2011 ன் துவக்கத்தில் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற புதிய புத்தகத்தோடு உங்களை சந்திக்க வருகின்றேன். புத்தகத்தோடு வாசகர்களிடம் உரையாடுவதில் என் மனநிலை அபரிதமான உணர்வை அடைகின்றது. இதில் கீழைத்தேய கோட்பாட்டாளர்கள் பத்துபேர் பற்றிய அறிமுகங்கள், அவர்களின் கோட்பாடுகள் மற்றும் நேர்காணலை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. அடையாளம் பதிப்பகம் அதற்குரிய பிரேத்யேக வடிவமைப்பு கொள்கையோடு மிக நேர்த்தியாக வெளியிட்டதில் எனக்கு பூரண திருப்தியே. தற்கால சூழலில் தமிழில் புத்தகத்தின் வடிவமைப்பு அதிகமும் கவனிக்கப்படுகிறது. சில சமயங்களில் நல்ல புத்தகங்கள் கூட வடிவமைப்பு சிக்கலுக்கு உள்ளாகி விடுகின்றன. அதிலிருந்து இது தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே. இதற்கான முறைப்படியான வெளியீட்டு விழா வரும் 5 ம் தேதி நாகர்கோவிலில் வைத்து நடைபெறுகின்றது. என் வலைப்பதிவை பின்தொடரும் வாசகர்கள் கலந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.
இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும்
எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" (அடையாளம் பதிப்பகம்)
நூல் வெளியீடு
இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம் ஜங்ஷன், நாகர்கோவில்
நாள்: 05-02-2011 சனிக்கிழமை மாலை 5 மணி
தலைமை: கொடிக்கால் ஷேக் அப்துல்லா
நூல் வெளியீடு: கவிஞர் சுகுமாரன்
முதல்பிரதியை பெற்றுக்கொள்பவர்: கவிஞர் என்.டி. ராஜ்குமார்
கருத்துரையாளர்கள்: பேராசிரியர் ஜே.ஆர்.வி எட்வர்ட்,
குமாரசெல்வா
ஏற்புரை : எச்.பீர்முஹம்மது
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் : ஹசன் மைதீன் (இலைகள் இலக்கிய இயக்கம்)
தொடர்புக்கு 9894079722, 8973331660.
1 comment:
விழா சிறக்க வாழ்த்துக்கள்
Post a Comment