில்லை.
அதற்கு புத்தர் சுநக்கத்தரே நான் எப்போதாவது தங்களை என் சீடராக இருக்கும்படி அழைத்ததுண்டா ?
இல்லை. அவ்வாறு தாங்கள் என்னை அழைத்ததில்லை.
நல்லது. மேன்மை தங்கிய கோதமரே* தாங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்கள் எதையும் எனக்கு நிகழ்த்தவில்லையே*
சுநக்கத்தரே* நான் தங்களிடம் எப்போதாவது வாருங்கள் சுநக்கதரே* என்னை தங்கள் ஆசானாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்களை உமக்கு நிகழ்த்தி காட்டுகிறேன் என்று சொன்னதுண்டா ? இல்லை* தாங்கள் அவ்வாறு கூறியதில்லை. அல்லது நீங்கள் மேன்தங்கிய புத்தரே* எனக்காக சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்தி காட்டுங்கள் என்று கேட்டதுண்டா ? இல்லை. நான் அவ்வாறு கேட்டதில்லை. நானும் உங்களிடம் அவ்வாறு கூறியதில்லை. நீங்களும் என்னிடம் அதைக் கேட்டதில்லை. பின் என்னை விட்டு நீங்குவதைப் பற்றி பேச நீங்கள் யார் ? நான் யார் ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டாலும் நிகழ்த்தப்படாவிட்டாலும் நான் தம்மத்தை கற்றுத் தருவதன் நோக்கம். தீங்கு செய்பவன் தீங்கை அழிப்பது தானே*. ஆம்* அவ்வாறு நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் மேன்மை தங்கியவர் கற்றுத் தருவதன் நோக்கம் அது தான். ஆனாலும் மேன்மை தங்கிய புத்தரான நீங்கள் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி எனக்கு எதுவும் வெளிப்படுத்தவில்லையே. சுநக்கத்தரே* எப்போதாவது நான் உங்களிடம் வாரும் சுநக்கத்தரே, என் சீடராக நீங்கள் இருப்பின் பிரபஞ்ச பொருட்களின் தோற்றத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்று கூறியதுண்டா ?
இல்லை. நீங்கள் அவ்வாறு கூறியதில்லை. நானும் உங்களிடம் அவ்வாறு கூறியதில்லை. நீங்களும் என்னிடம் அவ்வாறு கேட்டதில்லை. பின் என்னை விட்டு நீங்குவதைப் பற்றி பேச நீங்கள் யார் ? நான் யார் ?
சுநக்கத்தரே* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். பிரபஞ்ச பொருட்களின் தோற்றம் குறித்து வெளிப்படுத்தப்பட்டாலும், வெளிப்படுத்தப்படாவிட்டாலும் நான் தம்மத்தை போதிப்பதன் நோக்கம் அதுவல்ல. தம்த்துக்கு அது முக்கியமானதுமல்ல. எல்லா மதங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கருத்துருவங்களை கொண்டுள்ளன. மதத்தின் நோக்கம் உலகின் தோற்றத்தை விளக்குவது. ஆனால் தம்மத்தின் நோக்கம் உலகை புனரமைப்பது. மார்க்சின் உலகை மாற்றியமைத்தல் என்பது இது தான். மதம் என்ற சொல்லாடலுக்கு எதிர்மறையாக இங்கு மதசார்பின்மை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ளநஉரடயச என்ற சொல்லுக்கு இவ்வுலகம் சார்ந்தது என்று அர்த்தம். அதன் காரணமாகவே இங்கு சிலர் மதநீக்கம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். மதத்திற்கு எப்பொழுதுமே சதுரவடிவம் என்ற ஒன்று உண்டு. அதற்குள் நின்று தான் அது தன் கருத்தியலை படைக்கும். இம்மாதிரியான சதுர எல்லைகள் மேலும் இறுகும் போது மதம் தன்னுடைய யதார்த்த நிலையிலிருந்து நிறுவனம் என்ற தன்மையை அடைந்து விடும். புத்தர் தன் கோட்பாட்டிற்கு இதனால் தான் தம்மம் என்று பெயரிட்டார். இன்று பெளத்தமே போலிவாத வடிவம் எடுத்து இனசுத்திகரிப்பு செய்யும் சூழலுக்கு ஆட்பட்டிருக்கிறது என்பது சாதாரணத்தனமானதல்ல. மதம் என்ற நிலையில் நிறுவனமாக்கலுக்கு இஸ்லாமும் ஆட்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஊடகங்கள் அங்குள்ள கிறிஸ்தவத்தின் நிறுவனத் தன்மையை அங்கீகரித்து ஒற்றை மயமான சூழ்நிலையின் விளைபொருளாக இஸ்லாமை சித்திகாிக்கின்றன. ஒரு கோட்பாடு நிறுவனத் தன்மையை அடையும் போது தன்னை தாண்டிய அந்நியப்பட்ட ஒன்றையே அது அர்த்தப்படுத்தும். கிரேக்க மற்றும் ரோமானிய வரலாறுகளிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் இது தான். ஆக பெளத்தம் என்பதே தம்மம். அது மதமல்ல என்பதற்கான புரிதலை நாம் உள்வாங்கி கொள்ள வேண்டியதிருக்கிறது.