அரபு இலக்கியத்தின் மிகப்பெரும் கூடாக இருக்கும் எகிப்து பல எழுத்தாளுமைகளை உருவாக்கி இருக்கிறது. அவர்களுள் தவ்பீக் ஹக்கீம் முக்கியமானவர். நவீன அரபு நாடகத்தின் தந்தை என விமர்சகர்களால் தவ்பீக் வர்ணிக்கப்படுகிறார். தேர்ந்த படைப்பூக்கத்தின் தராந்திர வெளிப்பாடு தவ்பீக் ஹக்கீமின் கதைகள். நூறாண்டு எகிப்திய கதையுலகின் தொடக்கப்புள்ளி தவ்பீக். இவரின் கதைகள் எகிப்து மற்றும் அரபுலக வரலாற்றில் முக்கிய வரலாற்றுப்பதிவு. தவ்பீக்கின் வருகை எகிப்திய மற்றும் அரபு இலக்கிய உலகிற்கு ஒரு நம்பிக்கை ஊட்டும் சிறந்த பரிணாமமாக இருந்தது.
எகிப்தின் முக்கிய நகரான அலெக்சாண்டிரியாவில் 1898 ல் ஒரு பிரபல நீதிபதியின் மகனாக பிறந்தார் தவ்பீக் ஹக்கீம்.கெய்ரோவில் உயர்கல்வியை முடித்த தவ்பீக் 1925 ல் சட்டப்படிப்பையும் கூடுதலாக படித்தார்.பின்னர் பிரான்ஸிற்கு சென்ற அவர் அங்கு சட்டமேற்படிப்பை படித்தார். பின்னர் பிரான்ஸிலிருந்து திரும்பிய அவர் அலெக்சாண்டிரியாவில் சிலகாலம் நீதிமன்ற பணியில் இருந்தார். மேலும் பல எகிப்திய நகரங்களில் பணிபுரிந்தார். அதற்கு பிந்தைய கட்டத்தில் அக்பர் அல் யாம் என்ற அரபு பத்திரிகையில் பணிபுரிந்தார். பின்னர் எகிப்திய தேசிய நூலகத்தின் மேலாளராக சிறிதுகாலம் பணியில் இருந்தார். இந்த இடைக்கட்டத்தில் பல கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். இவை அவருக்கு சிறந்த எழுத்தாளுமை குணாம்சத்தை அளித்தது. இதன் தொடர்ச்சியில் பல நாடகங்களையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு அரபி மொழியில் வெளிவந்தன. தவ்பீக்கின் முக்கிய இலக்கிய பங்களிப்பு நாடகமாகும். அவரின் நாடகங்கள் எகிப்தின் , அரபுலகின் திறந்த பண்பாட்டு வெளியை பிரதிபலிப்பவை. 1933 ல் முதல் தத்துவார்த்த நாடகமான People of cave வெளிவந்தது. இதில் அவரின் சிந்தனை வெளிப்பாடு தெளிவாக இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இது எகிப்திய நாடக உலகை மற்றொரு கட்டத்திற்கு நகர்த்தியது. அவரின் ஆரம்பகால நாடகங்கள் எகிப்தில் உருவான அரபு தேசிய உணர்வை பார்வையாளர்களுக்கு ஊட்டுவதாக இருந்தன. அந்த நாடகங்கள் அது வெளிப்படுத்திய கதாபாத்திரங்கள் ஒரு தேசிய பாவனையை தனக்குள் இட்டுச் சென்றன. ஒவ்வொரு நாடகமும் அதற்கான கதைவெளியை தெளிவாக வெளிப்படுத்தின. இதன் தொடர்ச்சியில் அவரின் நாடகங்கள் அதிக பார்வையாளர்களை உருவாக்கியது.
தவ்பீக்கின் வாழ்க்கையின் அடுத்த கட்டம் அவரின் பிரான்சு வாழ்க்கையாகும். தன் தந்தையின் நண்பரான அஹ்மத் லுத்பி அல் செய்யித் இன் தொடர்ந்த ஊக்கம் காரணமாக பிரான்சில் சட்டக்கல்வியை படித்தார். பிரான்சு வாழ்க்கையில் இடைக்கட்டத்தில் அதிக காலம் நாடகங்களை படிக்கவும் , பயிற்சிக்கவும் செய்தார். அங்கு நடைபெற்ற பல நாடகங்களில் பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் மேற்கத்திய கலாசாரம் பற்றிய உன்னதத்தையும், ஆர்வத்தையும் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியில் மேற்கத்திய செவ்வியல் இலக்கியங்களையும், அதன் ஆசிரியர்களையும் குறித்து அதிகம் படிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரின் தந்தை எகிப்துக்கு திரும்ப வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததன் காரணமாக அவர் எகிப்திற்கு திரும்பினார். மேற்கின் தாக்கம் காரணமாக அவருக்கு எகிப்திய வரவு வெறுமையை அளித்தது. அவரின் மனம் ஒருவித கலாசார இடைவெளியை இட்டு நிரம்பியதாக மாறியது. மீண்டும் பிரான்சு பற்றிய சிந்தனை அவரை ஆட்கொண்டது.
எகிப்திற்கு திரும்பிய காலத்தில் ஹக்கீமின் பணி நீதித்துறையில் இருந்தது. அதனை ஒட்டி பல நகரங்களுக்கும் புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவே அவருக்கு பல தேடல்களையும், அனுபவமார்ந்த சிறந்த வெளியையும் கொடுத்தது. இந்த பயணத்தின் தொடர்ச்சியில் அவருக்குள் ஒரு புனைவு வெளி உருவானது. அந்த அனுபவத்தை நாவலாக மாற்றினார் ஹக்கீம். இதுவே Memoris of a country prosecutor என்ற நாவலுக்கு தொடக்கம் குறித்தது. தன் வழக்கறிஞர் மற்றும் நீதித்துறை பணி சார்ந்த அனுபவ வாசிப்பை புனைவாக்கமாக வெளிப்படுத்தினார் தவ்பீக் ஹக்கீம். மேலும் இந்நாவல் எகிப்தின் மரபார்ந்த குடியானவர்களுக்கும் நெப்போலியன் காலத்து சட்ட விதிமுறைகளின் எச்சத்திற்குமான உறவு முறையை குறித்தது. முதல் நாவல் Return of
spirit என்ற பெயரில் 1928 ல் வெளிவந்தது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் எகிப்திய இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிய தவ்பீக் அன்றைக்கு எகிப்தை காலனிப்படுத்தி இருந்த பிரிட்டன் அரசிற்கு எதிராக தன் எழுத்தை பயன்படுத்தினார். அக்காலகட்டத்தில் வெளிவந்த பல கவிதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள் எகிப்தின் தேசிய உணர்வை தட்டியெழுப்பக்கூடியதாக இருந்தன. பிரான்சு வாழ்க்கை ஹக்கீமிற்கு மேற்கு பற்றிய உன்னத கற்பிதத்தை அளித்திருந்தாலும், பிரிட்டன் காலனியம் குறித்த எதிர்மறையான உணர்வை தான் கொண்டிருந்தார். அக்காலத்தில் எகிப்தின் கலை வடிவங்கள் மக்களை பிரிட்டனை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க கூடிய ஒன்றாக இருந்தன. அவை மக்களின் கூட்டு பிரக்ஞையோடு சிறந்த ஒன்றிணைவை கொடுத்தன. வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போன தவிப்பையும், ஏக்கத்தையும் அவரின் கதைகள் பிரதிபலித்தன. இதன் மொத்த செயல்பாடு அவரை எகிப்தின் பிரிக்கமுடியாத ஆளுமையாக அடையாளம் காட்டியது. அதன் தொடர்ச்சி தவ்பீக் மேற்குலகில் சிறந்த அரபு படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார். அவரின் பல படைப்புகள் அரபி மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஜெர்மனிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. தன் வாழ்நாளில் தன் எழுத்துக்கள் மூலம் எகிப்திற்கும், அரபுலகிற்கும் சிறந்த பங்களிப்புகளை செய்த தவ்பீக் ஹக்கீம் 1987 ல் மரணமடைந்தார். தவ்பீக் கடந்து போனாலும் அவரின் படைப்புகள் இன்னும் உயிர்வாழ்கின்றன.
இவரின் படைப்புகள்
A Bullet in the Heart, 1926 (Plays)
· Leaving Paradise, 1926 (Plays)
· The Diary of a Prosecutor Among Peasant, 1993
(Novel) (translation exists at least into German and Swedish)
· The People of the Cave, 1933 (Play)
· The Return of the Spirit, 1933 (Novel)
· Sharazad, 1934 (Play)
· Muhammad the Prophet, 1936 (Biography)
· A Man without a Soul, 1937 (Play)
· A Sparrow from the East, 1938 (Novel)
· Ash'ab, 1938 (Novel)
· The Devil's Era, 1938 (Philosophical Stories)
· My Donkey told me, 1938 (Philosophical
Essays)
· Braxa/The problem of ruling, 1939 (Play)
· The Dancer of the Temple, 1939 (Short
Stories)
· Pygmalion, 1942
· Solomon the Wise, 1943
· Boss Kudrez's Building, 1948
· King Oedipus, 1949
· Soft Hands, 1954
· Equilibrium, 1955
· Isis, 1955
· The Deal, 1956
· The Sultan's Dilemma, 1960
· The Tree Climber, 1966
· The Fate of a Cockroach, 1966
· Anxiety Bank, 1967
· The Return of Consciousness, 1974