சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து " பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்" என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
ஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க - அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.
மேலும் ஆமினா வதூத் மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில் சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.
இந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும் சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.
இந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் - மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் - லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம் நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன. இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.
ஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.
இரண்டாவதாக காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.
இறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின் "காவல்துறை எச்சரிக்கை" நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.
நாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.
சென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
-------------------------------------------------------------------------------------------------
Kaviko Abdur Rahman, Tamil Poet
Aniruddhan Vasudevan (Writer)
Abeedheen, Writer
Abilash Chandran, Poet
AD Bala, Journalist
Ahmed Faizal, Poet, Sri Lanka
Ambai ,Writer
Ameer Abbas (Film director)
Anandhi Shanmugasundaram, Social Activist
Prof. S. Anandhi
Dr. Arshad Alam, JNU, New Delhi
S. Arshiya, Writer
Abdul Haq Lareena, Poet, Sri Lanka
P.K Abdul Rahiman, University of Madras
A.P.M Idress, Writer, Sri Lanka
Anwar Balasingam, Writer
Dr. A. R. Venkatachalapathy, MIDS, Chennai
Dr. A.K. Ramakrishnan, JNU, New Delhi
Benazir Begam, Poet and Student Reporter, Dindugal
Chitra Jeyaram, Film Director and Producer, U.S
Cimimeena (Social activist )
Devabira, Poet, Netherlands
V. Geetha, Feminist Historian and Writer, Chennai
Geetha Ilangovan, Film Maker
Geetha Narayanan, Research Scholar and Social activist
Dr. P.M. Girish, University of Madras
Gnani Sankaran, Writer, France
H.G. Razool, Poet
Hameed Jaffer, Writer
Prof. Hameem Mustafa, Nagercoil
Inba Subramaniyan, Poet
Indira Gandhi alangaram (Writer)
Jamalan, Writer
Professor Jeyashree venkatadurai
Dr. M. H. Illias, Jamia Millia Islamia, New Delhi
Kalaiarasan, Writer, Nether Land
Kalanthai Peer Mohamad, Writer
Kannan Sundaram, Editor & Publisher, Kalachuvadu
Kavitha Muralidharan, Journalist, Chennai
Kavin Malar, Writer and Journalist, Chennai
Keeranur Jakir Raja, Writer
Kombai S Anwar, FilKm Maker, Chennai
Ko.Sugumaran, Human Rights Activist, Pondichery
Kulachal Mu.Yoosuf, Writer & Translator
Kutti Revathi, Poet
Leena Manimekalai, Poet & Film Maker
Lenin Mathivanan, Writer, Sri Lanka
Leninsha Begam, Journalist, Chennai.
Living smile Vidhya, Poet
Manomani, Poet and Editor, Pudhuezhuthu
Manusyaputhiran, Writer and Editor, Uyirmmai Magazine
Meeran Mydeen, Writer
Mohammed Imdad, Social Activist, Sri Lanka.
Mujeeb Rehman, Writer
Megavannan (Social activist)
Malathi maithri (Poet, New Delhi)
Nirmala Kotravai, Feminist
Nisha Mansur, Poet
Dr. V. Padma (Mangai), Academician and Theatre person, Chennai
Dr. G. Patrick, University of Madras
H.Peer Mohammed, Writer
Prince entra Periyar, Social Activist
Thi. Parameswari (Poet)
Dr. M. Priyamvada, University of Madras
Professor Premananthan (Delhi university)
Raji Kumarasamy, Social Activist
Dr. Ramu Manivannan, University of Madras
Rishan Sherif, Poet, Sri Lanka
Riyaz Kurana, Poet, Sri Lanka
Rafeek Ismail (Assistant Film Director)
Rajan kurai (Writer)
Sadakathulla Hasani, Editor, Al-Hindh, Madurai
Salma, Writer & Poet
Syed Buhari, Film Maker
Sharmila Seyyid, Poet, Sri Lanka
Shoba Shakthi, Writer, France
Shubashree Desikan, Journalist, Chennai
S. P. Udayakumar (Coordinator - People Movement of Anti-nuclear project at Kodankulam)
Sukirtha Rani, Poet
Senthilnathan (Editor Aazhi magazine)
Dr. Sunitha V, MCC, Chennai.
Shameem sheik (Social activist, Bangalore)
Siddarth Kandasamy (Social activist)
Tajdheen, Poet
Tharmini, Poet
Poet Thilagar, Sri Lanka
Thamayanthi (Social Activist, Sri Lanka)
Tamilpen Vilasini (Social Activist)
Vaa. Manikandan, Poet
Venkatesh Chakravarthy, Film Critique
Yatheendra (Political Critique, Sri Lanka)
2 comments:
My Name is mentioned as Professor Premananthan (Delhi university).
But it should be Prem (Writer)
Please modify.
Prem
My Name is mentioned as Professor Premananthan (Delhi university).
But it should be Prem (Writer)
Please modify.
Prem
Post a Comment