காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, January 11, 2011

புத்தகம் வெளிவந்து விட்டது

வலைப்பக்கத்தில் பதிவுகள் இட்டு நீண்ட நாட்களாகி விட்டது. புதிய பதிவை எதிர்பார்த்திருக்கும் வாசகர்களுக்கு இது ஏமாற்றமான ஒன்றாக இருக்கலாம். குடும்பவாழ்க்கையின் ஆரம்பம்,வளைகுடா வாழ்க்கையில் நேரம் உருவாக்கும் மனச்சிக்கல்கள் என்னை அப்படியே முடக்கி போட்டு விட்டது. இதனை தாண்டுவது குறித்த செயலூக்கத்தில் இருக்கிறேன். சில நேரங்களில் இடைவெளி தான் புதிய விசயத்திற்கான வீரியத்தை அதிகரிக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து என் வலைப்பதிவில் வாசகர்கள் புதிய பதிவை எதிர்பார்க்கலாம். மரபார்ந்த பதிவுகளிலிருந்து வேறுபட்ட இன்னும் புதிய பதிவுகளோடு உங்களிடம் உரையாட இருக்கிறேன்.

கீழைத்தேய சிந்தனை மரபை குறிப்பாக மத்திய கிழக்கு சிந்தனையின் தொடர்ச்சியை அறிமுகப்படுத்தும் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் நூல் அடையாளம் பதிப்பகம் சார்பாக வெளிவந்திருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தக கண்காட்சியில் அடையாளம், கீழைக்காற்று மற்றும் பரிசல் அரங்கங்களில் வாங்க கிடைக்கிறது.

பதிப்பக முகவரி
Adaiyaalam,Publishing Group
1205/1 Karupur Salai
Puthanatham - 621 310
Trichy Dist, Tamilnadu, India
Tel: +91 4332 273444, Fax: +91 4334 27055
email: info@adaiyaalam.net

3 comments:

காலப் பறவை said...

வாழ்த்துக்கள்

ஜமாலன் said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்.

ஜமாலன் said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்.