காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 31, 2008

நான் ஏன் தினமும் சவரம் செய்கிறேன்

நான் ஏன் தினமும் சவரம் செய்கிறேன்

- எச்.பீர்முஹம்மது

நவீன உலகில் ஆண்களின் தனிமனித ரசனையில் தாடி (Beard)என்ற முகமுடியும் முக்கிய இடத்தை பெறுகிறது. வாழ்க்கையின் இயல்பான இயக்கத்தில் மனித நடத்தை (Human Behavior)சில உடல்குறியீடுகளை கொண்டு சில சமயங்களில் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னொரு சூழலில், வேறு விஷயங்களில் நாம் கடக்கும் போது தனிமனித நடவடிக்கைகள், குணநலன்கள் முக்கியம் பெறுகின்றன. இஸ்லாத்தின் தனிமனித நடத்தை ஒழுங்குகள் சில நேரங்களில் காலத்தை நோக்கிய சிக்கலுக்கு உள்ளாகின்றன. முக முடி அல்லது தாடி இன்று முகம் மாதிரியே உலகளாவிய சித்திரமாக மாறி விட்டது. அது ஒரு குறிப்பிட்ட சமூகங்களின் கலாசார ஒழுங்கிலிருந்து தனிமனித ஆணையாக (Mandatory) மாறி விட்டதை குறித்து நாம் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. பண்டைய எகிப்தியர்கள் தாடியை துக்கத்தின் குறியீடாக கண்டனர். இன்றும் இது பரவலான சமூக நிலையில் அதன் குறியீடாக இருப்பதை நாம் காண முடியும். அதே சமயத்தில் சுமேரியர்கள், பாபிலோனியர்கள், மெசிடோனியர்கள் அதை அழகின் வெளிப்பாடாக்கினர். பண்டைய ரோமர்களிடத்தில் சவரம் என்ற ஒரு செயல்பாடே இருக்கவில்லை. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் டிசினஸ் என்பவர் சவரம் செய்வதை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் அது ஒரு நடத்தை ஒழுங்காக ரோமர்களிடத்தில் தொடக்கம் பெற்றது.ரோமர்களில் ஸ்கிபி இனத்தவர்கள் முதன்முதலாக முக சவரத்தை பின்தொடர்ந்தனர். இதன் பிறகு ரோம் முழுவதும் முகச் சவரம் பரவலானது. அதை அவர்கள் சமூக குறியீடாக்கினர். இது கிரேக்கர்களின் கலாசார எதிர்வாக பார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் கிரேக்கர்களிடத்தில் தாடி ஒரு கலாசார ஒழுங்காக இருந்தது. சாக்ரடீஸ் தொடங்கி கோபர்னிகஸ் வரையில் தாடி தொடர் ஒழுங்கானது. அறிவு ஜீவிகள் தாடி வைத்துக் கொள்ளும் நடைமுறை இதன் மூலம் தொடர்ந்ததை நாம் அறிய முடிகிறது. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் ரோமர்களிடத்தில் கிரேக்க கலாசாரம் பரவியது. அதை தொடர்ந்து அவர்கள் தாடி வைத்துக் கொள்ள தொடங்கினர். நீரோ மன்னன் காலத்து ரோமர்கள் ஒரு சிறுவனின் முகத்தில் வளரும் கன்னிமுடியை வெட்டி அதை வழிபாட்டு பொருளாக்கினர். ரோமர்களில் ஒருவன் இறந்து விட்டால் அவர்கள் தலைமுடி, முகமுடி போன்ற எல்லாவற்றையும் வளர்க்க தொடங்கினர். அது அவர்களின் துக்க குறியீடாக வெளிப்பட்டது. இதற்கு நேர்மாறாக கிரேக்கர்கள் இறப்பு நிகழ்ந்து விட்டால் முழு சவரம் செய்தார்கள்.( இது இந்தியாவில் பெரும்பாலான சாதிய சமூகங்களில் வழக்கிலிருக்கிறது). ரோமர்களிடத்தில் தாடி மனோ தைரியத்தின் குறியீடாக இருந்தது.ரோமானிய அடிமைகள் தங்கள் தலை மற்றும் முகமுடியை வெட்ட அனுமதிக்கப்படவில்லை. இன்னொரு நீட்சியில் அது அடிமைசார் வாழ்வின் பிரதிபலிப்பு. ரோமர்களில் கணவனை இழந்த மனைவி தன் தலைமுடியை வெளிக்காட்டாமல் அதை துணியால் மூடிவைக்கும் கலாசார நிர்பந்தத்திற்கு ஆளானாள். தலை முடியை மூடிவைத்தல் ஒரு கலாசார அமைப்பிற்கு துக்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் தருணத்தில் மற்றொரு கலாசார அமைப்பிற்கு அது ஒழுக்க குறியீடு. பெண்ணை பற்றியதான கலாசார கருதுகோள்கள் பிரதேசம் தாண்டி வேறுபடுகின்றன.ஜெர்மானிய கட்டி இனக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் போரில் எதிர்களால் தோற்கடிக்கப்படும் வரை தலைமுடியையோ அல்லது தாடியையோ சவரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதே வழக்கம் இந்தியாவில் சில சமூக அமைப்பினரிடம் இருந்தது. ருஷ்ய மன்னன் பீட்டரும், இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றியும் தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்டவர்கள் தாடி வைத்தால் அவர்களுக்கு வரி விதித்தனர். அவர்களுக்கு தாடி ஒழுங்கின்மையாக தெரிந்தது.மறுமலர்ச்சி காலம் ஐரோப்பிய வரலாற்றின் பெரும் துவக்கம். 17 ஆம் நூற்றாண்டே இதன் வெளிப்பாடு. இக்காலத்தில் ஐரோப்பிய கத்தோலிக்க பாதிரிமார்கள் சவரத்தை தங்கள் தூய்மைத்துவத்தின் குறியீடாக கண்டனர். புரட்டஸ்டண்ட் இயக்கம் மரபார்ந்த, நிறுவன சமயத்திற்கு எதிராக உருவான நிலையில் அவர்கள் தாடி வைப்பதை எதிர் செயல்பாடாக்கினர். இதன் தொடர்ச்சியில் கத்தோலிக்க பாதிரியார்களும் தாடி வைக்க தொடங்கினர். இப்போது புனித குறியீடு எதிர்வாக திரும்புகிறது. இன்றும் கத்தோலிக்க பாதிரியார்களிடத்தில் அவர்கள் சார்ந்திருக்கும் சபையை பொறுத்து இந்த கலாசாரம் தொடர்கிறது.

தாடியை தனிமனித நடத்தை ஒழுங்காக மாற்றியது இஸ்லாம் மட்டுமே. நாம் அதன் வேர்களை இஸ்லாமுக்கு முந்தைய இயற்கை வழிபாட்டிய, நாடோடி சமூகங்களிலிருந்து தொடங்க முடியும். இஸ்லாமின் வரலாற்றிற்கு சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எகிப்தியர்கள் சிறிய அளவிலான தாடியை வைக்க தொடங்கினர். அன்று அது ஒரு பரவலாக்க நிகழ்வாகவே இல்லை. பின்னர் ரோமிய கலாசார தாக்கம் இவர்களிடத்தில் பரவியது. தங்கள் முகம் அருவருப்பான ஒன்றாக அவர்களுக்கு தெரிந்தது. இத்தருணத்தில் அவர்களில் சவரம் செய்வதெற்கென்றே தனிமனிதர்கள் உருவானார்கள். இது அசிரிய, மெசிடோனிய, சுமேரிய, அரேபிய நாடோடி இனமக்களிடத்திலும் பரவியது. ஒரு நடத்தை ஒழுங்கமைவாக மீசையை கத்தரிக்காமல் வளர்த்தல், தாடியை முழுவதுமாக சவரம் செய்தல் அவர்களிடையே அமைந்தது. செமிட்டிக் மதங்கள் இப்பிரதேசங்களில் உருவான போது அவை முன் நிலவிய ஒழுங்கை மாற்றியமைக்க முற்பட்டன. இதன் விளைவு தான் மீசையை கத்தரித்தல், தாடியை வளர்த்தல். இது யூத வரலாற்றிலிருந்து தொடங்குகிறது. ஈரானின் பார்சி மன்னனான சைரஸ் தாடி வைத்திருந்ததாக சிறு குறிப்பு ஒன்று காணகிடைக்கிறது பண்டைய யூதர்கள் தாடியை மனிதத்துவ குறியீடாக கண்டனர். யூதத்திற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவம் உருவான நிலையில் அது இவ்வழக்கத்தை பின்தொடர்ந்தது.

இஸ்லாமிய தோற்றச்சூழலின் வித்தியாசப்படுத்தலையும், ஒத்திவைத்தலையும் குறித்து நாம் அதன் பிரதிகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். அன்றைய சூழலில் அரேபிய நாடோடி இனத்தவர்கள், பிற இனக்குழுக்களிடத்தில் தாடி பரவலாக இல்லை. அவர்கள் மீசையை முழுவதுமாக வளர்த்தி, தாடியை சவரம் செய்தனர். இதற்கு மாற்றாகவே இஸ்லாம் தாடியை அறிமுகப்படுத்துகிறது. இப்னு உமர் அறிவிக்கும் தாடியை பற்றிய நபிமொழி காணகிடைக்கிறது."நீங்கள் அறியாமை காலத்தவர்கள் செய்ததற்கு நேர்மாறாக செய்யுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை கத்தரியுங்கள்." இதன் மூலம் தாடி என்பது வரலாற்றுப்போக்கில் கலாசார ஒழுங்குகளின் மோதலாகவே இருந்து வந்திருக்கிறது.கலாசார ஒழுங்குகள் பிரதேச எல்லைகளை கடக்கும் போது இனங்களிடையேயான முரண்களாக உருவாகின்றன. அது மேய்ச்சல் தொழில் சார்ந்த பழங்குடிகளின் கலாசார குறியீடு.இஸ்லாத்தின் தோற்ற காலத்தில் தாடி மற்ற இனக்குழுக்களிடமிருந்து வித்தியாசப்படுத்தலாகவும், அடையாளமிடலாகவும் இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும் அன்றைய சூழலில் இது அரசியல் இஸ்லாமிலிருந்து ஆன்மீக இஸ்லாமாக மாறும் கட்டத்தின் நிகழ்தகவு எனலாம்.

நவீன காலகட்ட ஐரோப்பாவில் பெரும்பான்மையினர் மத்தியில் தாடி வழக்கில் இல்லை. ஆனால் அமெரிக்க உள்நாட்டு போரின் போது அரசியல் தலைவர்கள் தாடி வைக்க தொடங்கினர். போர் பிரதிபலிப்பு நடவடிக்கையாக அது வெளிப்பட்டது. முதல் உலகப்போர் கட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு தாடி தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. பல்வேறு வித போர்பாதுகாப்பு காரணங்கள் இதன் பின்னால் சொல்லப்பட்டன. ஆனால் வியட்நாம் போரின் போது அங்குள்ளவர்கள் தாடி வைக்க தொடங்கினர். மாற்று கலக குரலின் அடையாளமாக அது பார்க்கப்பட்டது. பிந்தைய கட்டத்தில் அது பரவலாக காணாமல் ஆனது. ஐரோப்பாவில் கிரேக்கத்திற்கு அடுத்தபடியாக தாடியின் ஒழுங்கமைவு ஏற்பட்டது பிரான்சில். பிரெஞ்சு பாணியிலான தாடி முறை இன்று உலகமயமாக இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான பிரான்சை சேர்ந்தவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியவில்லை. நூறாண்டு கால ஐரோப்பிய வரலாற்றில் தாடியை நாம் நேர்-எதிர் நடத்தை ஒழுங்காகவே பார்க்க முடியும்.

இஸ்லாம் மேற்குலகிற்கு சவாலான, நெருக்கடியான கட்டத்தில் இருந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் தாடி அதற்கு பயங்கரவாத குறியீடாக தென்படுகிறது. உலக மீடியாவின் வெளியில் அது மிகைக்காட்சிப் பரப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் தன்னுடைய பக்கங்களை நிரப்புவதற்கு மிகுந்த சிரமப்படும் தினசரி ஒன்று உண்டு. அதுவே தமிழ்ச்சூழலில் அச்செயல்பாட்டை தொடங்கி வைத்தது. அதை தொடர்வதற்கான அதே அளவுசிரமத்தையும் எடுத்துக்கொள்கிறது. இன்னொரு சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தாடியை நிரந்தர கலாசார ஒழுங்கிலிருந்து நடத்தை ஒழுங்காக தீர்மானிக்கிறது. இஸ்லாத்தின் சில சட்ட பிரிவுகளின் படி சவரம் செய்வது விலக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சி போக்கில் தாடி என்பது ஆண்களின் தீர்மானமற்ற சக்தியாக மாறும் தருணத்தில் எந்த கலாசார அமைப்புகளாலும் அதை நிர்பந்திக்க முடியாது. அரபு நாடுகளில் அரபு இனத்தவரிடையே அதன் எந்த தாக்கத்தையும் பெருமளவில் காண முடியவில்லை. வளைகுடாவின் பெரும்பான்மையான நிறுவனங்கள் தாடியை அனுமதிப்பதில்லை என்பது பரவலாக்கப்பட்ட ஒன்று. சில நிறுவனங்கள் அபராதம் கூட விதிக்கின்றன. அப்துல் வஹ்ஹாபின் நாட்டில் கூட (சவூதி அரேபியா) விமான பணியாளர்களுக்கு சவரம் அவசியம்.ஒரு நெருக்கடியான தருணத்தில் சவரம் மீள் பரிசோதனை நடவடிக்கையாக அமைவதை நாம் கவனிக்கிறோம். வளைகுடாவின் கடல் நீரே சக மனிதனின் எல்லா தேவைகளுக்குமானதாக அமையும் போது, பின் விளைவாக அவன் தலைமுடி தானாகவே சவரத்துக்குள்ளாவது பற்றி எந்த உலகமும் கவலைப்படுவதில்லை. அப்துல் ரஹ்மான் அல் முனீபின் "Cities Of Salt" என்ற நாவலை படிக்கும் போது இதை உணர முடியும். இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் அரபு இனத்தவரின் உடல் ரோமங்களின் அமைப்பு முறையை நாம் இதன் விளைவில் தான் சிந்திக்க முடியும். தென்னிந்தியாவின் சில பகுதிகளில் முன்னொரு காலத்தில் முஸ்லிம் ஆண்களின் தலைமுடி அமைப்பு முறை கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தனிமனித உடலியல் மற்றும் நடத்தை விதி காலத்தை எப்போதுமே தாண்ட முடிவதில்லை. நிகழ்கால வாழ்வின் எதார்த்தம் அது. உலகின் தலைச்சிறந்த சவர கிரீம்கள், முக கிரீம்கள் மற்றும் பிளேடுகள் அனைத்திற்கும் மத்திய கிழக்கு நாடுகளின் நுகர்பொருள் சந்தையில் கணிசமான வரவேற்பு உண்டு. ஆக தாடியை உலக அல்லது இந்திய ஊடகங்கள் குறிப்பிட்ட மதத்தின் வன்முறை குறியீடாக பார்ப்பது அபத்தமானது. இது அந்த மதத்தை சார்ந்த அனைவரும் வன்முறையாளர்கள் என்ற பிம்பத்தை பொதுப்புத்தி மீது திணிக்கிறது. ஆக மத அடையாளங்கள் குறித்த சிக்கலை அறிவார்ந்த சமூகம் அந்த மதத்தின் குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலோடு பொருத்தி, சமகாலத்தோடு அதை நகர்த்தி பார்ப்பதே சிறந்ததாக இருக்கும்.

பலதார மணம் பற்றிய குறிப்புகள்

நீண்ட சுவர்களின் வெளியே - பலதார மணம் பற்றிய
குறிப்புகள்

எச். பீர்முஹம்மது

புதிய காற்று (ஜுலை 2007)

உலக வரலாற்றில் தேவைகள் அவற்றை உருவாக்கும் புற சக்திகளால் உருவாக்கப்படுகின்றன. உலக வரலாறு என்பது சுதந்திரம் பற்றிய பிரக்ஞையின் வரலாறே அன்றி வேறில்லை.

(ஹெகலின் Philosophy of history என்ற நூலிலிருந்து)


மனித சமூகம் ஆண்- பெண் என்ற எதிரிணைக்குள் இருக்கும் போது
மோதல்களும் தவிர்க்க இயலாமல் எழுகின்றன. புராதன மனிதனுக்கு
திருமணம் குணாதிசயங்கள் அற்ற பிரக்ஞையாக இருந்த போது எவ்வித வகைதெரிவும் உருவாகவில்லை. திருமணம் ஒரு சமூக பிரக்ஞையாக உருவானது நாகரீக காலகட்டத்தில் தான். அக்காலகட்டத்தில் ஆண் சமூக
முன்னோடி ஆகிறான்.பெண் இரண்டாம் நிலைக்கு வருகிறாள். முரண்பாடு
இங்கு தான் உருவானது. தீவிர சமூக உயிரியலாளர்கள் மனித
நடத்தைக்கு மரபணுக்களே காரணம் என்கின்றனர். எல்லா விஷயங்களுமே நமக்குள் கணினி புரோகிராம் மாதிரி எழுதி வைக்கப்படவில்லை தான். ஆனால் நடத்தையோடு கலாசாரமும் இணைந்து கொள்கிறது. மரபணுக்கள் தீர்மானித்தது போக மற்றவை கலாசாரங்கள் வழி தான் உருவாகின்றன. இந்த பரிணாமமும், உயிரியலும் ஒரு சில அடிப்படை நியமங்களை மட்டுமே ஏற்படுத்தி தருகின்றன.

குடும்பம் என்ற சமூக நிறுவன உருவாக்கத்திற்கு திருமணமே காரணம். பண்டைய சீனாவில் திருமணங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதித்திருக்கின்றன.ஹன் வம்ச அரசர்கள் மற்ற இன பெண்களை திருமணம் செய்தனர். இதற்கு வெளியே சீனர்களிடத்தில் சகோதர திருமணம் வழக்கில் இருந்தது. நுவாவுக்கும் பு-சி க்கும் இடையேயான திருமணம் இதற்கு
உதாரணம். சகோதர முறையிலான இவர்கள் திருமணத்தின் போது முகத்தை மூடிக்கொண்டனர். கன்பூசிய மதம் சீனாவில் பரவத்தொடங்கிய காலகட்டத்தில் இந்நடைமுறை முடிவுக்கு வந்தது. சீனாவில் முதன்
முதலாக ஒரு தாரமணத்தை அறிமுகப்படுத்தியது கன்பூசியம் தான். அது குடும்ப உறுப்பினர்களை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களின் பாலியல் உறவு முறையையும் ஒழுங்குப்படுத்தியது. இதன் மூலம் குடும்ப அலகுகளை உற்பத்தி செய்தது. இதன் நீட்சியாக கிழக்கில் ஒருதார மணம் அறிமுகம் ஆனது. ஆனால் அதே காலகட்டத்தில் சீன பேரரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டு ரோமின் சீசர்கள் பலதார மணத்திற்கு உட்பட்டு இருந்தனர். ஒரு சீசரான கான்ஸ்டாண்டைன் மூன்று திருமணங்கள் செய்தார். அன்றைய மன்னர்களுக்கு அது கெளரவ குறியீடாக இருந்தது.

மத்திய கிழக்கை பொறுத்தவரை பலதாரமணம் வரலாற்று அடிப்படையிலான நடைமுறையாக இருக்கிறது. பாபிலோனியர்களும், அசிரியர்களும் இந்த ஒழுங்கு முறைக்கு உட்பட்டு இருந்தனர். எகிப்திய, ஈராக்கிய தடயங்கள் நமக்கு அதை வெளிப்படுத்துகின்றன. செமிட்டிக் மதமாக யூதம் உருவான நிலையில் வரலாற்று யூதர்களும் இதை பின்தொடர்ந்தனர். யூத பிரதிகளின் பகுதிகள் பலதார மணம் பற்றிய கதைகளோடு வாசிப்பை நகர்த்துகின்றன அதனிலிருந்து சீர்திருத்த இயக்கமாக கிறிஸ்தவம் உருவான பிறகு இந்த வழக்கம் பிரதேசங்களை தாண்டியது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இது பற்றிய பதிவுகளை நிறையவே காணலாம். இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியா பாலைவன பழங்குடி இனங்களை உள்ளடக்கி இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களாக அவர்கள் சிதறிக் கிடந்தனர். பாலுறவு என்பது விகசனத்துக்கு வெளியில் இருந்தது. பெண் தெய்வங்கள் பெருகி கிடந்தனர்.ஆண்- பெண் கடவுள்கள் மொத்தம் 360 பேர் இருந்தனர்.பெண் வழிபாட்டு பொருளாக இருந்ததால் பலதாரமணம் ஒரு துணைக்கருவியாக இருந்தது. இதில் முன்னெடுக்கும் விஷயமாக அன்றைய பழங்குடி சமூகத்தில் ஒரு பெண் பல ஆண்களை
திருமணம் செய்யும் பலபுருஷ திருமணம் (Polyandry) வழக்கிலிருந்தது. அநாகரீக காலகட்டம் தொடங்கி நாகரீக காலகட்டம் வரை அது நீடித்தது. ஒரே குடும்பத்தை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட சகோதர்களை திருமணம் செய்யும் பலபுருஷ முறை அதன் இன்னொரு வடிவம். மகாபாரத பஞ்சபாண்டவர்கள் இதற்கு உதாரணம். கிரேக்க புராணங்களிலும்
இதற்கான தடயங்கள் நிறையவே இருக்கிறது. ஹெலன் என்ற
பெண்ணுக்காக இரு அரசர்களிடையே நடைபெற்ற டிரோஜன் யுத்தத்தைப் பற்றி குறிப்பிடலாம். இது ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசியஸில் காணக்கிடைக்கிறது. அந்த யுத்தம் நடந்த காலம் கி.மு 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள்.

திருமணம் என்ற சொல்லாடல் இரு பாலின ஒப்பந்த நடைமுறையாக (contract) உருவானது மத்திய கிழக்கில் தான். செமிடிக் மதமான யூதம் முதன் முதலாக திருமணத்தை ஒப்பந்தம் என்றது. மேலும் ஆன்மாவாக ஒப்பீடாக்கியது. திருமணம் செய்யாத ஆணின் ஆன்மா முழுமையடையாது என்றது. அரேபிய சூழலில் இஸ்லாம் உருவான நிலையில் திருமணத்திற்கு அது சட்ட வடிவத்தை கொடுத்தது.அன்றைய இனக்குழு சமூகத்தில் திருமணம் என்பது படோகாரமாக இருந்திருக்காது தான். சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொகையை கொண்ட குழுவிற்கு திருமணம் நெருங்கிய உறவுமுறையை நோக்கியே செல்லும். இஸ்லாத்தில் தந்தை/தாய் வழி சகோதரர்களை திருமணம் செய்யும் முறை இதன் மூலம் தான் தொடக்கம் பெற்றது. அதே காலகட்டத்திலும், இடைக்கால கிறிஸ்தவத்திலும் சகோதர திருமண முறை வழக்கில் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவம் அதை தடை செய்தது. புராதன இந்திய பிராமணர்கள் ஒரே கோத்திர
திருமணத்திற்கு அப்பால் இருந்தனர். குரு-சீடர் கட்டமைப்பில் சீடர்கள் குருக்களின் குடும்பத்தில் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருந்தது.
விலக்காக மகாபாரதத்தில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு தந்தையின்
நடன மாணவியான உத்தரையை திருமணம் செய்து கொண்டார்.
இஸ்லாமிய சகோதர திருமணங்கள் இந்தியாவில் உத்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் குறைந்த அளவில் இன்னும் வழக்கில் இருக்கின்றன. இஸ்லாமின் தொடக்க காலங்களில் பாலுறவு வரன்முறையற்ற ஒன்றாக மாறி இருந்த நிலையில் ஓர் ஒழுங்கிற்கான தேவை உருவாகியது. விபசாரம், கள்ள உறவு (Fornication, adultery) போன்ற கருத்துருவங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான தண்டனை முறைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதன் எச்சமான முஅத்தா என்ற தற்காலிக திருமண முறை மட்டும் பின் தொடர்ந்தது. அதாவது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பின்னர் விட்டு விடுவதாகும். இது பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்த நிலையில் கலீபா உமர் காலத்தில் தடை செய்யப்பட்டது. (இதற்கு மாறாக ஷியா பிரிவினர் இதை இன்னும் நம்புகிறார்கள். வஹ்ஹாபிய தந்தையான அப்துல் வஹ்ஹாப் தற்காலிக
திருமணம் செய்ததாக வரலாறு வெளிப்படுத்துகிறது.)

இஸ்லாத்தில் பலதாரமண முறை அக்காலத்தில் எழுந்த சமூக சிக்கல் ஒன்றிற்கு தீர்வாக எழுந்ததாக சொல்லப்பட்டாலும் அன்றைய சமூக வெளிப்பாடாகவே நாம் கருத முடியும். நான்கு பெண்கள் என்ற கட்டுப்பாடு இதன்
பிரதிபலிப்பு தான். ஆண்-பெண் விகிதாசாரம் அதிகமாக இருக்கும்
நிலையில் பலதாரமணமே அதற்கான தீர்வுகளை உருவாக்கும் என்பது
நடப்பு காலகட்டத்தில் சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டதாக
மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டு கால நாசி ஜெர்மனியில் இனப்படுகொலை காரணமாக ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகப்பட்ட நிலையில் பலதாரமணத்தை சட்டபூர்வமாக்குவதின் சாத்தியத்தைப் பற்றி ஜெர்மனி சிந்தித்தது. ஆனால் இது மிதமிஞ்சிய ஆண் மக்கள் தொகையையே தோற்றுவிக்கும். சவூதி அரேபியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 125-100 ஆக இருக்கிறது. இது உலகிலேயே மிக அதிகமான விகிதப்பிரிவு. இதன் விளைவு ஆண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாக மாற்றும். இதே நிலை தான் பெண் சிசு கொலை மூலம் ஆண் குழந்தை தேர்வு. உலகின் சில நாடுகளில் இன்னமும் வழக்கில் இருக்க கூடிய இந்த நடைமுறை சமூகத்தை வெறும் ஆண்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக மாற்றும். மொட்டையான கிளைகள்: ஆசியாவின் மிதமிஞ்சிய ஆண்கள் மக்கள்தொகை (Bare branches. The security implications of asia's surplus male population) என்ற நூலின் ஆசிரியர்களான ஆன்டிரியா போவர், வேலரி எம் ஹட்சன் ஆகியோர் பெற்றோர் செய்த பெண் சிசு கொலை இன்று 100 பெண்களுக்கு 120 ஆண்கள் என்ற நிலையாக உருவாகியிருக்கிறது என்கிறார்கள். மேலும் தன்ஒரு குழந்தை கொள்கை மூலம் சீனா வெகு விரைவில் இப்படியான பிரச்சினையை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கிறார்கள். இது வேறு
வழியின்றி இனவாத வன்முறைக்கு இட்டு செல்லும்.

பலதாரமணம் ஆண்களை மேலும் கீழிறங்கி பெண்கள் பருவமடையும் முன்பே அல்லது பருவமடைந்த தருணத்தில் திருமணம் செய்யும் நிலைக்கு கொண்டு செல்கிறது.(இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் கேரளம், தென்தமிழகம் போன்றவற்றில் இஸ்லாமியரிடையே பெண்களின் பருவ வயதுக்கு சற்று முன் திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.) இஸ்லாம் ஆண், பெண்ணின் பருவ வயது குறித்த கால வரையறை எதையும் வைக்கவில்லை. அது வெளிப்படையாக தெரியும் பருவ மாற்றங்கள் என்கிறது. இதுவே மரபார்ந்த நிலையில் உலகமயத்துக்கு உட்படுமாறு நிர்பந்திக்கப்படுகிறது. தற்போது அரேபிய சூழலில் பெண்ணின் சராசரி பருவ வயது 9 ஆக இருக்கிறது. இதன் சம காலமாகவோ அல்லது சற்று தாமதமாகவோ இஸ்லாமிய கால அரேபிய இருந்திருக்க வேண்டும். ஆண் பெண் பருவ மாற்றங்கள் உலகம் முழுவதும் ஒரே சீராக இருக்க வாய்ப்பில்லை என்பதை உளபகுப்பாளர்களும், உயிரியலாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள். அது பிரதேசம் தாண்டி வேறுபடுகிறது. இதனால் தான் பல்வேறு நாடுகளில் சட்டப்படியான திருமண வயது வரம்பு வித்தியாசப்படுகிறது.பலதார மணம் உலகிலேயே மிக அதிகமாக மேற்கு ஆப்ரிக்கா மற்றும் சகாரா பாலைவனப்பகுதிகளில் (அல்ஜீரியா, நைஜீரியா, மாலி, செனிகல்) தான் நடைமுறையில் இருக்கிறது. அரபு நாடுகளில் பலதார மணம் கடந்த இருபது ஆண்டுகளில் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது மிகக் குறைந்த ஆண்களே பலதார மணத்திற்கு உட்படுகிறார்கள். ஆனால் ஆப்ரிக்கா மற்றும் சகாரா பாலைவனப்பகுதிகளில் ஆண்கள் வரைமுறையற்ற எண்ணிக்கைக்கு உட்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ
திருச்சபையானது சகாரா பாலைவன கிறிஸ்தவர்களுக்கு பலதார மணம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் இவர்களில் ஒரு கூட்டம் பிரான்சுக்கு குடி பெயர்ந்து கொண்டிருக்கிறது. பிரான்சு அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு பலதார மண தம்பதிகளுக்கு விசா மறுத்தது. பின்னர் அதை தளர்த்தியது. 2005 ஆண்டு வரை பிரான்சில் சுமார் 30000 பலதார மணம் புரிந்த குடும்பங்கள் இருந்தன. உலக பெண்கள் அமைப்பின் கருத்துப்படி பலதார மணத்திற்கு உள்ளான பெண்களில் 60 சதவீதம் பேர் தங்கள் கணவனால் பாதிப்புக்கும், பாரபட்சத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு வித பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வீட்டு வன்முறைக்கு ஒப்பானது. இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் அரசியல் வாதிகள் பலதாரமணத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். இதனை ஆட்சேபித்து பெண்ணிய வாதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு வெளியே இந்தோனேசியாவில் பலதாரமணம் பரவலாக இருக்கிறது. மஹர் என்ற பரிசப்பணம் பலதார சமூகத்தின் அடையாளமாக இருக்கும் பட்சத்தில் வரதட்சிணை என்பது ஒருதார சமூகத்தின் அடையாளமாக இருக்கிறது. (பலதாரமணம் புரியும் ஆப்ரிக்கா பகுதி முஸ்லிம் அல்லாதவர்கள் பரிசப்பணத்தை வேறொரு வடிவில் தருகிறார்கள். ) இரண்டையுமே பெண்ணியவாதிகள் எதிர்க்கிறார்கள். இரண்டுமே ஆணாதிக்கத்தின் குறியீடு என்பது அவர்களின் வாதம். பரிசப்பணம் என்பது பழங்குடி சமூகத்திலிருந்த பணக்கார விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கியதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி. வரதட்சிணை என்பது வைதீக மேலாதிக்க சமூகத்தில் ஆணாதிக்கத்தின் தூய வடிவம். வைதீக சமூகங்கள் பெண்களை எவ்வித வேர்களுமற்ற கும்பல்களாகவே அறிமுகப்படுத்துகின்றன. ஸ்மிருதிகளை நாம் படிக்கும் போது இதை தெளிவாக அறிந்து
கொள்ள முடியும். பலதார மணம் எவ்வாறு இளம் பெண்களை (13-14 வயதுக்குட்பட்டவர்கள்) திருமணம் செய்வதில் சென்றடைகிறது என்பதை சித்தரிக்கும் நைஜீரிய எழுத்தாளரான புசி எம்னெதா வின் பரிசப்பணம் (bride price) நாவல் முக்கியமானது. ஆப்ரிக்க வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டது இந்நாவல். நைஜீரிய கிராமமொன்றில் இளம் பெண்ணை மூன்றாம் மனைவியாக திருமணம் செய்யும் ஒரு ஆணின் கதை அது. ஆப்கானிஸ்தானில் தன் குழந்தை வயதை ஒத்த பெண்ணை இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக திருமணம் செய்யும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் கேரளத்தின் சில மாவட்டங்கள் (மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு) உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் முந்தைய குழந்தை திருமணத்தின் எச்சமாக இது வழக்கில் இருக்கிறது. (இங்கெல்லாம் முஸ்லிம் பெண்ணின் சராசரி திருமண வயது 15 ஆக இருக்கிறது.)

சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பலதார மணம் தற்போது அதன் உபயோகத்தை இழந்து விட்டதாக கருதுகிறார்கள். மேலும் சிலர் இமாம் ஷாபி மற்றும் பைஹகீயின் விளக்கத்தைக் மேற்கோள் காட்டி ஒரு தார மணமே சிறந்தது என்கின்றனர். பதினான்காம் நூற்றாண்டில் குர் ஆனை பன்முக வாசிப்புக்குட்படுத்திய சிலர் (குர்தூபி போன்றவர்கள்) பலதார மணம் குறித்த வசனமான இரண்டு இரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ, நான்கு நான்காகவோ என்பதை 2+3+4 ஒன்பதாகவும், வேறுசிலர் 2+2, 3+3, 4+4 பதினெட்டாகவும் கருதினர். ஆக இஸ்லாத்தில் பதினெட்டு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றனர். இம்மாதிரியான எல்லா வேடிக்கைகளும் ஆரம்பம் முதல் தற்காலம் வரை தொடர்கின்றன. பலதார மணம் தற்போதைய உலகில் சமன்பாடுகளை தாண்டி செல்கிறது. தீவிர பெண்ணியவாதிகள் ஒரு தார மணத்தையே விரும்புகின்றனர். இஸ்லாமிய உலகில் பலதார மணம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் அதன் அர்த்தமிழப்பின் பாதை நிச்சயம் செல்லத்தக்கது.

Thursday, May 29, 2008

திரை விலகலின் உலகம்

திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்

எச். பீர்முஹம்மது

திண்ணை.காம் (நவம்பர் 2003)

முரண்பாடுகளின் உலகமாக நடப்பு உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் ஓட்டத்தில் இருந்து தனிமைப்படுதல் மேலும் உராய்வுகளையே உருவாக்ககூடிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கும் பயங்கரவாதம் என்ற சொல்லால் உலகமயமாக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்லாம் அதன் போக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியது காசலச்சூழலின் நிர்பந்தம் எந்தவொரு கோட்பாடுமே அல்லது மதமே அதன் காலத்தை தாண்டியதில்லை என்பதே வரலாறு. மேற்கத்திய உலகமானது இஸ்லாத்தை வன்முறைவாதத்தின் பிரதிபலிப்பு என்கிறது. எர்னஸ்ட் ரேனன் என்ற பிரான்சு கல்லூாி பேராசிாியர் இஸ்லாத்தை பின்வருமாறு மதிப்பிடுகிறார்.

இஸ்லாம் என்பது ஐரோப்பாவுக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாம் விஞ்ஞூானம் மற்றும் சிவில் சமூகத்திற்கு எதிரானது. இது செமிடிக் ஆன்மாவின் பயங்கரவாத எளிமைத்தன்மை கொண்டது. இது எல்லாவிதமான நுட்பமான/ அறிவுபூர்வமான உணர்வுகளையும்/ சிந்தனைகளையும் மூடச் செய்கிறது.

இம்மாதிாியான கருத்தாக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் தற்காலத்தில் அவற்றின் மீதான சுய-பாிசோதனை அவசியமான ஒன்றாகும்.

சில வருடங்களுக்கு முன்பு கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிாியர் சார்லஸ் குர்ஸ்மான் தொகுத்த லிபெறல் இஸ்லாம் என்ற புத்தகம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை சமீபகால கட்டங்களில் வெளியான புதிய முயற்சி எனலாம். இதில் எகிப்தின் பிரபல சிந்தனையாளர்கள் அப்துல் ராசிக்/ முகமது தாஹா/ முகம்மது நட்சிர்/ இக்பால்/ சபீர் அக்தர்/ பஸ்லுர் ரஹ்மான்/பெண்ணிய வாதிகளான பாத்திமா மொனிஸி/ நாஸிரா சென் முதலானவர்கள் உட்பட மொத்தம் முப்பத்தி இரண்டு பேர்களின் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதில் முதலாவது பகுதி அதிகாரவர்க்கத்திற்கு எதிரான குரலாக அமைந்திருக்கிறது. நபியின் வழிகாட்டும் நெறி முறைகள் மற்றும் குர்ஆன் இவற்றிலிருந்து பெறக்கூடிய சாரமானது வடிவத்தை எப்பொழுதும் பாதிக்கக்கூடாது என்பதுதான். இங்கு நபியின் போதனையானது வெறும் மத போதனை மட்டுமே. அரசமைப்புக்கு உகந்தது அல்ல. அரசமைப்பையும்/ மத நடவடிக்கையையும் பிாித்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். நபிகள் நாயகம் கூட ஒரு தடவை நீ;ங்கள்உங்களின் உலக விவகாரங்களில் அதிக அறிவுடையவராக விளங்குகின்றீர்கள் என்றார். அரசு என்பது வர்க்க சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் சமயத்தில் மதாீதியான அரசு என்பது வர்க்க மோதல்களையே உண்டு பண்ணும். இஸ்லாமின் தொடக்க காலம் முதல் இன்றுவரை இது தான் நடந்து வருகிறது. கலீபாக்களின் ஆட்சியில் தொடங்கிய இது அப்பாஸிட்/ உமய்யத் கலீபாக்களின் காலத்தில் தீவிரமடைந்தது.

ஜனநாயகமான நெறிமுறைக்கு மதம் ஒத்துவராவிட்டால் அரசானது பாசிச வடிவம் பெறும். இஸ்லாமிய நாடுகளுக்கு இன்று தேவை சட்டபூர்வமான ஜனநாயக அரசாங்கங்கள். இது மட்டுமே மரபான மற்றும் ஆன்மீக அடிப்படையிலான நவீன அரசமைப்பின் வடிவமைப்புக்கு உதவும். மக்களே தேர்ந்தெடுக்கும் அரசமைப்பில் கருத்து சுதந்திரத்துக்கு இடமுண்டு. எழுத்து சுதந்திரமுண்டு. ஆனால் இஸ்லாமிய உலக அனுபவம் இதற்கு மாறாகவே அமைந்துள்ளது. அடிப்படை வாதத்தின் தாயகமான சவூதி அரேபியாவில் நிலைமை கொடுரமானதாக இருக்கிறது. அல் ராசிக் தொடங்கி பலரை மரணிக்க செய்த பெருமை அதற்கே சாரும். நவ ஏகாதிபத்தியத்தின் எதிரொளிப்பாளராக இருந்து கொண்டு தூய்மை வாதத்தை போதிக்கும் அதன் நிலைப்பாடானது சுய முரண் பாடாக இருக்கிறது. நவ ஏகாதிபத்தியத்திற்கு ஜனநாயகம் என்பது சறுக்கலான விஷயம். ஆகவே தான் அது இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயக அரசாங்கங்கள் அமைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது.

இஸ்லாமிய சட்ட நடைமுறை (ஷாீஆ) நவீன போக்குக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கிறது. குர்ஆனின் மொத்தமுள்ள ஆறாயிரம் வசனங்களில் இருநூறு வசனங்கள் மட்டுமே சட்டாீதியான கண்ணோட்டம் உடையவை. குர்ஆனின் முதன்மை நோக்கமே ஒழுக்கவியல் இயல்புதான். சட்டாீதியானது அல்ல. சட்டம் என்கிற போது குற்றவியல்/ சிவில் இரண்டும் கலந்ததாகும். அதில் குற்றவியல் சட்ட நெறிமுறைகள் சுமோிய/ அசாிய/ பாபிலோனிய சமூகத்தின் எச்சங்களின் வெளிப்பாடாகும். பல நாடுகளில் இவை பொடா சட்டம் மாதிாியே பயன்படுத்தப்படுகின்றன. இதில் அங்ககீனம்/ மரண தண்டனை ஆகியவை முக்கியமானவை. மரண தண்டனை என்பது அநாகாீக காலகட்டத்தின் பழிவாங்கலின் நாகாீக வடிவம் சமூகம் குழுக்களாக பிளவுறும் போது ஏற்படும் உழைப்பு பிாிவினையில் மோதல்கள் தவிர்க்க இயலாதவாறு எழுகின்றன. இவை காலச்சூழலின் நிர்பந்தமாக கூட இருக்கலாம். குற்றச்சூழலின் காரணியை ஆராயாமல் காாியத்தை தேடுவது அபத்தமானதாகும். நபியின் காலகட்டத்தில் அரேபிய மண்டலத்தில் இனக்குழுக்களிடையே இத்தகைய மோதல்கள் அதிகம் நடந்தேறின. அன்று கொள்ளையடிப்பது சட்டபூர்வமான தொழிலாக இருந்தது. ஒரு அர்த்தத்தில் புனிதப் போர்கள் அனைத்தும் (கொள்ளை போர்களே அப்படிப்பட்ட போாினால் கிடைத்த வருவாயில் ஐந்தில் ஒரு பகுதி அரசாங்க கஜனாவுக்கு செலுத்த வேண்டும் மற்றதை போர் வீரர்களுக்கிடையே சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செல்வத்தை தம்மிடையே சமமாக பங்கிட்டு கொள்ளும் ஏற்பாட்டினாலும் இயல்பாகவே அரேபிய இனக்குழுக்களிடையே நிலவிய சகோதரத்துவத்தாலும் அவர்களிடையே சமத்துவ கோட்பாடு பரவியது. நபிகள் நாயகம் அரசாட்சி முறைக்கு எதிரானவர் அல்ல. அதனால்தான் அவர் முதலில் தமது பக்கத்து அரசர்களான ஈரானின் ஜர்துஷ்த்தி/ ஷாபுக்கும்/ ரோமின் கைசருக்கும் இஸ்லாமில் சேர அழைப்பு விடுத்தார். ஆனாலும் அவர் அரேபியர் முன்பும் இஸ்லாமிய உலகின் முன்பு வைக்க விரும்பிய அரசாட்சி முறையில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை.

ஆட்சி முறை என்பதை காட்டிலும் நபிகள் சிறிய சிறிய இனங்களாக சிதறி கிடந்த பல்வேறு மக்களையும்/ குழுக்களையும் போினமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இதன் விளைவு தான் உலகளாவிய பேரரசு கோட்பாடு. இதுவே முகமது கோாிக்கும்/ துக்களக்கிற்கும்/ கஜினி முகமதுவுக்கும் கோட்பாடாக இருந்தது. பொதுவாக மன்னர்கள் என்பவர்களின் நிலைபாடானது சார்பியல் ாீதியானது. அது அளவு மாறுதலை உடையது.

நவீன உலகில் இஸ்லாத்தின் மீதான சவால்களில் ஒன்று பெண்களைப்பற்றியதாகும். இஸ்லாமின் காலம் அநாகாீக கட்டத்திலிருந்து நாகாீக காலகட்டத்துக்கு மாறிக் கொண்டிருந்த காலகட்டம். புராதன உழைப்பு பிாிவினைக்கு பின் பெண் வீடு என்ற நிறுவனத்துடன் அடையாளப்படுத்தப்பட்டாள். இதன் தொடர்ச்சியாக குடும்பம் என்ற முதன்மை நிறுவனம் அவளை உள் அமர்த்த செய்தது. அரேபிய இனக்குழுக்களிடையே பெண் இரண்டாம் தர வகையினமாக கருதப்பட்டாள். தடையற்ற தாராள பாலுறவு நடவடிக்கை அச்சமூகங்களில் நிலவியது. இனக்குழுக்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர் (அன்று சண்டையிடுதல்/ அதிகாரபூர்வமானதாக இருந்தது)சண்டையிடுதல்/மோதலில் முதல் பலிகடாவாக பெண் ஆக்கப்பட்டாள். சண்டையிடுபவர்கள் தங்கள் எதிாிகளை வஞ்சம் தீர்ப்பதற்கு அவர்களின் வீட்டு பெண்களை பலி கடாவாக்கப்பட்டனர். (தற்காலத்தில் கலவரங்களில் பெண் அதிகமாக பாதிக்கப்படுவது மாதிாி) விருப்பு வெறுப்பற்ற தாராள ஒழுக்கவியல் நடைமுறையிலிருந்தது. இம்மாதிாியான நிலைமையை மாற்றி மாற்று சமூக ஒழுக்கவியலை கட்டமைப்பதே நபியின் நோக்கமாக இருந்தது. அதனால் தான் ஆண் - பெண்களுக்கான பல்வேறு நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. உடை அமைப்பானது மேலும் தீவிரமாக்கப்பட்டது (அதற்கு அன்றைய பாலைவனச்சூழலும் காரணமாக இருந்திருக்கலாம்) உடை என்பதே வித்தியாசப்படுத்தும் நடவடிக்கை வித்தியாசப்படுத்தலே மனித இருப்புக்கு காரணமாக இருக்கிறது. இங்கு வித்தியாசப்படுத்தல் ஒத்திவைத்தலையும் சேர்த்தே உருவாக்கி விடுகிறது. வித்தியாசப்படுத்தல் வெளி சார்ந்ததாகவும் ஒத்திவைத்தல் காலம் சார்ந்ததாகவும் இருக்கிறது. இந்த வித்தியாசப்படுத்தலின் கூறாக இருக்கும் உடையானது காலத்தை தாண்டி விடுவதில்லை. உடையின் அமைப்பு முறை பிரவாகமாக இருக்கிறது. பல்வேறு காலங்களில் பல்வேறு சமூகங்களில் பல்வேறு விதமான உடைகள் வெளிப்பட்டிருக்கின்றன. உடையின் உாிமைக்காக வேண்டி போராட்டம் நடைபெற்ற காலங்கள் உண்டு. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலை போராட்டம் இதற்கு உதாரணம். இன்றைய உலகமயமாக்கல் ஆடை குறைப்பை முன்வைக்கிறது. அதிலும் பெண்ணை முன்னிலைப்படுத்திதான் அதை முன் வைக்கிறது. இன்றைய சூழலில் பெண்ணை அவளின் உடையிலிருந்து பிாித்து பார்க்க முடிவதில்லை. அவளை விட உடை முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாதிாியான சிக்கலான சூழலில் இஸ்லாமிய பெண்ணின் உடை கவனம் பெறுகிறது. முகத்தை மறைத்தல் ஒரு பாதுகாப்பு அணுகுமுறை என்பதிலிருந்து ஓர் அடையாளம் பெறும் தனிமைப்படுத்தலாக இன்று மாறி விட்டது. இன்று பர்தா முறை எளிமை மற்றும் பாவனை ஆகி வரும் சூழலில் அதன் பின்னால் ஒழுக்க மற்றும் அறவியல் உள்ளடக்கங்கள் போர்த்தப்படுகின்றன. ஒரு மூடிய பனிமூட்டத்தின் உதாரணத்திற்கு இதனை ஒப்பிட முடியும். பெண்ணுக்கான நடத்தை விதிகள் இஸ்லாமின் ஆரம்ப சூழலில் ஏற்படுத்தப்பட்டு அதுவே ஞூகாலத்தை தாண்டி நிற்பது என்பதாக வடிவமைக்கப்பட்டதன் விளைவு தான் இஸ்லாமிய பெண்ணுக்கான இன்றைய அவலநிலை. உலகம் முழுவதும் பெண்களில் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் சமூக/ பொருளாதார/ கலாச்சார சூழலில் மிகவும் பின்தங்கி உள்ளனர். இன ாீதியான வன்முறைகளில் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நிவாரணம் தேடிக் கொள்ள அவர்களுக்கு போதிய நிவாரணிகள் இல்லை. மாறாக போின்ப மருந்துகள் தான் அதிகம் தடவப்படுகின்றன. சில இஸ்லாமிய நாடுகளில் பெண் பற்றிய வறட்டு பார்வையே நிலவி வருகின்றன. சமீபத்தில் சவூதி அரேபியாவில் பெண் குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளி கூடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்ட போது அவர்களை காப்பாற்ற ஆண்கள் யாரும் முன்வரவில்லை. காரணம் அந்நிய ஆண்கள் பெண்களை தொடக்கூடாது என்ற நிரந்தரமான நடத்தை விதி விளைவு சம்மந்தப்பட்டவர்கள் வருவதற்கு முன்பு உயிர் அவர்களை விட்டு முந்திச் சென்று விட்டது. இயல்பாகவே ஆணாதிக்க சமூகத்தின் சொல்லாடல்கள் இஸ்லாமிய பெண்கள் மீது அதிகம் திணிக்கப்படுகின்றன. இம்மாதிாியான கருத்தாக்கங்களை பற்றியும்/ பெண்ணின் அரசியல் தலைமை பற்றியும் இப்பு[த்தகத்தில் விாிவாகவே பெண்ணியவாதிகள் விவாதிக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்ற பிறகு யூதர்களுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமை நிறுவுவதற்காக யூதர்களுடன் ஏற்பட்ட மோதல் இறுதியில் உடன் படிக்கை மூலம் சமரசம் செய்யப்பட்டது. இதுதான் இஸ்லாமிய வரலாற்றில் முதல் அரசியல் ஒப்பந்தம். அது மொத்தம் நாற்பத்தி ஏழு ஷரத்துக்களை கொண்டது இது மதீனா ஆவணம் என்றழைக்கப்படுகிறது.

1. இந்த ஆவணம் நபி மற்றும் குரைஷ்/ (மக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்) அன்சார்கள் (மதீனாபாசிகள்) அவர்களுடன் இணைந்து போாிட்டவர்களால் தயாாிக்கப்பட்டது.

2. இது புதிய மனித சமூகத்தை உருவாக்கும்.

3. பனூ அவ்ப் (இனக்குழுக்களில் ஒன்று) தாங்கள் இரத்தம் சிந்தியதற்கான விலையை பெறுவார்கள். மேலும் அவர்கள் தாங்கள் பிடித்து வைத்துள்ள போர்கைதிகளை அதற்கான ஈட்டு தொகை கொடுத்து விடுதலை செய்ய வேண்டும்.

4. ஒரு முஸ்லீம் மற்ற முஸ்லீமை கொல்லக் கூடாது. மேலும் நம்பிக்கையற்றோர்களுக்கு உதவக்கூடாது.

5. எந்தவொரு யூதரும் அடைக்கலம் தேடி வரும் போது அவர்களுக்கு அடைக்கலமும்/ நிதி உதவியும் அளிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை கொல்லக்கூடாது.

இப்படியான ஷரத்துகளோடு இந்த ஒப்பந்தம் நீள்கிறது. ஆனால் நபியின் காலத்திற்கு பிறகு பல ஷரத்துக்கள் மீறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கலகங்கள் கிளர்ச்சிகள் குழப்பங்கள் ஏற்பட்டன. அதிகார போட்டியும்/ ஆதிக்க மனோபாவமும் ஏற்பட்டது. உமய்யத் மற்றும் அப்பாஸிட் கலீபாக்களின் காலத்தில் இது மேலும் அதிகமானது. ஒவ்வொரு கலகமும் இன்னொரு கலகத்தை உமிழும். காரண- காிய விதிப்படி கலகங்களின் காரணங்கள் முடிவற்றவை. தொடர்ச்சியற்றவை. இவைகளின் நீட்சிதான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான்/ ஈரான்/ ஈராக்/ இந்தோனேஷியா/ எகிப்து மற்றும் ஆப்பிாிக்க நாடுகளே இதற்கு உதாரணங்கள். யூதம்/ கிறிஸ்தவம்/ இஸ்லாம் இவை மூன்றும் செமிட்டிக் மதங்கள். செமிட்டிக் மதங்களின் கருது கோள்களின் ஒருமை ஏக இறைவழிபாட்டில் அடங்கியிருக்கின்றது. எந்தவொரு கோட்பாடும் வெளியை தாண்டி பிரதிபலிக்கும் போது அவ்வெளியின் கலாச்சாரத்தை உள்வாங்கி கொள்ளுவது தவிர்க்க இயலாததாகும். கிறிஸ்தவத்தின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் இஸ்லாம் இந்த இடத்தில் தவறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதன் சாதகமான அம்சம் அது பரவிய இடத்தில் கோட்பாடு சமத்துவத்தை உருவாக்கியது தான். இந்திய சூழலில் சாதிய கட்டுமானத்தையும்/ ஆப்பிாிக்காவின் நிற வெறியையும் போக்கியது குறிப்பிட தகுந்த அம்சம்.

இன்று இஸ்லாமிய உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் ஜிசாத் (புனித போர்) குறித்து அதிகம் இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புனிதபோர் அன்றைய காலச் சூழலில் தவிர்க்க இயலாத வகையில் எழுந்த நிர்பந்தம் இனக்குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காலிக யுக்தியே அது. அது காலத்தை தாண்டி தற்போது பிரதிபலிக்க செய்யப்படுவதால் எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது. பல பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக குர்ஆனின் வசனங்களை வெட்டி எடுத்து தங்களின் நடவடிக்கைகளுக்கு இணையாக ஒட்டிக் கொள்கின்றன. 1992 இல் இருந்து 1/50/000 மக்களை அல்ஜீாியாவில் கொன்று குவித்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் அமொிக்க வெளியுறவு கொள்கைக்கும் தொடர்பு இருக்க முடியாது. இந்தியாவில் சங்-பாிவார் பயங்கரவாதம்/ பாகிஸ்தான்/ ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்/ இஸ்ரேலில் யூத பயங்கரவாதம்/ செர்பியா மற்றும் அமொிக்காவில் கிறிஸ்தவ பயங்கரவாதம் இப்படியாக அதன் எல்லை சுழன்று வருகிறது.

ஐநா சபையின் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

இந்த மத பயங்கரவாதங்கள் அவற்றை வளர்க்கும் சமூக பொருளாதார காரணிகளின் முழுமைத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டும்.

இஸ்லாமின் சமூக பொருளாதார காரணிகள் தங்களுக்கான காாியங்களை தேடிக் கொள்ள வேண்டும். பொருளாதார கோட்பாடுகள் அதன் அடிப்படையிலான சமூக வளர்ச்சி திட்டங்களின் வடிவமைப்பு மாறிக் கொண்டு வரும் சூழலில் அதுவும் மாறுதலுக்கு உட்பட வேண்டும். நான்காம் தலைமுறை தகவல் தொடர்பு வளர்ச்சியை நோக்கியதாக பிரபஞ்சம் இயங்கி கொண்டிருக்கும் சூழலில் காலத்தை பின்னுக்கு தள்ளல் பின்னடைவையே ஏற்படுத்தும் நிலவுக்கு மனிதன் சென்றுவிட்ட போதும்/ நிலவை பற்றி தீர்மானமான முடிவிற்கு இஸ்லாமிய உலகத்தால் வர முடியவில்லை. எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலுமே புதிய விஞ்ஞூான கண்டுபிடிப்புகளோ அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளோ இல்லை. ஸ்பெயினின் இஸ்லாமிய ஆட்சியில் நிறைய சிந்தனையாளர்கள் உருவானார்கள். அல்பராபி/ இப்னு துபைல்/ பூவலி மஸ்கவியா/அபூயாகூப் கீந்தி ஆகியோர் குறிப்பிட தகுந்தவர்கள். பல இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மதத்துரோக குற்றச்சாட்டின் போில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய ஷாீஅத் சட்டத்தின்படி யூதர்களும் கிறிஸ்தவர்களும் திம்மிகள் தான். ஆக கோட்பாட்டின் நிரந்தர தன்மை பொருந்தா சூழலையே உருவாக்கும் வெளியை தாண்டுவது என்பது இயலாதது. தாண்டியதால் ஏற்பட்ட விளைவுகளே பக்கங்களின் வரலாறாக இருக்கின்றது. இஸ்லாமிய உலகிற்கு இன்றைய தேவையாக புதிய ஜனநாயகம்/ வலுவான அரசமைப்பு/ விஞ்ஞூான/ கலாச்சார வளர்ச்சி நிலை/ சமூக பொருளாதார காரணிகளின் மறு உருவாக்கம்/ ஆகியவை இருக்கின்றது. யூதமும்/ கிறிஸ்தவமும் ஏற்கெனவே இதனை செய்து விட்டன. சுய-விமர்சனம் என்பது ஓர் இயங்கியல் அணுகுமுறை இதுவே அவசியமானதாகும். இம்மாதிாியான புதிய சிந்தனைகளின் தொடக்கமாக இந்த புத்தகத்தை குறிப்பிடலாம். லிபரல் இஸ்லாம் என்ற இந்த தொகுப்பு இஸ்லாமில் நவ ஐனநாயகத்தை உருவாக்கும் முயற்சி எனலாம்.



1. 'Liberal Islam '

A Source book

edited by - Charles Kurzman

Oxford University Press 1998


2. 'Modernist Islam '

(1840 - 1940)

A Source book

edited by - Charles Kurzman

Oxford University Press 2000

காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்

சிவ -சக்தி- அணு - காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது

புதிய கோடங்கி (ஜுன் 2003)

சைவம் அதன் கோட்பாட்டு வடிவத்தில் பல கிளைகளாக பிாிந்தது. தென்னிந்திய சைவம், வட இந்திய சைவம், காஷ்மீர் சைவம் போன்றவை அதன் கிளைகள். சிவனை மையமாக கொண்டு இதன் கருத்துக்கள் நிலைபெற்றன. காஷ்மீர் சைவம் காஷ்மீர் பகுதியில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் ஏற்பட்டது. இதனை தாந்திாீகர்கள் பலர் பின் தொடர்ந்தனர். வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.

காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகாித்தது. இது தாிகா, ஸ்பந்தா, பிரத்யபிஜனா என்ற மூன்று முக்கிய கோட்பாட்டோடு தொடங்குகிறது.

தாிகா சிவ-சக்கதி - அணு அல்லது பதி-பாச-பசு என்ற மூன்றாக நீள்கிறழது. காஷ்மீர் சைவம் தனிமனித ஆன்மாவும், பொருளாய உலகமும் சிவனோடு ஒன்றுகிறது என்றது. அவைகள் சிவனின் வெளித்தோற்றங்கள். சிவனே அதன் வடிவமாக இருக்கிறான். இது ஸ்பந்தா எனப்படும். ஆன்மாவானது சிவனோடு அடைதல் அல்லது சிவ அனுபவத்தை பெறுதல் பிரத்யபிஜனாவாகும் இந்த கோட்பாடானது சூபிசத்தின் இயைப்புக்கு ஒத்ததாகும்.

சிவனே உயர்ந்த இருப்பு. அதன்சாரம் தான் மனிதன். இந்த இருப்பானது முழுமையானது, நலையானது, கடக்க முடியாதது. சிவனே முழு முதல் உணர்வு. அந்த உணர்வின் வெளிப்பாடே மற்றவை. இந்நிலையில் காரண - காாியத்திற்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை. தூய வஸ்துவாக சிவனை இருத்தும்போது உலகின் தோற்றம் என்பது சிக்கலான கேள்வியாக இருக்கிறது. இதற்கு இவ்வுலகமானது சிவனின் பிரதிபிம்பம் என்கிறது காஷ்மீர் சைவம். கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் கண்ணாடியின் எந்த கறையையும் ஏற்படுத்தாதை போன்று சிவனித்திலும் எந்த கறையையும் உண்டு பண்ணுவதில்லை.

உலகின் வெளிப்பாட்டுக்கு சிவனோடு சக்தியும் இன்னொரு காரணமாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிாிக்க முடியாதவை. சக்தியானது அலைவுறும் நிலையில் அது விமர்சமாயாவாகும். இந்த சக்தியானது சித்தம், ஆனந்தம், இச்சை, ஞூானம், கிாியை, யோகம் என்ற ஆறுவித தன்மைகளை கொண்டது. சித்தம் என்பது அறியும் நிலை, ஆனந்தம் அதனை ஏற்படுத்தும் வழி, இச்சை படைப்பின் தூண்டல், கிாியையானது செயல்பாடாகும். யோகம ; சிவ-சக்தி இரண்டும் நிலை, ஞூானம் என்பது படைப்பின் தோற்றம். படைப்பு நிலையில் சிவசக்தியை பிாிக்க முடியாது. இதன் உறவு வெப்பத்துக்கும் நெருப்புக்கும் இடையேயான உறவாகும். சக்தி வெளிப்படும் போது உலகம் தோற்றம் கொள்கிறது. அது மறையும் பொழுது பிரளயம் ஏற்படுகிறது. காஷ்மீர் சைவத்தை பொறுத்தவரை சிவனுடன் ஒன்றுவது உலக இறுக்கங்களிலிருந்து விடுதலை பெறுவது ஆகும்.

காஷ்மீர் சைவத்தின் சிவ-சக்தி என்பது ஆண்-பெண் உறவோடு இணைத்து பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் நிலையில் காஷ்மீர் சைவம் தாந்திாிகத்தோடு இணைகிறது. தாந்திாீகத்தின் தொடர்ச்சியில் இதன் உறவு பிாிக்க முடியாததாகும். பிரகிருதி -புருஷ கோட்பாட்டின் படி பிரகிருதி சக்தியாகவும், புருஷ என்பது சிவனாகவும் இருக்கிறது. சக்திக்கு செயல்படும் மற்றும் செயல்படா ஆகிய இரு நிலைகள் உள்ளன. செயல்படா நிலையில் இது சிவனோடு அல்லது பிரகாசத்தோடு இணைந்து வடுகிறது. செயல்படும் நிலையில் உயர் இருப்பானது உணரும் நிலையை அடைகிறது. உயர் இருப்பானது கடக்க முடியாததாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. உயர் இருப்பில் சிவ சக்தி இரண்டற கலந்து விடுகிறது. சக்தியின் முதல் மாறுதல் நிலை இச்சையாகும். இரண்டாவது நிலையில் சித்தம் அல்லது உணர்வு வடிவமாகும். பின்பு அறிவாகவும், செயலாகவும் மாறுகிறது. இவை முழுமை அடையும் பொழுது படைப்பாக மாறுகிறது. மனித விந்தணுவானது சக்தியை சார்ந்து அமைகிறது. இங்கு பெண்ணே முன்னிலைப்படுத்தப்படுகிறாள். சக்தியானது கருவி காரணமாகும் போது விந்தணுவானது பொருளாயத காரணமாயிருக்கிறது.

சக்தியானது அதன் இன்னொரு நிலையில் பெண் தெய்வங்களோடு தொடர்பு கொண்டது. பிரபஞ்ச படைப்பு நிலையில் மூலப்பிரகிருதியானது அம்ச ரூபினி, காலரூபினி, காலாம்ச ரூபின் மற்றுமட் அதன் துணை வடிவங்களாகிறது. முதல் நிலையில் சக்தியானது துர்கா, லட்சுமி, சரஸ்வதி சாவுத்ாி மற்றும் ராதை ஆகிறது. இரண்டாம் கட்டத்தில் கங்கா, துளசி, மனசா, சாஸ்தி, மங்களகாந்திகா, மற்றும் காளியாகிறது. மூன்றாம் கட்டத்தில் கிராம தேவதைகளாகவும் வடிவம் கொள்கிறது.


இம்மாதிாியான பெண் தெய்வநிலை தாந்திாீக தாக்கத்தின் விளைவாகும். இவர்களே தேவிகள் என அழைக்கப்பட்டனர். காஷ்மீர் சைவம் மதாீதியான சடங்குகளுக்கோ, வழிபாடுகளுக்கோ மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது ஜீவனானது சிவ-சக்தியோடு ஒன்றும் நிலையை எடுத்துரைத்தது. இதன் மூலம் எல்லாவித துயரங்களிலிருந்தும் விடுதலை அடையலாம் என்றது. இம்மாதிாியான கோட்பாட்டு சூழலின் ஒருவகையில் காஷ்மீர் சைவம், பெளத்தம், தாந்திாீகம், சூபிசம் இவற்றுடன் ஒன்றி வருகிறது

இஃபத் மாலிக் (பாகிஸ்தானிய 'தி நியூஸ் ' பத்திரிக்கையிலிருந்து)

சாதி என்னும் சாபக்கேடு
இஃபத் மாலிக் (பாகிஸ்தானிய 'தி நியூஸ் ' பத்திரிக்கையிலிருந்து)
Iffat.Malik@dfat.gov.au

(thinnai.com)

டர்பனில் நடக்கும் இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில், உலகப் பார்வைக்கு வராமல் 'பர்தா ' இடப்பட்ட ஒரு பாரபட்சமான முறை வைக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 25 கோடி மக்களை பாதிக்கும் விஷயம்.. இது ஒரு மனிதர் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் நிர்ணயிக்கும் ஒரு முறை. இந்த 'மறைமுக இனப்பிரிப்பு ' (Apartheid) முறைக்குப் பெயர் 'சாதி '.


சாதி முறையைப் பற்றிய எந்த விவாதமும் இந்தியாவிலிருந்துதான் தொடங்கவேண்டும். இங்கு 3500 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய இந்த முறை இன்று பரந்த அளவில் இருக்கிறது. இந்தியாவில் சுமார் 16 கோடி தலித்துகள் இருக்கிறார்கள். இவர்கள் சாதி முறையின் அடித்தளத்தில் இருக்கிறார்கள். இவர்கள் மீது தடைகளும், விலக்குகளும், கொடுமைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதிலும் மோசமான நிலையில் இருப்பவர்கள் , வட இந்தியாவின் கிராமங்களில் , முக்கியமாக பிகாரில் வாழ்கிறார்கள்.


ஒரு சாதாரண தலித் குழந்தை, மோசமான நிலையில் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே வாழ்வின் தவறான பாதையில் தொடங்குகிறார்கள். தலித்துகளுக்கு பெரும்பாலும் கிராமத்துக்குள் வாழ அனுமதி கிடையாது. தலித் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியாது. அப்படியே சென்றாலும், அவர்கள் தரையிலேயே உட்கார வேண்டும். உயர்சாதிக் குழந்தைகள் உபயோகிக்கும் பாத்திரங்களையோ, குடிதண்ணீர்க் குழாய்களையோ உபயோகப்படுத்த முடியாது. அவர்கள் எங்கு சென்றாலும் இந்த பாரபட்சம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.


பெரும்பாலான தலித்துகள் சரியாக படிப்பு முடிக்க முடியாமல், தங்களது தந்தை தாய் தொழிலைப் பின்பற்றி சமூகத்தின் இழிந்த தொழில்களை கையிலெடுத்துக்கொள்கிறார்கள். தெருக்களைச் சுத்தமாக வைத்திருப்பது, சாக்கடைகள் சுத்தம் செய்வது, இறந்தவர்களை எரிப்பது போன்றவை. இதையும் தாண்டி அவர்கள் இமாலய முயற்சி எடுத்து , நல்ல படியாய்ப் படித்து முடித்தாலோ, வேலை கொடுப்பவர்களால் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள். அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும், தலித்துகளை வேலைக்கு வைத்துக்கொள்ளத் தயங்குகின்றன.


வேலை கிடைத்தாலும், அவர்கள் தங்களது மேலதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உயர்சாதி வன்முறைக்கும் ஆளாகிறார்கள். இதிலும் மோசமானது தலித் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை. பூலான் தேவியின் சரிதம் , பாலியல் வன்முறைக்கு பலரால் ஆளானதைச் சொல்கிறது. பத்தாயிரக்கணக்கான பூலான் தேவிகள் இன்றும் இந்தியாவில் பாலியல்வன்முறைக்கு ஆளாகிறார்கள். நீதி கிடைப்பது இன்னும் கடினமானது. போலீஸ் பெரும்பாலும் உயர்சாதியினருக்குப் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ஒரு தலித் தான் தலித் என்பதை என்றும் மறக்கும் படிக்கு சமூகம் விடுவதில்லை. குஜராத்தில் நடந்த பெரும் பூகம்பத்தின் பின்னர், சமூகங்கள் இணைந்து மறுகட்டுமானம் செய்தார்கள் என்று நாம் நினைத்திருக்கலாம். ஆனால், இங்கும், தலித்துகளுக்கு, அவசர உதவியும், ஏன் தண்ணீரும் கூட மறுக்கப்பட்டன.


தலித்துக்களை சாதி அவர்களின் வாழ்நாளெல்லாம் துரத்துகிறது. அவர்களால் அதனை உதறிவிட்டுப் போகமுடியாது. சிலர் வேறு சில மதங்களுக்கு மதம் மாறி சாதிக்கொடுமையிலிருந்து தப்ப முயன்றார்கள். அம்பேத்கார் புத்தமதத்துக்குச் சென்றார். இதில் அவலம் என்னவென்றால், இஸ்லாம், புத்தமதம், கிரிஸ்தவ மதத்திலும், அங்குள்ளவர்கள் இவர்களது கீழ்சாதி காரணமாக கீழ்த்தரமாகவே நடத்துகிறார்கள். சாதி முறை இந்து மதம் தாண்டி இந்திய சமூகம் எங்கும் பரவிக்கிடக்கிறது.


கடந்த நூற்றாண்டில், கென்யா, உகாண்டா, அமெரிக்கா, கானடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு தலித்துகளும் மற்றவர்களைப் போலவே சென்றார்கள். இந்தியாவில் இருக்கும் பல ஜாதி பாரபட்சங்களைத் தாண்டினாலும், மன ரீதியான தடைகள் இன்னும் இருக்கின்றன. இரண்டாம் மூன்றாம் தலைமுறை இந்தியர்கள் இன்னும் சாதி பார்த்தே திருமணம் செய்கிறார்கள். ஒரு தலித் மிகச்சிறந்த இருதய நோய் சிகித்சை நிபுணராக நியூயார்க்கில் இருந்தாலும், அவருக்கு பிராம்மணப் பெண் திருமணம் செய்யக்கிடைக்காது.



பாகிஸ்தானில் இந்தப் பிற்போக்கு முறை இல்லை என்று நாம் நினைக்கும் முன்னர், 'மனித உரிமைகள் கண்காணிப்பு '(Human Rights Watch report) அறிக்கை ஒன்றை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்த அறிக்கை சாதிக்கொடுமை இருக்கும் தேசங்களில் ஒன்றாக பாகிஸ்தானையும் இணைத்திருக்கிறது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் நடத்தப்படுவதற்கும், இந்தியாவில் தலித்துகள் நடத்தப்படுவதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா ? தெருக்களைச் சுத்தம் செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள் எல்லோருமே கிரிஸ்தவர்களாக இருக்கிறார்கள் பாகிஸ்தானில். 'சுத்தமான ' முஸ்லீம் வீடுகளில் இவர்களை எந்தப் பாத்திரங்களையும் தொட அனுமதிக்க மாட்டார்கள். நாம் பீகாரின் தலித்துகளை கொடுமை செய்வதுபோல செய்யவில்லை என்றாலும் நம்மிடம் தெய்வ நிந்தனை சட்டங்கள் (blasphemy laws) இருக்கின்றன. இந்த சட்டங்களும் , மற்ற எவரையும் விட, அப்பாவி கிறுஸ்துவர்களையே குறி வைக்கிறது. பல கிரிஸ்தவர்கள் எந்தவிதமான சாட்சியமும் இல்லாமல் ஜெயிலில் வாடுகிறார்கள்.



ஒரு உருது சிறுகதையில், முக்கிய பாத்திரம் மருத்துவமனையில் இருக்கும்போது, ஒரு கிரிஸ்தவ நர்ஸ்சுடன் காதல் கொள்கிறான். நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் வற்புறுத்தலால், அந்தக் காதலை மறக்கிறான். ஆனால், அவன் ஒரு வெள்ளைக்கார கிரிஸ்தவப் பெண்ணை மணம் செய்யும்போது, அதே குடும்பத்தாரும், நண்பர்களும், அவனைப் பாராட்டுகிறார்கள். சந்தோஷப்படுகிறார்கள். இந்தக்கதை எப்படி நமது சமூகக் கிரிஸ்தவர்களை பாரபட்சமாக நடத்துவது இந்து சாதி முறையிலிருந்து வருகிறது என்பதை விளக்குகிறது. பாகிஸ்தானிய கிரிஸ்தவர்களில் பெரும்பான்மையோர் தலித்துகளின் சந்ததியினர்.



பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்குள்ளேயே உயர்சாதி கீழ்சாதி அமைப்புகள் இருக்கின்றன. கீழ்சாதி முஸ்லீம்கள் பொதுவாக 'கம்மி ' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், நாவிதர்கள், கறிவெட்டுபவர்கள், போன்ற கை வேலை செய்பவர்கள்.


திருமண விளம்பரங்கள் பெரும்பாலும், சமூகப் பார்வைகளையும், மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துகின்றன. எல்லா விளம்பரங்களிலும், மணப்பெண், மணமகனின் அதே 'ஜாத் ' (சாதி) முக்கியமாக இடம் பெறுகிறது. 'அரைன் டாக்டருக்கு ஜோடி தேவை. அரைன் குடும்பங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் ' போன்ற வரி விளம்பரங்களே இருக்கின்றன. ஜாத் வித்தியாசம் பாகிஸ்தானிலிருந்து வெளியே சென்ற குடும்பங்களிடமும் இருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்களும், இந்தியக்குடும்பங்களைப் போலவே, ஜாத் பார்த்தே, திருமணங்கள் செய்வதும், குடும்ப உறவுகள், நட்புகள் வைத்துக்கொள்வதும் செய்கின்றன. பலவேறுபட்ட ஜாதி பாரபட்சங்கள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், பொதுமையான அமைப்பு இப்படித்தான்.


இந்திய அரசியல் சட்டம் ஜாதி இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை. அது தலித்துகளை பாரபட்சமாக நடத்துவதை தடை செய்கிறது. ஆனால், காகிதத்தில் எழுதிய சட்டங்கள் உண்மையான இந்தியாவில் முக்கியமானதாக இல்லை.




***

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:


'மனித உரிமைகள் கவனிப்பு '(Human Rights Watch report) அறிக்கையில் இந்தியா பாகிஸ்தான் மட்டும் குறிப்பிடப்படவில்லை. இதில் தெற்காசியா, இந்திய வம்சாவளியினர் தவிர மற்ற நாடுகளும் இனங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.


ஜப்பானின் புராக்கு மக்களும், நைஜீரியாவின் இக்போ இனமக்களும், செனகல், மவுரிட்டானியா நாடுகளில் சில இனங்களும் இவ்வாறு கீழ்த்தரமாக நடத்தப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கிறது.


ஜப்பானில் 1871இல் புராக்கு (Buraku) அமைப்பு அரசாங்கரீதியாக தடைசெய்யப்பட்டாலும், அந்த இன மக்கள் சுமார் 30 லட்சம் பேர் இன்னும் 'சுத்தமற்ற ' வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஜப்பானிய பெளத்தர்களும், ஜப்பானிய ஷிண்டோக்களும், இந்த 'சுத்தமற்ற ' வேலைகளைச் செய்வதில்லை. இந்த புராக்கு இன மக்கள் தனியான சேரிகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் வேலைகளில் பாரபட்சமும், பொது இடங்களில் வார்த்தைக் கொடுமையும் நடக்கிறது.


தென் கிழக்கு நைஜீரியாவில் இருக்கும் இக்போ Igbo இன சமூகங்களில் ஓசு Osu என்றழைக்கப்படுபவர்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு வாழவைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சமூக சம அந்தஸ்து கொடுக்கப்படுவதில்லை. இது தவறு என்று சட்டங்கள் இருந்தாலும், இது தொடர்ந்து நடக்கிறது. ஓசு மக்கள் தங்கள் சாதிக்குள்ளேயே மணம் புரிய வேண்டும். அவர்கள் இறந்தால் தனியான கல்லறை இடங்களில் புதைக்கப்படுகிறார்கள்.


செனகல் நாட்டிலும் மற்ற பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், செய்யும் வேலை சார்ந்து சாதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. க்ரியோட் என்னும் சாதி முறை வம்சம் வம்சமாக வருகிறது. மவுரிட்டானியா நாட்டில், அடிமைகள் சாதிவாரியாக பயன்படுத்தப்படுகிறார்கள். அரபு மொழி பேசும் ஹெராட்டின்கள் (Haratines) மவுரிட்டானியா நாட்டின், சகாரா பாலைவனப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களிடையே கூலி கொடுக்காமல் உழைக்கவேண்டிய அடிமை முறை இன்னும் இருக்கிறது.


****

ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்

ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்

பர்ஷானே மிலானி

(திண்ணை)


ஈரானில் பார்த்தது பார்த்தபடி கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிதமான படுகை படுகையான அர்த்தங்களுக்குள் மடிந்து கிடக்கின்றது.

உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அரசியல் அர்த்தங்களும், லட்சியங்களும் இதனுள் குவிந்து கிடக்கின்றன. பெண்கள் தங்களது அரசியல் சார்பையும், அதிகாரத்தை எதிர்க்கும் போக்கையும் தங்கள் மேக்கப் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஈரானுக்கு நான் போயிருந்தபோது, ஒரு கலவரத்தினுள் மாட்டிக்கொண்டு, இந்த பாடத்தை நான் கற்க நேர்ந்தது.

எனது தோழியான மரியம் கூட வர, நான் பெரிய கடைவீதிக்கு ஒரு கம்பளம் வாங்கச் சென்றேன். கம்பளம் வாங்கியபின், எனக்குத் தெரிந்த பழைய சிற்றுண்டி விடுதியில் கபாப் மற்றும் டா சாப்பிடச் சென்றேன். எங்கள் தட்டில் இருந்த உணவைத் தொடக்கூட இல்லை. திடாரென்று கடைக்காரர் விளக்கை அணைத்துவிட்டு கடைக் கதவை மூடிவிட்டார். காற்றில் திகிலின் உணர்வு நிரம்பியது. கடையின் சுவர்கள் பூகம்பம் வந்து ஆடுவதுபோல நடுங்கின.

'கண்கணிப்பாளர்கள் கடைவீதிக்கு வந்துவிட்டார்கள் ' என்று ஒரு பெண் கத்தினாள். பெண்கள் எவ்வாறு உடை உடுத்தவேண்டும் என்று கூறும், ஒழுக்கத்தைக் காப்பாற்றும் போலீஸ் நாங்கள் தான் என்று தன்னிச்சையாய்ப் பறைசாற்றும் ஆட்கள் கடைவீதியை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே புரிந்து கொண்டேன்.

அங்கே நான் பயத்தினால் உறைந்து உட்கார்ந்திருக்கும் போது, மரியம் தனது லிப்ஸ்டிக்கை ஒரு பேப்பர் மூலம் அழித்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண் தனது நகச்சாயம் பூசப்பட்ட விரல்களைக் கறுப்புக் கையுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு பெண் தனது வண்ணமயமான தலை அங்கியை எடுத்துவிட்டு, தனது கைப்பையிலிருந்து எடுத்த கறுப்பு நிற தலை அங்கியைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

செருப்புக்கு வெளியே தெரியும் அழகான வண்ணம் பூசப்பட்ட கால்நகங்களை, முழங்கால் வரை நீளமான காலுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள் எனது அருகில் உட்கார்ந்திருந்த பெண். இன்னொரு நடுத்தர வயதான பெண் 'எனக்கு இதைப் பார்த்தால் ஒரே எரிச்சலாக இருக்கிறது. நாம் விடுதலை பெற வேண்டும், இல்லையேல் செத்துத் தொலைய வேண்டும் ' என்றாள்.

அதே நேரம், சிற்றுண்டிச்சாலையின் ஆண்கள் பிரிவின் பக்கம், மதவாதிகளின் ஆதரவாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளின் ஆதரவாளர்களுக்கும் சண்டை மூண்டது. எனக்கோ கூண்டுக்குள் மாட்டினாற்போல திகிலாக இருந்தது. கம்பளத்தை விட்டுவிட்டு, மூடப்பட்ட கடைக்கதவின் பக்கம் சென்று கடை முதலாளியை எங்களை வெளியே விடுமாறு கெஞ்சினோம்.

எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அழகான கடைவீதி, ஆபத்தான புதிராகி விட்டது. முடிவேயற்றது போலத் தோன்றிய காலம் கடந்து இன்னொரு வீதிக்கு ஓடிவந்து அங்கே இருந்த வாடகைக்கார் ஓட்டுனருக்கு ஏராளமான பணம் கொடுத்தோம்.

அந்த கோடைக்கால நாளின் வெப்பத்தில், தலையிலிருந்து கால் வரை இஸ்லாமிய உடை கொண்டு போர்த்தி, வேர்வையிலும் பயத்திலும் நனைந்திருந்தாலும் கூட, எங்களுக்கு அந்த பூட்டப்பட்ட, குளிர்சாதனம் இல்லாத வாடகைக்கார் சொர்க்கமாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் தாண்டி, கடைவீதி எங்களுக்கு வெகுதூரம் பின்னால் சென்றுவிட்ட போது, பெரு மூச்சு விட்டபடி மரியத்தைப் பார்த்தேன்.

என்னால் நம்பவே முடியவில்லை. மரியம் மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக்கொண்டிருந்தாள். ஒரு அரை மணிநேரம் முன்பு தான் வெகு வேகமாக மேக்கப்பின் சாயலே இல்லாமல் அழித்தாள். அவள் தன் மேக்கப்பை அழித்தவேகமும், மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக் கொண்ட ஆர்வமும், வேகமும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

'லிப்ஸ்டிக் வெறும் லிப்ஸ்டிக் இல்லை. அது ஈரானில் ஒரு அரசியல் ஆயுதம் ' என்றாள் மரியம்.

என் தோழி சரியாகச் சொன்னாள். நவீன ஈரானின் அரசியல் வரலாற்றில், அதன் நவீனத்தைப்பற்றிய சந்தேகங்கள், மாறுதல்கள், மேற்கு நாடுகளுடனான உறவு அனைத்தும் எப்போதும் பெண்களின் உடல்களின் மீதே பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. 1936இல் மன்னர் ஷா, பெண்களை முக்காடு போடாமல் போகச்சொன்னார். அது நவீனத்துவமாக காண்பிக்கப்பட்டது. 1983இல் இஸ்லாமியக் குடியரசு பெண்களை மீண்டும் முக்காடிட்டது. அது இஸ்லாமிய ஈரானிய அடையாளத்தின் மறு கட்டுமானமாக குறிப்பிடப்பட்டது.

இன்று பெண்கள் தங்களை இஸ்லாமிய உடையில் மூடிக்கொண்டே செல்ல வேண்டும். ஆனால், பெண்கள் இன்று முக்கியமான அரசியல் சக்தியாகவும் ஆகி விட்டார்கள். அதிக அளவில் அவர்கள் மோட்டர் சைக்கிள் ஓட்டுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும், மசூதிகளிலும், அரசாங்கத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் கலை இலக்கியத்தில் பங்கு கொண்டு வருகிறார்கள்.


சிறிதளவு லிப்ஸ்டிக் அவர்களை ஜெயிலுக்கு கொண்டு சென்றுவிடும் என்றாலும், ஈரானியப் பெண்கள் வெற்றிகரமாக ஆண்களது உரிமைப் பிரதேசங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களது உடல்களின் மீதான உரிமையை பெறுவது அவர்களது அடுத்த வெற்றியாக இருக்கலாம்.

--

பெர்ஷானே மிலானி, பெர்ஷிய மொழி மற்றும் பெண்கள் ஆராய்ச்சிக்கான துணை பேராசிரியராக விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார்.

Monday, May 26, 2008

பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

நேற்று வாழ்ந்தவரின் கனவு - பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
எச்.பீர்முஹம்மது
புதிய காற்று (மார்ச் 2004)

கனவின் எல்லை விரிவும் ஆழமும் மிக்கது. தனக்கான அலைதுடிப்புகளையும், தேடலையும் கொண்டது. விரிவான அர்த்தங்களின் தேடலே படைப்பின் உயிர்ப்புக்கு அடிப்படையாகிறது. கனவு வெளியில், அதன் எல்லையில் வறுமையை, தவிப்பை, அந்நியமாதலை பிரதிபலித்த உலகமானது பாவண்ணனுக்குரியது. 'வேர்கள் தொலைவில் இருக்கின்றன ' என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் பாவண்ணனின் எழுத்துலகம் தொடங்குகிறது.
இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது பாவண்ணனுக்கு கிடைத்திருக்கிறது. அரசு சார்ந்த அமைப்பின் விருதுகள் இந்தியசூழலில் வழக்கமாக சார்பு நிலையையே எடுத்து வைக்கின்றன. இச்சூழலில் நடப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. நோபல் பரிசுகள் கூட அரசியல் விளையாட்டின் வெளிப்பாடாகி விட்ட இக்காலத்தில் சாகித்ய அகாடமி விருது என்பது சாதாரணத்தனமே. படைப்பாளி பாராட்டுகளையோ, புகழ்மொழிகளையோ எதிர்பார்த்து இயங்குவது படைப்பின் இயங்கு தளத்தை சிதைக்கும் முயற்சியாகும். ஒரு வகையில் சுய-ஏமாற்றம் கூட. மேற்கண்டவற்றையும் மீறி படைப்பாளி சில நேரங்களில் இயங்க வேண்டியதிருக்கிறது. எந்த வகையான, எப்படிப்பட்ட படைப்புகளுக்கு விருது வழங்குவது என்ற வரையறை இல்லாமல் கருப்பு மை காகித குவியல்களுக்கு கூட தமிழில் விருது வழங்கும் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விஷயங்களில் சில நேரங்களில் சரியாகவே செய்கிறது எனலாம். தமிழில் அது வழங்கும் விருது பெரும்பாலும் பிரச்சாரங்களுக்கே போய் சேர்கிறது. அதன் தேர்வுகுழுவில் இடம் பெற்றுள்ள கழக அபிமானிகளும் ஒரு காரணம்.(சிவப்பு ஜோல்னாக்களும் உண்டு)
கோணங்கி, சுப்ரபாரதிமணியன் வரிசையில் எண்பதுகளில் எழுத வந்தவர் பாவண்ணன். அவருடைய சிறுகதை தொகுதிகளில் என் மனப்பதிவுக்குள்ளானது ' நேற்று வாழ்ந்தவர்கள் ' அகோன்னத வெளியில் சில மனிதர்களின் அந்நியப்பாடு, மன இடைவெளியை குறிக்கும் தொகுதி அது. வடிவமைப்பில் எதார்த்த வகைக்குட்பட்டிருந்தாலும் மரபான எதார்த்த வகையிலிருந்து இதனை வித்தியாசப்படுத்தி பார்க்கமுடிகிறது. அது வெளிப்படுத்தும் கதைவெளி அகலமானது. கதையின் வழி பயணிக்கும் போது மனித வாழ்வின் சிக்கல்கள்
புரிகிறது. மனிதனின் சுரண்டல், மனநெருக்கடிகள் எதார்த்தமாக பிரதிபலிக்கிறது. நான் இந்தியாவிலிருந்து புறப்படும் முன்னர் கடைசியாக வாசித்த தொகுப்பு 'ஏவாளின் இரண்டாம் முடிவு ' ஆதாம்- ஏவாள் தொன்மம் பற்றிய குறிப்பீடு அது. ஆண்-பெண் என்ற எதிரிணையில் இன உற்பத்திக்கான தூண்டலே சாத்தான். ஒரு விதத்தில் இதை phallic desire எனலாம். பாவண்ணனின் கட்டுரைதொகுதிகள் கூட குறிப்பிடதகுந்தவை. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட 'எனக்கு பிடித்த கதைகள் '(இது திண்ணை.காமில் தொடராக வெளிவந்தது). இந்திய மொழிகளிலான கதைகளை பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீடு அது. இந்திய மொழி கதைகளின் நனவோட்டம் அதில் வெளிப்படுகிறது. தமிழில் இந்திய மொழி கதைகளை வாசிப்பவர்கள் மிகக்குறைவு. தமிழ்தாண்டி அவர்கள் நேரடியாக லத்தீன் அமெரிக்காவிற்கு சென்று விடுகிறார்கள். இந்திய மொழி சிறுகதை படைப்பாளிகளின் ரசனை, உணர்வுகள் குறித்த விரிவான விவரணம் அது. மொழிபெயர்ப்பு துறையில் பாவண்ணனின் பங்களிப்பு முன்னோக்கி நகர்தலாகும். குறிப்பாக கன்னட படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்ததில் பாவண்ணனின் ஆளுமை அடையாளமிடப்படுகிறது. அவரின் முதல் கன்னட மொழிபெயர்ப்பு கன்னட கவிதைகள் குறித்தது. ' 'நவீன கன்னட கவிதைகள் ' என்ற பெயரில் 1989 ஆம் ஆண்டு கனவு வெளியீடாக வெளிவந்தது. மேலும் கன்னடத்திலிருந்து அவர் மொழிபெயர்த்தவற்றில் குறிப்பிடதகுந்தது பிரபல கன்னட நாடகாசிரியர் கிரிஷ்கர்னார்டின் ' நாகமண்டலம் ' நாடகமாகும். மேஜிக்கல் ரியலிச கதைவெளியில் திரையோடும் அது மிருகத்திலிருந்து-மனிதாக மாறும் பிம்பம் பற்றியது. நாகப்பாம்பு இதில் குறியீடாக காட்டப்படுகிறது. பாம்பு ஊர்ந்து ஒரு புராணிக வெளியை கட்டமைக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. நான் கூட அரங்கேற்றத்தில் பார்வையாளனாக இருந்ததுண்டு.

கன்னட நாவல்களில் எம்.எஸ்.புத்தனாவின் 'வினை விதைப்பவன் வினை அறுப்பான் ' குறிப்பிடதகுந்தது. மேலும் எஸ்.எல் பைரப்பாவின் பர்வா. இந்நாவல் பருவம் என்ற பெயரில் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்காகவே தற்போது சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. கன்னட தலித் படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்ததில்
பாவண்ணன் முக்கியமானவர். சித்தலிங்கையாவின் ' 'ஊரும் சேரியும் ', அரவிந்த் மாளகத்தியின் 'கவர்மெண்ட் பிராமணன் ' போன்ற சுயசரிதைகள் முக்கியமானவை. கன்னட தலித் கவிதைகள், சிறுகதைகள், படைப்பாளிகளின் நேர்முகங்கள் போன்றவை தொகுக்கப்பட்டு 'புதைந்த காற்று ' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பு துறையில் பாவண்ணன் தமிழுலகிற்கு குவியமாகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிதில் வெளிவந்த பாவண்ணனின் நேர்முகம் படைப்பாளியின் இயக்கநிலை, சுதந்திரம், படைப்பு மனம் இவற்றுக்கிடையேயான சிக்கலை வெளிப்படுத்துகிறது. ஒருவனின் சுய-வாழ்க்கைச் சூழல் அவனின் படைப்புகளில் ஏற்படுத்தும் பாதிப்பு முக்கியமானது. சில்வியாபிளாத்தையும், ஆன்செக்ஸ்டானையும் walking bus ஆக்கும் பலூன்களை தமிழில் நிறையவே பார்க்கிறோம். மீளமுடியாத சுய-நெருக்கடிகளிலிருந்து தப்பித்தலுக்கான போராட்டத்தின் வழி இயங்க வேண்டியதிருக்கிறது. அவரின் எழுத்துக்கள் வறுமை-வறுமை சார்ந்த புவியியல் படமாக இருக்கிறது. ஒரு வேளை மனித வாழ்வின் முடிவே வறுமையின் முடிவாக இருக்கலாம்.
தமிழில் தற்போது குறுங்குழுக்களே அதிகம் இயங்கி வருகின்றன. குரு-சீடர் என்ற கட்டமைப்பில் குருநாதரின் நிழல்படும் சீடரே முக்கிய படைப்பாளியாக வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். சிறுபத்திகைகளில் வெளிவரும் கட்டுரைகள் கூட இவர்களின் நிழல் தாண்டியே பிரதிபலிக்கிறது. வாசகன் மனதில் கட்டுரையின் சாராம்சத்தை விட படைப்பாளியின் முகமே முன்நிற்கிறது. அப்படிப்பட்ட கலாசாரத்தை வளர்த்தெடுப்பதற்காகவே சில பத்திரிகைகள் தமிழில் இயங்கி வருகின்றன. பாவண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த விருது சுதந்திரமான படைப்பாளியின் குவியமாதல் அல்லது எதிர்பார்ப்புகள் நீண்ட காலம் கழித்தே சாத்தியப்படும் என்பதை உணர்த்துகிறது. அவனின் மரணம் வெகு எளிதில் நிகழ்வதில்லை. நேற்று வாழ்ந்தவரின் கனவு புனைவு வெளியில் தற்போது பிரதிபலிக்கிறது. அந்த பிரதிபலிப்பு சைபர் தளத்தில் குவிகிறது.

சூபி ஞானி பீர்முஹம்மது

சூபி ஞானி பீர்முஹம்மது - ஓர் அறிமுகம்
பீர் முஹம்மது

புதிய காற்று (ஆகஸ்ட் 2006)


பீர்முஹம்மது அப்பா பற்றிய வரலாறும் அதன் சார்பான புனை கதைகளும் நெடியது. நெகிழ்வுத் தன்மையுடையது. பெயர் என்பதே ஒரு குறியீடு சார்ந்தது. அருவமானது. தன்னை அறிய முடியாதது.

“ராமச்சந்திரனா என்றேன்
ராமச்சந்திரன் என்றான்
எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை
நான் கூறவுமில்லை”

என்ற நகுலனின் கவிதை வரிகள் தான் இவரைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது எனக்கு நினைவுக்கு வருகிறது. என் கழுத்து நிலைக்காத பருவத்தில் என் குடும்பத்தார் இவர் நினைவாக எனக்கு இப் பெயரைச் சூட்டியதாகச் சொன்னதுண்டு.

‘பீர்முஹம்மது அப்பா’என்றழைக்கப்படும் இஸ்லாமிய தமிழ் சித்தரின் காலத்தைப் பற்றிய சரியான தடயங்கள் இல்லை. கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 16ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் சித்தர்களின் காலத்தை இருவகையாக பிரிக்கலாம் - கி.பி.400க்கும் 700க்கும் இடைப்பட்ட காலம் - கி.பி. 700க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலம். முந்தையது ‘மந்திராயன காலம்’ எனவும், பிந்தையது வஜ்ராயன காலம் எனவும் அழைக்கப்படுகிறது. சித்தர்கள் அல்லது அனுபூத மந்திரர்கள் எப்பொழுதும் பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். பர்வதம் நாகர்ஜுனரின் இருப்பிடம். இவரை சமஸ்கிருத வைத்திய நூல்கள் நாகர்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன. இத்தகைய சித்த மரபு பௌத்தத்தின் தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இதன் தாக்கம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் குணங்குடி மஸ்தான், சதக்கத்துல்லா அப்பா, உமறுப் புலவர், ஷேகனா புலவர், குஞ்சு மூசு லெப்பை, பீர்முஹம்மது அப்பா ஆகியோரிடத்திலும் இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் நூல்களை நாம் வாசிக்கும் போது சித்த மரபு சார்ந்த பல்வேறு விஷயங்களை காணலாம்.

சூபிச மரபு இஸ்லாத்தின் பிற்காலத்தில் பரவல் பெறத் தொடங்கியது. அது ஒரு வகையில் இஸ்லாமிய கோட்பாட்டு உருவாக்கத்தின் நீட்சியே எனலாம். சூபி என்ற சொல்லுக்கு தூய்மை, முதல்வரிசை, ஒத்தகுணம் என்ற பல அறிதல்கள் இருந்தும் கம்பளி என்ற அர்த்தமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ‘கம்பளி’ என அர்த்தம் பெறும் ளரக என்ற சொல்லில் இருந்தே சூபி என்பது வந்ததாக பலரின் அபிப்ராயம். எகிப்தின் புகழ்பெற்ற ஜாமிஉல் - அஸ்கர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அரபி கலைக் களஞ்சியத்திலும் கம்பளி என்ற விளக்கமே காணப்படுகிறது. அபுபக்கர் அல் கல்பாதி என்பவர் ‘உலகத்தை துறத்தல், ஆன்மாவை உலகிருந்து திருப்புதல், நிலையான ஓரிடத்தில் இருப்பதை விட்டு விட்டு தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுதல், நடத்தையில் நேர்மை, தலைமை ஏற்கும் குணம் ஆகியவற்றை கம்பளி என்ற சொல் அர்த்தப்படுத்துவதாக கூறுகிறார்.

சூபிகளின் கருத்தியலில் முக்கியமானது படைப்புக்கும், படைப்போனுக்குமான உறவு நிலை. இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. கலீக் அல்லது படைக்கப்பட்ட பொருளானது அதன் இருப்பின் மூலம் பன்முகத் தன்மையிலானது. படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் உட்பொருட்களே. ஹக் அல்லது இருக்கும் ஒன்று அளவற்ற தன்மைகளை உடையது. இங்கு அறிபவருக்கும் அறியப்படும் பொருளுக்குமான வேறுபாடு துல்லியமானது. அந்த அறிவோனின் அல்லது இறைவனின் எதார்த்தத்தை பற்றி சூபிகள் புரிந்து கொள்ள முயன்றார்கள். அறிவு, அறியப்படும் பொருள், அறிவோன் இம்மூன்றிற்குமான வித்தியாசம் அதன் ஒருமையிலிருந்து பிரிக்க முடியாதது.

அறிவோனே புறத்தோற்றங்களுக்கும், தோன்றல்களுக்குமான தூண்டல். எல்லாவற்றுக்குமான எதார்த்தமாக அறிவோன் அல்லது இறைவன் மாறும் பொழுது உயிர், அறிவு, செயல்தன்மை, கேள்வி, காட்சி, பேச்சு ஆகியவை ஒருவருக்கே உரிய குணங்களாக மாறுகின்றன. அப்துல் கரீம் ஜில்லி என்பவர் இதனை விரிவாக விளக்குகின்றார். “இறைவனின் எதார்த்தத்தை சூபி அறியும் போது, அவரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்நேரத்தில் சூபி கேட்பது இறைவன் கேட்பதாகவும், சூபி காண்பது இறைவன் காண்பதாகவும் ஆகிறது. அவரின் ஆற்றலே இறைவனின் ஆற்றலாக மாறுகிறது. மஹ்ரிபா நிலை என்பது இதுதான். ஹல்லாஜ் மன்சூரின் அனல் ஹக் (நானே உண்மை) என்பது இதன் பிரதிபலிப்பே. இது மாதிரியே

பீர்முஹம்மது அப்பாவின் “சொல்லத்தகுமோ இப்பொருளை சுருட்டி மறைக்கிறேன் சரகுக்காக” என்பதையும் இக்கோணத்தில் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதே விஷயம் புத்தருக்கும் சாரிபுத்திரருக்கும் இடையே நடந்த ‘தௌகிதில் - ஸிபாதி’ என்றழைக்கிறார்கள்.

பீர் முஹம்மது அப்பா அவர்களின் சொந்த இடம் தென்காசி. அவருடைய தந்தையார் சிறுமலுக்கர். தாயார் ஆமினா. இளமைக் காலத்தில் பீர்முஹம்மது அப்பா உலக நடப்புகள் எவற்றின் மீதும் ஆர்வம் காட்டாமல் அந்நியப்பாடான மனம் படைத்தவராக இருந்தார். அதுவே அச்சூழலுக்கு பொருத்தமான விஷயமாகக் கூட இருந்தது. ஒருவனின் சுயபடைப்புத் திறன் எதனைச் சார்ந்து இருக்கிறது என்பதற்கு அவன் காலத்திய சமூக இருப்பும் காரணமாகும். இவருக்கு எல்லாமே அனுபவம் சார்ந்ததாக இருந்தது. அனுபவம் என்பது வேறு. அனுபவித்தல் என்பது வேறு. அனுபவித்தல் நிகழ்காலம் சார்ந்தது. அனுபவம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அது நிகழ்காலத்தின் மறுமொழியாக மட்டுமே உயிர் பெறுகிற இறந்தகால நினைவுகளின் தொகுப்பாக இருக்கிறது. இவைகளின் விளைவாக உருவெடுத்தவையே இவருடைய பாடல்கள். அக்காலத்தில் பாடல் என்பதும் கவிதை என்பதும் ஒன்றே.

அன்று தென்காசியில் சைவ சமயம் எழுச்சி பெற்று நின்றது. சைவ வெள்ளாளர்களும் பாளையப்பட்டு மறவர்களும் பட்டு நூல் நெசவாளர்களும் கலந்து வாழ்ந்த நகரில் இஸ்லாமியர்களும் இருந்தனர். அங்கு விசுவநாத சாமி கோவில் என்ற பிரம்மாண்ட கோவில் ஒன்று இருந்தது. அந்த கோயிலின் தர்மகர்த்தாவான வெங்கட்ராம சாஸ்திரி பீர்முஹம்மது அப்பாவின் தந்தை சிறுமலுக்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். பீர்முஹம்மது அப்பாவும் சாஸ்திரி மகனும் தெருவில் விளையாடுவார்கள். சில சமயம் கோயிலின் தெப்பக்குளத்தில் குளிப்பார்கள். ஒரு நாள் சாஸ்திரி பீர்முஹம்மது அப்பா தெப்பக்குளத்தில் குளிப்பதை கண்டு விட்டார். சைவரைத் தவிர வேறு யாரும் தீண்டக்கூடாது என்றிருந்த தெப்பக் குளத்தில் குளித்தது அவர்களுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது. நண்பரின் ஒரே மகன். அவரது ஒரே மகனுக்கும் நண்பர். எப்படி அவரைக் கண்டிப்பது என்ற மாதிரியான தயக்கம். கோயில் நிர்வாகிகள் அறிந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்றதொரு பதட்டம். பின்னர் தன் நண்பர் சிறுமலுக்கரிடம் பேசி அதை சரி செய்தார்.

அன்றைய நாட்களில் தக்கலையானது நெசவாளர்களை அதிகம் கொண்ட இடமாக செயல்பட்டது. (இன்றும் இவ்வூரில் இதன் எச்சங்களை காண முடிகிறது) பிறகு பீர்முஹம்மது அப்பா தான் பிறந்த ஊரிலிருந்து தக்கலைக்கு இடம் மாறினார். அங்கு மைதீன் பிள்ளை என்பவரின் வீட்டில் தங்கினார். அங்கிருந்தே தன் புகழ்பெற்ற நூலான ‘ஞானப் புகழ்ச்சியை’ இயற்றினார். அவரின் ஞானப் புகழ்ச்சியில் சைவ சமய தாக்கத்தை காணமுடிகிறது. (சிவனே, பித்தனே). சைவம் ஒரு தத்துவ தரிசனமாக அன்றைய தமிழ்ச் சூழலில் இருந்தது. இஸ்லாம் இந்தியாவில் பரவத் தொடங்கிய போது பல சைவர்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள்.

பீர்முஹம்மது அப்பாவின் பரம்பரையும் அதனிலிருந்து வந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரின் ஞானப் புகழ்ச்சியை நாம் வாசிக்கும்போது நமக்கு தத்துவ தரிசன வாசிப்பனுபவம் கிடைக்கிறது. மனமானது அதன் சுய-பிதுக்கத்தை அறிந்த ஒன்றையே வரவேற்க இயலும். சுவடுகளில் பதியும் நிழலே அதன் மறுமொழி.

இந்திய சூபிகளிடத்தில் இந்திய தத்துவ மரபின் தாக்கத்தை காண முடிகிறது. ஹாஜா முயினுத்தீன் ஜிஸ்தி முதல் பீர்முஹம்மது அப்பா வரை இது நீள்கிறது. மனம், சுயத்துவம், உயிர், உடல், அறிதல் ஆகிய அம்சங்களில் சூபிகள் மற்றவர்களோடு இணைந்தார்கள். மன இயக்கத்தை புரிந்து கொள்ளும் போது, நான் என்கிற நிலையை அடையும் போது தன்னிச்சையாக விழிப்பு கொள்கிறது. அநாந்திர தனிமையில் நாமிருக்கும் நிலையில் இதனை உணர்ந்து கொள்ள முடியும். சுயம் என்பது தன்னில் அறிதலாக, அறியும் போது ஒன்றை சார்ந்ததாக இருக்கிறது. இதன் மூலம் காலத்தை நாம் முன்னோக்கித் தள்ளுகிறோம். இங்கு இருப்பு என்பதே அறிதலாக உள்ளது. விலக்கப்பட்டகனியைத் தின்ற ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணமாக நிற்பதை அறிகிறார்கள். ஒரு மரத்திற்கு மரமாக இருப்பது தவிர வேறில்லை. அகமானது எப்பொழுதுமே புறத்தின் மேலேறிச் செல்கிறது. நாம் யார் என்பதை புறத்தின் வழியே வெளிக்கொணர்கிறோம். இரண்டுமே ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டவை. சூபிகள் வாழ்க்கை என்பதை இந்த புறத்தின் வெறும் காட்சிப் படிமமாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக அதை முழுமையான இயக்கமாக பார்த்தார்கள்.

சூபிகளின் கோட்பாட்டில் முக்கியமானது பற்றுதல் மற்றும் விலக்குதல். பீர்முஹம்மது அப்பாவின் சிந்தனையும் இது சார்ந்தே அமைந்தது. இதன் மூலம் ஒன்றாக ஆக வேண்டும் என்ற வேட்கை நம்மை ஒன்றை செய்யவும் அல்லது உதறித் தள்ளவும் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் திருடிக் கொள்கிறது என நாம் சந்தேகிப்பதால் காலமற்ற நிலையை பற்றிக் கொள்ள விரும்புகிறோம். வாழ்க்கையின் இந்த போராட்டமானது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும் அக/புறவய சேகரிப்புகள் மற்றும் அதன் முரண்பாடுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளலே தன்னிச்சையான விடுதலை. இந்த பற்றுதல்/விலக்குதல் நோக்கியே அவரின் ஞானப்புகழ்ச்சியின் வரிகள் சில அமைந்திருக்கின்றன.

சூபிகளின் பல்வேறு பட்ட சிந்தனை முறைகள் அல்லது அனுபூதவியலை சிலர் புரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர். இஸ்லாத்தில் தூய்மை வாதிகள் அல்லது நஜ்திகள் எனப்படுவோர் மிகவும் சிக்கலான மனநிலையில் (இந்த இடத்தில் அப்துல் வஹ்யாபை ஞாபகப்படுத்துவதில் எனக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன) சூபிகள் பற்றி வசைகள் பொழிகிறார்கள். அதன் வேகம் ஜன்னலில் ஒங்கி அறையும் மழைத்துளிகளின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. ரியாத்தில் இப்னு சவூதின் அரண்மனை உச்சியில் ஏறி நின்று பாரசீக வளைகுடாவை பார்த்தால் அங்கு தெரிவது மகா சூன்யம் தான். தமிழில் தூய்மைவாதிகளால் அதிகமாக விமர்சிக்கப் பட்டவர்களில் பீர்முஹம்மது அப்பாவும் ஒருவர். இவருடைய நூல்களைப் படிக்காமல் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் ஏராளம். குறுகுறுப்பான ஆர்வம் புரிந்து கொள்ளலுக்கான வழி அல்ல. புரிந்து கொள்ளல் சுயஅறிவின் மூலம் பிறக்கிறது. யூகிக்க தூண்டும் அதன் உட்குறிப்போடு வெற்று ஆர்வமானது அமைதியற்ற மனத்தின் வெளிப்பாடுதான். அது எவ்வளவு தான் திறம் பெற்றிருந்த போதிலும் புரிந்து கொள்ளலையும், அறிவதையும் தடுக்கிறது. இவர்களில் சிலர் ஞானப்புகழ்ச்சிக்கு தெளிவுரை எழுதி அதை உயைனாவின் மணல் வெளியில் ஊதி விட்டார்கள். இதில் எஞ்சியது ஒன்றுமில்லை.

பீர்முஹம்மது அப்பா நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல அற்புதங்கள் அதன் வரலாற்று, சமூக பின்னணியையும், உள்ளார்ந்த அர்த்தங்களையும் கொண்டவை. இவை செவிவழி கதைகளாக புனைந்து இப்பகுதியில் வலம் வருகின்றன. தமிழ்ச் சித்தர்களின் மூச்சுக் கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறு வித புலன் செயல்பாடுகள் இவரிடத்திலும் உண்டு. சில தாந்திரீக கூறுகளையும் காண முடிகிறது. வரலாறு எப்படி தொன்மமாகிறது என்பதிலிருந்து மேற்கண்டவை நீள்கிறது. இவருடைய நூல்கள் ‘ஞானப்புகழ்ச்சி’, ‘ஞானப்பால்’, ‘ஞானப் பூட்டு’, ‘ஞான மணிமாலை’, ‘ஞானரத்தின குறவஞ்சி’, ‘ஞான ஆனந்தக் களிப்பு’என நீள்கின்றன.

தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை தக்கலையில் கழித்த இவர் நீண்ட காலம் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. தொன்மங்களும் / புனைவுகளும் மீண்டும் மீண்டும் உயிர் பெறுகின்றன.

பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்

வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் - பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது


வரலாறு தன் போக்கில் காலம் என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறது. தொடர்ந்த போக்கில் நிகழ்காலத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறது. வரலாற்று அனுபவம் என்பதும் இதிலிருந்து தான் உருவாகிறது. மறைக்கப்படும் ஒன்றிலிருந்து உருவாகும் வரலாறு
நெகிழ்வுதன்மையுடையதும், பிரதிபலிப்பதுமாகும்.
மத்திய கிழக்கின் துவக்கமான பாரசீகம் அல்லது ஈரான் வரலாற்றின் போக்கில் நெடிய பின்னணி கொண்டது. விமானம் அதன் போக்கில் தாழ்வாக பறந்துசென்ற போது ஈரானின் மலைக்குன்றுகள் தென்பட்டன. அதன் கணிசமான பகுதிகள் மலைக்குன்றுகளால் ஆனவை. பல மதகோட்பாடுகள், கருத்தியல்கள் தோன்றிய பாரம்பரியம் ஈரானுக்குரியது.
இதன் பின் தொடரலில் உலகில் தற்போதுவழக்கொழிந்ததாக கருதப்படும் பார்சி அல்லது சராதுஷ்ட மதத்தைபற்றியகுறிப்புகளை நாம் முன்னோக்க வேண்டியதிருக்கிறது. பார்சி அல்லது சராதுஷ்டம் தான் உலக வரலாற்றில் முதன் முதலாக ஓரிறை கோட்பாட்டை போதித்தது. இதனை தொடங்கி வைத்தவர் ஷராதுஷ்டர். இவரின் காலம் கி.மு பதினெட்டாம் நூற்றாண்டாக அறியப்படுகிறது. வடமேற்கு ஈரானின் ஏதாவது ஒரு பகுதியில் இவர் பிறந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. இவரின் கோட்பாடுகள் மூன்றாக சுருக்கப்படுகின்றன.
1. நற்சிந்தனை
2. நற்சொல்
3.நற்செயல்.
ஈரானில் அன்றைக்கு வழக்கிலிருந்த பல தெய்வ வழிபாட்டுக்கு மாறாக ஓரிறை கோட்பாட்டை பார்சி மதம் முன்வைத்தது. இது கி.மு ஆறாம் நூற்றாண்டில் ஈரான் முழுவதும் பரவியது. அதே நூற்றாண்டில் தான் அகெமெனிய அரசரான சைரஸ் பார்சி கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார்.
அதே காலத்தில் பாபிலோனை கைப்பற்றிய அவர் அங்கு பிணைக்கைதிகளாக, அடிமைகளாக இருந்தவர்களை விடுதலை செய்தார். பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மறு நிர்மாணம் செய்தார். இவர் தான் தற்போதைய உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லாடலான "மனித உரிமை" பிரகடனத்தை முன்வைத்தவர். இவருக்கு பின் வந்த தெரியஸ் மற்றும் ஆர்த்தசெரஸ் ஆகியோர் பார்சி மதக்கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர்.கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பார்த்தீனியர்கள் ஈரானை கைப்பற்றினார்கள். அதன் பிறகு சசானியர்கள் தொடர்ந்தார்கள். இரு வம்சமுமே பார்சி மதக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதை மக்கள் மதமாக பரவலாக்கம் செய்தனர். இவர்கள் தங்கள் புனித நூலாக சென் அவெஸ்தாவை பின்பற்றுகின்றனர்.சென் அவெஸ்தா மனித வாழ்வின் கூறுகளாக ஆறு விஷயங்களை குவியப்படுத்துகிறது.
1. வன்செயல்கள் மனித விரோதமானது. சராதுஸ்டரின் போதனைகளுக்கு எதிரானது.
2. சராதுஷ்டரின் போதனைகள் பின்தொடர எளிமையானவை.
3. கடவுளான அஹ¤ரமெஸ்தா தன் தூதருக்கு செய்திகளை தெரிவித்தார். அது மனித வாழ்வுக்கு உகந்தவை.
4.சராதுஸ்டிரர் வன்செயல்கள் மற்றும் நற்செயல்கள் இவை இரண்டையும் பிரித்தறிந்து மற்றவர்கள் அதை தொடர்வதற்கான வழியை உருவாக்கினார்.
5. தீ என்பது பார்சியின் வழிபாட்டு உபயமாகும். இது பிரகாசமான மனத்தை குறியீடாக்குகிறது.
6. புனித வார்த்தைகளால் சராதுஷ்டிரர் உலகுக்கு வழிகாட்ட வந்தார்.
பார்சி மதத்தின் லெளகீக கோட்பாடுகள் இந்த ஆறு விஷயத்திற்குள் வருகின்றன. பார்சி மதம் உடல் மற்றும் மன செயல்பாட்டின் முழுமைக்கு முன்னுரிமை கொடுத்தது. அதை ஓரு மனித தூண்டலாக பார்த்தது.
அன்றைய பாரசீகத்தில் ஈரானிய மற்றும் துரானிய ஆகிய இரு இனங்கள் இருந்தன. இவை ஒரே இனத்தின் வெவ்வேறு கிளைகள் என்ற கருத்தும் நிலவுகிறது. பார்சியர்களின் புனித நூலான சென் அவெஸ்தாவில் இதைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சென் அவெஸ்தா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
1. பாரசீக வம்சம் ஈரானிய மற்றும் துரானிய பிரிவுகளால் ஆனது.
2. அவர்கள் இருவரும் நெருக்கமாக வாழ்ந்தனர்.
3. இவர்கள் ஒரே தெய்வத்தை வழிபட்டனர்.
4. இவர்களிடையே அடிக்கடி குடும்ப சண்டைகள் நடந்தன.
5. இவை பார்சி மதத்தின் தோற்றத்திற்கு முன்பும் வழக்கில் இருந்தன.
உலக தோற்றம் பற்றி பார்சி மதம் விவரணப்படுத்துகிறது. ஸ்பெண்டா மென்யூ மற்றும் அங்கிரமென்யூ ஆகிய இரண்டுமே உலக படைப்பாக்கத்திற்கு காரணம். ஸ்பெண்டா மென்யூ நன்மைகளின் படைப்பாளர். அங்கிரமென்யூ மோசமானவற்றின் படைப்பாளர். செமிட்டிக் மதங்களின் சாத்தான் பற்றிய கருத்தாக்கம் இதனோடு ஒப்பிடதகுந்தது. இது பார்சி மொழியில் வெண்டிடாவாக அறியப்படுகிறது. பார்சி மதமானது ஓரிறை கொள்கையை வலியுறுத்துவதன் மூலம் செமிட்டிக் மதங்களுக்கு முன்தூண்டலானது. மேலும் அற அடிப்படையில் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் முன்மொழிகிறது. தீமை என்பதை நாம் முழுமுதல் அடிப்படையில் பார்க்க முடியாது என்கிறது. உலகில் அதிகம் தீமையே நிகழும் தருணத்தில் பார்சியின் இக்கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஹெகல் சொன்னார் "மனிதர்கள் இயல்பாகவே இவன் நல்லவன் என்று கூறி தப்பித்துவிடுகின்றனர். இயல்பாகவே இவன் மோசமானவன் என்பது அதை விட எவ்வளவு ஆழமான விஷயம் என்பதை யோசிக்க தவறி விடுகிறார்கள்". மனித செயல்பாட்டில் அறவியல் இருமையை பார்சி போதித்தது. நோன்பு என்பதை உடல் உறுதிபாடாகவும், ஆன்மாவின் பிரதிபலிப்பாகவும் பார்த்தது. மேலும் இது ஜைனத்தின் சுய-வருத்தல் கோட்பாட்டோடு தொடர்பு கொண்டது.
மரணத்திற்கு பிந்தைய உலகத்தை பற்றி முதன்முதல் போதித்தது பார்சி மட்டுமே. இவ்வுலகில் சக மனிதன் அறவியல் செயல்பாடுகளின் விளைவு மறு உலகில் பிரதிபலிக்கும். மனித உடல் மனம் மற்றும் ஆன்மாவின் வாகனமாக விளங்குகிறது. இதன் பிரதிபலிப்பே மரணம். அங்கு அற இருமை அடிப்படையில் இருவிதமான தேவதைகள் வருவார்கள். அவர்கள் வகைப்பாட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதர்களையும் எடுத்துக்கொள்வார்கள். இஸ்லாமின் ஹ¤ர்லீன் பற்றிய கருத்துரு இதன் நீட்சியே. மரண பலன் நான்காவது நாள் வெளிப்படும் என்கிறது. செமிட்டிக் மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்றவற்றின் ஓரிறைக்கோட்பாடிற்கான துவக்கப்புள்ளி பார்சி மதமே. இன்றைய உலகில் பார்சியர்களின் எண்ணிக்கை குறைவு. பல்வேறுவித தாக்குதல்கள், மாற்றங்கள் இவைகளுக்கு காரணமாக அமைந்தன. மணிச்சியம், மித்ராசியம் போன்றவை இதற்கு பிந்தைய
காலத்தில் ஈரானில் தோன்றிய மதங்கள். ஈரானிய திரைப்பட இயக்குநரின் வார்த்தை ஒன்று இதற்கு பொருத்தமாக இருக்கும். "சைரஸ் நீ தூங்கு. நாங்கள் விழித்துக்கொண்டிருக்கிறோம்".

Sunday, May 18, 2008

யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து

தனிமை பற்றிய குறிப்புகள் - யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
எச்.பீர்முஹமது
thinnai.com(2003)

தனிமையின் இருத்தல் அனாசியமானது. ஒரு வகையில் விலகலையும், விலக்கப்படலையும் சார்ந்தது. தன் கவிதையின் கருவாக்கத்திற்கு இதுவே காரணமாக அமைந்தது என்கிறார் யுவன். நீண்டகாலமாக தமிழ்ச்சூழலில் கவிதைப்பற்றி நடந்துவரும் விவாதங்களில் சொல்லப்படுகின்றவற்றுள் ஒன்று இது. கவிதை தனிமை நிலையின் உணர்விலிருந்து வருவதா ? அல்லது கூட்டு நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து வெளிப்படுவதா ? கவிதைக்கு போராட்ட குணம் உண்டா ? இல்லை அது வெறும் தனித்துவமான கலையம்சம் மட்டுந்தானா ? கலை இந்த இரு தன்மைகளுக்குள்ளும் தன்னை ஆட்படுத்தி கொண்டிருந்தது என்பதே உலக வரலாற்று நியதி. ஆப்பிக்காவின் வரலாறும், மத்திய கிழக்கின் வரலாறும், இலங்கை இன போராட்டமும் நமக்கு இதைத்தான் காட்டுகின்றது. தனிமையின் உணர்பதிவுகளாக கவிதை உருவாகும் சூழலில் அது கலைஞூனின் ஆழ்மனப் பதிவாக மட்டுமே இருக்கிறது. புறவெளியில் நம்மிலிருந்து அந்நியப்படும் அல்லது நம்மால் அறியப்படாத விஷயங்களிலிருந்தும் கவிதை உருவாலாம். தமிழ் நவீனக் கவிதைகளை புாிந்து கொள்வதில் வாசகனுக்கு ஏற்படும் சிக்கலுக்கு காரணம் இது தான். அவனின் இயல்பான பிரக்ைஞூ நிலையிலிருந்து அந்நியமான ஒன்றாக அந்த கவிதை இருக்கிறது. இந்நிலையில் படைப்பை மதிப்பிடுவது அல்லது விமர்சிப்பது என்பது அவரவர் சுய வாசிப்பு அனுபவம் கொடுக்கும் தீர்வை மட்டுமே வைத்து முடிவு செய்ய முடியும். விதிவிலக்காக சில சமயங்களில் கவிஞூர்கள் தங்களின் கவிதைகளை கவிதையாக காட்டிக் கொள்வதும் உண்டு. எங்கிருந்தோ கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகளை இடையில் செருகி இது தான் அசல் என்றும் சொல்லி கொள்வது உண்டு. கவிதை வாசகர்களை விட தமிழ்ச்சூழலில் கவிஞூர்கள் அதிகாித்து விட்டார்கள். இதில் எது கவிதை என தேர்ந்தெடுத்து கொள்வது சிரமம் தான். இதிலிருந்து விதிவிலக்காக வந்திருக்கிறது இத்தொகுப்பு புகைச்சுவர் என்பது ஒரு குறியீடு. அதன் நீட்சி என்பது ஒரு தேடல்.
புகைச்சுவருக்கு அப்பால் பூத்திருக்கிறது நீ
என்றும் நுகராத பூ
அதன் வாசனை தொட்டியிலிருந்து
புறப்பட்டு வருகிறேன். ஞூ
மனிதன் நிறங்களை அறிதல் என்பது ஓர் உளவியல் கூறு. அது தொடர்ச்சியானது. முன் நிர்ணயிக்கப்பட்டது. சில நேரங்களில் நம்மால் நிறங்களை அறியக்கூட முடியவதில்லை. ஒரு சட்டைத்துணியை தேர்ந்தெடுக்கும் போது அதன் தெளிவான நிறம் பற்றிய மனப் பிம்பம் உருவாவதற்கு வெகு நாளாகிறது.
நகாின் புறத்தில் வீடுகள்
முளைக்கின்றன. வீடுகளில்
மனிதர்கள் முளைக்கிறார்கள். சில
வீடுகளில் தோட்டம் முளைக்கிறது.
மிகச்சில வீடுகளில் கத்திாி
வெண்டைச் செடிகளுக்கு நடுவே
வானவில் முளைக்கிறது. ஞூ
மனிதர்கள் குழந்தைகளாகும் போது வானவில் கற்றுத் தருகிறது.
நிறபேதம் நிறச்சேர்க்கை
மற்றும் தோன்றுதலும் மறைதலும் பற்றி
விலங்குகளின் கனவுப்பற்றி நமக்குத் தொியாது. மனிதர்களின் கனவுபற்றியே நாம் புாிந்து வைத்திருக்கிறோம். நான் சில நேரங்களில் இதனை அறிந்து கொள்ள விலங்காக மாறி விடலாமா ? என்று கூட யோசித்ததுண்டு. இறப்பிற்குபின் என்னவாகும் என்ற மாதிாியானது இது. மனிதன் வெளி விடாமல் உள்நோக்கி புதைத்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடு தான் கனவு என்றார் பிராய்ட். நம் ஆழ்மனம் வழியாக வெளிப்படுகிறது இது. ஒரே மாதிாியான கனவுகள் வெவ்வேறு இ;டங்களில் ஒரே நேரத்தில் எழும் சாத்தியங்கள் உண்டு. கோட்பாடுகள் கூட வெவ்வேறு சிந்தனையாளர்களால் ஒரே மாதிாியாக புனையப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கிடையே எவ்விதமான தொடர்பும் இருக்காது. மனிதர்கள் ஆழ்மனதில் புதைத்து வைத்த எண்ணங்கள் விலங்குகளுக்கும் இருக்கலாம்
கனவில் ஒட்டகம் வந்தது
பின்னொரு நாள்
அதைப்பார்க்க போனேன்
நிம்மதியற்று வன்மையாய்
நடைபழகின புலியின்
கூண்டுக்கு வெகுதொலைவில்
திறந்தவெளி கூண்டில்
தனித்து நின்றிருந்தது
ஒருவேளை
நான் கண்ட அதே நேரம்
அதே கனவை
ஒட்டகமும் கண்டிருந்தால்
கேட்கும் அவசியம் நேராது.
வளர்ச்சி என்ற சொல்லாடல் சார்பு நிலையானது. சில நேரங்களில் அருவமானதும் கூட. மனிதனின் வளர்ச்சி ஒன்றின் பின்னணியிலிருந்து தான் வரும். இதில் முழுமையான வளர்ச்சி என்பது இல்லை. இன்னொரு வகையில் வளர்ச்சி என்பது ஓர் ஆதிக்க சொல்லாடலாகவும் இருக்கிறது.
ஒன்றை கீழ் நிறுத்தி விட்டே வளர்ச்சி என்பது மேல்நோக்கப்படுகிறது. தனிமனித வளர்ச்சி, சமூக வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, உலக வளர்ச்சி இந்நான்கும் ஒன்றையொன்று கீழ்நிறுத்தி விட்டுதான் மேல் நோக்கப்படுகிறது. சாி சமமான வளர்ச்சி என்பது சாத்தியமற்று போய்விடுகிறது.
வளர்ச்சி என்ற ஒரு சொல்லின்
பின்னணியில்
புாிந்து கொள்கிறோம்
தாவரம், கட்டடம் இரண்டும்
உயர்வதை
ஆனால்
தாவரத்தின் வேர் தாவரத்தினடியிலும்
கட்டடத்தின் வேர் மேஸ்திாி
அல்லது பொறியாளனின் மனதடியிலும்
இருப்பதை யாரும் அறிவர்
கிளைக் கவையில் போலவே
வென்ட்டிலேட்டாிலும் மீட்டர் பாக்ஸ்லும்
குருவி கூடு கட்டுகிறது.
இதைவிடவும் முக்கியமானது
ஒன்று உண்டு
என் பெயரோ, உன் பெயரோ இந்
நகாின் பெயரோ
அறியாத மரங்கொத்தி
சுவாில் பட்டையுாிக்க முற்படுவதில்லை
நிலைத்தோற்றம் - நிலைமாற்றம் - நிலைமறுப்பு என்பது இயக்கவியல் விதி. மரம் - விறகு-காி-சாம்பல், கோழி - முட்டை - குஞ்சு - உணவு என்ற சுழற்சி தொடர்ச்சியாய் இருந்து கொண்டிருக்கிறது. அது ஒரு நியதி
என்ன செய்வது இனி
மரம் விறவாகி
விறகு காியாகி
காி சாம்பலாவதை
முட்டை குஞ்சாகி
குஞ்சு கோழியாகி
கோழி உணவாகிச்
சொிப்பதை
பார்த்துக் கொண்டு மட்டும் தான்
இருக்கலாம்.
மேலும் இத்தொகுப்பால் அறிதல் , நான், நீ மற்றும் நாம், மீண்டும, இந்தசிங்கம்,பார்வை போன்ற கவிதைகள் மட்டுமே தனிமையின் உணர்பதிவுகளாக நான் தேர்ந்தெடுத்த, எனக்கு பிடித்தமான கவிதைகள். எழும் கவிதையானது பிரதிகளில் விழுந்து விட்ட பிறகு எல்லாம் கவித்துவ தன்மையை பெறுவதில்லை. இத்தொகுப்பின் குறைபாடும் இது தான் அறியப்படாத விஷயம், வெளி இவற்றை குறியீடு செய்வதில் நான் மேற்குறிப்பிட்ட மட்டுமே இடம் பெறுகின்றன. தமிழ்கவிதையுலகின் அடுத்தகட்ட நகர்தல் சிலவேளை இன்னும் இந்த விஷயத்தை அதிகமாக தொடலாம். யுவனின் இந்த ழூன்றாவது தொகுப்பு புதிய தலைமுறை கவிதைகளின் தொடக்கத்திற்கு ஒரு சாரம்.
(காலச்சுவடு வெளியீடு)

பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு

சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
எச்.பீர்முஹம்மது


என் பிரியத்திற்கு,
நலமாய் இருப்பாய் என சற்று முன் உன்னோடு மொபைலில் உரையாடிய போது அறிய முடிந்தது. என் உடல் நலம் பற்றி நீ அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பாய் என்பது எனக்கு தெரியும்.இங்கு உடல் எவ்வளவு அவசியமானது என்பதை நான் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.உன்னை விட்டு பிரிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இது எனக்கு சமீபத்தை தாண்டாத தூரமாக தெரிகிறது. தப்பி அலையும் விலங்கு மாதிரியான அனாயச உணர்வோடிருக்கிறேன். கோடையில் பழுத்து உதிரும் பேரீத்தப்பழங்கள் என் காலால் உதைபடும்போது உன் ஞாபகம் வருகிறது. அந்த மரத்தின் நிழலை தாண்ட முயற்சிக்கிறேன்.
வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. நான் இங்கு வர வேண்டியது அவசியமானதும், தற்செயலானதாகும். நான் முதன்முதலாக விமானம் ஏறுவதற்கு முந்திய நாள். என் முழு மனநிலையுமே மரண தண்டனை கைதியின் மறுநாள் மாதிரி இருந்தது. உம்மா, வாப்பா, மற்ற சகோதரிகள் என்னை சூழ்ந்து கொண்டு என் சலனங்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இரவு சிறிது நேரமே தூங்கியிருப்பேன். புறப்படும் கணத்தில் மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு கண்ணிலிருந்து நீரை வரவழைத்துக் கொண்ட போது நானும் வரவழைத்துகொண்டேன். அது என்னை மீறிசென்றது. சிரிப்புக்கும் அழுகைக்குமான எல்லை எவ்வளவு விஸ்தாரமானது. விமான நிலையத்தினுள்ளிருந்து என் கைஅசைவு எதையோ வெளிப்படுத்தியது. சிவப்பு விளக்கு சமிக்ஞையை உணர்த்திக் கொண்டு விமானம் நகர்ந்து மேலேறிய போது நான் வேறொரு உலகை நோக்கிச் சென்றேன். வான்வெளியில் அது சென்ற வேகம் வீட்டோடு நான் உரையாடுவது மாதிரி இருந்தது. விமான நிலையத்தில் நீண்டநாள் நண்பரை தற்செயலாக சந்தித்த போது தொலைந்து போன சாவி மறுபடியும் கிடைத்த உவகையில் இருந்தேன். துபாயில் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் அவர். விமானத்தில் நாங்கள் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்து கொண்டோம். அவரோடு உரையாடிச் சென்றது மனைவி இல்லாத குறையை போக்கியது. அபுதாபி விமான நிலையத்தில் நாங்கள் பிரிய நேர்ந்தபோது கண்களில் ஏற்கனவே தேங்கி நின்ற நீர் வழிய தொடங்கியது.எங்களை அறியாமலே கைகள் ஆலிங்கனம் செய்து கொண்டன. நாங்கள் இருவரும் இருவேறு நாடுகளில் இருவேறு திசைகளில் இருக்கும் நிலையில் மீண்டும் சந்திப்பது அபூர்வம் தான். 0,1 என்ற இருமை நிலையில் நாங்கள் இருக்கிறோம். நண்பர்களை கொண்டவர்களின் நண்பர்கள் வளைகுடாவில் இருவேறு திசையில் இருக்கும் நிலையில் அவர்களின் மனவோட்டம் வாசித்தறிய முடியாதது.
நீ எனக்கு வாழ்க்கை துணையாக வருவாய் என்பது என் நனவிலி நிலையில் மட்டுமே இருந்தது. நீ படிக்கும் காலத்தில் நான் உன்னை பின்தொடர்ந்தோ தொடராமலோ இருந்தேன்.ஒருவேளை நான் உன் படிப்பின் கவனத்தை சிதறடிக்கிறேனோ என்ற
அவநம்பிக்கை கூட என்னிடமிருந்தது. என் முகம் கண்டால் கூட உன்னால் பேச முடியாத சூழல். பிரியப்படுவதின் மொழி அது. "சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது" என்ற பிரமிளின் கவிதை வரியாக உன்னை நான் எழுதிக்கொண்டு வந்தேன். இயல்பான குடும்ப எதிர்ப்புணர்வு இருந்தும் நாம் கல்யாணம் செய்து கொண்டோம். நீண்ட கால குறிக்கோளை சமீபத்தில் எட்டியது சின்ன சாதனை தான். ஒன்றை செய்யும் போது மற்றொன்றை அனுபவிப்பது இயல்பு மீறல். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் எதிர்கொள்ள துணியும் போது நாம் அதில் சில சமயங்களில் சறுக்கி விழுகிறோம். அதை தாண்டி எத்தனித்து விட்டால் அதுவே வாழ்வின் வெற்றி. உன் உருவத்தின் முழு எதிரொளிப்பு என் மீது பட்டுத்தெறிக்கும் போது நான் உடைபடாத கண்ணாடித்துண்டாகிறேன்.வாழ்க்கையை நாம் எதிரொளிக்கிறோம் அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இதுவே எதார்த்த வாழ்க்கை. ஆனால் நான் அதனை தாண்டி விட்டேன். ஒருவித மாயஉலகம் எனக்கானது. hyper reality யின் உலகம் இது.அதில் என் உடல், மனம், சுயம் ஆகியவற்றை எழுதிச்செல்கிறேன். உடலை குறித்து நான் உன்னிடத்தில் ஏற்கனவே சொல்லியிருந்தேன். தாந்திரிகர்கள் இதை குறித்தே சிந்தித்தனர். இதை
சொல்லி நான் உன்னை குழப்ப விரும்பவில்லை. அங்கு கால நிலை எப்படி இருக்கிறது? இங்கு மிகக்கடுமையான வெப்பம். பெட்ரோல் இல்லாமலேயே உடல் அடிக்கடி தீப்பற்றிக்கொள்கிறது. இது ஜெட்டிக்ஸின் பவர் ரேஞ்சர் அல்ல. அறையில் ஏ/சி இயங்கி கொண்டிருக்கும் போது என் உடல் தணுமையாகிறது. அப்போது மட்டுமே அப்படி மாறும். அனல் காற்றில் நான் அடிக்கடி மிதந்து வருகிறேன்.என்னால் பாரசீக வளைகுடா கடலில் கூட மிதக்க முடியவில்லை. மிதந்ததின் இழப்பீடாக மாதந்தோறும் எனக்கு
ஏதாவது கிடைக்கிறது. அதில் உனக்கு ஏதாவது கொடுத்தது போக மீதியை நான் வைத்துக்கொள்கிறேன். இருந்தும் என் ஏ.டி.எம் '0' வை வரைந்து காட்டுகிறது. என் தாய் கேட்டால் கூட உனக்கு தெரியாமல் தான் அனுப்ப வேண்டியதிருக்கிறது.
அதற்காக என்னை மன்னித்து விடு. உன் அறிவுக்கு எட்டிய நிலையில் நான் இதை செய்யும் போது உனக்கு ஏற்படும் கோப உணர்வுக்கு நான் பலியாகி விடக்கூடாது என்ற சிடுக்கம் தான். கருப்பு நிற பர்தாவும், தணுமை கண்கண்ணாடியும் வைத்துக்
கொண்டு நீ என்னுடன் நண்பன் வீட்டு திருமணத்திற்கு வந்தது என் கண் முன் மாயபிம்பமாய் இன்றும் நிற்கிறது. உன்னை நான் கண்கண்ணாடியற்ற சுடிதாரோடு பார்க்க ஆசை. ஒருவேளை வெளிநாட்டு கணவனின் மனைவி ஆனதால் நீ அப்படி செய்கிறாய் என்பது எனக்கு தெரியும். உன்னின் சுதந்திரம் உனக்கானது. நாம் திருமணம் முடிந்து தேனிலவுக்காக உதகமண்டலம் சென்ற போது ஏற்பட்ட அனுபவம் நெடியது. எளிதில் என்னை விட்டு விலகாதது. அது ஒவ்வொரு நாளும் என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் தூக்கத்திலே ஸ்கலிதமாகிறது. நான் சிரமப்பட்டு தூங்க முயலும் போது அது கனவாக என்னில் வந்து ஒட்டிக்கொள்கிறது. விழிக்கும் நிலையில் சில நொடிகள் அது என்னுள் தங்கி நிற்கிறது.கனவை நாம் உண்மையன கருதும் இடம் இது தான்.உள்மூச்சே அதற்கு காரணம். ஆக நீ என் உள்மூச்சாக இருக்கிறாய். உன்னை நினைத்தே நான் சுவாசிக்கிறேன்.
மின்காந்த அலைகள்(electro magnetic waves) நம்மை எவ்வளவு சமீபித்திருக்கிறது. இருந்தும் உன்னை நேரடியாக
காணமுடியாதது எனக்கு பெரும் துயரம். நம் வீட்டில் இணைய வசதி இல்லாதது பெரும்குறை. நான் வரும் போது அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன். நான் உன்னை விட்டு பிரிவதற்கு முந்திய நாள். உறக்கமற்ற இரவின் துயரத்தை நாம் உள்வாங்க வேண்டிய நிர்பந்தம். கரைந்து போகும் நீரின் சுவை எத்தகையது. நாம் ஒவ்வொரு இடைவெளியிலும் வெளியிட்ட கண்ணீர் துளியின் நெடி மாறாதது. கரைதலையும், கரைத்தழித்தலையும் பற்றி நான் நிறையவே படித்திருக்கிறேன். அதை அனுபவபூர்வமாக காணும் போதே நான் முழுமையடைகிறேன். விமான நிலையம் சமீபத்திற்கும் தூரத்திற்குமான இடைவெளியில் இருந்தும் நீ
வருகிறாய் என்றாய். நீ சொன்ன போது நான் அதை மறுக்கவில்லை.மறுப்பதற்கான மனநிலையிலும் நான் அப்போது இல்லை. விமான நிலையத்தில் நீ உன்னை உடும்பாக பாவித்தது எனக்கு மிகுந்த வருத்தம் தான். நான் அதை பொருட்படுத்தாமல் உள்நுழைந்து விட்டேன். இப்போது விமானத்தில் எனக்கு பக்கத்தில் யாருமே இல்லை. நான் அடுத்த இருக்கையை பார்த்த போது பழைய நண்பர் உட்கார்ந்து கொண்டிருந்ததன் மீள் வெளிப்பாடாக இருந்தது. விமானம் இங்கு தரையிறங்கிய போது நான் புதிய
மனிதனாக இருந்தேன். உன் முகம் முன்னை விட வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னபோது உன்னை நினைத்து வெளிவந்த சிரிப்பு அப்படியே வாய்க்குள் அடங்கி கொண்டது. நேராக என் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டேன். உன்னை மொபைலில் தொடர்பு கொண்ட போது நீ பேசும் எல்லைக்கு வெளியில் இருக்கிறாய். இந்த மொபைல் உன்னை எவ்வளவு பாதித்திருக்கிறது. உன்னிடமிருந்து வரிசையாக என்னில் வந்து விழுந்த எஸ்.எம்.எஸ் கள் என்னை நானே மறுவாசிப்பு செய்ய வைத்தன. மீண்டும் உன்னை தொடர்பு கொண்ட போது நீ மறுபடியும் பேசும் எல்லைக்கு வெளியில் இருக்கிறாய். அது
எதார்த்தம் தானே. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஒரு யுகம் முடியும் போது விஷ்ணு புரண்டு படுப்பது மாதிரி கட்டிலில் புரண்டு படுத்துக் கொண்டேன். உன்னை போலவே இரவு எதையும் சாப்பிட மனம் வரவில்லை. அடுத்த நாள் கம்பெனியில் என் வருகை பற்றி தகவல் சொல்ல வேண்டும். அதற்கான தயாரிப்போடு தூக்கமற்ற இரவின் அதிகாலையிலேயே எழும்பி விட்டேன். முந்தைய நாள் நாம் இப்படி தான் இருந்தோம். ஒரே அனுபவம் வேறுபட்ட சூழலில் வேறுபட்ட காலத்தில் வெளிப்படுத்தும் உள்ளுணர்வு சலனிக்க தகுந்தது. இங்கு வந்து நான் உன்னோடு மொபைலில் நிகழ்த்திய முதல் உரையாடல். உன் நாவு பேச்சின் வேகத்தையும், சுருதியையும் குறைத்த போது நானும் குறைக்க வேண்டியதாக இருந்தது. நமக்கு உண்ணாமல் உறங்காமல் எதுவுமே இல்லை. அதற்கு தானே நான் இங்கு வந்திருக்கிறேன்.உன் நினைவின் சலனத்தில், அதன் ஓட்டத்தில் என்னை நானே கடந்து செல்கிறேன்.
அனல் காற்று வீசுகிற, ஈரப்பதம் பிசுபிசுக்கிற மாலைப்பொழுது அது. வாகனங்கள் கக்கும் புகை காற்றைப் நிறைத்தது. பெட்ரோல் மற்றும் தாரின் வாசம் மூக்கின் மீதேறிச் சென்றது. கடலுக்கடியில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் தணிய மறுக்கிற வெப்பம். நானும் நண்பருமாக நகர வீதிகளில் நடந்து சென்றோம். அந்த சாலைகள் வளைந்து சென்றன.அது எங்களுக்கு வித்தியாசமானதாக இருந்தது. பாலைவனத்தில் ஒட்டக கூட்டத்தை பற்றி யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் தொகுதியில் ஒரு கவிதை உண்டு. அதை இப்போது என்னால் திரும்ப அழைக்க முடியவில்லை. நாங்கள் நடந்து வந்த வழிகளில் பேரங்காடிகள் தென்பட்டன. நீ ஆசையோடு கேட்ட கிளியோபட்ரா சோப் இருக்கிறது. உலக பேரழகியை குறிக்கும் சோப் அது. பன்னாட்டு சோப்கள் உன் அலமாரி சுவர்களை அலங்கரிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். பாவனைகளில் யுகத்தில் சோப்புக்கான குறியீடு எது? நான் தேர்ந்தெடுப்பது எது? கிளியோபட்ராவா? அல்லது டவ்வா? உன் உடல் நரம்புகள் முழுக்கவுமே விளம்பர காட்சி பிம்பங்களால் ஆனவை. நாம் அதனூடே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு டி.வி முன் நீ உட்கார்ந்து இருக்கையில் அதன் பிம்பம் காட்சி வெளியை தாண்டி என்னையே பிரதிபலிக்கிறது. பாஸ்மதி அரிசி பற்றி மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறாய். டில்டா என்ற பாஸ்மதி அரிசி ஒன்று இருக்கிறது. மின்சார அடுப்பில் வைத்தால் உன்னை போலவே ஐந்து நிமிடத்தில் சோறாகி விடுகிறது. நம்மை சோறாகத்தானே சமூகம் மாற்றியிருக்கிறது. கே.எப்.சி களும், மெக் டொனால்ட்களும் அதிகமாகவே கண்ணில் தென்படுகின்றன. இந்த hot spot களில் உன்னோடு உரையாட ஆசை. மால்களை குறித்து நீ ஒருவேளை கேள்விபட்டிருக்கலாம். அந்த மால்களின் வடிவமைப்பை என்னால் புரிய முடியவில்லை. அது முக்கோணமாகவோ, சதுரமாகவோ, நாற்கரமாகவோ இருக்கிறது. அதனுள்ளிருந்து கூட என்னால் மற்றவர்களை மொபைலில் தான் தொடர்பு கொள்ள முடிகிறது. நான் கண்காணிப்பு கேமராவிற்குள் உட்படுத்தப்படுகிறேன்.என் அசைவுகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படுகின்றன. மாறி வரும் உலகில் நீ தொடர் நிலப்படமாக இருக்கிறாய். அதில் எனக்கான வழியை தேட விரும்புகிறேன்.
நகர வீதிகளில் அங்காடிகளிலிருந்து ட்ரோலிகளில் உருட்டிச்செல்லப்படும் குழந்தைகளை கண்டால் என்னை நானே அவநம்பிக்கைக்கு ஆளாகிறேன்.நான் ஊரில் மூன்று மாதங்கள் இருந்தும் நமக்கு இன்னும் சந்ததி உருவாகவில்லை. வெளிநாட்டு
வாழ்க்கையின் தண்டனை இது தானா? இது இயற்கையின் சாபமா அல்லது இறைவனின் சாபமா? காலம் இன்னும் நம்மை முந்திக் கொள்ள வில்லை. என் முதல் ஞாபகமே தொட்டிலில் என் தாயின் தாலாட்டு கேட்டது. நம் குழந்தையின் முதல் ஞாபகமாக ஸ்பிரிங் தொட்டிலில் உன் குரல் கேட்க வேண்டும் என்பது தான். வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை விட சோகமான தருணங்களே ஆழ்மனதில் பதிகின்றன. நம்மின் பிரிவு ஒரு சோகமான தருணம். அது என்னுள் ஆழமாக பதிந்து விட்டது. இதை உனக்கு நான் எழுதும் போது வெளியே ஈரப்பதம் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.அதை உள்வாங்கி காகிதத்தில் படியும் நிழலாகிறேன். அடுத்த விமானம் இன்னும் தயாராகவில்லை. அரபிக்கடல் மேல் அது விசாலமான கோட்டை கிழித்துக்கொண்டு தரையிரங்கும் நாளுக்காக என் கடிகாரத்தை திருப்பி கொண்டிருக்கிறேன்.

பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி

சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன - பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி
எச்.பீர்முஹம்மது

புதிய காற்று (நவம்பர் 2006)

கடலோட்டத்தில் நிழல் படிந்திருந்தது. அது தன்னை உள்வாங்கி கொண்டு வெகு தூரம் சென்றது. இருபுறமும் பாதை அமைத்துக் கொண்டு தன் போக்கில் நகர்ந்தது. ஆழமற்ற நீர்ப்பரப்பிற்குள் நின்ற மணல் மேட்டிற்கு பின் ஆழமான கடலிலே சுறாக்கள் தென்பட ஆரம்பித்தன. சூரிய அஸ்தமனம் சிலாகிக்கத்தக்கதாக இருந்தது. பல வடிவங்களிலான மேகங்கள் நிறமாலையின் எல்லா நிறங்களினாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. கடல் நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் தொடுவானிற்கு நேர்த்தியான பாதை அமைத்திருந்தது. படகுகள் நீரின் ஒட்டத்தை கிழித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தன. அவை எதையோ தேடுவது மாதிரியான உணர்வோடிருந்தன. இரவில் கப்பல்கள் ஒளியை உமிழ்ந்து கொண்டு ஆங்காங்கே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
துண்டுகளாக சிதறிக் கிடக்கும் பாரசீக வளைகுடா மற்றும் அது சூழ்ந்திருக்கும் நாடுகளின் வரலாறு நெடியது. புனைவு சார்ந்தது. மனித நாகரீகத்தின் எல்லா உட்கூறுகளையும் கொண்ட இவை அதற்கான நிகழ்வு போக்குகளையும் கொண்டுள்ளன.அரபிக்கடலை வெட்டி விட்டு ஈரானிலிருந்து தொடங்கும் இவை சவூதியில் போய் முடிகின்றன. அரபிக்கடலையும் பாரசீக வளைகுடாவையும் ஹர்மஸ் ஜலசந்தி பிரிக்கிறது. இதன் பெயரிடல் குறித்து பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன். சிலர் அரேபிய வளைகுடா என்கிறார்கள். வேறு சிலர் அந்தந்த நாட்டின் பெயரோடு அழைக்கிறார்கள். பாரசீக வளைகுடாவானது சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. சுமேரியர்கள் முதன்முதலாக இப்பகுதியில் குடியேறி அதை ஆண்டு வந்திருக்கிறார்கள். இது ஈரானின் தெற்கு பகுதியில் யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் நதிக்கரையை ஒட்டி தொடங்குகிறது.சுமேரியர்களை தொடர்ந்து அசிரியர்களும்,பாபிலோனியர்களும் இதனோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு ரோமானியர்களின் வர்த்தகதலமாக மாறுகிறது.நறுமணபொருட்கள், பவள, ரத்தினங்கள் போன்றவற்றை அதிக அளவில் ரோமானியர்கள் அவர்களிடமிருந்து வாங்க தொடங்கினர். பின்னர் பாபிலோனியர்கள் அதன் அதிகாரத்தைக்கைப்பற்றினார்கள்.அதன் பின்னர் அகெமியர்கள், பார்த்தீனியர்கள், சசானியர்கள் ஆகியோரின் அதிகார வரம்பிற்குள் இது வந்தது. இவர்கள் இந்தியாவோடும், சீனாவோடும் கடல்வழி வர்த்தகத்தை நடத்தினார்கள். அதன் வழியாக பல இலக்கியங்கள் பிறந்தன.பாரசீகர்களின் கடல் வழி வர்த்தகத்தைகுறிக்கும் கதைத்தொகுப்பான " ஆயிரத்தோர் இரவுகள்" இன்றும் பலரால் கவனிக்கப்படுகிறது.பாரசீக வளைகுடா பகுதிகளை பொறுத்தவரை நிலவியல் அடிப்படையில் ஈரானிலிருந்து தொடங்கினாலும் அரசியல் அடிப்படையில் ஈரான், ஈராக் ஆகியவற்றை தவிர்த்தே பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் நீங்கலாக ஓமன், கத்தர்,குவைத் பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியசு ஆகிய நாடுகள் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை ஏற்படுத்தி உள்ளன. இதன் வரலாறு அதன் போக்கில் நகரக்கூடியதும், ஒன்றைஒன்று முந்திக்கொள்வதும்,உரையாடுவதுமாகும்.
சவூதியானது அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது. மத்தியகிழக்கின் பல்வேறு இனக்குழுக்களின் துவக்க இடமும் இது தான்.

சவூதியானது நபூத், நஜ்த், ஹிஜாஸ், ரப்-உல்-ஹாலி ஆகிய நான்கு பெரும் பாலைவனங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் நஜ்த் நீங்கலாக மற்ற பகுதிகள் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. நஜ்த் பகுதி தற்போதைய ஆட்சி பரம்பரையான சவூத் குடும்பத்திடம் இருந்தது. இந்த தீபகற்பம் இங்குள்ள இனக்குழுக்களின் வேறுபட்ட வாழ்வனுபவத்திற்கு மூலாதாரமானதாகும். அவர்களின் வாழ்க்கை பாங்கு பாலைவனச்சூழலை எதிரொளிப்பதாக இருந்தது. இவர்கள் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். அப்பகுதியில் கூடாரமிட்டு தங்களுக்குதேவையானவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் ஒட்டக கூட்டங்களோடு நகர்ந்தார்கள். வேறு சிலர் தங்களுக்கு தேவையானவற்றை தேடி பல பகுதிகளுக்கும் நகர்ந்தார்கள். இவர்களுக்கென்று எவ்விதமான இலட்சிய உணர்வு இருக்கவில்லை. இவர்களே பதூயீன்கள். இந்த தீபகற்பத்தில் பேரீத்தப்பழ விவசாயம் பெருமளவில் இருந்தது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள்.
இன்றைய சவூதியானது 1932 ல் அப்துல் அஸீஸ் இப்னு சவூத் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதன் முன்னர் அது ஒருங்கிணைவை அடைந்திருக்கவில்லை. பல்வேறுபட்ட நபர்களின் கட்டுப்பாட்டில்அதுஇருந்தது. நஜ்தை அதிகாரம் செய்த சவூத் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டார். இவரே வஹ்ஹாபிசத்தின் அரசதிகார வடிவம்.
இந்த இடத்தில் பிரிட்டனின் வார்ப்பான அப்துல் வஹ்ஹாபை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. வஹ்ஹாபியத்தின் தந்தையான அப்துல் வஹ்ஹாப் நஜ்த் பாலைவனத்தை அடுத்த உயைனாவில் பிறந்தார். மதகல்வியை முடித்த பிறகு அடுத்துள்ள பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டன் ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது. மத்தியகிழக்கின் பெரும்பகுதி அப்போது துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் இருந்தது. மத்திய கிழக்கை கைப்பற்றுவதற்கான குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதிகளை சொந்தமாக்குவதற்கான கருவியாக பிரிட்டன் இவரை பயன்படுத்திக் கொண்டது. பிரிட்டன் காலனிய அமைச்சக அதிகாரியான ஹெம்பரை இதற்காக களம் இறக்கியது. இந்த பணிக்காக இஸ்லாமிய அடிப்படைகளை கற்றுத்தேர்ந்த ஹெம்பர் அரபி மற்றும் துருக்கி மொழியையும் கற்றார்.
ஆரம்பத்தில் துருக்கி வந்த அவர் அஹ்மத் எபண்டி என்பவரிடம் ஹதீஸ்கள் குறித்து விரிவாகக் கற்றுக் கொண்டார்.பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு அப்துல் வஹ்ஹாபை சந்திக்கிறார். அப்துல் வஹ்ஹாபுடனான சந்திப்பு ஹெம்பருக்கு ஒரு துவக்க புள்ளியாக மாறுகிறது. அப்துல் வஹ்ஹாபுடனான பல்வேறுபட்ட உரையாடல்கள் ஹெம்பருக்கு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவின. இதற்கிடையில் பிரிட்டன் அன்று ரியாத் பகுதியை ஆண்டுவந்த இப்னு சவூதிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிறகு ஹெம்பர் அப்துல் வஹ்ஹாபை இப்னு சவூதிடம் அறிமுகப்படுத்தினார். மூளை+அரசதிகாரம் இரண்டும் சேர்ந்து கொண்டதால் பிரிட்டன் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற தொடங்கியது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன் வைத்தல் என்ற கொள்கையின் படி இப்னு சவூத் பலரை கொன்று குவித்தார். பல்வேறு பட்ட வன்முறைகள் இதன் பேரில் நடந்தேறின. அப்துல் வஹ்ஹாபின் மூளை ஒரு பெரும் முடுக்கியாக இருந்தது.பிரிட்டன் தன் உளவாளியான ஹெம்பர் மூலம் சாதித்த இவ்விஷயங்கள் ஹெம்பரின் டைரிகுறிப்பில் காணகிடைக்கிறது. இந்த ஆவணம் பிரிட்டனின் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.மேலும் இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.இதை மறுத்து தூய்மைவாதிகள் தரப்பில் பல்வேறு காலகட்டங்களில் மறுப்புகள் வெளியாயின. ஆனால் அவர்களால் அந்த மறுப்புக்கான தெளிவான ஆதாரத்தை தெரிவிக்கமுடியவில்லை.வஹ்ஹாபிசத்தின்
பின்புலம் இது தான். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க பகுதியில் அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதி சவூத் குடும்பத்திடம் இருந்தது. இது துருக்கிய உதுமானிய பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இதனால் அவர்கள் இப்னு ரஷீத் என்பவரை தூண்டி விட்டு சவூத் குடும்பத்தினரிடமிருந்த பகுதிகளை கைப்பற்றினர். இதனால் சவூத் குவைத்திற்கு சென்றார்.பின்னர் சவூதின் மகன் அப்துல் அசீஸ் குவைத்திலிருந்து திரும்பி வந்து 1901 ல் பிரிட்டன் துணையுடன் தன் மூதாதையர் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். பிரிட்டனின் முழு ஆதரவு இருந்ததால் அவரால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடிந்தது.1902ல் மக்கா மற்றும் மதீனாவை கைப்பற்றினார். வஹ்ஹாபிய கருத்தியல்படியான அனைத்துவித அரங்கேற்றங்களையும்அப்துல் அசீஸ் செய்தார். அறிவியல் வளர்ச்சியை அவர் வஹ்ஹாபியஅடிப்படையில் பார்த்தார். தொலைபேசி, ரேடியோ, ஷவர் போன்றவைஇஸ்லாமிய அடிப்படைக்கு விரோதமாக பார்க்கப்பட்டது. பின்னர் அவராலேயே அது ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.(தற்போதையதூய்மைவாதிகளின் லேப்டாப், சி.டி,டி.வி.டி, வீடியோ கான்பரன்ஸ் மாதிரி). அப்துல் அசீஸ் எல்லைகளை விரிவுபடுத்தி ரியாத்தை தன்தலைநகராக மாற்றினார். 1932 ல் அரேபிய தீபகற்பம் முழுவதுமான பகுதி மன்னராட்சி சவூதி அரேபியா என பெயரிடப்பட்டது. முப்பதுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலானது சவூதிய வளர்ச்சியின் பெரும் துவக்கப்புள்ளி. இது சவூதியின் வடிவத்தில் பெரும்மாற்றத்தை கொண்டு வந்தது. சவூதிகளின் வாழ்க்கைத்தரம் இதனால் மாறியது. பெட்ரோ-குழாய்கள் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொண்டன. இரண்டாம் உலகபோரின் மிக முக்கிய இயங்கு சக்தியாக பெட்ரோல் மாறியது.சவூதியின் வடிவமைப்பே பெட்ரோலாக மாறியது.இவருக்கு பிறகு அவருடைய மகனான பைசல் பதவிக்கு வந்தார். பைசலின் ஆட்சிகாலத்தில் சவூதி இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏராளமானோர் வர தொடங்கினர்.(வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் முதன் முதல் வேலைக்காக வரதொடங்கியது சவூதியில் தான்) இவர்களின் உழைப்பு அவர்களின் வாழ்வியக்கமாக இருந்தது. ஐரோப்பிய மூளையும், வளரும் நாடுகளை சேர்ந்தவர்களின் மலின உழைப்புமே இவர்களை இன்றும் ஒட்டகங்களிலிருந்து, பென்ஸ் காருக்கு நகர்த்தி வருகிறது. காரிலிருந்து வரும் புகை எல்லா இடைவெளிகளையும் இட்டு நிரப்பி வருகிறது.

பஹ்ரைனின் வரலாறு காலத்தில் முந்தியதாகும். சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குட்டிதீவுகளை கொண்டிருக்கும் பஹ்ரைன் துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது.சுமேரியர்கள் இதை தில்மன் என அழைத்தனர். இது இஸ்லாமுக்கு முந்தைய வரலாறு உடையது.ஆரம்பத்தில் சுமேரியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்கள் பவள வர்த்தகத்தை பிற நாடுகளுடன் நடத்தி வந்தனர். இஸ்லாமிய வரலாற்று துவக்கத்திற்கு முன்பு வரை இது கிரேக்கர்களால் டைலஸ் என்றழைக்கப்பட்டது. கிரேக்கர்களால் மண்பாண்டங்கள், பல்வேறு வித கைவினை பொருட்கள், இரும்பு கருவிகள் போன்றவை இங்கிருந்து தயார் செய்யப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இயல்பாகவே அமைந்த கடல்வெளி அதற்கு திறவுகோலாக இருந்தது. கி.பி முதலாம் நூற்றாண்டில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் பிரதிநிதியான நெர்சியஸ் இங்கு வருகை தந்தார்.அதன் பிறகு பஹ்ரைன் கிரேக்கர்களுடனான உறவை தொடங்கியது.இவர்கள் அராத், அல்டைர், சமாஹிஜ் போன்ற புதிய கிராமங்களை கண்டடைந்தார்கள்.(இந்த கிராமங்களை ஒட்டியே தற்போது விமான நிலையம் அமைந்துள்ளது).கி.பி நான்காம் நூற்றாண்டில் பஹ்ரைன் சசானிய பேரரசோடு இணைக்கப்பட்டது.சசானியர்கள் இதனை இந்தோ பள்ளத்தாக்கோடு தொடர்பு கொள்ள வைத்தனர். வளைகுடா நாடுகளில் சவூதிக்கு அடுத்ததாக இஸ்லாமிய பரவலாக்கம் முதன்முதலாக பஹ்ரைனில் தான் நடைபெற்றது. ஆறாம் நூற்றாண்டில் பஹ்ரைன் மூன்று பகுதிகளாக அறியப்பட்டது. அல் ஹஜ்ர்(சவூதியின் தற்போதைய அல்-அஹ்ஸா)அல்-காத்(சவூதியின் அல்-கதீப்) அவால்(பஹ்ரைன்).அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த இனக்குழு பனி-அப்துல்-கைஸ் என்றழைக்கப்பட்டது. இவர்கள் அவால் என்ற சிறு தெய்வத்தை வழிபட்டனர். இதன் பெயரே இன்று அவால் என அறியப்படுகிறது.இந்ததெய்வத்திற்கான கோயில் இன்றும் பார்பர் என்ற இடத்தில் காணப்படுகிறது.கி.பி ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய பரவலாக்கத்திற்கு பிறகு நபித்தோழரான அல்-ஆலா-அல் ஹத்ராமி என்பவர் பஹ்ரைனை ஆட்சி செய்தார். அவருடைய காலத்திற்கு பிறகு பஹ்ரைன் உமையத் கலிபாவான இரண்டாம் உமரின் கீழ் வந்தது. இவருடைய காலத்தில் தான் முதல் பள்ளிவாசலான அல்கமீஸ் நிர்மாணிக்கப்பட்டது.இன்றும் இதன் உடைந்த வடிவங்களை காணமுடிகிறது.மங்கோலியர்களின் தலைவரான செங்கிஸ்கானின் கட்டுப்பாட்டில் இது சிறிது காலம் இருந்தது. பின்னர் உமய்யத்களில் கீழ் வந்தது.பல்வேறுபட்ட அரசுகள் பஹ்ரைனை பலவிதத்தில் சுரண்டின. கடைசியாக 1861ல் இது பிரிட்டனின் காலனியாதிக்கத்திற்குள் வந்தது. பிரிட்டன் 1930 களில் இங்கு பெட்ரோலை கண்டெடுத்தது. மத்திய கிழக்கில் முதன்முதலாக பெட்ரோல் கண்டறியப்பட்ட இடமும் இது தான்.பிரிட்டன் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலை வைத்து பல்வேறு விதமான விரிவாக்க பணிகளை செய்தது. மருத்துவமனை ஒன்று அவர்களுக்காக அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாரசீக மரபாக ஈரானிலிருந்து பலர் இங்கு வந்து குடியேற தொடங்கினர். நாளடைவில் அவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 1950களில் பிரிட்டனுக்கு எதிராக பல்வேறு வித கலகங்கள் நடைபெற்றன. பஹ்ரைன் விடுதலைப்படை உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக 1971 ல் பிரிட்டன் வெளியேறியது. ஷேக் ஈசா என்பவர் தலைமையில் மன்னராட்சி ஏற்பட்டது. பஹ்ரைன் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் பிறகு பஹ்ரைன் உலக வரைபடத்தில் இடம் பிடித்தது. துண்டுகளாக சிதறிக்கிடந்த இடங்கள் இணைக்கப்பட்டன.இந்நிலையில் ஈரான் பஹ்ரைனை உரிமை கொண்டாடியது. பின்னர் ஐ.நா முன்னிலையில் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் மக்கள் சுதந்திர நாட்டை விரும்பினர். இதன் பிறகு ஈரான் விலகி கொண்டது.சவூதி அரேபியாவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு எண்பதுகளில் சவூதி-பஹ்ரைன் கடல்வழி பாலம் அமைக்கப்பட்டது. இது உலகில் நீளமான பாலங்களின் பட்டியலில் வரக்கூடியது. தொண்ணூறுகளில் பஹ்ரைன் - கத்தர் மோதல் ஏற்பட்டது. ஹவார் என்ற தீவை உரிமைகொண்டாடியதில் இருவருக்கும் இடையே உராய்வு உண்டானது.இறுதியில் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஹவார் தீவு பஹ்ரைனுக்கு சொந்தமானது. இருநாடுகளிலும் தன் கடற்படை முகாமை அமைத்திருக்கும் அமெரிக்கா இருநாட்டு மோதலில் தன்னை பார்வையாளனாக வடிவமைத்து கொண்டது. தற்போதும் தன் ராணுவ முகாமை இந்நாட்டில் அமைத்திருக்கும் அமெரிக்கா இதனை தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தூய இஸ்லாம் பேசும் சமூகத்தின் சுய-வெளிப்பாடு இதுதான். இதன் மூளையையும் இந்திய(கேரளீய) உழைப்பையும் உள்வாங்கி கொண்டு பஹ்ரைன் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கத்தர் பஹ்ரைன் மாதிரியே பவள வர்த்தகத்தை கொண்டதாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் கத்தர் அல்-தனி குடும்பத்திடம் இருந்தது. இவர்கள் சவூதியின் நஜ்த் பகுதியிலிருந்து கத்தரில் குடியேறியவர்கள்.அப்துல் வஹ்ஹாபை பின்தொடர்ந்தவர்கள். கத்தரில் பவளம், மீன்,மற்றும் மண்பாண்ட வர்த்தகத்தை செய்தனர்.அதே காலத்தில் கத்தரின் வடபகுதி பஹ்ரைன் கலீபாகுடும்பத்திடம் இருந்தது. இறுதியில் பிரிட்டிஷ் தலையீட்டில் பெயரில் கலீபா குடும்பம் வெளியேறியது.இந்நிலையில் 1872 ஆம் ஆண்டு கத்தரின் பெரும்பகுதியை துருக்கி கைப்பற்றியது.இதனால் அல்-தனி குடும்பம் கத்தரை விட்டு குவைத்துக்கு சென்றது. முதல் உலகப்போர் மத்திய கிழக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பல நாடுகள் அதன் சுயத்துவத்தை அடைந்தன. இதன் நீட்சியாக துருக்கி கத்தரை விட்டு வெளியேறியது. கத்தர் மீண்டும் அல்-தனி குடும்பத்தில் கையில் வந்தது. இதன் பிறகு பிரிட்டனுக்கும் கத்தருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் படி அல்-தனி குடும்பத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் ஜாசிம் கத்தர் பிரதமராக பொறுப்பேற்றார்.
பிரிட்டிஷ் அதிகாரத்திலான கத்தரில் ஷேக் அப்துல்லா பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டு வளர்ச்சிக்கான வரைவு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1939 ல் இங்கு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பிறகு கத்தர் பெட்ரோலிய கழகம் உருவாக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பிரிட்டன் கத்தரை லாவகமாக சுரண்டியது. இரண்டாம் உலகப்போர் வரை கத்தரில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இரண்டாம் உலக போர் முடிவடைந்த தருணத்தில் ஐம்பது, அறுபதுகளில் கத்தர் பெட்ரோலை ஏற்றுமதி செய்தது. இதன் விளைவாக கத்தர் துரித வளர்ச்சி நிலையை அடைந்தது. பள்ளிகூடம், மருத்துவமனை போன்றவை உருவாக்கப்பட்டன. இதன் போக்கில் பிரிட்டன் 1968 ல் தன் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்பது அரபு பகுதிகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் தன்னுரிமை அடையவோ அல்லது ஒன்றாக இணைந்து புதிய அரசை உருவாக்கவோ செய்யலாம் என்றது. ஆனால் அவர்களுக்கிடையேயான மோதலானது பிரிந்து செல்வதையே தேர்ந்தெடுத்தது. இதன் விளைவாக கத்தர் 1971ல் தனி சுதந்திர நாடானது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பெட்ரோலை முன்வைத்து பல தொழில்கள் உருவாக்கப்பட்டன.1974 ல் கத்தர் பெட்ரோலிய கழகம் உருவாக்கப்பட்டது.1980-1990 களில் நடந்த ஈரான் - ஈராக் போரில் கத்தர் ஈராக்கை ஆதரித்தது.இதனால் ஈரானின் வெறுப்பை சம்பாதித்து கொண்டது. பின்னர் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த போது தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டது.பன்னாட்டு படைகளுக்கு முகாமை அமைக்க தன் நாட்டில் இடமளித்தது.தொண்ணூறுகளுக்கு பிறகு கத்தர் அபரிதமான வளர்ச்சி நிலையை அடைந்தது. பெட்ரோலிய விளைபொருட்கள் அதிக அளவில்உற்பத்தியாயின. இயற்கை எரிவாயு அதிக அளவில் தேக்கப்பட்டது. இயற்கை எரிவாயு சேமிப்பில் கத்தர் உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்குள்ளவர்களில் பெரும்பான்மையினர் சவூதியின் நஜ்த் பகுதியில் இருந்து வந்தவர்கள். சவூதிகளை போலவே கலாசார ஒருமை காணப்படுகிறது. பெரும்பான்மையினோர் வஹ்ஹாபிசத்தை பின்பற்றுகிறார்கள். 2003 -ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது அமெரிக்கா படைகளின் முகாமாக கத்தர் விளங்கியது. 2001 உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தியதன் மூலம் உலகமயமாக்கலோடு தன்னை ஒன்றிணைத்துக் கொண்டது. சவூதி, பஹ்ரைன் வரிசையில் கத்தர் அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இருக்கிறது.

ஐக்கிய அரபு குடியரசானது துபாய், ஷார்ஜா, அபுதாபி, ராசல் கய்மா, புஜைரா, உம்முல்-குவைன், அஜ்மன் ஆகிய ஏழு அமீரகங்களை கொண்டதாகும். ஒவ்வொன்றும் தன்னாட்சி அமைப்பை பெற்றுள்ளது. இவை அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் உடன்படிக்கை மாகாணங்கள் என்றழைக்கப்பட்டன. இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் அறிமுகமாகிறது. அதற்கு முன்பு சுமேரிய, பாபிலோனிய கலாசாரத்துடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் எமிரேட்டின் கடற்கரைகள் கொள்ளைக்கும், கடத்தலுக்கும் பெயர்பெற்றிருந்தன. அதன் காரணமாக இவை கொள்ளை கடற்கரை என அழைக்கப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதன் கடற்கரை கட்டுப்பாடு முழுவதும் பிரிட்டன் வசம் வந்தது. பிரிட்டானிய ரோந்து கப்பல்கள் இங்கு வலம் வந்தன. இதன் எல்லா பகுதிகளையும் உயர்குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களோடு பிரிட்டன் 1835ல் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதன்படி இதன் கடற்பகுதி முழுவதும் பிரிட்டனுக்கு சொந்தம். மேலும் நிலப்பகுதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பிரிட்டன் மேற்கொள்ளும். இதன் பிறகு எமிரேட்டின் முழுப்பகுதியுமே பிரிட்டன் வசம் வந்தது. 1968 ல் பிரிட்டன் எமிரேட்டை ஒன்றிணைப்பது குறித்து ஷேக்குகளிடம் கலந்தாலோசித்தது. அவர்கள் தங்களுக்குள் கூடி ஒருங்கிணைவது குறித்து சிந்தித்தனர். பின்னர் ராசல் கய்மா தவிர மற்ற ஆறுமாகாணங்களும் ஐக்கிய அரபு குடியரசாக இணைந்தன.அதே ஆண்டில் பிரிட்டன் விலகி கொண்டது.முதலில் கத்தர், பஹ்ரைன் ஆகியவையும் ஐக்கிய அரபின் கீழ் தான் இருந்தன.பின்னர் 1971 ல் தனித்தனியாக விலகி கொண்டன. 1973ல் ராசல் கய்மா தன்னை எமிரேட்டோடு இணைத்து கொண்டது. அபுதாபியை தலைநகராக கொண்ட எமிரேட் உலகை நோக்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
மத்திய கிழக்கின் வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கியஅரபானது மேற்கு நாடுகளை ஒத்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நீல வானிற்கு மிக அருகில் சமீபித்திருக்கும் கட்டிடங்கள் நிலத்தை பிரதிபலிப்பு செய்கின்றன. பன்னாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கு தங்கள் ஸ்தாபனங்களை நிறுவியுள்ளன. ஜெபல் அலியை தலைமை இடமாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன.எமிரேட் மத்திய கிழக்கிலேயே அதிகஅளவில்வெளிநாட்டினரை கொண்டுள்ளது. இது உள்நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். அறுபதுகளில் ஈரானியர்கள் அதிக அளவில் வந்து குடியேற தொடங்கினர்.பாதுகாப்பற்ற எமிரேட்டின் எல்லைபகுதியே அதற்கு காரணம். பிறநாட்டு மக்கள் தொகையில் இந்தியர்கள் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். எமிரேட்டை மற்ற நாட்டினர் united kerala என்றழைக்கிறார்கள். 1957 ல் அங்கு நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியின் விளைவு இது. கட்டுமான துறையில் அதிகம் வெளிநாட்டினர் பணிபுரியும் நாடு இது தான். புஜைராவின் மலைமுகடுகளில் உடைக்கப்படும் பாறைத்துகள்களானது சிவப்பு வரிகளால் தன்னை எழுதிச்செல்கிறது. எமிரேட்டியர்களின் கலாசார நடைமுறை வித்தியாசமானதாக தெரிகிறது. இவர்கள் பதூயீன் நாட்டார் இசையை பின் தொடர்கிறார்கள். கையில் குச்சியை வைத்துக்கொண்டு ஆடும் நடனமானது எமிரேட்டின் கடைத்திருவிழாக்களின் சிறப்பம்சம். வளைகுடாவின் முதல் பெண்பாப் பாடகரான அஹ்லம் எமிரேட்டியர் தான். மத்திய கிழக்கின் வர்த்தக தலைநகரமாக எமிரேட் வளர்ச்சியடைந்தபோதும் சவூதி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடனான எல்லை பிரச்சினை அதற்கு இடையூறாக உள்ளது. ஈரான் - ஈராக் போரின் போது எமிரேட் ஈராக்கிற்கு ஆதரவு அளித்தது. அதே நேரத்தில் ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கெதிராக எதிர் நிலைபாட்டை மேற்கொண்டது. சில நேரங்களில் மிகை பெட்ரோல் உற்பத்தியால் ஈராக்கின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. உலகில் அதிக அளவு தனி நபர் வருமான வீதத்தை கொண்டிருக்கும் எமிரேட் ஒரு மரத்தின் உதிர்ந்த இலையாக நகர்ந்து வருகிறது.

ஓமன் திறந்த, அலைவடிவ மலைப்பிரதேசங்களையும், குன்றுகளிலான பாலைவனத்தையும் கொண்டது. இது வரலாற்றின் போக்கில் நெடியது. இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் பரவல் பெற தொடங்கியது. தொல்லியல் ஆய்வுகள் ஓமன் 5000 ஆண்டுகள் முந்திய வரலாறு கொண்டதாக தெரிவிக்கின்றன. சுமேரியர்கள் இதனை தாமிர நாடு என்றழைத்தனர். தாமிர தொழில் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கிறது. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள் இதை உறுதிச் செய்கின்றன. நபித் தோழரான அம்ரு பின் ஆஸ் கி.பி 630ல் அன்றைய ஓமனின் மன்னர்களான அப்த் மற்றும் ஜாபர் ஆகியோரிடம் சென்று நபியின் செய்தியை தெரிவிக்கிறார். இதன் பிறகு அவர்கள் இஸ்லாமை தழுவுகிறார்கள். ஓமன் மேற்கே யமன் மற்றும் சவூதியையும் வடக்கே எமிரேட்டையும் எல்லையாக கொண்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை கிழக்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள் ஓமனின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் பிறகு அதனிடமிருந்து விடுவிக்கப்பட்டன.ஒமனானது 1508 முதல் 1659 வரை போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அஹ்மத் இப்னு செய்த் அல் யரூபி என்பவரால் உதுமானிய பேரரசு அகற்றப்பட்டது. இவரே ஓமனின் முதல் சுல்தான். யரூபிய வம்சம் ஓமன் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இவர்கள் ஓமன், சான்சிபார், மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளை வைத்திருந்தார்கள். ஓமானிய கடற்பகுதி பாரசீகத்திலிருந்து வடக்காகவும், இந்திய பகுதியிலிருந்து கிழக்காகவும், ஆப்பிக்காவிலிருந்து தெற்காகவும் சுற்றி அமைந்திருக்கிறது.இதன்வழி மற்ற வளைகுடா நாடுகளை விட ஒமன் கடல் வர்த்தகத்திற்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. ஓமானியர்களில் பெரும்பகுதியினர் குடியேற்றக்காரர்களே. ஒருபகுதியினர் யமனிலிருந்தும் மற்றவர்கள் வட அரேபியாவிலிருந்தும் இங்கு வந்து குடியேறிவர்கள். ஓமன் உலகில் அதிக அளவு இபாதி முஸ்லிம் பிரிவினரை கொண்ட நாடாகும். இங்குள்ள அரபு முஸ்லிம்களில் 70% இவர்கள் தான். இபாதி முஸ்லிம் பிரிவானது ஹாரிஜாக்களின் மித வடிவமாகும். கலீபாவான உதுமான் கி.பி 656 ல் அவருடைய எதிரிகளால் கொல்லப்படுகிறார். இது அவரின் ஆதரவாளர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பின் வந்த கலீபாவான அலியிடம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர். உதுமானின் உறவினரும் சிரியாவின் கவர்னருமான முஆவியா-இப்னு அபு சுப்யான் என்பவர் இதை வலியுறுத்தி வட ஈராக் பகுதியான் சிபின் என்ற இடத்தில் வைத்து அலியுடன் போர் புரிந்தார். இதன் விளைவில் அலிக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமரசம் ஆனது. இதன் படி உதுமான் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அலியின் இந்த முடிவு அவரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அலி ஒரு பாவிக்கு துணைபோய் விட்டார் என்றனர். பின்னர் அவரிடமிருந்து விலகி தனியாக செயல்பட்டனர். இவர்களே ஹாரிஜாக்கள். அலி நஹ்ரவான் என்ற இடத்தில் வைத்து இவர்களை தோற்கடித்தார். இவர்களுடன் பதூயீன்கள், மற்றும் மவாலிகள் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். இவர்கள் பரம்பரை ஆட்சிமுறையை எதிர்த்தனர். மாறாக இமாம்கள் மற்றும் கலீபாக்கள் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றனர். இவர்கள் குர் ஆன் வழி ஆட்சி முறையை முன்வைத்தனர். பாவச்செயல் என்பது எல்லோருக்கும் பொதுவானதாகும். இதில் கலீபா அல்லது சாதாரண மனிதர் என்ற வேறுபாடு இல்லை. கலீபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி சரியானது. ஆனால் அவர்களின் போக்கு தான் திசைமாறியது என்றனர். இதை ஏற்காத தங்களை தவிர்த்த பிற முஸ்லிம்கள் அனைவரும் காபிர்களே. அவர்களுக்கு எதிராக போரிடுவதை கடமையாக கருதினர். இவர்களின் விரிவாக்கம் ஈரான், ஈராக் , ஓமன், வட ஆப்ரிக்க பகுதிகள் போன்றவற்றிற்கும் நீண்டது. பின்னர் அப்பாஸிட், உமய்யத் கலிபாக்களால் படிப்படியாக ஒடுக்கப்பட்டனர். கி.பி 680ல் ஹாரிஜாக்களில் தீவிர கூட்டத்தினர் பஸ்ராவிலிருந்து வெளியேறினர்.இதில் சில பேர் மிதவாதிகளாக இருந்தனர். அவர்களில் ஒருவரான அப்துல்லா இப்னு இபாத் என்பவர் மிதவாத ஹாரிஜா பிரிவான இபாதி பிரிவை தொடங்கினார். இவரை பின்தொடர்ந்தவர்கள் தான் இபாதி முஸ்லிம்கள். ஓமனின் பெரும்பகுதி இருக்கும் இவர்கள் மற்ற முஸ்லிம் பிரிவோடு இணக்கமாக செல்லும் கருத்தியல் நடைமுறையை வைத்திருக்கின்றனர். இவர்களின் இமாம் என்பவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கென வழிகாட்டு குழு ஒன்று உள்ளது. இவர்கள் அடிமையாக இருந்தாலும் அவர்களால் இமாமாக முடியும் என்ற கொள்கையை கொண்டுள்ளனர். பாவச்செயல்கள் எல்லா மனிதர்களுக்கும் சமமானவை. யாரேனும் பாவச்செயல்கள் புரிந்தால் அவர்கள் நிராகரிப்பவர்களின் பட்டியலில் வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் முறைப்படி இஸ்லாத்திற்கு வர வேண்டும் என்றனர். இவர்களின் மற்ற பகுதியினர் வட ஆப்ரிக்காவின் சான்சிபரிலும், ஜெரூபா தீவிலும் வசிக்கின்றனர்.
ஓமனின் சுல்தான் உள்நாட்டு இபாதி முஸ்லிகளின் கலகத்தை எதிர்கொள்ள 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் துணையை தேடினார். இதனை தொடர்ந்து பிரிட்டன் அதைபடிப்படியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கிடையில் இடதுசாரி சார்புடைய ஓமன் மக்கள் விடுதலை முண்ணனி அமைக்கப்பட்டது. இவர்கள் ஓமனின் விடுதலைக்காக நாற்பதுகளில் கலகத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரிட்டன் துணையுடன் அந்த கலகம் முறியடிக்கப்பட்டது. இதன் பின்னர் அறுபதுகளில் ஐ.நா சபை தீர்மானத்தின் படி பிரிட்டன் முழுமையாக வெளியேறியது. 1964 ல் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலானது ஓமனின் வளர்ச்சிக்கான துவக்கபுள்ளி. மூன்றாண்டுகளில் ஓமன் பெட்ரோலை ஏற்றுமதி செய்ய தொடங்கியது. உள்கட்டமைப்பு வசதிக்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நூற்றாண்டின் இறுதியில் ஓமன் மில்லியன் பேரல்களை ஒரு நாளில் உற்பத்தி செய்வதற்கான இலக்கை எட்டியது.இயற்கை எரிவாயுவையும் குறிப்பிட்ட அளவில் சேமித்து வைத்திருக்கிறது. 1990 ல் ஓமன் குவைத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. பன்னாட்டு படைகளுக்கான தளத்தை தன் நாட்டில் அமைத்துக் கொடுத்தது. ஓமானியர்களின் கலாசாரம் மற்ற வளைகுடா நாடுகளை விட வித்தியாசமாக இருக்கிறது. இவர்கள் மற்றவர்களை போன்ற தலைவட்டுகளை அணியாமல் தொப்பியை அணிகின்றனர். 1970 ல் சுல்தான் செய்த் அவருடைய மகனால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அவருக்கு பின் வந்த அஹ்மத் ஹப்பாஸ் மற்ற இனக்குழுக்கள் மீது அரசு அடக்குமுறையை பயன்படுத்தினார். இவருடைய காலம் தான் உள்நாட்டு புரட்சியின் உச்சநிலை. இபாதி முஸ்லிம்பிரிவினரின் எதிர்செயல்பாடுகளோடு ஓமன் தன்னை முன்னகர்த்தி செல்கிறது.

குவைத் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் வரலாறை துவக்கி வைத்து விட்டு செல்கிறது. கிரேக்கர்கள் இங்குள்ள தீவுகளில் குடியேற தொடங்குகிறார்கள். இவர்கள் இகாரஸ் என்றழைக்கப்பட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நஜ்த் பகுதியிலிருந்து இனக்குழுக்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்குகின்றன. இவர்கள் பின்னாளில் தங்களுக்குள் ஒன்றிணைந்து கொண்டர். இவர்கள் பனூஉத்ப் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கென பாதுகாப்பு அரணை கட்டினர். இது குத் என்றழைக்கப்பட்டது. இதுவே குவைத் ஆனது. பவள வர்த்தகம் இவர்களிடையே முக்கிய தொழிலானது. இதனடிப்படையில் இனக்குழுவானது அல்-சபா, அல்-கலீபா, அல்- ஜலகியா என்ற மூன்று பிரிவாக பிரிந்தது. இவர்களில் அ-சபா கூட்டத்தினர் குவைத்தின் ஆளும் வர்க்கத்தினராயினர். 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சபா இனக்குழுவை சேர்ந்தஅப்துல்லா அல் சபா என்பவர் குவைத்தின் முதல் மன்னரானார். இதற்கிடையே மற்ற இரண்டு இனக்குழுக்களும் அதிகாரத்திற்கான போரில் இறங்கின. இதற்கிடையில் உதுமானிய பேரரசின் அச்சுறுத்தலும் இருந்தது. இதில் இருந்து தப்பிக்க மன்னர் பிரிட்டனின் துணையை நாடினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டன் அந்நாட்டில் தன் படைக்களத்தை அமைத்தது. பின்னர் உதுமானிய பேரரசுக்கும் பிரிட்டானிய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விளைவாக உதுமானிய பேரரசு தோற்கடிக்கப்பட்டது. குவைத் பிரிட்டனின் காலனி ஆனது. அல்-சபா வம்சம் பிரிட்டனின் பினாமியாக மாறியது. இதன் பின்னர் குவைத் உட்கட்டமைப்பு வசதிக்கான நடவடிக்கைகளில் இறங்கியது.
1938 இல் குவைத் கம்பெனி பிரிட்டன் துணையுடன் பெட்ரோலை கண்டெடுத்தது. மற்ற நாடுகளை போலவே இது ஒரு துவக்க புள்ளி. ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு தான் குவைத்தால் பெட்ரோலை ஏற்றுமதி செய்ய முடிந்தது. 1961 பிரிட்டன் படைகள் குவைத்தை விட்டு வெளியேறின. இந்நிலையில் ஈராக் அதே ஆண்டில் குவைத்தை உரிமை கோரியது. இதனால் குவைத் மீண்டும் பிரிட்டனின் உதவியை நாடியது. பின்னர் ஈராக் அதை கைவிட்டது. முடிவாக குவைத் சுதந்திர நாடானது. ஷேக்அப்துல்லா சலீம் அல்-சபா அதன் மன்னரானார்.1963 ல் குவைத் ஐக்கியநாடுகள் சபையின் உறுப்பினரானது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (Organisation of petroleum exporting countries) உருவாக மிக முக்கிய காரணியாக விளங்கியது. பெருகிய பெட்ரோல் வருவாயை வைத்து மற்ற அரபு நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்தது. எழுபதுகளில் நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது குவைத்திய படைகள் எகிப்தின் சூயஸ் கால்வாயில் முகாமிட்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 1965 ல் குவைத் சோவியத் ரஷ்யாவுடன் உறவை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் முதன் முதலாக சோவியத் ரஷ்யாவுடன் உறவை ஏற்படுத்தியது குவைத் தான். இது மற்ற நாடுகளுக்கு அதன் மீதான மனஸ்தாபத்தை உருவாக்கியது. ஈரான் -ஈராக் போரில் குவைத் ஈராக்கிற்கு ஆதரவளித்தது. இதனால் ஈரானிய படைகள் குவைத் எண்ணெய் கிணறுகளை தீப்பற்றி எரியச் செய்தன. ஆனால் அப்போர் முடிந்த பிறகு குவைத்தின் எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. இதனை சரிசெய்ய எண்ணெய் கிணறுகளை புணரமைக்கும் பணியில் குவைத் ஈடுபட்டது. இதன் விளைவாக எண்ணெய் உற்பத்தி அதன் இலக்கை எட்டியது. இதனால் குவைத்தின் எண்ணெய் சர்வதேச சந்தையில் போட்டிக்கான இடத்தை அடைந்தது. எண்ணெய் விலை பாதியாக குறைந்தது. இது ஈராக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
(இதன் பின்புலத்தில் அமெரிக்காவின் தகிடுத்தனத்தையும் நாம் காண வேண்டியதிருக்கிறது). ஏற்கனவே இருந்து வந்த எல்லை பிரச்சினை, எண்ணெய் பிரச்சினை ஆகியவற்றை காரணிகளாக எடுத்துக்கொண்டு ஈராக் 1990 ல் குவைத் மீது படையெடுத்து அதனை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா தலைமையில் 28 நாடுகள் அடங்கிய பன்னாட்டு படையானது ஈராக் மீது போர்தொடுத்து குவைத்தை மீட்டு கொடுத்தது. இந்த போரில் ஈராக் குவைத்தின் பெரிய எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்தது. இது குவைத்திற்கு பெரும் பொருளாத சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குவைத் மறுகட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. எதிர்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன. இருந்தும் சபா பரம்பரையே ஆட்சியில் தொடர்ந்தது. இதற்கிடையில் குவைத் மன்னர் ஜாபர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் பொருட்டு 1999 ஆம் ஆண்டு "பெண்கள் வாக்குரிமை மசோதாவை கொண்டு வந்தார். வளைகுடா நாடுகளில் ஒருசில மட்டுமே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்திருக்கின்றன. இந்த மசோதா பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் பெண்ணியவாதிகளின் தொடர்போராட்டங்களுக்கு பிறகு 2005 மே மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு குவைத்தின் வளர்ச்சி நிலையில் சிறிது தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.தேங்கி நிற்கும் உள்முரண்பாடுகளோடு ஒரு பெட்ரோல் குழாயின் நேர்கோட்டில் குவைத் நகர்ந்து வருகிறது.
மேற்கின் பார்வையில் பாரசீக வளைகுடா தண்ணீருக்குள் இருக்கும் உள்ளங்கையாக பிரதிபலிக்கிறது. வளைகுடா நாடுகளின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை நாம் நோக்கும் போது அது முழுவதும் பிரிட்டானிய வளைகுடாவே. இஸ்லாமிய உலகின் பெரும் சவாலாகவும், எதிரோட்டமாகவும் இருந்து வரும் வஹ்ஹாபிசத்தின் பிறப்பிடமும் இது தான். பிரிட்டன் அப்துல் வஹ்ஹாப் மூலம் லாவகமாக சாதித்த இவ்விசயங்கள் வரலாற்றின் தேய்ந்த பக்கங்களாகவே இருக்கின்றன.இங்குள்ள அரபு இனத்தவர்களுக்கு தாங்கள் இறைவனுக்கு நாடி நரம்பை விட சமீபமாக இருப்பவர்கள் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த அரபுகளின் செயல்பாடும் இதை பிரதிபலிப்பதாகவே உள்ளது.வளைகுடாவின் பெட்ரோல் மூளையும் பிரிட்டனே. "எமக்கு ஒரு துளி பெட்ரோலானது ஒரு சொட்டு இரத்தத்திற்கு சமமாகும்" 1918 ல் முதல் உலகபோர் முடிவில் பிரஞ்சு பிரதமர் சொன்ன வார்த்தைகள் இவை. " ஒரு தேசிய இன அங்கீகாரம் என்பது பெட்ரோலிய வளத்தை வைத்தே உலகில் செல்லுபடியாகும்" என்றார் அமெரிக்க ஜனாதிபதி வில்சன். வியட்நாம் போரில் அமெரிக்காவின் தோல்விக்கு எண்ணெயும் ஒரு காரணமாகும் என்பதை பிந்தைய நாட்களில் போரியல் நிபுணர்கள் வெளிப்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் பெட்ரோலானது மிக முக்கிய இயங்கு காரணியாக விளங்கியது. வளைகுடா மீதான மேற்கின் கண்காணிப்பிற்கான காரணம் இது தான். 'வளைகுடா' என்ற சொல்லே 1991- ஈராக் மீதான பன்னாட்டு படை போரின் போது தான் உலகில் முதன் முதலாக குவியமானது. மேற்கின் மூளையை அடிப்படையாக கொண்ட imitation ஆக இருந்து வரும் வளைகுடா நாடுகள் வளரும் நாடுகளின் மனித உழைப்பை உள்வாங்கி கொண்டு நதியின் சலனமாக நகர்ந்து வருகின்றன. எட்வர்ட் செய்த் பின்வருமாறு குறிப்பிட்டது வளைகுடாவிற்கு சரியாகவே பொருந்துகிறது " மேற்கில் நீங்கள் ஒருவரை கிண்டலடிக்கவேண்டுமென்றால் அவரை கிழக்கத்தியவாதி (Orientalist) என்று அழையுங்கள்"