காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Sunday, January 31, 2010

இஸ்லாமும் முதலாளித்துவமும்- மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்

பிரஞ்சுப் பத்திரிக்கையான ’லெ மோந்தே’, இஸ்லாமிய உலகிம் பற்றிய அபரிமிதமான புலமை பெற்றவர் என்று பாராட்டப்பெற்ற பெருமைக்குரியவர் மாக்ஸிம் ரோடின்சன். கடந்த 2004-ம் ஆண்டு தனது 89ம் வயதில் மறைந்துபோன ரோடின்சன் அரபு மற்றும் இஸ்லாமிய சரித்திரம், நாகரீகம் ஆகியவை குறித்த பல பிரசித்தி பெற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் 1961ம் ஆண்டு எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைச் சரித்திரம் எனும் புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் இவர் 1966-ல் எழுதிய மாக்ஸ் வெப்பரின் புகழ்வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எதிரொலியாய் எழுதப்பட்ட ’இஸ்லாமும் முதலாளித்துவம்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மிகச்சமீபத்தில் இவரது ‘மெமாயர்ஸ்’ புத்தகமாய் வெளியிடப்பட்டது. அப்புத்தகம் பிரஞ்சு நாட்டின் தலை சிறந்த எழுத்தாளரான ரோடின்சன் தனது பாரிஸ் நகர வாழ்வினை வாழ்வை மீள்பார்வையினைப் பிரதிபலிக்கிறது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை முதலாளித்துவத்தின் போக்கில் பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவ சமூகம் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய மறுமலர்ச்சி கட்டத்தின் தோற்றத்தை பின் தொடர்ந்து உருவானது. அதற்கு முந்தைய நிலபிரபுத்துவ சமூகம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெரும் சமூக மாறுதலை ஏற்படுத்தியது. அது வெளிப்படையான மாற்றமாக இல்லாவிட்டாலும் சமூக குழுக்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்துவதில் பெருவாரியான பங்கை வகித்தது. இதில் ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு பெரும் கண்டங்கள் சார்ந்த முரண்பாடுகள் முக்கியமானவை. உற்பத்தி முறை மற்றும் சமூக உற்பத்தி முறை ஆகிய கருத்தாக்கங்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பொருளாதார, சமூக மாறுதல் உலகின் பெருமதங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இஸ்லாமிய சமூக அமைப்பின் மீது தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா? இஸ்லாம் அதனளவில் முதலாளித்துவ கூறுகளை கொண்டதா? என்பதான கேள்விகள் ஓரியண்டல் சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்தன. இதனைக்குறித்து மாக்சிம் ராடின்சன் விரிவாக ஆராய்ந்தார். அதற்காகவே அவரிடம் இருந்து Islam and Capitalism என்ற நூல் வெளியானது. முதலாளித்துவ சமூகம் மத்தியகிழக்கு அரபு சமூகத்தில் எத்தகைய மாறுதலை ஏற்படுத்தியது? அதன் வீச்சு பிற சமூக அமைப்பில் எத்தகைய விளைவுகளை உருவாக்கியது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மாக்சிம் ராடின்சன் விடைகாண முயற்சித்தார். புதிர்பாதைகள் நிறைந்த கிழக்கத்திய சமூக அமைப்பில் இது குறித்த ஆய்வுமுறை சிக்கலானதாகும். சிக்கலான மலைப்பாதைகள் போன்று இதன் வழிகளும் சிரமமானவை. எந்த ஆய்வாளராலும் திடீர் முன்முடிவுக்கு வர முடியாதவை. ராடின்சன் இதன் புதிர்களை அவிழ்க்க முயன்றார். அதன் கோடுகள் சார்ந்த பாதைக்குள் பயணம் செய்தார்.
மாக்சிம் ராடின்சன் தன் இஸ்லாம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய ஆய்வை வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து தொடங்கினார். வளர்ச்சியடைந்த தொழில்வள நாடுகள் மற்றும் வளர்ச்சி குன்றிய வறுமையும், பசியும் ஒன்று சேர்ந்து நிரம்பிய நாடுகள் இவற்றின் போராட்டமாகவே உலகம் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே உலகின் முக்கிய பிரச்சினையாக வலைகிறது. இவ்வாறான வளர்ச்சி குன்றிய நாடுகளின் பின்தங்கிய மனிதவளம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் செழுமையான மனித வளம் இவை இரண்டின் இயக்கம் பற்றிய எதார்த்தம் உலகிற்கு மிக முக்கியம். இந்த எதார்த்தம் அரபு நாடுகளை சமூக கட்டுமானத்திற்குள் பிரதிபலிக்க செய்கிறது. இதன் நீட்சியில் சில நூற்றாண்டுகளாகவே உலக அரங்கில் முஸ்லிம் மதத்தின் அங்கதம் குறித்து அதிகம் ஆராய வேண்டியதிருக்கிறது என்றார் ராடின்சன். இதை சார்ந்த நாடுகளில் சில முக்கிய கருத்துருக்களின் வீச்சு குறித்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை, சோசலிசம், முதலாளித்துவம், தேசியம், இஸ்லாம் போன்ற வித்தியாச கருத்துருக்கள் எவ்வாறு உறவுகொள்கின்றன என்பதும் முக்கியம். அரசியல் இதன் பின்னணியில் இயங்குகிறது. அரசியல் உடனடியான, நடைமுறை சார்ந்த கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வி தெளிவானதும் அதற்கான பதிலை சமீபத்தில் வைத்திருப்பதுமாகும். ஆட்சியாளார்களின் செயல்பாடு, மற்றும் அரசியலாளர்கள் இதன் பதிலுக்கு ஏற்ற செயல்முறைகளை அரங்கிற்கு கொண்டு வருகிறார்கள். அரசியல் செயல்பாடு, பொருளாதார செயல்பாடு, கருத்தியல் மற்றும் கலாசார மரபு இவற்றிற்கிடையேயான இணைப்பு மற்றும் சரியான உறவு முறை என்பது என்ன? இதற்கான முன்முடிவுகள் சாத்தியமானவை. மத்திய கிழக்கின் வரலாற்றிலிருந்து எளிதில் பெற முடிந்தவை. முதலாளித்துவம் இந்த நாடுகளுக்கு உவப்பான கருத்தாக்கமா? என்பது குறித்த விவாதம் ஓரியண்டல் மற்றும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ கருத்தாக்கம் மத்திய கிழக்கு அரபுலகில் அதன் ஐரோப்பிய வருகைக்கு பிற்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் அறிமுகமானது. அங்குள்ள பெரும் நிலபரப்புகள் மற்றும் தொழில்வளங்கள் எல்லாம் தனிநபர்களுக்கு சொந்தமாயின. பூர்வீக நாடோடி பழங்குடிகள் தங்களின் பாரம்பரியத்தை இழந்தார்கள். முதலாளித்துவம் மற்றும் இஸ்லாம் குறித்த ஒப்பீடு முஸ்லிம் சிந்தனையாளர்கள், பொருளியலாளர்கள், மற்றும் வரலாற்றாளர்களால் ஐரோப்பாவில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இவர்கள் எல்லோருமே ஒரு அர்த்தத்தில் தர்க்கத்தின் அடிப்படையை மறந்து விடுகிறார்கள் என்கிறார் ராடின்சன். முஸ்லிம்களின் மத மரபு மற்றும் தேசிய வாதம் அல்லது இரண்டும் எப்போதுமே நவீன பொருளாதார முறைமைகளுக்கு எதிராக இருந்ததில்லை. இன்னொரு வகையில் இந்த மரபு பொருளாதார மற்றும் சமூக நீதிக்கு சாதகமானதாகவே இருக்கிறது. இஸ்லாம் குறித்த அனுதாபம் கொண்ட ஐரோப்பிய சிந்தனையாளர்கள் சிலர் மேற்கண்ட கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.முதலாளித்துவம் என்ற சொல்லாடலை பற்றி வித்தியாசமான கருதுகோள்கள் இருக்கின்றன. இவை விரிந்த பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வகையில் இது தனித்த சில பொருளாதார நிறுவனங்களை குறிக்கிறது. மேலும் இந்த நிறுவனங்களின் சட்டகத்தில் இயங்கும் அரசமைப்பையும், அதன் மனோபாவத்தையும் குறிக்கும். இதனடிப்படையில் முதலாளித்துவ நிறுவனங்கள் சில தருணங்களில் மொத்த சமூக அமைப்பையும் தன் கூட்டிற்குள் இழுக்கும். ஆனால் அவை அந்த சமூகத்தில் சிறுபான்மையாகவே இருக்கும். உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை, தாராள வர்த்தகம், இலாபத்திற்கான எத்தனிப்பு, சந்தைக்கான உற்பத்தி, பணப்பொருளாதாரம், போட்டி செயல்முறை, வர்த்தக செயல்பாட்டில் அறிவின் நுட்பம் போன்ற கூறுகள் இவற்றை இயக்கும் சக்திகளாக இருக்கும். முதலாளித்துவத்தின் மற்றொரு அர்த்த வகைபாடு மொத்த சமூகத்தையும் குறிக்கும். அதன் நிறுவனங்கள் அல்லது மனோபாவம் இவற்றை அர்த்தப்படுத்தவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது மேற்கத்திய சமூகத்தையே அதிகம் குறிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த அமைப்பே உலகை முதலாளித்துவமாக பிரதிநிதித்துவம் செய்தது. இதில் ரோமப்பேரரசு முக்கிய பங்கு வகித்தது. முதலாளித்துவம் குறித்த வியாக்கியானங்கள் மார்க்சியர்களால் அதிகம் வெளிப்படுத்தப்பட்டன. இவர்களால் மட்டுமே இதன் தரவுகள் தெளிவாக முன் வைக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிறுவனங்கள் பற்றியும், நவீன ஐரோப்பாவில் அது எவ்வாறு பரிணமித்தது என்பது பற்றியும் மார்க்சியர்களே அதிக அளவில் ஆராய்ந்தனர். ஆக முதலாளித்துவம் என்பது ஒரு வகையில் அதன் விரிந்த அர்த்தத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் உற்பத்தி முறையாக இருக்கிறது. அதன் உரிமையாளர் தன் உற்பத்தி பண்டங்களுக்கு கூலியை வழங்கி, இலாபத்தை திரட்டுகிறார். இது தொழிலக முதலாளித்துவம். மற்றொரு வகையில் குறிப்பிட்ட சமூகத்தின் பொருளாதார முறைமையும், அதன் இயங்குமுறையும் ஒன்றை ஒன்று ஊடுபாவுதன் வழி அதன் இயக்கம் நிலவுகிறது. இது புதிய பொருளாதார காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் முதலாளித்துவ வியாக்யானமாக இருந்தது. இறுதியாக முதலாளித்துவ "சமூக பொருளாதார அமைப்பு". இந்த அமைப்பே நாம் வாழும் வகைமையில் இருக்கிறது. நாம் ஒரு தனி மனிதனாகவும், அதே நேரத்தில் முதலாளித்துவ சமூக மனிதனாகவும் இருக்கிறோம். "நான் வாங்குகிறேன். அதனால் இருக்கிறேன்" என்ற ழீன் பூதிலாரின் மேற்கோள் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த வகைப்பாடு என்பது இடைக்கால ஐரோப்பாவின் வணிக மற்றும் நிதி மூலதனத்தின் எச்சமே. இந்த வடிவங்கள் இடைக்கால முஸ்லிம் உலகில் வழக்கில் இருந்தது என்கிறார் ரோடின்சன். ஐரோப்பாவில் முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு பரிணமித்த போது இஸ்லாம் அதன் சொந்த வெளிக்குள்ளும் இதை பிரதிபலித்தது. இஸ்லாமிய சமூக பொருளாதார அமைப்பை பற்றி ஆராயும் போது அதன் ஆரம்ப கட்டத்தில் வழக்கில் இருந்த லேவாதேவி முறை, (Money lending)வர்த்தக நடவடிக்கை ஆகியவற்றில் இருந்து தொடங்க வேண்டும். இஸ்லாமின் ஆரம்ப கட்டத்தில் மெக்கா நகர வர்த்தகர்கள் இடையே வட்டிக்கு பணம் கொடுத்தல் பிரதான தொழிலாக இருந்தது. இது பண்டமாற்று முறைமையிலும் வழக்கில் இருந்தது. வர்த்தக நடவடிக்கையில் மெக்கா நகரம் அரபுலகின் மையமாக திகழ்ந்தது. மார்க்ஸ் வணிக மூலதனத்தின் இருத்தலும் அதன் வளர்ச்சியும் குறிப்பிட்ட கட்டம் வரை அதன் சொந்த நிபந்தனையாக இருக்கிறது என்கிறார். இது பண்டைய அரபுலகிற்கு சரியாகவே பொருந்துகிறது. லேவாதேவி முறை வழக்கில் இருந்து குறிப்பிட்ட கட்டத்தில் அது தடை செய்யப்பட்டது. கடன் செயல்பாட்டில் இஸ்லாம் மதரீதியான கட்டளைகளை விதித்தது. அதை ஓர் ஒப்பந்தமாக்கியது. திருமணம் என்பது இஸ்லாமில் ஒப்பந்த நடவடிக்கையாக மாறியது இதன் தர்க்க தொடர்ச்சியே. நாணய முறை அடுத்த கட்டத்தை நோக்கி பரிணமித்தது. தினார், திர்ஹம், ரியால் என்பதாக பல வடிவங்களை எடுத்தது. இதன் தொடர்ச்சியில் பண வளத்தின் தர்க்க ஒழுங்கானது குறிப்பிட்ட வடிவத்தில் குவியமாகிறது. அதற்கு முதலாளித்துவ உற்பத்தி முறைமை காரணமாக இருக்கிறது. இதன் படி உற்பத்தி என்பது வணிகத்திற்காக நடைபெறுகிறது. விற்பனை பெரிய அளவில் இருக்கிறது. ஒரு வணிகர் பொருட்களை ஒரு வாடிக்கையாளர் வாங்குவதோடு திருப்தியடையமாட்டார். மாறாக தன் ஒரு கொள்முதலில் பல வாங்குபவர்கள் இருக்க வேண்டும் என்பதை தான் எதிர்பார்ப்பார். இன்னொரு அர்த்தத்தில் வணிக மூலதனத்தின் வளர்ச்சியானது தன் பரிமாற்ற மதிப்பிற்காக அதிக அளவில் உற்பத்தியை பெருக்குவதுடன், உற்பத்தி பொருட்களை அதே அளவில் பண்டமாக்கவும் செய்கிறது. ஆக முதலாளித்துவ வணிகம் மொத்தமாக இருக்கும் பட்சத்தில் பணத்தை சந்தைக்கான உற்பத்திக்கு பயன்படுத்துகிறது. இஸ்லாமின் ஆரம்ப கட்டம் உற்பத்திக்கானதாக இல்லாமல் வணிக பரிமாற்றமாக இருந்தது. வணிக செயல்பாடே மொத்த சமூகத்தின் பொருளாதார இயக்கத்தை தீர்மானித்தது. இதன் படி முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ நிறுவனங்கள் இதனடிப்படையில் செய்யப்பட்ட மூலதன கணக்கீட்டின் படி இயங்குகின்றன. இந்த இயக்கமுறை இவ்வுலகில் நாகரீகமடைந்த எல்லா நாடுகளிலும் வழக்கில் இருந்தது. சீனா, இந்தியா, ஈராக்,எகிப்து மற்றும் சிரியா ஆகியவற்றில் இடைக்கட்டத்தில் வழக்கில் இருந்த இந்த முறைமையானது நவீனகாலகட்டத்திலும் தொடர்ந்தது. இஸ்லாமின் பொருளாதார கூறுகளில் கூலி உழைப்பு முக்கிய இடம் பெறுகிறது. இஸ்லாமிய பொருளாதார அடிப்படைக்கு குர் ஆனும் , நபியின் சொல், செயல் வழியும் மூலக்கூறாகும். குர் ஆனை பொறுத்தவரை கூலி உழைப்பு ஆட்சேபனையற்ற இயற்கை நிறுவனமாகும். கூலி உழைப்பை குர் ஆன் இறைவனோடு தொடர்புபடுத்தி பேசுகிறது. இன்னொரு இடத்தில் மோசஸ் பற்றிய தொன்மத்தோடும் கூலி உழைப்பை தொடர்புபடுத்துகிறது. மேலும் அக்காலகட்டத்தில் நிலவிய கந்து வட்டி முறையை கடுமையாக எதிர்த்தது. இங்கு ரிபா என்ற சொல் பெருக்கம் (increase)என்ற அர்த்தத்தில் குர் ஆன் பயன்படுத்துகிறது. இது தற்கால வட்டி என்பதை குறிக்கும் interest என்பதல்ல என்கிறார் ரோடின்சன். மாறாக பணம் இரட்டிப்பாவதை ரிபா குறிக்கும் என்கிறார். அக்காலத்தில் யூதர்கள் மற்றும் அரபு பழங்குடியினர் மத்தியில் இந்த வழக்கம் இருந்தது. அவர்களுடனான அரபுகளின் பொருளாதார முரண்பாடு இந்த வழக்கத்தை தடை செய்யும் அளவிற்கு சென்றது. தற்காலிக தடை முறையாக வந்த இந்த வழக்கம் பின்னர் லௌகீகமயமாகி விட்டது. ஆக இஸ்லாமிய சமூக, பொருளாதார கட்டமைப்பை குர் ஆனின் கட்டளை சார்ந்த கோட்பாடுகள் வரையறுக்கின்றன. மேலும் உற்பத்தி சாதனங்களின் உடைமை குறித்து இஸ்லாமிய அடிப்படைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை. கந்து வட்டி மற்றும் ஜகாத் என்ற வரி விதிப்பு மூலம் ஒருவனின் சொத்து என்பது இறைவனின் கண்காணிப்புக்குள்ளான ஒன்றாக இருக்கிறது. ஆக சொத்து என்பது குடும்பத்தின் பிரிக்கப்படாத வடிவமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அரசின் உடைமையாகவும் இருக்கும். சில முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான நிலப்பகுதிகள் ஒரு குறிப்பிட்ட இனக்குழு அல்லது கிராமத்திற்கு சொந்தமான ஒன்றாக இருக்கின்றன. இவ்வாறாக சொத்துரிமை என்பது குறிப்பிட்ட கருதுகோள்கள் அடிப்படையில் லௌகீக வாழ்க்கையின் ஒவ்வொருவரின் உரிமையாக இருக்கிறது. இந்த உரிமை அதன் பொருளாதய இருப்பை தீர்மானிக்கிறது.முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முறை என்பது முஸ்லிம் நாடுகளில் தற்போதைய கட்டத்திற்கு முன்னர் வழக்கில் இருக்கவில்லை என்கிறார் ரோடின்சன். மாறாக முதலாளித்துவத்தின் வெற்று வர்த்தக அமைப்பு முறையின் மறு பிரதிபலிப்பாகவே முந்தைய அரபு சமூகம் இருந்திருக்கிறது. அன்றைய அரபு சமூகத்தில் மெக்கா நகரம் முதலாளித்துவ வர்த்தக மையமாக இருந்தது. அதன் பெரும்பாலான குடிமைகள் குறைஷி என்ற உயர் வர்க்கத்தை சார்ந்தவர்கள். அவர்கள் தங்களை வர்த்தகம் மற்றும் வட்டிக்கு கடன் வழி உயர்த்திக்கொண்டனர். மார்க்ஸ் இதனை அறிவார்ந்த வர்த்தக நடவடிக்கை என்றார். பண்டங்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற நடவடிக்கையால் அவர்களின் மூலதனம் பெருகியது. அவர்களின் பெருக்கத்திற்கு மத ரீதியான நடைமுறைகளையோ அல்லது கோட்பாடுகளையோ துணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களின் இந்த பொருளாதார நடவடிக்கையை கார்ல் பொலைன் இழைக்கப்படாத பொருளாதாரம் (unembedded economy)என்றார். அதாவது முறைப்படியான பொருளாதார நிறுவனங்களை கட்டமைக்காமல் சமூகத்தின் பொருளாதார சூழலிலிருந்து வேறுபட்டு வெறும் இனக்குழு சார்ந்த பொருளாதார நடவடிக்கை தான் அது. இங்கு பண்டங்களின் தேவை மற்றும் அளிப்பை சார்ந்து அதன் விலைகளும் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்தன. அன்றைய கட்டத்தில் மெக்கா நகரம் அரேபிய தீபகற்பத்தின் சிறு பகுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் நிலையான பொருளாதார கட்டமைப்பை கொண்டு பண்டங்களை சந்தைக்கு அனுப்பும் திருப்பு மையமாகவும் இருந்தது. நறுமணப்பொருட்களின் வர்த்தகம் இங்கிருந்து அரேபிய முழுவதற்கும் பரவி குறைஷி இனக்குழுவிற்கு வருமானத்தை பண வடிவில் அள்ளிக்குவித்த கேந்திரமாகவும் இருந்தது.
இதன் தொடர்ச்சியில் அரபுகள் அரேபிய தீபகற்பம் முழுவதையும் கைப்பற்றி அங்கு அரசமைப்பை ஏற்படுத்தினர். தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் அவர்கள் குடிமக்கள் மீது வரிவிதிப்பை ஏற்படுத்தினர். அங்கு வர்த்தக நடவடிக்கைக்கும், பண - பரிமாற்ற முறைமைக்கும் அனுமதி அளித்தனர். இந்நிலையில் மெக்கா குறைஷிகள் தங்கள் மூதாதையர்களின் வர்த்தக நடவடிக்கைகளை பின் தொடர்ந்தவர். அவர்களில் ச அத் பின் மொசைப் ஒருவர். தன் வாழ்நாள் முழுவதும் முன்னோர்களின் பொருளாதார நடவடிக்கையை அறிவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கி.பி 750 ல் அப்பாஸிட் வம்ச புரட்சிக்கு பின்னர் இனக்குழுக்களுக்கிடையே சமத்துவத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது பெரும்பாலான மக்கள் இஸ்லாமிற்கு மாறி விட்டார்கள். மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகள் அரபுகள் வசம் வந்து விட்டன. வியாபார நடவடிக்கைகள் இந்த பிராந்தியம் முழுவதும் பரவி வியாபித்தன. ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்த பகுதிகள் ஒன்றிணைந்ததால் அதிகப்படியான புதிய பண்டங்கள் ஒரு பொதுவான சுழற்சி மையத்திற்கு திருப்பப்பட்டன. அதன் பிறகு இப்பிராந்தியங்களில் முறைப்படியான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இது பதினான்காம் நுற்றாண்டு காலத்திய நடவடிக்கையாகும். முஸ்லிம் பேரரசு காலத்திய வணிகர்கள் இலாபத்திற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தங்களின் விளைவை மதிப்பிட்டுக் கொண்டனர். அவர்களின் வணிக இலாபங்கள் ஒவ்வொன்றும் பண வடிவில் மாற்றப்பட்டன. இக்காலத்திய வணிகம் பற்றிய விளக்கம் பல்வேறு இஸ்லாமிய பொருளாதார அறிஞர்களால் கொடுக்கப்பட்டது. குறிப்பாக பதினான்காம் நூற்றாண்டு சமூகவியலாளரும், வரலாற்றாசிரியருமான இப்னு கல்தூண் இதில் முக்கியமானவர். அக்கால வணிக நடைமுறையை குறித்து இப்னு கல்தூண் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " வணிகம் பற்றிய அர்த்தம் தெரிந்தது தான். அதாவது பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதன் மூலம் மூலதனத்தை பெருக்கி இலாபத்தை ஏற்படுத்துதல். இந்த பொருட்கள் அடிமைகள் , தானியங்கள், மிருகங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆடைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதில் உறிஞ்சப்பட்ட தொகையே இலாபம். இந்த இலாபத்தை உருவாக்க பொருட்கள் சந்தையின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப சேமிக்கப்படுகின்றன. இதுவே அதிகப்படியான இலாபத்தை உருவாக்குகிறது. மேலும் வணிகர்கள் தங்களின் பொருட்களை தேவைக்கு ஏற்ப பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு சொந்த நாட்டை விட ஏற்றுமதி செய்யப்படும் நாட்டில் பொருட்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இதுவும் அவர்களுக்கு அதிகப்படியான இலாபத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆக ஒரு பழைய வணிகர் வணிகத்தின் உண்மையை அறிய முயல்பவரிடம் இவ்வாறு கூறுகிறார். " மலிவாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய். இதுவே உனக்கான வணிகம்."
வணிகம் பற்றிய இப்னு கல்தூனின் மேற்கண்ட வரிகள் அக்காலத்திய எதார்த்தத்தை வெளிக்கொணர்பவை.அதே இப்னு கல்தூன் வணிகத்தின் கடன் நடவடிக்கைகள் குறித்து பிந்தைய கட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " ஒருவர் கடன் கொடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டால், பெரும்பாலானோர் அதை திருப்பியளிக்க மறுத்து விடுகிறார்கள். இந்நிலையில் கடனீந்தோர் தங்களின் கடன் தொகைக்காக ஏராளமான கஷ்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. இது மாதிரியான பழக்கங்கள் ஒருவர் வணிகத்தில் ஈடுபடுவதை தடுத்து விடுகிறது. இது ஒரு தொழில் என்ற நிலையில் ஒருவர் சாதுரியமாக, தந்திரமாக, பிடிவாதமாக, கறாராக, கலக குணத்துடன் வணிகத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறது. சில அபூர்வ வணிகர்கள் மட்டுமே இம்மாதியான தவறுகளில் இருந்து விலகி நின்று வணிகச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள்."இப்னுகல்தூனின் முந்தைய கோட்பாடுகள் அக்காலத்தில் இஸ்லாமிய உலகில் நிலவிய சமூக பொருளாதார கட்டமைப்பை குறித்து அதிகம் விளக்குகின்றன. இப்னு கல்தூன் தன்னை சுற்றியுள்ள கலாசார உலகத்தை கூர்மையான கண் கொண்டு நோக்கினார். அவரை பொறுத்தவரை ஒரு மாதிரி வணிகன் என்பவன் அதற்காக போராடுபவனும், எங்கும் எப்பொழுதும், அதன் எல்லா வழிகளிலும் பணத்தை அடைபவனுமாவான். ஆக இடைக்கால முஸ்லிம் உலகம் ஆரம்ப கால இஸ்லாமிய உலகிலிருந்து பரிணாமமடைந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களை கையாளும் திறன் பெற்றிருந்தது. மேலும் உழைப்பு பிரிவினை (Division of labour)அடிப்படையில் பொருட்களின் பரிவர்த்தனை குறித்தும் அறிந்திருந்தது. இவ்வாறாக இடைக்கால இஸ்லாமிய உலகம் பணத்தின் மதிப்பையும், விலைமதிப்பற்ற உலோகங்களின் குணங்கள் பற்றியும் அறிந்திருந்தது. இங்கு செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை நிலத்தில் முதலீடு செய்தார்கள். இந்த கட்டம் ஒரு வேளை முதலாளித்துவ திசையல்லாத வளர்ச்சி நிலையா? என்பதை பற்றிய சந்தேகம் இன்றும் பொருளாதார அறிஞர்களிடம் இருக்கிறது.
ஆனால் நமக்கு நிலத்தில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்குமான விகிதாச்சார உறவு குறித்து ஏதும் தெரியவில்லை. இது அதிகமும் நேரம், இடம், சூழல் ஆகியவற்றை சார்ந்து இருக்கிறது. இப்னு கல்தூன் பாதுகாப்பற்ற தருணங்களில் நிலத்தில் முதலீடு செய்வதை அபாயம் என்கிறார். முஸ்லிம் உலகில் இவ்வாறான தொழில் வளர்ச்சியானது உற்பத்தியை நோக்கிச் சென்று பரிவர்த்தனை மதிப்பை சமன் செய்ய முயன்றது. ஒரு பொருளாதார கட்டமைப்பு குறிப்பிட்ட சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர மாதிரியின் படி முன்னோக்கிச்சென்றால் அது காலத்திற்கு ஏற்ப ஒவ்வாமையை தான் ஏற்படுத்தும் என்கிறார் மாக்சிம் ரோடின்சன். மேலும் மூன்று வித கருத்தியல்கள் முக்கியமானவை. தேசியவாத கருத்தியல், மதகருத்தியல், பிரபஞ்சம் தழுவிய மனித கருத்தியல். இம்மூன்றும் பிரதேசம், கடவுள், மனிதன் போன்ற கருதுகோள்களால் சமன் செய்யப்படுகின்றன. இங்கு மதகருத்தியல் அடிப்படையிலான கடவுள் சார்ந்த சமூக பொருளாதார கட்டமைப்பு முன்னோக்கம் சாராதது என்கிறார் ரோடின்சன். சோஷலிச சமூக பொருளாதார கட்டமைப்பில் இஸ்லாம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. பொருளாதார நிகழ்வுக்காக வெகுஜன திரளின் கருத்தியல் அடிப்படையிலான நகர்வு என்பது நவீன தேவையாக இருக்கிறது. முந்தைய கட்டத்தில் ஒருவரும் பொருளாதார கட்டமைப்பை கால மாற்றத்திற்கு ஏற்ப நகர்த்துவது குறித்து சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆக இஸ்லாமும் வெகுஜன திரளை பொருளாதார முடிவுகளை நோக்கி நகர்த்தவில்லை என்கிறார் ரோடின்சன். முதலாளித்துவ கருத்தியலை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக இஸ்லாம் அதன் எல்லைகளை தொட்டும், தாண்டியும், முறித்தும் பயணித்து வந்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய மற்றும் முந்தைய உதாரணங்கள் இதனை அதிகமும் பிரதிபலிக்கின்றன. இதனை குறித்து ஐரோப்பிய ஓரியண்டலிஸ்டாக அதிகம் ஆராய்ந்த மாக்சிம் ரோடின்சன் இஸ்லாம் குறித்த பொருளாதார கோட்பாட்டாளரில் முக்கியமானவராக தெரிகிறார்.

Tuesday, May 19, 2009

அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள்







தனிமனிதன் அல்லது சமூகம் தன் நிலைபாட்டின் மீதான பொருண்மையின் மீது, அதன் சாராம்சங்கள் மீது காலத்தை கடக்க முடியாத நுனிமங்கள் மீது தொங்கி கொண்டிருப்பது தான் அடிப்படைவாதம். இது தனிமனிதர்களுக்கிடையே அல்லது சிவில் சமூகங்களுக்கிடையே கருத்தியல் ரீதியான, செயல்பாட்டு ரீதியான மோதல்களையும், அதிகார நவிற்சிகளையும் உருவாக்குகிறது. உலகம் அதை எதிர்ப்பவர்கள் இருப்பதால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற கேதேவின் கோட்பாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் அரசுகள் எல்லாம் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அவற்றின் நம்பிக்கை, கலாசாரம், அரசியல் மீதே அதன் எதிர்செயல்பாடுகள் நிகழ்ந்தேறின. வரலாறு முன்னோக்கி செல்கிறது என்று அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல. மாறாக அதை புரிந்து கொள்வதே அவசியமான ஒன்றாகும் என்ற ஸ்பினோசாவின் கோட்பாட்டு அறிவுறுத்தல் அடிப்படைவாதம் வேர்கொண்டு நிற்கும் இந்த சூழலில் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இதன் தர்க்க ஒழுங்கை, கோட்பாட்டு பொருண்மையை மார்க்சிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடப்பு உலகில் ஆராய்ந்து வருபவர் பாகிஸ்தான் புலம் பெயர் அறிவுஜீவியான தாரிக் அலி. ஒரு விசனகரமான அதே நேரத்தில் நாடகீயமான இளமைக்காலம் அவருக்குரியது. தற்போதைய பாகிஸ்தானின் லாகூரில் 1943 ல் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தவர். சிறந்த, விசாலமான வாழ்க்கை பின்புலத்தை கொண்டவர். நிலப்பிரபுத்துவ பின்னணியை கொண்ட போதும் மார்க்சிய கோட்பாட்டின் மீது ஆர்வமும், தாக்கமும் கொண்டவர். இவர் தந்தையின் திருமணமே மிகுந்த போராட்டத்திற்கிடையே தான் நடைபெற்றது. அதற்கு அன்றைய பாகிஸ்தானில் நிலவிய மாற்று சிந்தனைகள் மீதான வெறுப்பும், மன அயற்சியுமே காரணம். அதன் தொடர்ச்சியின் மீதான எதிர்செயல்பாடு மற்றும் சிந்தனையே தாரிக் அலியின் உருவாக்கம். அன்றைய காலத்தில் லாகூர் பல கலாசாரத்தை கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக இருந்தது. இந்த நகரத்தின் நெளிவான நகர்வுகளுக்கிடையில் தாரிக்கின் இளமைகாலம் சவால் ஒன்றின் முன்னோக்கத்திற்காக காத்திருந்தது. பள்ளிப்படிப்பை லாகூரில் முடித்த தாரிக் அலி பஞ்சாப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையை போன்று இளமைகாலம் தொட்டே தாரிக் மத விவகாரத்தில் அவநம்பிக்கையாளராக இருந்தார். இதன் தொடர்ச்சி அவரை கல்லூரி பருவத்தில் முதிர்ச்சி பெற்ற அரசியல் மற்றும் தத்துவ சிந்தனையாளராக மாற வைத்தது. பஞ்சாப் கல்லூரி வாழ்க்கையின் தொடக்க காலங்களில் அவரின் பேச்சும், எழுத்தும் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார வர்க்கத்தை உசுப்பி விட்டது. காலப்போக்கின் நகர்வில் தாரிக்கின் தத்துவார்த்த செயல்பாடுகள் அவரின் பாகிஸ்தான் இருப்பை கேள்விக்குறியாக்கின. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அக மற்றும் புற நிர்பந்தங்கள் காரணமாக தாரிக் பாகிஸ்தானை விட்டு லண்டனுக்கு செல்ல நேர்ந்தது. கீழைச் சிந்தனையாளர்கள் பலரின் வாழ்க்கை பின்னணியை நாம் நோக்கும் போது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்தல் அல்லது புலப்பெயர்ச்சிக்குள்ளாகுதல் என்ற கட்டத்தில் இருந்து தான் அவர்களின் எதார்த்த வாழ்வின் இன்னொரு கட்டம் தொடக்கம் பெறுகின்றது. இதன் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. நேர்மாறான நிலையில் மேற்கத்தியர்கள் எவரும் தன் செயல்பாட்டிற்காக கீழைத்தேயத்திற்கு பெயர்ந்து வருவதில்லை. (விதிவிலக்கான தருணங்கள் தவிர) மேற்கு நாடுகளின் வட்டத்திற்குள் தான் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. கீழை சிந்தனையாளர்கள் மேற்கை தங்கள் சிந்தனைக்கான சுதந்திர வெளியாக, செயல்பாடுகளுக்கான பரப்பிடமாக காண்பதே அதற்கு காரணம். அது மாதிரியே தாரிக்கின் லண்டன் வாழ்க்கை அவரின் ஆளுமை உருவாக்கத்திற்கான தொடக்க புள்ளி. அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை அது உருவாக்கி விட்டிருந்தது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் படித்த தாரிக் படிக்கும் காலத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். அவருக்கான போராட்ட கள செயல்பாடுகள் அதன் மூலம் தொடக்கம் பெற்றன. இளமைகால தத்துவார்த்த வாசிப்பும், செயல்பாடுகளும், பல்கலைகழக பொருளாதார படிப்பும் அவரை அறிவுஜீவி என்ற கட்டத்திற்கு நகர்த்தின. வியட்நாம் போர்காலத்தில் பெர்டிணான்ட் ரஸ்ஸல் மற்றும் ழீன் பால் சார்த்தர் ஆகியோரின் அறிமுகம் தாரிக் அலிக்கு கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் மூலம் தாரிக் தன் சிந்தனைமுறையை விசாலமாக்கி கொண்டார். அவரின் அனுபவ வெளி மேற்கத்திய அறிவுஜீவிகளுடனான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் அக அனுபவ முதிர்ச்சியாக மாற்றியது. வியட்நாமுக்கு பல சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகள் இணைந்த குழுவாக சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதிலிருந்து அமெரிக்க எதிர்ப்பு சிந்தனை அவரின் கோட்பாட்டு தளத்தில் மையம் கொள்ள தொடங்கியது. ஜியாவுல் ஹக் தலைமையிலான ராணுவ அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண்டுகளாக பாகிஸ்தானிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது இன்னொரு வகையில் மேற்கத்திய நாடுகளில் அவரின் பெயரை குவியப்படுத்தியது. வரலாறு, மறுமலர்ச்சிகால தத்துவம் சார்ந்த தொடர்ச்சியான, விசாலமான, ஆழ்ந்த வாசிப்பு காரணமாக தாரிக் அலி தன் பின்னால் கணிசமான வாசக வட்டத்தை இழுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவரின் முறைப்படியான எழுத்து வாழ்க்கை 1960 ல் லண்டனில் பிரட் ஹாலிடேயுடன் இணைந்து New left review என்ற கோட்பாட்டு சஞ்சிகையை தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது.இதே காலகட்டத்தில் சர்வதேச டிராஸ்கிய கட்சியின் உறுப்பினரானார். பிரிட்டனில் அதற்கு தலைமையும் வகித்தார். அப்போது கட்சியினருடன் இணைந்து trotsky for beginners என்ற நூலை எழுதினார். பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தோல்வியை டிராஸ்கிஸ்டுகள் கையாள தவறியது குறித்த விஷயத்தில் தாரிக் அலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. அது குறித்து எழுதவும் செய்தார். இதை தொடர்ந்து டிராஸ்கிஸ்டுகளுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இவரின் முதல் புத்தகம் இஸ்ரேல் குறித்த சித்திரமாக 1968 and after:Inside the revolution என்ற பெயரில் 1978 ல் வெளிவந்தது.அதன் பிறகு பாகிஸ்தான் வரலாறு, அதன் இராணுவ சர்வாதிகாரம் குறித்த புத்தகமாக Can pakistan survive: Death of a state வெளிவந்தது. தாரிக்கின் தொடர்ச்சியான எழுத்துக்கள் அவரின் அடுத்தடுத்த நூல்களை வெளிக்கொணர்ந்தன. 1984 ல் "இருபதாம் நூற்றாண்டில் ஸ்டாலினியம்" குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். அது ஸ்டாலினியம் குறித்த கடும் விமர்சன ஆய்வுமுறையாக இருந்தது. இதன் சமகாலத்தில் தாரிக் புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் பிரதிபலிப்பாக Shadow of pomegranate tree, Book of saladin, Stone woman போன்ற நாவல்கள் அவரிடம் இருந்து வெளிவந்தன. அவரின் ஆக்கங்களில் முக்கிய கோடிடும் பகுதியாக 2002ல் வெளியான The clash of fundamentalism இருந்தது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் முறை, அதன் தர்க்கரீதியான தொடர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கின் பிராந்திய முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், கலாசார தர்க்கவியல் போன்றவற்றை குறித்த விரிவான ஆய்வுமுறையாக இருந்தது. இதன் மூலம் மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வட்டாரத்தில் தாரிக் அலி குவியமான அறிவு ஜீவியாக முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கு பிந்தைய ஆண்டில் ஈராக் மீதான அமெரிக்க போரை முன்வைத்து, ஏகாதிபத்திய கருத்தியலையும், வரலாறையும் விளக்கும் Bush in Babylon வெளிவந்தது. இந்த நூலும் அறிவுத்துறை வட்டாரங்களில் குறிப்பிட்ட மாறுதலை ஏற்படுத்தியது. பின் மார்க்சிய, பின்காலனிய, எதிர் அடிப்படைவாத தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் தாரிக் அலி தற்போது லண்டனில் வசிக்கிறார்.


தாரிக் அலியின் அடிப்படைவாதம் குறித்த ஆய்வுமுறைகள் முக்கியமானவை. அடிப்படைவாதம் வரலாறு மற்றும் கோட்பாடு சார்ந்த நுனிமங்கள் மீது தொடக்கம் கொள்கிறது என்கிறார் தாரிக். லௌகீக உலகின் வளர்ச்சி போக்கில் சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றும் கோட்பாடுகள், நம்பிக்கைகள் அதன் மனக்கிடங்கில் ஆழ்ந்து பதிகின்றன. அந்த பதிதல் சார்ந்தே அதன் அரசியல் உருவாகிறது. நாகரீகங்கள் உருவான காலத்தில் இருந்து தொடங்கும் இவை சில வேளைகளில் காலத்தை மீற முடியாதவையாக இருக்கின்றன. மதம் அதன் தொடர்ச்சியில் உருவாகும் நம்பிக்கைகள் இதற்கு உதாரணங்கள். அவ்வகையில் உலகில் உருவான எல்லா குறு மற்றும் பெருமதங்கள் இந்த நெறிமுறையில் தான் இருக்கின்றன. இதில் குறுமதங்கள் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து அழிந்து போய்விட்டன. நிலைத்திருப்பவை எல்லாம் விதிவிலக்கான தருணங்கள் தவிர பெரும்பாலும் அடிப்படைவாதத்தின் உற்பத்திக்கூடங்களே. இதன் தொடர்ச்சியில் இஸ்லாமின் தோற்றத்தைப் பற்றி மதிப்பிடும் தாரிக் அலி அதை அக்காலகட்டத்தின் அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டின் அரசியல், கலாசாரம் இருந்த நிலையில் அந்த சமூகத்தில் வலுவான நம்பிக்கை முறையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, வேறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்ட மக்களை ஒன்றிணைப்பது அல்லது இந்த இரண்டையும் செய்வதான நோக்கத்தில் உருவான அரசியல் இயக்கமே என்கிறார். இஸ்லாத்தின் முதல் இருபதாண்டுகளில் குர் ஆன் வெளிப்படுத்திய சொல்லாடல்கள் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு முந்தைய யூதம், கிறிஸ்தவம் போன்றவை இந்த கருதுகோளிலிருந்து பிறந்தவை தான். உலக பேரரசு கனவு என்பதில் இருந்தே இதன் வரலாற்று ரீதியான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற யூத மற்றும் கிறிஸ்தவத்துக்கு இடையேயான போர்கள், 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்லாம் -கிறிஸ்தவத்துக்கு இடையேயான சிலுவைபோர்கள் உலக பெருமதங்களின் பேரரசு நோக்கத்தை வெளிப்படுத்துபவை. இந்திய சூழலில் ஆரிய மற்றும் திராவிட நாகரீகத்திற்கிடையேயான போர்களை குறிப்பிடலாம். மேலும் சமண மற்றும் பௌத்த மதங்கள் அழிக்கப்படுதல், அதன் மீதான ஒடுக்குமுறை போன்றவை இந்த தர்க்க நீட்சிக்கு உதாரணங்கள். இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு கால அரபுலகில் வலுவான அரசியல் மற்றும் கலாசார இயக்கமாக உருமாறிய பிறகு அதன் எல்லை விரிவாக்கம் படிப்படியாக அதற்கான செயல் தந்திரங்களோடும், புதுமையான யுக்திகளோடும் நடந்தேறியது. இக்காலத்தில் அரேபிய பாலைவனத்தில் முஸ்லிம் இராணுவத்தின் வெற்றி என்பது குறிப்பிடதக்கதாக இருந்தது. அந்த வெற்றியின் வேகம் மத்திய தரைக்கடல் உலகை நோக்கி சென்றது. முந்தைய கிறிஸ்தவத்துடனான முரண்பாடுகள் வெளிப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தன. நபியின் மரணத்துக்கு பிந்தைய இருபது ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்தவர்கள் பிறைவள பகுதிகளில் (ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்றவை)தங்களின் முதல் அரசை கட்டமைத்தார்கள். இந்த அரச கட்டமைப்பு மற்ற பகுதிகளில் உடனடியாக அதை விரிவுபடுத்துவதற்கான மன வேகத்தை அளித்தது. ஒவ்வொரு விரிவாக்கத்தின் போதும் அப்பிரதேசத்தின் இனக்குழுக்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டன. இதற்கிடையில் கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பைசாண்டிய மற்றும் பாரசீக பேரரசுகள் வலுவான சக்திகளாக இருந்தன. இந்த இரு பேரரசுகளிடையே அக்காலத்தில் பிரமாண்ட போர் மேகம் நகர்ந்து கொண்டே வந்தது. அதன் இழுப்பங்களுடன் கூடிய தொடர்ச்சியான நகர்வு இருவரையும் தங்கள் பிராந்தியத்தின் மீது புதிய வெற்றியாளர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. சிரியாவும், எகிப்தும் பைசாண்டிய பேரரசின் பகுதிகள், ஈராக் பாரசீக பேரரசின் பகுதி. இவை அனைத்தும் பலம் பொருந்திய, நம்பிக்கையாளர்களான ஒருங்கிணைந்த இனக்குழு சக்தியின் முன் விரைவாக காணாமல் போயின. இரு பேரரசுகளின் உயர் திறன் வாய்ந்த, அனுபவம் மிக்க போர் இயந்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக இருந்த போதும், நடைமுறையில் பலவீனமாக இருந்தன. அரேபிய முஸ்லிம் இராணுவத்தின் ஒட்டக மற்றும் குதிரைப்படைகள், மறைந்திருந்து தாக்கும் கொரில்லா யுத்த முறைகள், தீடீரென தாக்கி விட்டு மறையும் நாடோடி தாக்குதல் முறை போன்ற யுத்த உத்திகள் இரு பெரும் பேரரசுகளை தோற்கடித்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த இரு பேரரசுகளின் வீழ்ச்சியோடு இஸ்லாமின் முறைப்படியான இருப்பு இங்கு தொடங்குகிறது. உலக வரலாற்றில் இவ்வாறு பலமான அரசுகள் பலவீனமாக மனிதர்களால் வெல்லப்பட்டிருக்கின்றன. ரோமானிய பேரரசை பலம் குன்றிய ஜெர்மானியர்கள் வென்றதும், மெக்சிகர்களிடமிருந்து யாங்கிகள் கலிபோர்னியாவை கைப்பற்றியதும் இந்த கருத்தாக்கத்தை மேலும் உறுதி செய்பவை. இவ்வாறான நிலையில் இஸ்லாமிய அரசுகள் பிராந்தியத்தில் வேர்கொண்ட பிறகு சமூக உற்பத்தி மற்றும் இயற்கையோடு இயைந்த செயல்பாடுகள் மீது கவனம் கொள்ள தொடங்கின. குறிப்பாக அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மீது அதீத கவனமும், அவதானமும் அவர்களுக்கிருந்தது. அப்பாஸிட்கள் இதற்கான செயல்திட்டங்களை வைத்திருந்தார்கள். குறிப்பாக மருத்துவ துறையில் அவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. முதல் ஆயிரத்தாண்டு முழுவதும் மருத்துவ துறையின் வளர்ச்சி அறிவின் நீண்ட, குறுக்கு நெடுக்குமான பயணத்திற்கு உதாரணமாக இருந்தது. பாரசீகத்தின் பல நகரங்கள் இதற்கான வாயில்களாக இருந்தன. அரபுலகின் முதல் மருத்துவராக அறியப்பட்ட ஹாரித் இப்னு ஹலதா அக்கால பாரசீக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் அவரின் மருத்துவ ஆலோசனைகள் புகழ்பெற்றவை. அதிக உணவு உண்பதை தவிர்த்தல், கலக்காத ஒயினை அருந்துதல், தினசரி அதிக தண்ணீர் பருகுதல், மது அருந்தி விட்டு உடலுறவு கொள்ளாமை, சாப்பிட்டு விட்டு குளிப்பதை தவிர்த்தல் இவை அரசவையிலிருந்து குடிமக்களுக்கு பரப்பப்பட்டன. அந்த ஆலோசனைகள் அதிகாரபூர்வ முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து இப்னு ஸீனா மற்றும் அல் ராசி ஆகிய மருத்துவ தத்துவவியலாளர்கள் அரபுலகில் தோன்றினர். இவ்வாறாக மருத்துவ துறையின் விதை அன்றைய பாரசீகத்தில் விதைக்கப்பட்டு அரபுலகம் முழுவதும் வேர் கொண்டு மரமாக கிளைத்தது. இஸ்லாத்தின் தோற்றம் அதன் அரசியல், புவி பொருளாதார பார்வை குறித்து தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundamentalism) நூலில் ஆராய்ந்த தாரிக் அலி அதன் முடிபுகளை நீண்டகன்ற முறையில் ஆழ்ந்து வெளிப்படுத்தினார். அவரின் சிந்தனை முறைகள் மரபான மேற்கத்திய சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக இருந்தன. மரபாந்த முறையில் கீழைத்தேயவாதியாக இருப்பதால் மத்திய கிழக்கு சமூகம் குறித்த இந்த ஆய்வு முறை அவருக்கு விரிவான தளங்களை தொடுவதற்கான வாய்ப்பை வழங்கியது.மேலும் மேற்கத்திய நாகரீகம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் குறித்த அடிப்படையான ஆய்வுமுறைகளை நிகழ்த்தியிருக்கிறார். மேற்கத்திய நாகரீகம் குறித்த ஆய்வில் தாரிக் பிரிட்டனின் காலனியாதிக்க நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் இருந்து அதை தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் காந்தியிடம் கேட்டார்." மேற்கத்திய நாகரீகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" அது ஒரு சிறந்த கருத்தாக இருக்கலாம்" காந்தி எள்ளல் முறையில் மிகச்சாதாரணமாக பதிலளித்தார். காந்தியின் இந்த பதிலை தற்போதைய கட்டத்துக்கு நகர்த்தும் தாரிக் அலி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஒடுக்குமுறையை, கண்ணுக்கு புலப்படாத ரீதியில் நாகரீகத்தின் மேல் படும் தாக்குதலாகவே காண்கிறார். குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேற்கு ஈராக்கில் ஜனநாயகம் திரும்பும் என்ற மாயையை வெகுஜன மத்தியில் ஏற்படுத்துகிறது. இது உச்சபச்சமான மேல் திணிக்கப்படும் ஒடுக்குமுறை என்பதை அது உணராமல் இருக்கலாம். மேலும் நாகரீகம் அதன் எதிர்கொள்ளல் குறித்த யுக்திகளுக்கு அமெரிக்க ரெடிமேட் அறிவுஜீவிகளின் துணையை நாடுவதை தாரிக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சாமுவேல் காண்டிங்டனும், பிரான்சிஸ் புகாமாவும் இதன் வார்ப்புகள். அவர்களின் நாகரீகங்களின் மோதல் குறித்த கருத்தாக்கம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கை வடிவமைப்பே. சாமுவேல் காண்டிங்டன் ஜாண்சன் ஆட்சியில் வியட்நாம் போர் குறித்த வழிமுறைகளை அரசுக்கு வகுத்து கொடுத்தவர். சிவிலியன்கள் ஆதரவு இல்லாமல் அந்நிய நாட்டின் மீது போர்தொடுப்பது வெற்றியை தராது என்ற கருத்தை அதிகார வர்க்கத்தின் முன்வைத்தவர். இந்த கருத்தாக்கத்தை தான் அமெரிக்க ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது பயன்படுத்தியது.சர்வதேச ஊடக சர்வாதிகாரம் இதற்கு துணைபுரிந்தது. பல தருணங்களில் சாமுவேல் காண்டிங்டனுக்கு கோட்பாட்டு ரீதியாக எதிர்வினையாற்றியிருக்கிறார். நாகரீகங்கள் குறித்த இந்த ஆய்வுமுறை தாரிக் அலியை மேற்கு மற்றும் கிழக்குலகின் தேர்ந்த அறிவுஜீவியாக ரூபம் கொள்ள செய்தது. கடந்த இருபதாண்டுகளில் மேற்குலகில் புனைவு மற்றும் புனைவு அல்லாத எழுத்துக்களின் எல்லையை கடந்த தாரிக் என்னை பாதித்த சிந்தனையாளராக இன்னும் இருக்கிறார். இவருடனான என் விரிவான நேர்காணல் இரு வருடங்களுக்கு முன்பு தமிழ்பத்திரிகை ஒன்றில் வெளியானது. ஓர் அறிவு ஜீவி மனிதசமூகம், வாழ்க்கை இவற்றை குறித்த ஆழ்ந்த அவதானங்களை உடையவன் என்பதற்கு தாரிக் இந்த நூற்றாண்டின் உதாரண புருஷர்.
- உயிரோசை

Tuesday, May 5, 2009

கிழக்கு திரும்பும் மேற்கின் கதை- மாக்சிம் ரேடின்சன் ஓர் அறிமுகம்




பௌதீக உலகின் வட்டப்பாதையிலான சுழற்சியில் திசைகள் இருப்பை குறிக்கின்றன. அந்த இருப்பின் வடிவமானது நிலப்பகுதி ஒன்றின் வரைவெல்லையாக மாறுகிறது. மேற்கு-கிழக்கு என்ற பிரிவினை இந்த நிலப்பகுதியை சார்ந்தது. அதன் புறச்சூழல், காலநிலை, மக்கட்தொகுதி, குறிப்பிட்ட கலாசாரம் இவற்றை சார்ந்து துருவ இனங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நாகரீகங்களின் பிறப்பிடமாகவும், கலாசார பரிணாமங்களின் புகலிடமாகவும் வரலாற்றில் கிழக்கத்திய சமூகம் முன்னுக்கு வருகிறது. தனித்த விதி ஒன்றின் இயங்கிடமாக கிழக்கத்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த பார்வைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவே செமிட்டிக் நாகரீகம் மற்றும் அதன் கலாசாரம் குறித்த பார்வை மேற்கத்திய தத்துவ மற்றும் சமூகவியலாளர்களால் ஆய்வுபூர்வமாக பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு நிலையில் இதன் தொடர்ச்சியில் செமிட்டிக் மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் குறித்த வரலாற்று, சமூகவியல் ரீதியான அணுகுமுறை இவர்களால் முன்வைக்கப்பட்டது. மதங்கள் கற்பிக்கும் புனிதங்களின் எல்லையை தாண்டியும், அதனால் தொட்டுணர முடியாத பல்வேறு உணர்வோட்டங்களின் துடிப்பை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த வரிசையில் மாக்சின் ரேடின்சன் முக்கியமானவர். பிரான்சுக்கு புலம் பெயர்ந்த போலந்து வம்சாவளிசிந்தனையாளரான இவர் அறுபது மற்றும் எழுபதுகளில் பிரான்சின் அறிவுத்துறை வட்டாரங்களில் பேசப்பட்ட ஓர் அறிவு ஜீவி. வரலாறு மற்றும் சமூகவியல் துறையின் நுட்பணர். 1915 ஆம் ஆண்டு பிரெஞ்சு கட்டுப்பாட்டு பகுதியான மார்சிலி என்ற புராதன நகரத்தில் மாக்சிம் ரேடின்சன் பிறந்தார். இவரின் பெற்றோர் யூத பின்னணியை கொண்டவர்கள். இவரின் தந்தை மார்க்சிய பின்னணியை கொண்டவர். போலந்தின் நகரமொன்றில் பிரபல ஜவுளி வியபாரியாக இருந்தார். டிராஸ்கி மற்றும் லெனினுடன் தொடர்பு கொண்டவராகவும் அவர்களுடன் உரையாடல் நடத்தியவராகவும் இருந்தார். பின்னர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்த இவரின் தந்தை அங்கு வணிகத்தில் கவனம் செலுத்தினார். நாற்பதுகளில் ஹிட்லரின் யூத இன அழிப்பிற்கு இவருடைய குடும்பம் பலியானது. ஆஷ்விச் முகாமிற்கு கடத்தப்பட்ட இவருடனான குடும்பம் இவர் மட்டும் தப்பித்தலுடன் மரணத்தை தழுவியது. மாக்சிம் ரேடின்சனுக்கு இளமைகாலத்தில் தன் தந்தையை போன்றே அறிவுதுறை விஷயங்கள் மீதான நாட்டம் ஏற்பட்டது. மார்க்சிய கோட்பாடுகளை ஆர்வத்துடன் ஆழமாக படிக்க தொடங்கினார். ஒரு விதத்தில் அவரின் அப்போதைய நாட்டமும் அதுவாக தான் இருந்தது. 1937 ல் பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். பின்னர் ஸ்டாலினிய காலகட்டத்தில் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக அதிலிருந்து விலகி தனிமனிதராக செயல்பட்டார்.இந்த விலகலை பற்றி குறிப்பிட்ட ரேடின்சன் கட்சி அமைப்பு என்பது மத நிறுவனம் மாதிரி இருக்கிறது என்றார். 1958 ல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முழுமையாக விலகினார். இதன் பிற்பாடு பிரான்சு பல்கலைகழகத்தின் மொழியியல் பிரிவில் இணைந்து யத்திஷ், ஹிப்ரு, அரபி மொழிகளை படித்தார். பிற்காலத்தில் அங்கு ஓரியண்டல் துறையில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரான்சில் யூதர்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட சிரியாவிற்கு சென்றார். டமாஸ்கஸ் பிரெஞ்சு நிறுவனத்தில் இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு தான் ரேடின்சன் இஸ்லாம், அரபுலகம் அதன் வரலாற்று, சமூக ரீதியான பின்னோக்க பார்வையை விரிவுபடுத்திக் கொண்டார். பிரான்சு பல்கலைகழகத்தில் ஓரியண்டல் துறையில் வேலைக்கு சேர்ந்த காலத்தில் அவரின் புகழ்பெற்ற முதல் நூலான "முஹம்மது" வெளிவந்தது. இஸ்லாமிய மத ஸ்தாபகரான முஹம்மது நபியை பற்றிய விரிவான அறிமுகமும், இஸ்லாத்தின் தோற்றத்தை வரலாற்று, சமூக ரீதியில் தத்துவ மற்றும் சமூகவியலின் துணைகொண்டு இந்நூல் ஆராய்ந்தது. வெளிவந்த காலத்தில் மேற்கிலும், மத்திய கிழக்கு பகுதியிலும் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அரபு பிரதேசத்தின் சில பகுதிகளில் இஸ்லாமிய மதத்திற்கு விரோதமானது என்ற பெயரில் இந்நூல் தடை செய்யப்பட்டது.மாக்சிம் ரேடின்சனின் நபி பற்றிய இந்த நூல் மான்கெமரி வாட்டின் முஹம்மது நபி பற்றிய நூலை ஒட்டி இருந்தது. அதன் பார்வை விசாலமானதாக, ஆழ்ந்த வரலாற்று செறிவை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பிறகு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் ரேடின்சனின் அடுத்த நூலாக "Islam and Capitalism" வெளிவந்தது. அதுவரை ஐரோப்பிய சமூகம் இஸ்லாமிய மதத்தின் பொருளாதார பார்வை குறித்து கொண்டிருந்த கற்பிதங்களை தகர்த்தது. குறிப்பாக மார்க்ஸ் வெபரின் இஸ்லாமிய கலாசாரம் குறித்த கருத்துகளுக்கு விரிவான விளக்கம் அளித்தது. இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு, உள்முரண்பாடுகள், முதலாளித்துவம் ஐரோப்பாவில் வேர்கொண்ட முறை சோசலிசம், மார்க்சின் அந்நியமாதல், நிலப்பிரபுத்துவம் குறித்த பார்வை , ஆசிய உற்பத்தி முறை இவற்றை குறித்து விரிவாக இந்நூல் ஆராய்ந்தது. மார்க்சிய அடிப்படையில் நின்று கொண்டு இஸ்லாத்தை அணுகிய ரேடின்சன் முதலாளித்துவத்தை பொறுத்தவரை இஸ்லாம் எவ்விதமான எதிர்நிலைபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவிற்கு வந்தடைந்தார்.


மாக்சிம் ரேடின்சனை மற்ற பிரஞ்சு சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திய ஒன்று அவரின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாடாகும் தான் அடிப்ப்டையில் யூத மரபை சார்ந்தவராக இருந்த போதிலும், இஸ்ரேலுக்கு எதிராக நின்றார்.பாலஸ்தீன் உரிமை போராட்டம் குறித்து ரேடின்சன் 1967 ல் சார்த்தரின் ஆய்விதழான les tempes moderne ல் Israel a colonial fact என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அதே நேரத்தில் அவரின் போராட்ட ஆதரவு நிலைபாடும் கூட அடிப்படைவாத குழுக்களின் நிலைபாட்டிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அவரின் பாலஸ்தீன் நிலைபாடு இரு பார்வைகளை கொண்டிருந்தது.1. பாலஸ்தீனியர்களின் போராட்டம் அவர்களின் யூத வெறுப்பின் அடையாளமே. 2. பாலஸ்தீனியர்கள் தங்கள் போராட்டத்தை மதத்திற்கு அப்பாற்பட்ட வடிவத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும். இந்த நிலைபாட்டின் மூலம் ரேடின்சன் எட்வர்ட் செய்த் கருத்துடன் ஓரளவு உடன்படுகிறார். இன்னொரு வகையில் அவரின் சியோனிச எதிர்ப்பு கருத்தாக்கம் இரு பார்வைகளை கொண்டிருந்தது. 1. உலகம் முழுவதும் உள்ள யூதர்களையும், யூத சந்ததியினரையும் அவர்களின் அடையாளங்களை துறந்து ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவருதல் என்பது ஆபத்தானது. 2.பாலஸ்தீன் பகுதிகளை யூத மயப்படுத்தி பாலஸ்தீனியர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவர்களை அங்கிருந்து விரட்டுதல். மேற்கண்ட விஷயங்களுக்காக ரேடின்சன் இஸ்ரேலிய எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டிருந்தார். மேலும் பாலஸ்தீனியர்கள் பிரான்சில் பிரஞ்சு மக்களை போன்றும், இங்கிலாந்தில் ஆங்கில மக்களை போன்றும் மீறப்படாத சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றார். அவர்களின் உரிமை போராட்டம் பிளவுபடாத மனநிலையிலிருந்து வெளிப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குற்றங்களை சமரசமற்ற நோக்கோடு எதிர்த்தார். மேலும் அரபு சமூகத்தோடு, அரபு பார்வையாளர்களோடு அவரின் கருத்து தோற்றப்பாடு விமர்சன பூர்வமாக இருந்தது. பாலஸ்தீன் முரண்பாடு பற்றிய அவரின் நிலைபாடு அறிவார்த்தமாக இருந்தது. இஸ்ரேலிய யூதர்களும் பாலஸ்தீனிய அரபுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முடியும். மேலும் இஸ்ரேல் என்பது ரேடின்சனை பொறுத்தவரை வெறுமனே காலனிய குடியேற்ற அமைப்பு அல்ல. மாறாக அது ஒரு தேசிய உண்மை கூட. யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சுயமரியாதை மீது மிகுந்த கூட்டுரிமைகளை கொண்டுள்ளார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவை மற்றொன்றை ஆதிக்கம் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத நிலையில் அரசியல் மட்டத்தில் அந்த குழுக்கள் வேறுபட்ட சமூகங்களாக இருக்கும் நிலையில், அவர்களின் நலன்களும், உள்ளாசைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான அறிவுஜீவி நிலைபாட்டை மேற்கொண்ட ரேடின்சன் அவ்வப்போது யூத அடிப்படைவாதிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். அவர்கள் இவரை யூத விரோதியாக பார்த்தனர். 1967 அரபு-இஸ்ரேல் போரை கடுமையாக எதிர்த்த ரேடின்சன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வரலாற்று ரீதியாக தொகுத்து Israel and the Arabs என்ற நூலை எழுதினார். இஸ்ரேல் விவகாரத்தின் நதிமூலத்திலிருந்து அதன் பரிணாம கட்டம் வரையான விமர்சன பார்வையும், ஆழ்ந்து அகன்ற அறிவு தேடலும் இந்நூல் முழுவதும் நிரம்பி இருந்தது. அதன் பிறகு Marxism and the Muslim world வெளிவந்தது. இஸ்லாமிய நாடுகளுக்கும் , சோவியத் யூனியனுக்குமான உறவு முறை, முதலாளித்துவத்தை இஸ்லாம் அணுகும் முறை, இஸ்லாமிய நாடுகளின் நிலவியல் அமைப்பு, சோசலிச அமைப்பு முறை ஆகியவற்றை குறித்த பன்முக விமர்சன நோக்காக இது இருந்தது. இதன் நீட்சியில் ரேடின்சன் இஸ்லாம் குறித்த சமூக, பொருளாதார கோட்பாட்டு தரவுகளை முன்வைத்தார். அது மேற்கில் அதிகம் கவனிக்கப்பட்டது.

மாக்சிம் ரேடின்சனை பொறுத்தவரை ஐரோப்பா புரிந்து கொள்ளாத உலகம் பற்றிய இரகசிய கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார். சாத்வீகமான நெகிழ்வு முறையோடு அதன் நகரல் இருந்தது. ஐரோப்பியனாக இருந்து கொண்டு ஓரியண்டல் சிந்தனை தளத்தை நோக்கி அவரின் இளமை கால செயல்பாடுகள் திரும்பின. குறிப்பாக அரபுலகம், இஸ்லாம் பற்றிய அவரின் தேடலானது அவரை நட்சத்திர தகுதி பெற்ற அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்த்தியது.பின் நவீனத்துவ சிந்தனையாளர் என்ற கட்டத்துக்கு வந்த ழாக் தெரிதாவின் நண்பராக ரேடின்சன் இருந்தார். அவருடன் பல உரையாடல்கள் நடத்தி இருக்கிறார். பிரபல சோவியத் வரலாற்றாசிரியரான ஐசக் டொயிஸ்டர் இவர்கள் இருவரையும் "யூதமற்ற யூதர்கள்" என்றார். யூதர்களாக இருந்து கொண்டு யூத தேசியத்துவத்தின் அபாயத்தை எதிர்த்தவர்கள் என்ற அர்த்தம் படியாக அந்த வெளிப்பாடு இருந்தது.மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய வரலாற்றில் மார்க்சிய அடிப்படைகளில் இருந்து கொண்டு இஸ்லாம் மற்றும் பிற மதங்களை அணுகிய அவரின் பார்வை தத்துவ வரலாற்றில் புதிய தரிசனமாக இருந்தது. மேலும் மாக்சிம் ரேடின்சனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை இருந்தது. குறிப்பாக செமிட்டிக் மொழிகள் அனைத்தும் அவரின் மொழிக்கிடங்கில் நிறைந்து இருந்தன. இஸ்லாம் மற்றும் அரபுலகம் குறித்து அறிவதற்கு அவருக்கு இது உதவிகரமாக இருந்தது. தத்துவ வாதிகள் தங்களுக்கான கோட்பாட்டை தானே வடிவமைக்கிறார்கள் என்பதற்கு மாக்சிம் ரேடின்சன் உதாரணமாக இருந்தார். 2004 ஜனவரியில் அவரின் மரணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அதற்குரிய சிந்தனை வெறுமையை விட்டு சென்றிருக்கிறது. மேற்கத்திய யூதராக இருந்து கொண்டு மத்திய கிழக்கை ஆராய்ந்த மாக்சிம் ரேடின்சன் அந்த வரலாற்றின் எல்லையை அதிக தூரம் கடந்த தவிர்க்க முடியாத நிழலாக இருக்கிறார்.


- உயிரோசை

Wednesday, May 14, 2008

இஸ்லாமிய பெண் குறித்த கருத்தரங்கு

பாலியல் பேதமும் இஸ்லாமும் (ஒரு விவாத கருத்தரங்கு)

மொழிபெயர்ப்பும் குறிப்பும்:எச்.பீர்முஹம்மது

(புதிய காற்று மே 2007)

இக்கருத்தரங்கு அமெரிக்காவின் பிரண்ட்பேஜ் பத்திரிகையால்
நடத்தப்பட்டது. இஸ்லாத்தில் பெண் நிலை குறித்து நான்கு
அறிவுஜீவிகள்பங்குபெற்ற இவ்விவாதத்தில் இஸ்லாமிய பெண்ணின் நடப்பு இருப்பு குறித்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
லெளகீக சமூகம் அடையும் மாற்றத்தில் இஸ்லாமில் பெண் எந்த
நிலைக்கு உட்படுத்தப்படுகிறாள் என்பதே இவ்விவாத புள்ளி. இதில் பங்குபெற்ற நான்கு பேரும் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள்.

முஹம்மது எல் மல்லா :- விஸ்டாவிலுள்ள அல் இத்திஹாத் மஸ்ஜிதின் வாரிய உறுப்பினர் மற்றும் முஸ்லிம்- அமெரிக்க சங்கத்தின் உறுப்பினர் சான்டிகோ இஸ்லாமிய மையத்தின் முன்னாள் உறுப்பினர். இஸ்லாமிய வரலாறு குறித்து பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார்.

ஜுலியா ரோச்:- அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் இலக்கிய துறை
மாணவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவியவர். இஸ்லாமிய பெண்ணியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அலி சினா :- அமெரிக்க நம்பிக்கை சுதந்திர அமைப்பின் ஸ்தாபகர். இவரின் எழுத்துக்கள் அமெரிக்காவின் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகின்றன.

ராபர்ட் ஸ்பென்சர்:- ஜிஹாத் வாச் என்ற அமைப்பின் இயக்குநர். "Islam unveiled" மற்றும் Onward Muslim Soldiers போன்ற சர்ச்சைக்குரிய நூல்களின் ஆசிரியர். அமெரிக்க அரசியல்
சிந்தனையாளர்.

ஜெமி கிளாசோவ் (பிரண்ட் பேஜ்):- மல்லா, ரோச், அலி சினா,
ராபர்ட் ஸ்பென்சர் உங்கள் அனைவரையும் இந்த விவாத கருத்தரங்கில் வரவேற்கிறேன். மல்லா, உங்களிலிருந்து தொடங்க
விரும்புகிறேன். இஸ்லாம் பெண்ணுக்கு சுதந்திரம் அளித்திருக்கிறதா? அல்லது இஸ்லாமும், பெண்ணுரிமையும் வேறானதா?

மல்லா :- என்னை அழைத்ததற்காக நன்றி. நான் இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்காக 1425 வருட முந்தைய வரலாற்றிற்கு போகிறேன். ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார். "ஏன்
இஸ்லாமிய மூலங்களில் (குர்ஆன், ஹதீத்) ஆண்கள் அளவுக்கு பெண் அதிகமாக குறிக்கப்படவில்லை. அதற்கு நபி (ஸல்) என்ன பதில் சொன்னார் தெரியுமா? நேராக பள்ளிவாசலுக்கு சென்று தன் தோழர்கள் அனைவரையும் அழைத்து குர் ஆனின் 33:35 வசனத்தை ஓதி காட்டினார்கள்.

இந்த வசனத்தில் எங்கெல்லாம் 'அவன்' என்ற பிரதிபெயர்ச்சொல் குறிக்கப்பட்டிருக்கிறதோ அவ்விடங்களில் 'அவள்' என்பதால்
பதிலீடு செய்யப்பட்டிருக்கும்.(சில விதிவிலக்குகளை தவிர) இது குர் ஆனின் மற்ற எல்லா வசனங்கள் மற்றும் ஹதீதுகளில்
காணக்கிடைக்கிறது. இஸ்லாமை தழுவிய முதல் நபரும் பெண்
தான். போரில் முதன் முதலாக உயிர் நீத்ததும் பெண் தான்.
குர் ஆனின் நீண்ட அத்தியாயமும் "பெண்" தான். மற்றொரு
அத்தியாயம் "மரியம்'. நாம் இஸ்லாமிய சமூக
நடைமுறையையும், இஸ்லாம் எதை சொல்கிறது என்பதையும்
பிரித்து பார்க்க வேண்டும். சில படிக்காதவர்கள் செய்யும் தவறுகளுக்காக இஸ்லாத்தை குறைகாண முடியாது. அவர்களுக்கு இஸ்லாமிய அறிவு குறைவாக இருக்கிறது. மேற்கண்டவற்றிலிருந்து பெண்ணை பற்றிய தவறான புரிதலுக்கான காரணங்களை
இரண்டாக நாம் வகைப்படுத்தலாம். 1. இஸ்லாமிய அறிவு
குறைபாடு. 2. இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் மோசமான
உள்நோக்கம்.

ஜெமி கிளாசோவ் (பிரண்ட் பேஜ்) :- ஜூலியா ரோச்?

ஜூலியா ரோச்:- நான் முதலில் இஸ்லாமிய உலகில் நிலவில் இருக்கும் சோகமான உணமையை குறிப்பிடுகிறேன். இஸ்லாமிய உலகில் எங்குமே மக்கள் இஸ்லாமிய அடிப்படைகளின் படி தங்களை அமைத்து கொள்ளவில்லை. நீங்கள் கிறிஸ்தவத்தையோ அல்லது பௌத்த மதத்தையோ பின்பற்றுபவர்களை எடுத்து
கொண்டாலும் இதே நிலை தான். அவர்களின் நடவடிக்கைகளை
நாம் ஆராயும் போது இதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
கோட்பாட்டிற்கும் நடவடிக்கைக்கும் நிறையவே வித்தியாசம்
இருக்கிறது. இதிலிருந்தே இஸ்லாமும், பெண்ணுரிமையும் பரஸ்பரம் வேறானதல்ல என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதில் முதலான மிக முக்கியமான கண்ணோட்டம் என்பது ஆன்மீக மற்றும் மத சமத்துவத்தை பற்றியது. பெண்ணின் ஆன்மா ஆண்களுக்கு நிகரானது. இது பல குர் ஆன் மற்றும் ஹதீதுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம்பிக்கை கொண்ட ஆணும், நம்பிக்கை கொண்ட பெண்ணும் மதக்கடமைகளில் சமபொறுப்புடையவர்கள்.
கிறிஸ்தவ மரபின் படி ஒரு பெண் முதலில் கணவனுக்கு அடிபணிய வேண்டும். அதன் பிறகே இறைவனுக்கு. ஆனால் இஸ்லாம் ஆண், பெண் ஆகிய இருவரும் இறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்று சொல்லுகிறது. பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஆண்கள் துணை இல்லாமல் தொழ முடியும். இது பெண்களுக்கு மற்றவர்களை விட அதிக பலனை இறைவன்
மத்தியில் ஏற்படுத்துகிறது. ஆண்- பெண் ஆகிய இருவரின் பாவ அளவுகோல்கள் சமம். பெண்ணின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட்ட நிலையில் இஸ்லாமுக்கு முந்தைய அரேபியாவில் அது இல்லை.(முந்தைய அரேபிய சமூகத்தில் பெண் குழந்தைகள் பிறந்ததும்
கொல்லப்பட்டனர்.) இஸ்லாத்தில் பெண்கள் போரில் பங்கு பெறமுடியும். இதை விட வேறு என்ன தீவிரமான உரிமை வேண்டும்?ஏராளமான முஸ்லிம் பெண்கள் இஸ்லாமின் ஆரம்ப
காலங்களில் போரில் பங்குபெற்று மரணமடைந்திருக்கிறார்கள். இந்த உரிமை சமீபத்தில் தான் அமெரிக்க பெண்களுக்கு கிடைத்தது. பல பெண்கள் நபியுடன் சேர்ந்து போர்புரிந்திருக்கிறார்கள். அதில் படுகாயமடைந்த பெண்களும் உண்டு. முஸ்லிம் பெண்களுக்கு ஆண்களை போலவே சம வாக்குரிமை உண்டு. அவர்களின்
சொத்துகளை ஆண் அனுமதியில்லாமல் பராதீனம் செய்ய அவளுக்கு உரிமை உண்டு. வீட்டுக்கு வெளியே வேலை
பார்ப்பதற்கும், செய்யும் வேலைக்கு ஆண் மாதிரியே சம ஊதியம் பெறவும், பெற்ற ஊதியத்தை வைத்திருக்க, அதை செலவழிக்க,
விருப்பப்பட்டவரை திருமணம் செய்ய, விரும்பாவிட்டால் ரத்து செய்ய அவளுக்கு உரிமை உண்டு.

நான் இதற்கு மேல் சொல்வதற்கு அதிகமாக இருந்தாலும் சொல்ல விரும்பவில்லை. மிக துரதிஷ்டமான விஷயம் இஸ்லாமிய பெண்ணுரிமை பற்றி பேசும் பலர் புர்காவுக்கு மேல் எதையும்
சிந்திப்பதில்லை. ஏன் நாங்கள் அதை அணிகிறோம் என்றால்
நாங்கள் முஸ்லிம்கள். எங்கள் இறைவனுக்கு நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம். நாங்கள் பாலியல் பேதம் பற்றிய கவலையை மீறி எங்கள் உரிமையின் மீது சுயமாக நிற்கிறோம். இன்னொரு விஷயம் முஸ்லிம் பெண்கள் அவர்களின் மார்க்கத்தை பற்றியும் லெளகீக
விஷயங்களை பற்றியும் அதிகமாக படிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு இணையாக நிற்க முடியும்.

ஜெமி கிளாசோவ் (பிரண்ட்பேஜ்):- ஸ்பென்சர் நீங்கள் இதற்கு
பதிலளிக்க விரும்புகிறீர்களா? இது நமது கேள்விகளான சமத்துவம், விடுதலை போன்றவற்றின் விளக்கங்களாக இருக்கிறது. பெண்
விடுதலையை பற்றி நாம் என்ன நினைக்கிறோம். அநேக
முஸ்லிம்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?

ராபர்ட் ஸ்பென்சர்:- நன்றி ஜெமி. இன்றைய உலகில் குறிப்பான
பிரச்சனையே பயங்கரவாதம். சில முஸ்லிம்கள் தற்கொலைப்படை தாக்குதல்களையும், 9/11 நிகழ்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை தான். மல்லா குறிப்பிட்ட குர் ஆனின் நீண்ட அத்தியாயமான பெண் மற்றும் மரியம் போன்றவை பெண்ணுக்கான அங்கீகாரமாக இல்லை. இது சரியாக இருக்கும் நிலையில் மல்லா சொல்வது மாதிரி " நாம் இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையும்
சில இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பிரித்து
பார்க்க வேண்டும்." அவர் இஸ்லாம் பெண்ணை பற்றி என்ன
சொல்கிறது என்பதை அதிகம் வெளிக்கொணர்வார் என
நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக நம் முன் நிற்கும்
கேள்வியே "நடப்பு சமூகத்தில் இஸ்லாம் பெண் விடுதலைக்கான கூறுகளை தன்னகத்தே வைத்திருக்கிறதா? என்பதாகும். இந்த கேள்வியை நாம் முழுமையாக எதிர்கொள்ளும் போது அதற்கு தடையான அம்சங்களே குர் ஆனிய வசனங்களில் தெளிவாக
வெளிப்படுகின்றன. குர் ஆனின் 4:34 (மனைவியை அடிப்பது சம்பந்தமானது) பெண் சாட்சியம் (2:282) பாத்தியதை (4:11) ஒரு ஆண் இரு பெண்களுக்கு சமமானவன். இவை எல்லாம் இஸ்லாமிய போதனைகள். கலாசார நடைமுறை அல்ல. நிறைய ஹதீஸ்கள் பெண்ணை பற்றிய பலகீனமான விவரணையாகவே இருக்கின்றன.
முஹம்மது சொன்னார் " நரகத்தின் மக்கள் தொகையில் அதிகமானோர் பெண்கள். அவர்கள் அறிவிலும் மார்க்க காரியங்களிலும் குறைபாடுடையவர்களாக இருக்கிறார்கள்." (புகாரி 1:6 304)
அத்தியாயம் 4:34 சமீபகாலங்களில் ஒரு மதிப்பு மிக்க தத்துவமாக மதவாதிகளால் துருக்கி, ஸ்பெயின் மற்றும் பிற இடங்களில் தொற்று காரணி போன்று பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானின் மருத்துவ அறிவியல் நிறுவன கணிப்பின் படி பாகிஸ்தான் இல்லத்தரசிகள் 10 ல் 9 பேர் தங்கள் கணவன்மார்களால் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதற்கான காரணம் என்பது அவர்கள் சமைக்கும் உணவு கணவன்மார்களுக்கு அதிருப்தி தருவதே. இதற்கான நியாயப்பாடு குர் ஆனில் இருக்கும் நிலையில் மல்லாவின் "இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதற்கான காரணம் அவர்களுக்கு போதிய இஸ்லாமிய அறிவு இல்லாததே" என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரோச் இதைப்பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. மாறாக அவரின் ஒப்பீடு கிறிஸ்தவ பைபிள் பற்றியதாக இருந்தது. குர் ஆனிய வசனம் 4:34 யை நாம் பைபிள் வாசகத்தோடு ஒப்பிட முடியாது. அப்படி இருந்தால் கூட இது விவாத விஷயத்திற்கு அப்பாற்பட்டது. நம் முன் நிற்கும் கேள்வியே இஸ்லாமிய பெண்ணுரிமை சம்பந்தப்பட்டது. கிறிஸ்தவம் பற்றி அல்ல. யார் சமத்துவம் மற்றும் இஸ்லாமிய பெண்ணுரிமை பற்றிய பிரக்ஞை உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இந்த அவலங்களை தணிப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். மல்லாவும்
ரோச்சும் இதை சவாலாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

ஜெமி கிளாசோவ்:- (பிரண்ட்பேஜ்) அலி சினா?

அலி சினா:- ஜெமி, இந்த விவாத கருத்தரங்கிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி.

மல்லா குர் ஆனின் 33:35 வசனம் ஆண், பெண் ஆகிய இருவரின் உரிமை மற்றும் வெகுமானங்களை உயர்வாக மதிப்பிடுகிறது
என்றார். அதன் மூலம் மல்லா ஆண்-பெண் சமத்துவம் என்னை
விட மேலானதாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார். நான் உங்களிடத்தில் இப்படி சொல்கிறேன். "நீங்கள் மற்றும் உங்கள் நாய் இருவரும் அந்த புல்வெளி மீது நடக்க வேண்டாம்". இதன் பிறகு
நீங்கள் நடக்க மாட்டீர்கள். இதன் மூலம் நீங்களும் உங்கள் நாயும் சமமாகி விடுமா? நான் மேற்கண்ட வசனத்தின் மூலம் எந்த சமத்துவத்தையும் பார்க்கவில்லை.

குர் ஆன் சொல்கிறது "ஆண் அந்தஸ்தில் உயர்ந்தவன்" (2:228).
சாட்சியத்தில் ஆணுக்கு பாதி (2:282) பாத்தியதையில் பாதி (4:11-12). ஆண் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு பெண்களை திருமணம் செய்ய முடியும்.(4:3) போரில் பிணைக்கைதியாக
பிடிக்கப்பட்ட பெண்ணோடு அவளின் எஜமானன் உறவு
கொள்ள முடியும்.(33:50).பெண் அவள் கணவனுக்கு
அடிபணியாவிட்டால் அவள் நரகத்தில் நுழைவாள் (66:10). பெண் அவளின் கணவனுக்கான விளைநிலம் (2:223). ஆண் பெண்ணை
நிர்வகிப்பவன். இருவருக்குமிடையே முரண்பாடு வந்தால் முதலில் அவன் அறிவுரை கூறட்டும். அதன் பிறகு படுக்கையிலிருந்து
பிரிக்கட்டும். அதன் பிறகு அடிக்கலாம். (4:34) இது தான்
இஸ்லாமிய பெண்ணின் நிலை.

இன்னொரு ஆதாரமாக மல்லா சொன்ன பெண்ணின் உயர்ந்த
நிலை என்பது குர் ஆனின் "பெண்" அத்தியாயம். நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். குர் ஆனின் பெரிய அத்தியாயம் "பசு மாடு" (286 வசனங்கள்). பெண் அத்தியாயம் வெறும் 176 வசனங்களை மட்டுமே கொண்டது. மல்லாவை பொறுத்தவரை பசுமாடு என்பது பெண்ணை விட உயர்ந்தது. அடுத்த பெரிய
அத்தியாயம் கால்நடை. இது 165 வசனங்களை கொண்டது. ஆக
பெண் வெறும் 11 புள்ளிகள் மட்டுமே கால்நடையை விட உயர்ந்தவர். குர் ஆனில் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் பெயரில் கூட அத்தியாயம் இருக்கிறது. இதற்கு பெண் இணையாக வேண்டுமா?

அடுத்த ஆதாரமாக மல்லா சொன்னது இஸ்லாத்தை முதன்முதலாக ஏற்றுக்கொண்டதும் பெண் தான். இதை நாம் இஸ்லாம் பெண்ணுக்கு சம உரிமை அளித்திருக்கிறது என்பதாக எடுத்து கொள்ள முடியுமா?

மேலும் அடுத்த ஆதாரமாக இவர்கள் கொள்வது இஸ்லாத்தில் முதல் தியாகி ஒரு பெண். அதாவது சுமையா. இது ரோச் சொன்ன ஒரு சாசுவாதமான ஆதாரமாகும். இதன் மூலமும் நாம் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமையளித்திருக்கிறது என்பதாக கருத முடியாது.
அந்த சம்பவமே ஒரு ஜோடனை. இப்னு சாத் மட்டுமே சுமையாவின்
தியாகத்தைப்பற்றி வெளிக்கொணர்ந்த முதல் வரலாற்றாசிரியர். சுமையா அபூஜஹிலின் கரங்களில் பட்ட வேதனைகளை இப்னு சாத் விவரிக்கிறார். உண்மையிலேயே இது நிகழ்ந்திருந்தால் இது எல்லா வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதிலிருந்தே இவர்கள் எவ்வளவு மிகைப்படுத்தலை ஆரம்பம் முதலே செய்து வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

அதே வரலாற்றாசிரியர் தான் பிலாலை பற்றி குறிப்பிடுகிறார். கருப்பின அடிமையான பிலால் எஜமானர்களால் மிகுந்த
சித்திரவதைக்குள்ளானார். பின்னர் முஹம்மது மக்காவை
கைப்பற்றிய பிறகு சிரியாவிலிருந்து திரும்பி வந்து கஃபாவின்
மாடியில் ஏறி நின்று பாங்கு சொன்னார். பின்னர் இயற்கையாக மரணமடைந்தார். இப்னு சாத் மேலும் விவரிக்கிறார் " சுமையா , அவர் கணவர் யாசிர் மற்றும் அவர்களின் மகன் அம்மார்
ஆகியோர் கடும் சித்திரவதைக்குள்ளானார்கள். பின்னர் யாசிரின் மரணத்திற்கு பிறகு சுமையா கிரேக்க அடிமையான அஸ்ரக்கை
திருமணம் செய்தார். அதன் வழி அவர்களுக்கு சல்மான் என்ற மகன் பிறந்தான். இதன் மூலம் சுமையா சித்திரவதை காரணமாக இறந்தார் என்று எப்படி நாம் புரிந்து கொள்ள முடியும். அஸ்ரக்
தாயிபை சேர்ந்தவர். தாயிப் நகரம் முஹம்மதுவால்
முற்றுகையிடப்பட்டு அது கைப்பற்றப்பட்டது. பின்னர் அதில்
சிறைபிடிக்கப்பட்டவர்கள் முஹம்மதுவின் முகாமிற்கு
கொண்டுவரப்பட்டார்கள். இதன் மூலம் சுமையா அடிமையான அஸ்ரக்கை திருமணம் செய்து கொண்டு தாயிபில் வாழ்ந்தார் என்ற இயல்பான முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.
மேலும் ரோச் சொன்னார் " இஸ்லாம் எல்லா பகுதிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. முஸ்லிம்களில் பெரும்பான்மையினோர் இறைவன் மற்றும் தூதரின் சொற்களை
பின்பற்றவில்லை. அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். குற்றம் செய்த முஸ்லிம்கள் எல்லோரும் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள் அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் அல்லது தலைமுடியை வெளிக்காட்டிய முஸ்லிம் பெண்கள் எல்லோருக்கும் கசையடி கொடுக்கப்படுகிறது என்பதாக நினைத்துக் கொள்வோம். இவை ஒரு இஸ்லாமிய
நாட்டில் நிகழ்வதாக இருந்தால் அது உண்மையில் காட்டுமிராண்டித்தனமாகும். ஆப்கானில் தலிபான் ஆட்சியின்போது பெண்கள் பட்ட அவதிகளை கணக்கில் எடுத்துக்கொள்வோம். தலிபான் ஆட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவோ அல்லது வேலைக்கு போகவே அனுமதிக்கப்படவில்லை. பெண் நோயாளிகளை பார்ப்பதற்கு கூட ஆண் டாக்டர்களுக்கு அனுமதி இல்லை. ஆக ஆப்கானில் பெண் நோய்வாடப்பட்டால் அவளை கவனிக்க
யாருமே இல்லை. அவள் கடைசியில் இறக்க வேண்டியது தான். எவ்வளவு தூரம் ஒரு நாடு இஸ்லாமியமாகிறதோ அவ்வளவு அது
நரகை நோக்கி செல்கிறது.

ரோச் அவருக்குள்ளாகவே நினைத்துக்கொள்கிறார். பெண் இறந்த பின்பு சமமாக பாவிக்கப்படுவாள். அவர் சொல்கிறார் " பெண்ணின் ஆன்மா ஆண்களை போன்றே சமமானது." வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பெண் அடிமையாக வாழ்ந்தாலோ அல்லது
தவறாக நடத்தப்பட்டாலோ அவள் நிம்மதியாக வாழ முடியும்
காரணம் மரணத்திற்கு பின் அவள் சமமாக பாவிக்கப்படுவாள். ஆனால் இந்த உறுதிப்பாடும் கூட பொய்யானது என்று நாம் வாதிட முடியும். பெண்ணின் மரணத்திற்கு பிறகு கூட சமவாழ்வு இல்லை.

ஆண் மரணத்திற்கு பிறகு கூர்லீன் எனும் வானுலக தேவதைகளுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறான். பெண் எதை பெறுவாள்? அவள் பெறுவது அவளின் வயதான கணவரை தான். அவள் கணவனுக்கு அழகான பெண்கள் இருக்க இந்த மனைவி எதற்கு? அவளுக்கு திளைக்க இளம் குதிரைகள் அளிக்கப்படுமா? இல்லை. அவள் அங்கும் லெளகீக உலகின் பணிவை
தொடரவேண்டியது தான். உண்மை என்னவென்றால் மரணத்திற்கும் பின்பும் அவளுக்கு சம உரிமை இல்லை.
முஹம்மது நபியை பொறுத்தவரை பெண்களில் சிலரே சொர்க்கம் செல்வர். பெரும்பாலானோருக்கு நரகம் தான். அவர் சொல்வதை கவனியுங்கள். " நரகை ஒரு தடவை நான் பார்த்தபோது அது முன் எப்போதும் இல்லாத வகையில் இருந்தது. அதில் உள்ளவர்களில் பெரும்பான்மையினோர் பெண்களாக இருந்தார்கள். மக்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே "அவர்கள் அல்லாஹ் மீது நம்பிக்கையற்றவர்களாகவா இருந்தார்கள்?. அதற்கு அவர் "அவர்கள் கணவனுக்கு விசுவாசமற்றவர்களாக, அவர்களின் கணவர்கள்அவர்களுக்கு எதை செய்தாலும் நன்றி கெட்டவர்களாக
இருந்தார்கள். நீங்கள் அவளுக்கு ஒரு நல்ல காரியம் செய்தால் கூட
அவள் உங்களிலிருந்து அதை இன்னலாக தான் எடுத்துக்கொள்வாள்.
மேலும் அவள் சொல்வாள் " நான் உங்களிடமிருந்து ஒரு நல்ல
காரியத்தையும் பார்க்கவில்லை." (புகாரி 7:62:125)

ரோச் சொன்னாள் " முஸ்லிம் பெண்கள் ஆண் துணையில்லாமல் கூட்டாக தொழுது கொள்ள முடியும். இது சம உரிமைக்கான
குறியீடா? மற்ற நம்பிக்கை சார்ந்தவர்களுக்கு இந்த உரிமை இல்லையா? இறைவன் அவர்களின் தொழுகையை
ஏற்றுக்கொள்வதில்லையா?

ரோச் சொன்னார். இஸ்லாமுக்கு முந்தைய அரேபியாவில் பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கொல்லப்பட்டார்கள். இஸ்லாம் தான் அதை தடுத்தது. முஸ்லிம்கள் இதை அரேபியாவின் பொது
நடைமுறையாக நம்புகிறார்கள். அவ்வாறே அது நிகழ்ந்த பட்சத்தில் அரபு பெண்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்வது பற்றி குறிப்பிட்டார். அரபுலக ஆண்
நான்கு மனைவிகளை கொண்டிருந்த பட்சத்தில் எப்படி பெண் குழந்தை படுகொலை பரவலாக நிகழ்ந்திருக்கும்.
ஒரு வேளை சில அறியாமையிலிருந்த மக்கள் குழுக்கள் அவ்வாறு செய்திருக்கலாம். அதே நேரத்தில் அதுவே ஒரு பொது நடைமுறையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பெண் சிசுக்கொலை என்பது மனித இனத்திற்கு விரோதமான நடைமுறை. எல்லாவற்றிற்கும் மேலாக அரபிகள் மனிதர்கள். அவர்களுக்கு இயல்பான தந்தை வேட்கை இருக்கும். மிருகங்களுக்கு கூட இந்த வேட்கை உண்டு.
விதிவிலக்குகள் சில சமயங்களில் நிகழும். இன்றைய காலத்தில் கூட சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பெண் சிசுக்கொலை
வழக்கிலிருக்கிறது. இது ஒரு மிக மோசமான நடைமுறை மற்றும் தண்டிக்கப்படவேண்டியது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது மாதிரியான சம்பவங்கள் மிகக்குறைவே. இஸ்லாமுக்கு முந்தைய அரேபியா இதற்கு மாறாக இருந்திருக்க முடியாது. முஹம்மது சொன்னது என்னவென்றால் ஒரு பொது நடைமுறையான விஷயமும், எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒரு
உதாரணத்தை கொடுக்கிறேன். நாம் தினசரிகளில் மனைவியை கணவன்மார்கள் கொல்வது பற்றி படிக்கிறோம். ஆனால் இது
அரிதான சம்பவம். ஒரு வேளை எனக்கு நானே தூதர் என்று
அறிவித்து கொள்கிறேன் என்று வைத்து கொள்வோம். நான்
சொல்கிறேன். உங்கள் மனைவிகளை கொல்லாதீர்கள். இது ஒரு
பெரிய விஷயமல்ல. ஏனென்றால் எல்லோருக்குமே மனைவியை
கொல்வது குற்றச்செயல் என்பது தெரியும். இப்பொழுதிலிருந்து
ஆயிரம் வருடங்களுக்கு பிந்தைய காலத்தில் என்னை
பின்தொடர்பவர்கள் சொல்வார்கள். "அலி சினாவுக்கு முந்தைய
காலத்தில் மனைவியை கொல்வது நடைமுறையிலிருந்தது.சினா அதை
தடைசெய்தார்." இது எவ்வளவு கேலித்தனமான விஷயம்.
இது மாதிரியே ரோச் சொன்ன பெண் சிசுக்கொலை இருக்கிறது.

ரோச் சொன்ன அடுத்த உரிமை என்பது பெண்கள் போரிடும்
உரிமை.அவர் சொன்னார் "பெண்களுக்கு இதை விட தீவிர உரிமை வேறு என்னவாக இருக்க முடியும்?" இது ஒரு சரியான விஷயமா? ஏற்கனவே உலகம் பல போர்களை சந்தித்திருக்கிறது. அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளில் மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வை பின்தொடரவும் வழி இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு போரில் பங்கு கொள்ளவும், அதில் மடியவும் மட்டுமே உரிமையா? மிக தீவிரமான விஷயம் என்பது முஸ்லிம் பெண்கள் முகத்திரைக்கு எதிராக எவ்வாறு போரிட முடியும் என்பது தான். அது இன்னொரு கேள்வி. மற்ற மத பெண்களுக்கு இந்த
உரிமை இல்லை என்று சொல்ல முடியுமா? எந்த சமூகத்தில் எந்த பெண்ணுக்கு இந்த உரிமை கிடைக்கவில்லை.?
ரோச் அவருடைய தூதரின் வரலாற்றை ஒருமுறை படித்து பார்க்க வேண்டுகிறேன். பண்டைய உருவ வழிபாட்டாளர்கள் கூட தங்கள் மனைவியரை போர்களத்தில் பங்குகொள்ள வைத்தனர். உஹது
போர்களத்தில் அபூசுபியானுடைய மனைவி ஜிந்தா சிங்கம் மாதிரியாக
அலைந்து திரிந்து போர்வீரர்களை வழி நடத்திச்சென்றார். அந்த
நாட்களில் பெண்கள் போர்களத்தில் தங்கள் கணவர்களுக்கு
வழிகாட்டியாகவும், காயம்பட்டவர்களை கவனிக்கும்
செவிலியர்களாகவும் விளங்கினர். மற்ற அரபுகள் செய்ததையே முஹம்மதுவும் செய்தார். இஸ்லாம் நடைமுறைக்கு வந்த பின்னர், அவர்கள் தங்கள் தூதரின் போதனைகளை பின்பற்ற தொடங்கிய
நிலையில் போர்களம் உட்பட எங்குமே அவர்கள் பெண்களுக்கான இடம் இல்லை என்பதை கண்டறிந்தார்கள். இதன் மூலம் பெண்
புறக்கணிக்கப்பட்டு அவள் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட்டாள்.

ரோச் சொன்னார் "இஸ்லாம் பெண்களுக்கு வாக்குரிமை அளித்திருக்கிறது. இது சரியா? ஆண்களுக்கே வாக்குரிமை இல்லாதபோது எப்படி
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும்? இஸ்லாத்தில்
ஜனநாயகமே இல்லை. இவ்வாறு இருக்க நீங்கள் எவ்வாறு ஓட்டளிக்க முடியும். இஸ்லாத்தில் ஜனநாயகம் என்பது இன்னொரு சுவாரசிய விஷயம்.

ரோச் சொன்னார் "பெண் அவளின் சொத்துக்களை ஆண்
துணையில்லாமல் பயன்படுத்தவோ அல்லது விற்கவோ செய்ய முடியும்". அவர் கதீஜாவை மறந்து விட்டாரா? முஹம்மதுவை மணம் செய்யும் முன்பு கதீஜா மக்காவின் சிறந்த வணிகராகவும்,
சொத்துக்களுக்கு அதிபதியாகவும் இருந்தார். அவருக்கு கீழ் பல ஆண் பணியாளர்கள் இருந்தனர். 1400 வருடங்களுக்கு பிறகு இதே நிலையை பின் தொடரக்கூடிய எந்த பெண்ணையாவது இஸ்லாமிய வரலாற்றில் நாம் பார்க்க முடியுமா? பதில் இல்லை என்பது தான்.
மிக அரிதிலும் அரிதான உதாரணங்களை கூட நிரூபிக்க முடியுமா? இதிலிருந்து தெளிவாக விளங்குவது என்னவென்றால் இஸ்லாத்திற்கு பிறகு பெண் அவளுடைய உரிமைகளை இழந்து விட்டாள்.

மேலும் சொன்னார் " இஸ்லாமிய பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்க்க முடியும். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் இவர் தலிபானைப் பற்றி சொல்லவில்லை. அவர்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ஆண் துணையில்லாமல் பெண் வீட்டில் தனியாக இருக்க முடியாது. மேலும் ஆண் துணையில்லாமல் வெளியே பயணம் செய்ய முடியாது.
இந்நிலையில் எவ்வாறு அவள் வெளியே வேலைக்கு செல்ல முடியும்? இஸ்லாம் பெண்கள் தனியாக வெளியே செல்வதற்கு
அனுமதிக்கவில்லை. அது பெண்களுக்கு வீடாகவே
முன்னுரிமையளிக்கிறது. சில இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு கூட அனுமதியில்லை. இப்படி இருக்க அவள் எப்படி வேலைக்கு செல்ல முடியும்?

ரோச் சொன்னார் " பெண்கள் தங்கள் விரும்பியவரை திருமணம் செய்ய முடியும். அவரிடத்தில் நான் கேட்கிறேன். எப்படி ஒரு 9 வயது குழந்தை திருமணத்திற்கு சம்மதிக்க முடியும்? அவளுக்கு
விரும்பியவரை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இல்லாத போது இது சாத்தியமில்லாதது. அந்த நபரைப் பற்றி ஒன்றும் தெரியாத
நிலையில் எப்படி தேர்வு செய்ய முடியும்? வருங்கால துணையை பற்றிய அறிவுபூர்வ முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத நிலையில் அவள் சரியான நபரை தேர்வு செய்ய முடியாது. குருட்டு தேர்வு என்பது தேர்வல்ல.

மேலும் பெண் திருமணத்திற்கு பிறகு பாலியல் உறவில் திருப்தியடைய உரிமை இருக்கிறது என்றார். இல்லாவிட்டால் அவள் கணவனிடமிருந்து விவாகரத்து கோர முடியும். இது சரியா? ஷரியா சட்டப்படி பெண் , அவள் கணவன் அடித்தால் கூட விவாகரத்து கோர முடியாது. அது ஆணின் சுய முடிவை சார்ந்தது. நாம் ஒரு பெண் தன் கணவன் ஆண்மையற்றவன், தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்.
இதன் பிறகு எப்படி அவள் ஆணின் பிரமாண்ட ஈகோ முன்பு நிற்க முடியும்? அப்படியே அவள் தொடர்ந்தால் மற்றவர்கள் முன்
விலைமாதர் என்ற பெயரே அவளுக்கு கிடைக்கும். மறுநாள் அவள் பிணம் தான். விவாகரத்து செய்யப்பட்ட பெண் இஸ்லாமிய உலகில் எங்குமே செல்ல முடியாது. எனக்கு தெரியவில்லை ரோச்
இஸ்லாமிய நாட்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறார்? முஸ்லிம் பெண்ணின் பாலியல் உணர்வுக்கு அனுமதி இல்லை. பெண்ணின்
பாலியல் உணர்ச்சிகள் இஸ்லாமிய அடிப்படைகளின் படி புனிதமானதல்ல. பாலியல் உறுப்புகள் சிதைக்கப்படும் போது பாலியல் இன்பமும் நீக்கப்படுகின்றன. பெண் ஜமாய்க்க முடியாது.
பெண்ணுக்கு அம்மாதிரியான தூண்டல்கள் இருந்தால் அது
பாவகரமானதாகும். பெண் தன் கணவனின் பாலியல் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். அவளின் சொந்த
விருப்பங்களுக்கு அனுமதி இல்லை. மரபின் படி
" ஒரு கணவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால், அவள் அதை மறுத்து கணவனின் கோபத்திற்கு ஆளானால் , அன்றைய இரவு முழுவதும் வானவர்கள் அவள் மீது சாபமிடுகின்றனர். (புகாரி 4:54: 450) வானவர்கள் இப்படி செய்வதை நினைப்பதற்கே மிக வேடிக்கையாக இருக்கிறது. ஒரு ஏழை பெண் மீது உட்கார்ந்து
கொண்டு சாபமிடுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை. கணவனை
திருப்திப்படுத்தாத பெண்ணை இறைவனே நேரடியாக தண்டிக்கும் போது வானவர்களின் சாபம் என்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். ஒரு அர்த்தத்தில் இது வேடிக்கையானது. மற்றொரு அர்த்தத்தில் இது ஒரு துன்பியல் நிகழ்வு.

ஜெமி கிளாசோவ்:- மல்லா?

மல்லா:- ஸ்பென்சரும், சினாவும் இஸ்லாமிய பெண்கள் பற்றி
திரும்ப திரும்ப சொல்லப்பட்ட தவறான கருத்துக்களையே முன்மொழிகின்றனர். மேலும் அவர்கள் "பெண்" அத்தியாயத்தின் தர்க்கத்தை புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாம் பெண்களை பார்க்காவிட்டால் பெண் என்ற அத்தியாயமே வந்திருக்காது. நீங்கள் ஆண் அத்தியாயத்தையே பார்த்திருப்பீர்கள்.
நான் சினாவுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். குர் ஆனின்
நீண்ட அத்தியாயம் "The cow" என்பதாகும். "Cow" அல்ல. இரண்டிற்கிடையே உள்ள வித்தியாசத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு பசுவின் கதை. அதன் மூலம் நமக்கு
படிப்பினை இருக்கிறது. வசனம் 33:35 ஆண், பெண்ணின்
பொறுப்புக்களை பற்றி மட்டும் விவரிக்கவில்லை. மாறாக அது
பாலின உயர்வு தாழ்வு இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
பொது விதிகள் இருவருக்குமே பொருந்தும். சினாவும், ஸ்பென்சரும் எப்படி சமத்துவத்தை தீர்மானிக்கிறார்கள்? ஆனால் என்னை பொறுத்தவரை மேற்கண்ட வசனம் சமத்துவத்தை
போதிப்பதாகவே நினைக்கிறேன். 33:35 அவர்களுக்கு
போதுமானதாக இல்லையா? மேலும் 33:135 அதே விஷயத்தை குறிப்பிடுகிறது. அல்லாஹ் சொல்கிறான் " 3.135 வசனம்


மேலும் 4:124 ல் சொல்கிறான் "

சினா மற்றும் ஸ்பென்சர் குறிப்பிட்ட குர் ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களானது பெண் விடுதலைக்கு எதிரானவையல்ல. அவர்கள் சூழ்நிலைக்கு மாறுபட்டு பேசுகிறார்கள். இது மொத்தத்தில்
தவறானது. இதை பின்னர் நான் நிரூபிக்கிறேன். மிக முக்கியமான கேள்வியே ஏன் ஸ்பென்சரும், சினாவும் பெண்ணை கண்ணியமாகவும், சிறந்த முறையிலும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று சொல்கிற ஏராளமான குர் ஆன் மற்றும் ஹதீஸ்களை மறைக்கிறார்கள்.?

வசனம் 2:228 ஆண் அந்தஸ்தில் உயர்ந்தவன் என்கிறது.
சினாவும், ஸ்பென்சரும் ஒரு உண்மையை சொல்ல மறந்து
விட்டார்கள். அதாவது இஸ்லாமிய அடிப்படையின் படி கணவன் குடும்பத்திற்கான நிதிபொறுப்புடையவன். மனைவி அவளுடைய பணத்திலிருந்து எதையுமே செலவழிக்க தேவையில்லை. இவ்வசனம் எந்த உயர்வு நிலையையோ அல்லது எந்த அநுகூலத்தையோ
குறிப்பிடவில்லை. இஸ்லாம் குடும்பத்தில் முடிவெடுக்கும் போது கணவன் மனைவி ஆகிய இருவரின் ஒப்புதல், கலந்தாய்வு
அவசியம் என்கிறது. குர் ஆன் நமக்கு உதாரணத்தை கொடுக்கிறது " 2:233 வசனம்.
மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் "4:19 வசனம். மேலும்
நபி (ஸல்) சொன்னார்கள் " உங்களில் சிறந்தவர் உங்களின் குடும்பத்தில் சிறந்தவர். நான் குடும்பத்தில் சிறந்தவனாக இருப்பதால் உங்களில் சிறந்தவனாக இருக்கிறேன். சிறந்த நம்பிக்கையாளர்கள் என்பவர்கள் அவர்களின் மனைவியிடத்தில் சிறந்த முறையில் நடப்பவர்கள் ஆவார்கள். (இப்னு ஹம்பல் 7396).
மேற்சொன்னவை மேன்மை அல்ல. மாறாக பொறுப்புணர்வு. அது பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணர்த்துகிறது. சர்வாதிகாரத்தை தடுக்கிறது. மேலும் 4:11 ஆம் வசனம் (சொத்து பங்கீட்டில் பெண்ணுக்கு பாதி பற்றியது) . இவ்வசனம் எவ்விதத்திலும் பெண்ணின் மதிப்பு அவளது சகோதரனை விட பாதியாகும் என குறிக்கவில்லை. இந்த வேறுபாடு என்பது ஆணின் நிதிபொறுப்பை அடிப்படையாக கொண்டது. இந்த பொறுப்பு எவ்விதத்திலும் பெண்ணின் பொருளாதார அமைப்புக்குள் தலையிடுவது ஆகாது. கணவன் மனைவியின் முழு பராமரிப்பு செலவுக்கும் பொறுப்பாளனன் ஆவான். சில தருணங்களில் நெருங்கிய உறவினர்களுக்கு கூட. குறிப்பாக பெண் உறவினர்கள். பெண்ணின் சொத்தை ஆண்கள்(தந்தை,சகோதரன், கணவன் உட்பட) யாரும் உரிமை கோர முடியாது. அவள் குடும்பம் எவ்வளவு வறுமையாக அல்லது அவள் எவ்வளவு வசதிபடைத்தவளாக இருந்தாலும் சரி. அவளுடைய விருப்பத்தின் பேரில் ஏதாவது செலவு செய்தால் அவளுக்கு அதற்கான பிரதிபலனை இறைவன் வழங்குகிறான். அவள் திருமணத்தின் போது ஆணிடமிருந்து பரிச பணம் வாங்க முடியும். விவாகரத்து நேரும் சமயத்தில் அவளின் முன்னாள் கணவனிடமிருந்து ஜீவானம்சம் வாங்க முடியும். வசனம் 33:50 பெண் போரில் பிடிக்கப்பட்டால் அவளின் எஜமானன் அவளை பலாத்காரம் செய்ய முடியும். இவ்வசனம் எவ்விதத்திலும் பலாத்காரம் சம்பந்தப்பட்டதல்ல. அலி சினா எவ்விதமான மொழிபெயர்ப்பை பயன்படுத்துகிறார் என்பதே புரியவில்லை. மேலும் வசனம் 66:10 "ஒரு பெண் கணவனுக்கு முழுமையாக அடிபணியாவிட்டால் அவள் நரகம் செல்வாள்". இது நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களை பற்றிய கதை. அவர்கள் எவ்வாறு இறைக்கட்டளையை
பின்பற்றவில்லை. அதனால் தண்டனை பெற்றார்கள் என்பது பற்றியதாகும். வசனம் 2:223 பெண் கணவனின் விளைநிலம் என்பதாக
குறிப்பிடுகிறது. இதில் குர் ஆன் ஹர்த் என்ற சொல்லை பயன்படுத்துகிறது. அதன் அர்த்தம் நிலத்தில் பயிரிடுவது. இந்த
சொல் பெண்ணின் கருப்பைக்கான உருவணி. விளைநிலத்திற்கும் கருப்பைக்குமான ஒப்புமை என்பது ஆண் இடும் விதை என்பதாகும். அந்த விதை குழந்தையாக மாறுகிறது. இதே நிகழ்வு விவசாயி நிலத்தில் விதைக்கும் போது அது செடியாக மாறுகிறது. இந்த உருவணி அரபி மொழியில் குர் ஆனின் காலத்திற்கு முன்பும் வழக்கில் இருந்தது. அன்றைய காலத்தில் யூதர்கள் முஸ்லிம்களை அவர்கள் பெண்ணின் பின் பக்கத்தில் புணர்வதால் பிறக்கும் குழந்தை கோணலான கண்ணோடு பிறக்கிறது என்றார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அழகான உதாரணம் மேற்கண்ட வசனம் மூலமாக சொல்லப்பட்டது.

குர் ஆன் பெண்ணை ஆண் அடிப்பதை அனுமதிக்கிறது. (4:34 வசனம்)

இதன் முழுப்பகுதியையும் நாம் படிப்பது அவசியமானது. இதனோடு தொடர்பு கொண்ட மற்ற வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை படிக்க வேண்டும். ஒருவர் வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்
கொண்டு சிலரின் தவறான நடத்தையை நியாயப்படுத்தும் ஒன்றாக அதை மாற்றக்கூடாது. முக்கிய பிரச்சினை என்னவென்றால்
இஸ்லாமை விமர்சிப்பவர்கள் குர் ஆன் வசனங்களை விவரிக்கும் ஹதீஸ்களை தங்கள் கண்பார்வையை விட்டும் விலக்கி வைக்கிறார்கள். இதே நிலை தான் இந்த வசனத்திலும். இவ்வசனம் பெண்ணை அடிப்பதை ஆதரிக்கவோ அல்லது அதை ஊக்குவிக்கவோ செய்யவில்லை. இது உடல்ரீதியான துன்புறுத்தல் அல்ல. நபி (ஸல்) அவர்கள் விவரித்தார்கள். "தர்பன் கைர முபாரிஹ்" எதனையும் அடையாளமிடாத மெல்லிய குச்சி. மேலும் சொன்னார்கள் "அதன் முகம் தவிர்க்கப்பட வேண்டும். அது பல்துலக்கும் குச்சியை விட மெல்லியதாக இருக்க வேண்டும். ஆனால் இது சிறிய வீட்டு
பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்பட கூடாது. அரிதான விசயங்களான நம்பிக்கை துரோகம், தவறான நடத்தை போன்றவற்றுக்கு மட்டுமே.மேலும் இது மற்ற வழிகள் தோல்வி அடைந்த பிறகான இறுதி முடிவாக இருக்க வேண்டும்.
மனைவி கணவனின் அடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மத கடமையல்ல. அவள் எந்த நேரத்திலும் விவாகரத்து பெற முடியும். இதற்கு குலாஉ என்று பெயர். சினா சொன்னார் "
இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இஸ்லாமிய பெண் அவள் கணவனிடமிருந்து அடி வாங்கினால் கூட விவாகரத்து கோர முடியாது. அது ஆணின் விருப்பத்தை சார்ந்தே அமைகிறது. இது முற்றிலும்
தவறான கருத்தாகும்.

இஸ்லாத்தில் கணவன் தன் மனைவியை குர் ஆன் ஹதீஸின் விதிமுறைக்கு மாறாக அடித்தால் அவள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். அதில் அவளுக்கு சாதகமான தீர்ப்பானால் அவளுக்கு பழிவாங்கும் உரிமையளிக்கப்படுகிறது. இதன்படி அவள் கணவன் அடித்தது மாதிரியே திருப்பி அடிக்க முடியும்.
மேலும் நாம் பார்ப்பது ஆர்வமாக இருக்கும். மற்ற மதங்கள் பெண்களுக்கு எவ்வித உரிமைகளை கொடுத்திருக்கின்றன? உண்மையில் பைபிளோடு நாம் விரைவாக இதை ஒப்பிடும் போது பார்க்க முடியும். பைபிள் மனைவி கணவனுக்கு முதலில் அடிபணிய வேண்டும் என்று சொல்கிறது. பின்னர் தான் இறைவனுக்கு என்கிறது. அதை செய்யாவிட்டால் அவள் கணவனால் கல்லெறிந்து
கொல்லப்பட வேண்டும் என்கிறது. இவர்கள் எல்லாமே இஸ்லாத்தையும் , இஸ்லாமியரையும் மட்டுமே விமர்சிக்கிறார்கள்.

மேலும் நரகத்தில் அதிகம் பெண்களையே பார்க்க முடியும் என்ற ஹதீஸை பற்றி சினா சொன்னார். இதில் அவர் பாதி உண்மையையே வெளிப்படுத்துகிறார். சொர்க்கத்திலும் அதிகமான பெண்களை பார்க்க முடியும். இதை ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வெளிப்படுத்துகின்றன. (பார்க்க: ஸஹீஹ் முஸ்லிம் :2834). மனித சமூகத்தில் பெண்களே அதிக அளவில் இருக்கிறார்கள். நான் இது பற்றி விரிவாக விவாதிக்கிறேன். ஆக நரகத்தில் செல்லும் பெண்களையும் சொர்க்கத்திற்கு செல்லும் பெண்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இருவரின் கூட்டுத்தொகை படி சொர்க்கத்திற்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

அடுத்ததாக சினா சொன்னது முதல் பெண் தியாகி பற்றி. ஒரு
விஷயத்தை சினா தவற விடுகிறார். அதாவது இஸ்லாமின் தோற்ற காலம் முதல் இப்பொழுது வரை இஸ்லாமிய பெண் இஸ்லாத்தில் பெண் அடக்குமுறை கூறுகள் இருப்பதாக நினைக்கவில்லை. அல்லாவிட்டால் பெண்கள் தியாகம் செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள்.

மீண்டும் சினா சுமையாவின் வரலாறு பற்றிய தவறான வழிக்கு செல்கிறார். இப்னு சாத் மட்டுமே உண்மையான வரலாற்றை
சொன்னதாக சொல்கிறார். பைஹகீயில் இச்சம்பவத்தை பற்றி
குறிப்பிடப்படுகிறது. அபுஜஹில் சுமையாவின் மர்மஸ்தானத்தில் கத்தியால் குத்தினார். இதே விசயம் இப்னுகதீரிலும் சொல்லப்படுகிறது. பத்ரு போரின் போது அபுஜஹல் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் நபி(ஸல்) அம்மாரிடம் (சுமையாவின் மகன்) சொன்னார்கள். "உன் தாயை கொலை செய்தவனை அல்லாஹ் கொலை செய்து விட்டான்." (அல் இஸாபாஹ் 4/327)
நான் இந்த விவாத கருத்தரங்கின் மூலம் வலியுறுத்துவது, விவாத
விஷயமே "இஸ்லாம் அதற்குள் பெண் விடுதலை கூறுகளை
கொண்டிருக்கிறதா" என்பதாகும். ஆக நாம் விவாதிப்பது அவர்கள் சொன்ன இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை பற்றியது. நான் அவர்கள் சொன்ன விஷயங்களை மறுத்திருக்கிறேன். மேலும் நீண்டு விடும் என்பதால் சுருக்கமாக பதிலளிக்கிறேன்.

ஸ்பென்சர் சொன்னார் " கற்பனை செய்து பாருங்கள். எல்லா முஸ்லிம்களும் கல்லால் எறியப்படும்போது, தலை முடியை வெளிக்காட்டிய பெண்கள் தண்டிக்கப்படும் போது, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் கொல்லப்படும் போது". இது இறைவனின் கட்டளை அல்ல. ஸ்பென்சர் எப்படி தான் இப்படிப்பட்ட முடிவுக்கு வந்தார் என்றே தெரியவில்லை. இஸ்லாத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் எவ்விதத்திலும் தண்டிக்கப்படுவதில்லை. இஸ்லாத்தின் படி அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். இஸ்லாம்
திருமணமான ஆணோ, பெண்ணோ விபசாரத்திற்குட்பட்டால் அவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்கிறது.
திருமணத்திற்கு முன்பு என்றால் சவுக்கடி கொடுக்கப்பட வேண்டும் என்கிறது.

பாகிஸ்தான் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் கணவனால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றார் ஸ்பென்சர். இந்த விவரம் நான் குறிப்பிட்ட மதத்தோடு இயைந்த மனிதர்களை குறிக்கவில்லை. பெரும்பான்மையான முஸ்லிம் ஆண்கள் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். மனைவி
விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அரசாங்கங்கள் மதக்கல்வியை
பாடத்திட்டத்தில் இருந்து உள்நோக்கத்துடன் நீக்கி விடும் போது அது எப்படி அவர்களுக்கு தெரியும்?

அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. எத்தனை பெண்கள் கணவனால் துன்புறுத்தப்படுகின்றனர்? ( கணவன் மனைவியின் ஏச்சு பேச்சுகளை கூட ஸ்பென்சர் துன்புறுத்தலுக்குள் இணைக்கிறார்
போலும்.) மிக முக்கியமாக அமெரிக்காவின் குடும்ப வன்முறைகளை பார்ப்பது அவசியம். ஸ்பென்சருக்கு தெரியுமா? இங்கு நான்கு வருட கல்வியை முடித்த பெண்களில் 88 சதவீதம் பேர் தங்கள்
வாழ்வில் ஒருமுறையேனும் உடல் அல்லது பாலியல் வன்முறையினால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ( அமெரிக்க பாலியல் நீதி ஆய்வுத்துறை நவம்பர்2004) இறுதியாக முக்கிய விஷயம் என்பது நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை பார்க்க வேண்டியது அவசியம். அங்குள்ள பெண்கள் பற்றிய விவரங்களும் மேற்கண்ட புள்ளி
விவரத்தை ஒத்திருக்கின்றன. எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை. பாகிஸ்தானிலும் அதே அளவு பாதிப்புகள் பற்றி. அமெரிக்காவில்
கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தியாவில் இந்துக்கள் என்ன செய்கிறார்கள்? பிலிப்பைன் மற்றும் சிலி ஆகியவற்றில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் மீது நீங்கள் குற்றம் சுமத்த கூடாது.

பிரண்ட் பேஜ்: ரோச்?


ரோச்:- நான் வெளிப்படையாகவே ஒரு விஷயத்திற்கு வருகிறேன்.
நான் ஒரு முஸ்லிம் பெண் என்ற நிலையில் முஸ்லிம் ஆணை மணந்திருக்கிறேன். கல்வியறிவு படைத்தவர் என்ற நிலையில் நான் சொல்கிறேன். இஸ்லாம் எந்த பெண்ணையும் ஒடுக்கவில்லை. இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்ணின் உரிமையை நிறைவு செய்யும் பொருட்டு எங்குமே சரியாக அமல்படுத்தப்படவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பெண்ணுக்கு எதிரான சம்பவங்கள் என்பது மன்னிப்புக்கு அப்பாற்பட்டதாகும்.
அறியாமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவ்வாறு
செய்கிறார்கள். இஸ்லாமை விமர்சிப்பவர்களிடத்தில் நான்
சொல்லிக்கொள்வது அமெரிக்காவின் நிலைமையை பாருங்கள். அங்குள்ள பெண்கள் தங்கள் கணவனால் துன்புறுத்தப்படுவதன் அளவை எடுத்துக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு எதிரான குர் ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாறுபட்ட இம்மாதிரியான செயல்கள் தண்டிக்கப்படவேண்டியவை. என்னை யாராவது அடித்தால் (கணவன் உட்பட) சவால் விடுகிறேன். நிச்சயமாக திருப்பி அடிப்பேன். சரி. இஸ்லாமிய சட்டம் மக்களை அடிமைப்படுத்த உருவாக்கப்படவில்லை. மாறாக அவர்களை அறியாமையிலிருந்து விடுதலை செய்வதற்கே. எந்த மத பிரதிகளுமே பெண்ணை ஆண் அடிப்பதற்கு குறிக்கவில்லை. யாராவது அப்படிப்பட்ட குறிப்பிட்ட ஹதீஸ்களை வைத்துக்கொண்டு தங்கள் செயல்களை நியாயப்படுத்தி இஸ்லாமிய நம்பிக்கை முறையில் கூட்டவோ குறைக்கவோ செய்தால் அவர்கள் அதற்கான தண்டனையை பெறுவார்கள். யார் இஸ்லாத்தை அநியாயமான முறையில் விமர்சிக்கிறார்களோ அவர்கள் இவ்வுலகிலோ அல்லது அடுத்த உலகிலோ அதற்கான தண்டனையை அடைந்தே தீருவார்கள். இஸ்லாத்தில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்ய அனுமதியில்லை. இன்று உண்மையான இஸ்லாமிய சமூகமே இல்லை. எங்குமே இஸ்லாமிய சட்டங்கள் முறைப்படுத்தப்பட
வில்லை. இவ்வாறிருக்க எப்படி இஸ்லாத்தை விமர்சிக்க முடியும்.?
நான் என்னுடைய முதல் விஷயத்திற்கு திரும்பி வருகிறேன்.
இஸ்லாத்தை குறை கூறுவது என்பது அறியாமையினால் வரும்
விளைவாகும். இந்த விஷயங்கள் பற்றி கிறிஸ்தவ பாதிரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்

" பெண் கழிவுகளின் பாத்திரம்"- புனித அகஸ்டின்

"தனி மனித இயல்பை பொறுத்தவரை பெண் குறைபாடுடையவளாகவும், எதையும் உற்பத்தி செய்ய இயலாதவளாகவும் இருக்கிறாள். ஆணின் விதையே பெண் உற்பத்தியை முழுமைப்படுத்த நோக்குகிறது. ஆனால் பெண் அதிலிருந்து குறைபாடுடையவளாக உருவாகிறாள்". - தாமஸ் அகினாஸ்

ஆக கிறிஸ்தவ பாதிரியார்களின் பார்வை என்பது நவீன பெண்ணியத்திற்கானதல்ல. நான் இதன் மூலம் கிறிஸ்தவத்தை நிந்திக்கவில்லை. ஆனால் இது வெளிப்படையாகவே தீவிர பெண்ணிய வெறுப்பும், ஏமாற்றமடைந்த புனித மனிதரின் கிறிஸ்துவின்
போதனை பற்றிய தவறான விளக்கமாகவும் இருக்கிறது. மேலும்
நான் பைபிளின் பெண்னை பற்றிய அணுகுமுறைகளை வைத்திருக்கிறேன். அதன் மூலம் கிறிஸ்தவத்தின் பார்வை பற்றி வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் குர் ஆன் ஆதாம் மற்றும்
ஏவாள் ஆகிய இருவரையும் சம அளவில் பாவம் செய்தவர்கள் என்ற முறையில் கண்டிக்கிறது. மேலும் அல்லாஹ்வின் அளித்த
வரம்பை மீறியதால் அவர்கள் இருவரையும் தண்டித்தது. மாறாக மற்ற ஒருவருக்காக அல்ல.

நான் ஸ்பென்சர் போன்ற பெரிய மனிதர்கள் கொண்டு வந்த குர் ஆன் மற்றும் ஹதீஸ் பற்றிய விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் இஸ்லாமிய பிரதிகளில் சென்று என்ன அதிர்ச்சியூட்டும்
விஷயங்களை கண்டுபிடிக்கிறீர்கள்? உங்கள் பார்வை என்பதே உங்களுக்கு மட்டுமே செளகரியமளிக்கக்கூடியதும், அறிவீனமானதாகும். நீங்கள் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களை புரிந்து
கொள்வதற்கு வெறும் தப்ஸீர்கள் போதுமானதல்ல. மாறாக அவ்வசனங்கள் இறங்கிய சூழல் மற்றும் ஹதீஸ்களின் தரம்
ஆகியவற்றை அறிய முயல வேண்டும். நாம் ஹதீஸ்களின் மொத்த தரத்தை நோக்கும் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலமான ஹதீஸ்கள் என்றறியப்பட்டவைகளில் ஒரு சில பிற்காலத்தில் பலகீனமானவையாக அறியப்பட்டிருக்கின்றன. ஆக நீங்கள் பெண்ணை அவமதிக்கும் ஹதீஸ்களை காட்டும் போது நான் பெண்ணின் உரிமையை வலியுறுத்தும் பலமான ஹதீஸ்களை
நிறையவே காட்ட முடியும்.

முதலாவதாக பெண்ணை அடிப்பது பற்றிய வசனத்தை
எடுத்துக்கொள்வோம். இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. நான் இதை பல தடவை கேட்டிருக்கிறேன். குர் ஆன் மனைவியை அடிப்பதை போதிக்கிறது. நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு ஊடகங்கள் இந்த விஷயத்தை எவ்வாறு விமர்சிக்கின்றன என்பதை கவனித்திருக்கிறேன். அடிப்பது என்பது "தரபா" என்ற அரபிச்சொல்லுக்கு இணையாக தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. இச்சொல்லை குர் ஆன் ஆறு வெவ்வேறு
வழிகளில் பயன்படுத்துகிறது. அரபி மொழியானது ஆங்கிலத்தை
விட மிக பன்முகமானது. இதே விஷயம் குர் ஆனின் மற்ற வசனங்களிலும் குறிப்பிடப்படுகிறது. (47:27, 18:11, 43.5, 14:24, 2:273). இச்சூழலில் குறிப்பிட்ட "தரபா" என்ற வார்த்தையானது சில மொழிபெயர்ப்பாளர்களால் துல்லியமாக 'எதனையும் அடையாளமிடாத மெல்லிய குச்சி ' என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஓர் உண்மையை தெளிவுப்படுத்த வேண்டுமென்றால் பெண்கள் பிரச்சினை என்பது பொறுப்புணர்ச்சியற்ற, மனித தன்மையற்ற, நியாயமற்ற ஆண்கள் திருமண ஒப்பந்தத்திற்குள் நுழையும் போது அவர்கள் பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய தவறுகிறார்கள். இது தான் மற்ற பின் விளைவுகளுக்கு காரணமாகிறது.

சகோதரர் மல்லா உங்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்து
விட்டார். நான் என் மனதிலுள்ள ஒரு சில கேள்விகளுக்கு
பதிலளிக்க விரும்புகிறேன்.

நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இஸ்லாமிய
தொழுகை என்பது வழிபாடாகும். மற்ற நம்பிக்கை முறைகளில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக தொழ முடியாது. பண்டைய வைதீக கிறிஸ்தவத்தில் ஆண் பாதிரியார்கள் மட்டுமே திருப்பலி போன்ற சடங்குகள் நடத்த முடியும். பெண்களின் வழிபாட்டு தலைமை அனுமதிக்கப்படவில்லை. காரணம் பெண் கிறிஸ்துவின்
பிம்பமாக இல்லை என்பதாகும். ஆனால் இஸ்லாத்தில் அப்படி இல்லை. பெண் இங்கு ஷரியா நீதிபதியாகவோ அல்லது மதக்கல்வியாளராகவோ வர முடியும். வரலாற்றை நாம் நோக்கும் போது நபியின் மனைவியான ஆயிஷா (ரலி) தன்னுடைய மாதவிடாய் சமயத்தில் கூட பள்ளிவாசலில் நபியின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழாமல் இருந்தால் அவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கும். அது ஒரு மருத்துவ முன்னெச்சரிக்கை. நான் பெண்ணாக இருப்பதால் எனக்கு இதை
புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சினா ?

சினா மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையைப்பற்றி சொன்னார். பெண் மரணத்திற்கு பிறகு அநீதமாக நடத்தப்படுவாள் என்பது எப்படி ஒருவருக்கு தெரியும்? சொர்க்கத்தில் நுழைபவர்கள் அவர்கள் விரும்பியதை அடைவார்கள் என்கிறது இஸ்லாம்.
நம்முடைய சிறிய மூளை சிந்திப்பவற்றை நாம் வெறுமனே பேசி
விட முடியாது. குர் ஆனில் அடிக்கடி ஆண்பால் ஒருமை பயன்படுத்தப்படுகிறது. இது மொழி அடிப்படையிலானதே தவிர
பாலின அடிப்படையிலானதல்ல. ஆனால் நிறைய விஷயங்களில் இது ஆண் -பெண் இருவரையுமே குறிக்கிறது. இறைவன் யாருக்கு எதை கொடுக்கிறான் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
பெண்களின் பாலியல் திருப்திக்கான உரிமை பற்றிய ஹதீஸ்கள்
நிறைய இருக்கின்றன. நபி (ஸல்) சொன்னார்கள் " உங்கள் மனைவியரை நீங்கள் முன்விளையாட்டு மூலம் அணுகுங்கள். மேலும் அவர்களை உடலுறவில் நீங்கள் பலதடவை திருப்திப்படுத்துங்கள்.
நீங்கள் திருப்தியுறுவதற்கு முன்னால்". கருவுற்ற குழந்தையானது
யார் முதலில் ஆர்கச நிலையை அடைந்தார்களோ அவர்களை
போலிருக்கும். (ஆர்கசம் பற்றிய இஸ்லாமின் நிலைபாட்டையும், மேற்கத்திய நிலைபாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள்.) திருமண உறவுகள் வழிபாட்டுக்கு இணையாக மதிக்கப்படுகின்றன.

மேலும் சொர்க்கத்தில் 72 தேவதைகள் பற்றி சொல்லப்படுகிறது. இது எவ்விதத்திலும் பெண்ணின் மதிப்பை குறைப்பதல்ல. 72 என்பது ஒரு வெளிப்பாடு தானே தவிர எண் மதிப்பல்ல.
மேலும் புர்காவானது முகத்தை மூடும் போதே அது பரிகசிக்கப்படுகிறது. ஹஜ்ஜின் போது பெண்கள் முகத்தை மூடுவதில்லை. மேலும்
நபி (ஸல்) அதை தடுக்கவில்லை. நாங்கள் அவரை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் ஆண்களுக்கு பிரமாண்ட ஈகோ இருந்தால் ஏன் அவர்கள் பெண்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் ஆயிஷா பெவ்லியின் "Islam :Empowering Of Women " என்ற புத்தகத்தை படிக்க முயற்சியுங்கள். அதில் அவர் தற்போதைய மற்றும் கடந்த கால இஸ்லாமிய பெண்களின் நிலைமைக்கு ஐரோப்பிய காலனியமே காரணம் என்று சொல்வதை கவனியுங்கள்.மேலும் தலிபான்களை பொறுத்தவரை அவர்கள் என்னை போன்ற பலகீனமான பெண்களை கவனிக்க
வில்லை. அதற்காக நான் வருந்துகிறேன்.

அலி சினா:- மல்லா 33:35 வசனத்தில் சமத்துவம் பார்ப்பது மிகவும் நல்லது. துரதிஷ்டவசமாக அநேக முஸ்லிம்கள் குர் ஆன் என்ன சொல்கிறது என்பதையும், முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு சமத்துவமற்ற நிலையையும் கவனிப்பதில்லை. ஒரு வேளை மல்லா முஸ்லிம்கள் சரியான இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் குர் ஆன்
தெளிவற்றதா அல்லது குர் ஆன் பற்றிய அவர்களது புரிதல்
தவறானதா என்று தெரியவில்லை. அந்த வசனத்தில் என்னால் எந்த சமத்துவத்தையும் பார்க்க முடியவில்லை.

வசனம் 3:135 ஒவ்வொருவருக்கும் வெகுமானம் அளிப்பதை பற்றி குறிப்பிடுகிறது. அந்த வெகுமானம் சமமாக இருக்கும் என்பதல்ல. ஒர் ஆலையின் உரிமையாளர் அவருடைய பணியாளர்களிடத்தில் சொல்கிறார் "உற்பத்தி பொருட்களை விற்ற பிறகு உங்களுக்கு
ஊதியம் அளிக்கப்படும்". இதன் அர்த்தம் எல்லோருக்கும் சம
ஊதியம் அளிக்கப்படும் என்பதல்ல. மாறாக எல்லோரையும் உட்படுத்துவது அவருடைய நோக்கமாக இருக்கலாம். இது எவ்விதத்திலும் கம்பெனியின் மேலாளரும் காவலாளியும் சமம் என்பதை குறிக்காது. இதே ஒப்பீட்டை நாம் மல்லா குறிப்பிட்ட வசனங்களுக்கு காட்ட முடியும்.

மல்லா நானும் ஸ்பென்சரும் பெண்ணை புகழக்கூடிய குர் ஆன் மற்றும் ஹதீஸ்களை குறிப்பிடவில்லை என்கிறார். உண்மைதான். பெண்ணை புகழக்கூடிய குர் ஆன் மற்றும் ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால் அது உரிமையல்ல. புகழ்வது என்பது சம உரிமையாகாது.
மேலும் சில வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் பெண்ணை தரம்
தாழ்த்துகின்றன. உதாரணமாக 30:21 வசனம் "நீ

அரபி மொழியில் தெளிவாக இருக்கிறது "உங்களுக்காக" (For you) என்பது ஆண்பாலை குறிக்கும். அவைகள் (Them) என்பது பெண்ணை குறிக்கும். இதன் மூலம் இந்த வசனம் தெரிவிப்பது என்னவென்றால் பெண்கள் ஆண்களுக்காக , அவர்களின்
மகிழ்வுக்காக படைக்கப்பட்டார்கள்.
இந்த வசனத்தை பற்றி ராஸி தன்னுடைய தப்ஸீர் கபீரில்
பின்வருமாறு குறிப்பிடுகிறார். " உங்களுக்காக படைக்கப்பட்டான் என்பது பெண் தாவர, விலங்குகள் மற்றும் பிற பொருட்கள் போன்று படைக்கப்பட்டாள் என்பதாகும்." இது பெண் வழிபாட்டிற்காகவோ அல்லது புனித கடமைகளை ஏற்பதற்காகவோ படைக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ஹாதி ஸப்ஸிவாரி என்ற சிறந்த முஸ்லிம் கல்வியாளர் சதர் அல்
தீன் ஸிராஸி என்ற முஸ்லிம் சிந்தனையாளர் பற்றி குறிப்பிடுகிறார். அவர் "பெண்களை அறிவில் குறைந்தவர்களாக, உலக ஆடம்பரங்கள் மீது அதிகப்பற்றுள்ளவர்களாக இருக்கின்றனர் என்றார்.எப்பொழுதும் உண்மையை வெளிப்படுத்த தயங்குகின்றனர். மேலும் இயல்பாகவே முரட்டுக்குணம் படைத்தவர்களாக இருக்கின்றனர். ஆக ஆண்கள் அவர்களுடன் உரையாட வேண்டிய தேவையில்லை. அவர்களுடன் கட்டாய உடலுறவு
கொள்வது அவசியம்". ஆகவே தான் நம் புனித விதியானது ஆண்களை எடுத்துக்கொள்கிறது. அவர்களை பல விஷயங்களில் முதன்மைப்படுத்துகிறது.

மல்லா நினைக்கிறார். முஹம்மது நபி ஆண்களையும், பெண்களையும் ஒரே வாக்கியத்தில் ஒன்றாக சொன்னார். ஆகவே அவர்கள் சமமானவர்கள். ஆனால் விலங்குகளுடன் சேர்த்து
சொன்ன ஹதீஸ்கள் இருக்கின்றன. முஹம்மது நபி சொன்னார் "ஆண்களின் தொழுகை என்பது பெண், கருப்பு நாய் மற்றும் கழுதை ஆகியவற்றை தொட்டால் முறியும்" (முஸ்லிம் 4,1232).

மல்லா சொன்னார் "இஸ்லாத்தில் ஆண் தான் குடும்பத்தின் நிதி பொறுப்பாளன். பெண் தன்னுடைய பணத்தில் இருந்து ஒரு டாலரை கூட செலவழிக்க தேவையில்லை" இதை நாங்கள் தவற விட்டு
விட்டதாக சொன்னார். இது நல்ல விஷயமா? இது மிகச்சரியாகவே சமத்துவமின்மையின் ஆதாரமாகும். இது கணவன் மனைவி இடையே வீணான பதட்டத்தையே உருவாக்கும். பிற்பாடு அவர்கள் கணவன் மனைவியாகவே பார்க்க மாட்டார்கள். முதலாளி தொழிலாளி என்பதாகவே பார்ப்பார்கள். பிற்பாடு அவள் அவனுக்கு சேவை செய்பவளாகவே மாறுகிறாள்.(குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு, அவனுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்தல் போன்றவை). இதன் பதிலீடாக அவன் அவளை பராமரிப்பவனாக மாறுகிறான். இது எஜமான் - அடிமை என்ற இயங்குமுறை அல்லாது வேறு ஏது?

மேலும் குர் ஆன் " ஆண் பெண்ணை விட அந்தஸ்தில் உயர்ந்தவன் என்கிறது" (2:228). இதை விட வெளிப்படையாக வேறு ஏதாவது வேண்டுமா?

நாங்கள் தவறு செய்கிறோம் என்றால் முஸ்லிம் நண்பர்கள்
சொல்லுங்கள். எந்த முஸ்லிம் நாட்டில் இவர்கள் பேசும் சமத்துவத்தை கடைபிடிக்கிறார்கள். சரியான இஸ்லாத்தை
கடைபிடிக்காத போது 1400 வருடங்களுக்கு முந்திய குர் ஆன் வசனங்கள் இவர்களுக்கு குழம்பி போயிருக்கிறதா? குர் ஆன்
சொல்லவில்லையா? இது மிகத்தெளிவானது, விவரிக்கப்பட்டிருக்கிறது. புரிந்து கொள்ள எளிமையானது. சந்தேகமற்றது.

மல்லா சில குர் ஆன் வசனங்களை மேற்கோள்காட்டினார். ஆனால் அதில் எதுவுமே பெண்களுக்கான உரிமை பற்றியதல்ல.
ஆண்களிடம் சொல்லுங்கள். உங்கள் மனைவியரிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மல்லா காட்டிய வசனங்களில் எதுவுமே பெண்ணுரிமைக்கு பொருத்தமானதல்ல. மாறாக நிறைய வசனங்கள் பெண்ணை ஆண்களை விட தாழ்வானவர்களாகவே காட்டுகின்றன.

பெண் அவளுடைய சகோதரனின் சொத்தில் பாதி பங்கு பெறுவாள் என்பது பெண் ஆணின் மதிப்பில் பாதியல்ல என்று மல்லா
சொன்னார். நாங்கள் மதிப்பு பற்றியே பேசவில்லை. உரிமை பற்றி பேசுகிறோம். மதிப்பு என்பது அருவமான ஒன்று. என்னை நீங்கள் எவ்வளவு தூரம் மதிப்பிடுகிறீர்கள் என்பது பொருத்தமற்ற ஒன்று. நான் எதிர்பார்ப்பது என் உரிமைகளை மதித்து சமமாக நடத்துங்கள் என்பதாகும். மதிப்பு என்பது தன்னிலையானது. உரிமை என்பது உணரக்கூடியதும், புறநிலையானதுமாகும். இஸ்லாத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவில்லை. அவர்களுக்கு ஆண்களை
மாதிரியான உரிமைகள் இல்லை.

இப்போது நாம் மதிப்புகள் பற்றி பேசத் தொடங்குவோம். சவூதி அரேபியாவில் பெண்ணின் மதிப்பு எவ்வாறிருக்கிறது என்பதை
காண்போம். ஒருவர் கொல்லப்பட்டால் அல்லது காயமுற்றால்அவருக்கான இழப்பீட்டு தொகை கீழ்கண்டவாறு இருக்கிறது.

100,000 ரியால் பாதிக்கப்பட்டவர் முஸ்லிம் ஆணாக இருந்தால்
50,000 ரியால் பாதிக்கப்பட்டவர் முஸ்லிம் பெண்ணாக இருந்தால்
50000 ரியால் பாதிக்கப்பட்டவர் கிறிஸ்தவ ஆணாக இருந்தால்
25000 பாதிக்கப்பட்டவர் கிறிஸ்தவ பெண்ணாக இருந்தால்
6666 ரியால் இந்து ஆணாக இருந்தால்
3333 ரியால் இந்து பெண்ணாக இருந்தால்

(தகவல்: wall street journal ஏப்ரல் 9, 2002)

ஆக நீங்கள் பார்க்கும் போது மக்களின் மதிப்பு கூட இஸ்லாத்தில் சமமாக இல்லை. அது பாலினத்தையும் மதத்தையும் பொறுத்து வேறுபடுகிறது.

மேலும் மல்லா இஸ்லாத்தில் கணவன், மனைவி அவனை விட வசதியாக இருந்த போதிலும் அவளை பராமரிக்க பொறுப்பானவன்
என்று சுயதம்பட்டம் அடித்தார். இது நியாயமானதா? இது கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும், பரஸ்பர அன்பையும் ஏற்படுத்த உதவுமா? நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? உங்கள் மனைவி திடீரென அதிக சொத்துக்களை பெற்று அதன்மூலம்
கோடீஸ்வரி ஆகும் நிலையில் அவள் அதிலிருந்து எதையுமே செலவழிக்காமல் கணவனிடம் அவன் பெறும் குறைந்த சம்பளத்தை வைத்து தான் தன்னை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்ன ஆகும்? அந்த திருமண உறவே நிலைக்காது.

இவை எல்லாமே இஸ்லாமிய திருமண உறவை முதலாளி- தொழிலாளி என்ற நிலைக்கு கொண்டு வருகின்றன. நல்ல திருமண உறவு என்பது கணவனும் மனைவியும் எல்லாவிதத்திலும் சம துணைவர்களாக இருக்க வேண்டும் என்பது தான். இஸ்லாத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? மனைவி கணவன் வீட்டில் பணியாளராக நுழையும் தருணத்தில் எந்த நேரத்திலும் துன்புறுத்தலுக்கு ஆளாக முடியும். அவன் "உன்னை விவாகரத்து செய்கிறேன் என்று சொல்ல முடியும்." சில நேரங்களில் அவன் கோபத்தில் மூன்று தடவை அவ்வாறு சொல்லிவிட்டால் திருமண உறவே முடிந்து
விடுகிறது. பிறகு அவளை அவன் மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் அவள் வேறொருவரை மணந்து அவனுடன் குடும்பம் நடத்த வேண்டும். பின்னர் அவனுடன் மணமுறிவு ஏற்பட்ட பின்னர் தான் அவளை அவன் மறுமணம் செய்ய முடியும்.

மல்லா வசனம் 33:50 எவ்விதத்திலும் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்டதல்ல என்றார். ஆனால் இது சம்பந்தப்பட்டது. வசனம் 4:24 யை எடுத்துக்கொண்டால் முஹம்மது சொல்கிறார் " ஏற்கனவே திருமணமான பெண்கள். உங்கள் வலது கர உடைமைகள் தவிர" இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. ஒரு முஸ்லிம் தன் வலது கர உடமையாளருடன் (அடிமைப்பெண்கள்,
போர்கைதிகள்) உடலுறவு கொள்ள முடியும். அவர்கள் ஏற்கனவே திருமணமானவர்களாக இருந்தபோதிலும் கூட. இன்னும் கூட உங்களுக்கு இதன் அர்த்தம் பற்றி சந்தேகம் இருக்கிறதா?
ஒரு ஹதீஸ் மூலம் இது தெளிவாகிறது. புகாரியில் இது வருகிறது (7:62,137) முஸ்லிம் படைவீரர்கள் போரில் கைதியாக பிடிக்கப்பட்ட பெண்களை புணர முடியும். புணர்ந்த பிறகு அவர்களுக்குரிய
தொகையை கொடுத்து விடுதலை செய்து விட வேண்டும். அவர்கள் முஹம்மதுவிடம் யோனியை விந்தணுவால் நிறைப்பது பற்றி கேட்டார்கள். அதற்கு முஹம்மது சொன்னார் " அதை செய்ய வேண்டாம். காரணம் அல்லாஹ் மனித உயிர் பிறப்பதை தீர்மானிக்கிறான்."
(பார்க்க புகாரி 8:77, 6)

மல்லா 4:34 வசனத்தை குறிப்பிட்டு மனைவியை அடிப்பது இலகுவாக இருக்க வேண்டும். அது எந்த தழும்பையும் ஏற்படுத்தக்கூடாது. அது பல்துலக்கும் குச்சியாக இருக்க வேண்டும். இந்த வசனம் தெளிவில்லாதது. மேலும் அடிபட்ட மில்லியன் கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு இவ்வசனத்தால் எவ்வித பயனுமில்லை. திரும்பவும் கேள்வி எழுகிறது. ஏன் குர் ஆன் இதுபோன்ற முக்கிய விவகாரங்களில் தெளிவில்லாமல் இருக்கிறது.? மல்லா மற்ற விஷயங்கள் போன்றே இதையும் மிக அழுத்தமாக விளக்கினார். பல் துலக்கும் குச்சியால் அடிப்பது? இது என்ன வேடிக்கை? ஏன் நீங்கள் அடிக்கிறீர்கள்? அடையாளத்திற்கு கூட இது பெண் மீதான ஆணின் ஆதிக்க மனோபாவம் அல்லாமல் வேறில்லை. ஏன் ஆண் பெண் மீது அடையாளத்திற்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும்? ஆக மில்லியன் கணக்கான அடிபட்ட முஸ்லிம் பெண்கள் தாங்கள் பட்ட அடி அடையாளத்திற்காக அல்ல என்பதை நிரூபிக்க முடியும். நான் தனிப்பட்ட முறையில் ஒன்றை
நினைவு கூர்கிறேன். ஒரு நாள் ஒரு பெண் எங்கள் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் தன்னுடைய கணவனிடமிருந்து தான் பட்ட அடி காரணமாக ஏற்பட்ட காயத்தை காண்பித்து அழுது கொண்டிருந்தார்.

மல்லா சொன்னார். " இஸ்லாம் பெண்களுக்கு குலாஉ என்ற
விவாகரத்து உரிமையை அளித்திருக்கிறது. குலாஉ என்பது என்ன? பெண் ஜீவானம்சம் தேவையில்லை என்பதற்கு உடன்பட்டு தான் வாங்கிய மஹர் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இது தான் பெண்ணின் விவாகரத்து உரிமை. இது அபுதாவூதில் உள்ள ஒரு ஹதீஸ் மூலம் வெளிப்படுகிறது. இது நியாயமானதா?

இது ஆண்கள் கையிலுள்ள மிகப்பெரும் ஆயுதம். அவர்கள்
நினைக்கும் போது மனைவியை விரட்ட முடியும். ஜீவானம்சம்
கொடுக்க வேண்டியதில்லை. தான் கொடுத்த பணத்தை திருப்பி
வாங்க முடியும். அதன் மூலம் அவளுடைய வாழ்க்கையை
விசனகரமானதாக மாற்ற முடியும். இது ஷரியா நடைமுறைகளில்
தினமும் நிகழ்கிறது.

நான் இதிலிருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்கவில்லை. இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் வெளியில் சென்று வேலைபார்க்க அனுமதியில்லை. ஆகவே அவளிடத்தில் பணம் இல்லை. அவள் சொத்தில்
பாதி பங்கே பெறுகிறாள். விவாகரத்து வறுமையையும், கடினத்தன்மையையும் உருவாக்குகிறது. இதில் மரணமே மேல் என அவள் தேர்ந்தெடுக்கிறாள். இதனால் பெண்கள் இறப்பு வீதம்
அதிகரிக்கிறது. (உதாரணமாக ஈரான்)

மல்லா சொன்னார் " இஸ்லாத்தில் கணவன் குர் ஆன் ஹதீஸ் விதிமுறைக்கு மாறுபட்டு மனைவியை அடித்தால் அவள் நீதிமன்றத்திற்கு சென்று அதன்பிறகு அவளுக்கு தீர்ப்பு சாதகமானால் அவள் அதே வழியில் அவனை திருப்பி அடிக்க முடியும்."
இதிலிருந்து மல்லா ஜோக்குகள் சொல்லுகிறார் என்பது உறுதியாகிறது. நீதிமன்ற உத்தரவின் படி மனைவி கணவனை அடித்ததை
நான் எங்குமே கேட்டதில்லை. இது இஸ்லாத்தின் திருமண முறை பற்றிய கருத்தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. கற்பனை செய்து
பாருங்கள். அந்த குடும்பத்தில் உருவாகும் குழந்தையின் நிலை பற்றி. பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு பிரமாண்ட ஈகோவும் குறைந்த தற்பெருமையும் இருக்கும் பட்சத்தில் அதில் வன்முறை என்பது சில நொடி விவகாரமாக இருக்கிறது.

மல்லா சொன்னார். " இஸ்லாத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு
உள்ளாக்கப்பட்டவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இது சரியா? இஸ்லாத்தில் ஒரு பெண்ணின் சாட்சியம் என்பது செல்லத்தக்கதல்ல. இரு பெண்கள் வேண்டும். ஆக யார் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்களோ அவர்கள் சாட்சியத்தை உருவாக்க முடியாது. (பொதுவாக பலாத்காரம் செய்பவர்கள் பொது இடத்தில் வைத்து செய்வதில்லை. ஆகவே சாட்சியம் என்பது கடினமானது). ஆகவே அவள் அவன் மீது குற்றம் சுமத்த முடியாது. அதன் காரணமாக அவள் கர்ப்பமுற்றால் சமூகத்திற்கு முன் தவறான வழியில் சென்றவளாகவே கருதப்படுவாள். அவள் விபசாரியாக முத்திரை குத்தப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்படுவாள். நம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். ஆமினா லவால் என்ற நைஜீரிய பெண் . இதே விஷயத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டு கல்லால் எறிந்து கொல்லும் தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் தலையீட்டின் பேரில் அவள்
விடுவிக்கப்பட்டாள். இதே போன்று நிறைய உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.

கேள்வியே ஏன் பாலியல் விவகாரம் என்பது சமூகத்திற்கு அரசாங்கத்திற்கும் முன்னால் செல்ல வேண்டும். ஏன் விவசாரத்திற்குட்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஏன் அவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். உங்கள் மனைவி விபசாரம் செய்தால் அவளை விவாகரத்து செய்யுங்கள். ஏன் அப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகள் இருக்க வேண்டும். நவீன உலகில் அடிமை முறை இல்லை. தகாத உறவு என்பது அறவியல் அடிப்படையில் தவறானது. இது தனிப்பட்ட ஒருவருக்கும் மற்றும் அவன் அல்லது அவள் ஆகியவர்களுக்கும் இடையிலானது. ஏன் அரசானது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் தலையிட வேண்டும். சிறிது காலத்திற்கு முன்பு 14 வயது சிறுவனொருவன் ரமலான் மாதத்தில் பகலில் சாப்பிட்டதற்காக கொல்லப்பட்டான்.
சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது என்பது அவனுடைய தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. அதற்காக அவனை தண்டிப்பது குற்றம். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போரில் கைதியாக
பிடிக்கப்பட்ட பெண்ணை புணர்வதற்கு முஹம்மது அனுமதி
அளித்த நிலையில் ஏன் விபசாரம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ரோச் இந்த விஷயத்தை லாவகமாக கையாள்கிறார். அதன் மூலம் தன்னை சுதந்திர பெண்ணாக அறிவித்து கொள்கிறார். அவர்
வாழ்வது அமெரிக்க என்பது நினைவிலிருக்கட்டும். மேலும் அவர் அமெரிக்க சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார். அவருடைய கணவன் அடிப்பதற்கு கையை ஓங்கினால் அவர் அவ்வாறே திருப்பி அடிக்க முடியும். மேலும் கணவனை சிறையில் தள்ள முடியும். அவருடைய கணவர் இதை நன்றாக அறிவார். அதற்கேற்றார்போல் தான் நடந்து கொள்வார். என்னிடத்தில் சில பெண்கள் சொன்னது நினைவிலிருக்கிறது. அவர்களின் கணவர் மேற்கு நாடுகளில் வசித்த போது அவர்களின் குணம் நன்றாக இருந்தது. பின்னர் இஸ்லாமிய
நாடுகளுக்கு மாறிய போது அவர்கள் தங்களை மாற்றி கொண்டு அடிக்க ஆரம்பித்தார்கள். பெற்றி மஹ்மூதின் "Not without My daughter" என்ற நூலை படித்து பாருங்கள். முஸ்லிம் ஆண்களை
திருமணம் செய்த மேற்கத்திய பெண்களை பற்றிய கதையை விவரிக்கிறது.

ரோச் சொன்னார் " அவருடைய கணவன் அல்லது வேறு யாராவது அவரை அடித்தால் திருப்பி அடிப்பேன்" அவர் வாழ்வது அமெரிக்க என்பது நினைவிலிருக்கட்டும். இந்த காபிர் நாடு உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்திருக்கிறது. பாதிக்கப்படுகின்ற முஸ்லிம் பெண்கள் உங்களை விட அறிவில் குறைந்தவர்களல்ல என்பதை தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள். உங்களை போன்ற பாதுகாப்பு விதிகள் அவர்களுக்கு இல்லை. அவர்கள் முஸ்லிம் நாடுகளில் வாழ்கிறார்கள்.

ரோச் சொன்னார் " எங்குமே எந்த பிரதியுமே பெண்ணை அடிப்பதை வலியுறுத்துவதில்லை." ஆக அவர் வசனம் 4:34 பற்றி என்ன நினைக்கிறார்? இந்த மறுப்பு என்பது மனத்தடை. இதை மேலும் பிரதிபலிக்கும் விதத்தில் அவர் சொன்னார் " இன்றைய உலகில் எங்குமே உண்மையான இஸ்லாமிய சமூகமோ அல்லது ஷரியா சட்டமோ அமல்படுத்தப்படவில்லை." ஆச்சரியமாக
இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு பிறகு 1.2 பில்லியன்
முஸ்லிம்கள் 57 முஸ்லிம் நாடுகளில் ஷரியாவை
நடைமுறைப்படுத்தாத விஷயம். இது மாதிரியான கற்பனாவாத இஸ்லாமிய முறை எங்குமே வழக்கில் இல்லை என்ற முடிவுக்கு வருவது நியாயமானதா?

இல்லை ரோச். சில மனிதர்களின் பின்னோக்கு விளக்கம் காரணமாக
நான் இஸ்லாம் மீது குற்றம் சுமத்தவில்லை. நான் விமர்சிப்பதே முஹம்மது என்ன சொன்னார் அல்லது செய்தார் என்பதை தான்.

ரோச் உங்களுக்கு ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக தான் இருக்கும். முஹம்மது உண்மையில் எந்த அர்த்தத்தில் மனைவியரை அடிப்பது பற்றி சொன்னார். தரபா என்பதற்கு ஒருபோதும் மெல்லிய குச்சி என்பதல்ல அர்த்தம். அது அடிப்பதை குறிக்கிறது. அடிப்பது என்பது டிரம் வாசிப்பது போன்று இசைப்பதல்ல. நீங்கள் இதை
மிகுதியாக மறைத்து உங்கள் தலையை மணலில் புதைக்க முடியும். ஆனால் உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது. அடிப்பது அபுதாவூத் ஹதீஸ் நூலிலும் விவரிக்கப்படுகிறது (11.2142) முஹம்மது சொன்னார் " ஒரு மனிதனிடத்தில் ஏன் உங்கள்
மனைவியை அடித்தீர்கள் என்று கேட்கப்படமாட்டாது."

மேலும் முஅத்தாவில் ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது. ஒரு பெண் தன்னுடைய கணவன் அடிமைப்பெண்ணுடன் உறவு கொள்வதை தடுக்க நினைத்தார். இந்த விஷயம் உமரிடத்தில் சென்ற போது அவர் சொன்னார். அவளை அடியுங்கள். நீங்கள் விருப்பமானதை செய்யுங்கள்." (முஅத்தா 30.2.13)

ஒரு தடவை முஹம்மது தன்னுடைய வார்த்தைக்கு கீழ்படியாத பெண்ணை அடிப்பதற்கு கைஓங்கினார். (புகாரி 7.63.182)

ரோச் சொன்னார் " என்னை யாரேனும் அடித்தால் திருப்பி அடிப்பேன்.". அவர் அடிபடும் மற்ற முஸ்லிம் பெண்கள் பற்றி
நினைக்கவில்லை. அவர்கள் எல்லாம் மதிப்பற்றவர்கள்,
பொறுப்புணர்வு இல்லாதவர்களாக கருதப்படுகின்றனர்.
அவள் மதிப்பற்றவள், பொறுப்பற்றவள் என்பதை யார் தீர்மானிக்கிறார்.? கணவன். யார் தண்டனை அளிக்கிறார்? கணவன். ஆக கணவனே வாதியாக இருக்கிறான். இது அநீதியாக
தெரியவில்லையா? எப்படி பெண் யாராலும் அடிக்கப்படமாட்டாள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும்?

இன்னும் நான் கேட்கிறேன் அடிப்பது என்பது சரியான செயலா? பொறுப்பற்றவள் என்று நாம் அவளை மிருகங்களுக்கு இணையாக நடத்த முடியுமா? இக்காலத்தில் நீங்கள் மிருகங்களை கூட அடிக்க முடியாது. ஆனால் முஸ்லிம்கள் பெண்ணை அடிப்பதில் எந்த தவறும் இல்லை என்கிறார்கள்.

ராபர்ட் ஸ்பென்சர்:- மல்லா மற்றும் ரோச்சினுடைய வாதங்கள் மிக மிக பொறுப்பற்றதும், போலியானதும், தவறானதுமாகும். இதற்கான பதில் ஒரு புத்தகம் அளவிற்கு நீளும். உதாரணமாக பெண் அத்தியாயத்தை எடுத்துக்கொள்வோம். இஸ்லாம் பெண்ணை குறைத்து மதிப்பிட்டால் பெண் என்ற அத்தியாயமே வந்திருக்காது. ஆண் அத்தியாயமே வந்திருக்கும். என்னுடைய விஷயங்களை லாவகமாக மறைத்து விட்டார்.
நானும், அலி சினாவும், குர் ஆன் வசனங்களை
சூழ்நிலைக்கு மாறுபட்டு எடுத்துக்கொள்கிறோம் என்று மல்லா
சொன்னார். மேலும் மல்லா குர் ஆனிய வசனம் 4:11:12 யை
குறிப்பிட்டு அவ்வசனம் எவ்விதத்திலும் பெண்ணின் மதிப்பு அவளின் சகோதரனின் மதிப்பில் பாதியல்ல என்பதை குறிக்கவில்லை என்று சொன்னார். அது நிதி பொறுப்பு சம்பந்தப்பட்டது என்றார். அவருடைய வாதமே " இந்த வேறுபாடு என்பது பாத்தியதை அல்ல. அது நிதி பொறுப்பு சம்பந்தப்பட்டது. உண்மையை
சொன்னால் இஸ்லாமிய உலகில் பெண் அவளை எக்காரணமானாலும் தற்காத்து கொள்ள தான் வேண்டும்.

33:50 வசனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அலி சினா
குறிப்பிட்டது மாதிரி " ஒரு பெண் போரின் போது கைதியாக
பிடிக்கப்பட்டால் அவளின் எஜமானன் அவளை புணர முடியும்.
இதற்கு மல்லா "இது எவ்விதத்திலும் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்டதல்ல. இதற்கு அலி சினா எவ்விதமான மொழிபெயர்ப்பை பயன்படுத்துகிறார் அல்லது விளக்கத்தை சொல்கிறார்?என்றார். ரொம்ப நல்லது. நான் முஸ்லிம்களால் அதிகம்
மதிக்கப்படும் யூசுப் அலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை பயன்படுத்துகிறேன். " O prophet ! We have made lawful to thee thy wives to whom thou hast paid their dowers; and those whom right hand possesses out of the prisioners of war whom allah has assigned to thee " வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு முஸ்லிம் அவன் மனைவியோடும், போர்க் கைதியோடும் உறவு
கொள்ள முடியும். நான் மல்லாவை கேட்கிறேன். அடிமைகளுடன் உறவு வைக்க அவர்களின் சம்மதம் தேவை என்ற ஒரு வசனத்தையாவது நீங்கள் காட்ட முடியுமா?. நிச்சயமாக இல்லை.
மிக முக்கிய கருத்துருவே அடிமையின் சம்மதம் என்பது நினைத்து பார்க்க முடியாதது. சம்மதம் இல்லாமல் கொள்ளும் உறவே
பலாத்காரம்.

வசனம் 2:223 மூலம் மல்லா மிக துல்லியமாக யூத எதிர்ப்பு
விஷயத்தை பதிவு செய்கிறார். அதாவது பிறக்கும் குழந்தை
கோணலான கண்ணோடு பிறக்கும் என்ற மூடநம்பிக்கை பற்றியது. அவருடைய விளக்கம் ஒன்றுமேயில்லை. இவ்வசனம் பெண்ணை
கணவனின் உடைமை என்கிறது. அவன் விரும்பும் போது பயன்படுத்த முடியும். இது பல ஹதீஸ்கள் மூலம்
உறுதிபடுத்தப்படுகிறது. " அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் 'ஒருவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் அதை மறுக்கும் பட்சத்தில் வானவர்கள் விடியும் வரை சாபமிடுகின்றனர். (புகாரி 54:460)

மேலும் மனைவியை அடிப்பது பற்றிய விஷயத்தில் மல்லா
இஸ்லாமிய எதிரிகள் தங்கள் கண்களை குர் ஆன் வசனங்களை
விவரிக்கும் ஹதீஸ்களிலிருந்து விலக்கி வைக்கிறார்கள் என்றார். மற்றவர்கள் சொல்வது போலவே இவரும் பல் துலக்கும் குச்சி என்று சொல்லப்படும் ஹதீஸ் ஒன்றை காட்டினார். உண்மையில் இந்த ஹதீஸ் முஸ்லிம்களால் அதிகம் நம்பப்படும் புகாரி, முஸ்லிம், மற்றும் அபுதாவூத் ஆகிய எதிலுமே காணப்படவில்லை. தப்ஸீர்
விரிவுரையாளராகிய ராசி இதை பற்றி எங்குமே சொல்லவில்லை. துரதிஷ்டவசமாக இந்த குச்சி மரபு மேற்கத்திய தாக்குதலுக்கு பயந்து சில இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் 4:34 வசனத்தில் அடிப்படையில் இஸ்லாமிய உலகில் பெண் உடல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறாள்.
ஆனால் மல்லா இதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. மாறாக இவ்விவாதத்திலிருந்து திசை திரும்பி யூத, கிறிஸ்தவம் பற்றி பேசுகிறார். கிறிஸ்தவத்தில் பெண் முதலில் கணவனுக்கு அடிபணிய வேண்டும். பின்னர் தான் இறைவனுக்கு. நாங்கள் இஸ்லாமிய உலகில் பெண் சித்திரவதைக்குள்ளாவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். யூத, கிறிஸ்தவம் பற்றி அல்ல. ஆனால் யூத, கிறிஸ்தவர்கள் யாருமே மேற்கண்ட பைபிள் வசனத்தை நடைமுறைப்படுத்தவில்லை. நான் சொல்ல விரும்புகிறேன். இஸ்லாமிய உலகில் எல்லோருமே பல் துலக்கும் குச்சியால் மனைவியை அடிக்கிறார்கள். சொல்ல முடியுமா? முடியாது.

மேலும் மல்லா சொன்னார் "பெண் அதிகமானோர் சொர்க்கம் புகுவதற்கு காரணமாவாள். (ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஜன்னா 4/2179). நான் கண்டதில் அவர் சொல்ல வந்தது இது தான்.
அபுஹுரைரா அறிவிக்கும் ஹதீஸ் ஒன்று அதே நூலில்
காணப்படுகிறது. சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் கூட்டத்தினரின் முகங்கள் பெளர்ணமி நிலா மாதிரி இருக்கும். அதற்கு அடுத்ததாக வருபவர்களின் முகங்கள் வானின் நட்சத்திரம் மாதிரி இருக்கும். மேலும் அங்கு நுழையும் ஒவ்வொருவரும் இரு மனைவியோடு நுழைவார்கள். எல்லோருமே மனைவியுடன் தான்
வருவார்கள்." மேலும் குர் ஆன் மனைவியை கணவனின் பணியாள் என்று தான் சொல்கிறது. ஆக இது தெளிவாக அவர்களின் வேலையாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மல்லா நான் குறிப்பிட்ட பாகிஸ்தானில் கணவனால் மனைவி துன்புறுத்தப்படுவதை பற்றி சொன்னார். நாம் ஹிந்து மனிதன் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மற்றும் கிறிஸ்தவன் அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதற்காக இஸ்லாத்தை குறை கூற முடியுமா? என்றார். இது மல்லாவின்
பொருத்தமற்ற வாதம். ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மனைவியரை நடத்தும் விதம் பற்றி மேற்கண்ட வசனத்துடன் (4:34)
நாம் ஒப்பிட முடியாது. ஆனால் முஸ்லிம் ஆண்கள் இந்த வசனத்தை தங்கள் செயல்பாட்டை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.
ரோச் சொன்னார். " இன்று எங்குமே ஷரியா சட்டத்தை உண்மையாகவும், முழுமையாகவும் அமல்படுத்தக்கூடிய இஸ்லாமிய நாட்டை பார்க்க முடியாது. ஆகவே எப்படி ஒருவர் ஷரியா சட்டத்தை விமர்சிக்க முடியும்? இது எனக்கு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவரை நினைவுபடுத்துகிறது. அவரை கல்லூரியில் வைத்து எனக்கு தெரியும். அவர் சோவியத் ரஷ்யா தகர்வின் எக்காரணத்தையும் ஏற்று கொள்ள மறுத்தார். எங்குமே உண்மையான கம்யூனிஸ்ட்கள் இல்லை என்றார். சவூதி அரேபியாவும், ஈரானும் ஷரியா அரசுகள். மேலும் அநேக இஸ்லாமிய
நாடுகள் ஷரியா சட்டத்தின் பெரும்பகுதிகளை ஏற்றுக்
கொண்டிருக்கின்றன. இது வெளிப்படையானதும், எல்லோருக்கும் தெரிந்ததுமாகும். அந்த நாடுகளில் உள்ள எல்லா முல்லாக்கள்,
காஜிகள், கல்வியாளர்கள் ஆகியோர் இதற்கு வெளியில் தான் இருக்கிறார்களா?

ரோச் மீண்டும் இவ்விவாதத்தை லாவகமாக திசைதிருப்ப பார்க்கிறார். கிறிஸ்தவத்தை பற்றியும், கிறிஸ்தவ பாதிரியார்களை பற்றியும்
நிறைய மேற்கோள்களை காட்டினார். கத்தோலிக்க,
புராட்டஸ்டண்ட், மற்றும் வைதீக கிறிஸ்தவர்கள் எவருமே இதை தங்கள் வாழ்வின் அதிகாரபூர்வ விஷயமாக கடைபிடிக்கவில்லை. அதை புனித சொற்களாக பேணவில்லை. அதை மற்ற இஸ்லாமியர்களின் பெண்ணிய ஒடுக்கு முறை போன்ற ஒன்றாக ஆக்கவில்லை.

நான் ஹதீஸ்களின் அறிவியல் அதன் தரம் பற்றி நன்றாகவே
அறிந்துள்ளேன். முஸ்லிம்கள் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ் நூல்களை நம்பகமானவை என்று பொதுவாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ரோச் நான் சொன்னவை நம்பத்தகாதவை, துல்லியமற்றவை என்று சொன்னால் அவர் அதை பற்றி நன்றாக
அறிந்திருந்தால் கடந்த கால, தற்கால இஸ்லாமிய மைய நீரோட்ட சிந்தனையை அவர் பிரித்து பார்க்கட்டும்.

ரோச் 4:34 மனைவியை அடிப்பது பற்றிய வசனத்தை எல்லோரும் தவறாக மொழிபெயர்க்கிறார்கள் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் அவர் மட்டும் 'தரபா' என்பதற்கு மெல்லிய குச்சி என்கிறார்.? இது குர் ஆனை மொழிபெயர்த்தவர்கள் எல்லாம் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதாக சொல்ல தோன்றுகிறது. அலி, ஷாகிர், அஹ்மத், பக்ரி, தாவூத், அல்-ஹிலால் போன்ற எல்லோருமே அடிப்பது என்று தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ரோச் உண்மையை மறைப்பதற்கு பதிலாக அதை ஏற்றுக்கொண்டு நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.

ரோச்:- அபாயகரமான வெறுப்பிற்கு ஒருவர் என்ன செய்ய முடியும்? - தல்கீன்

நான் இவர்களுக்கு பதிலளிப்பதற்காக சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பது கூட தெரியாமல் குழம்பி போயிருக்கிறார்கள். தவறான கருத்துக்களையே ஆதாரமில்லாமல் ஆதாரம் என்ற பெயரில்
வெளியிடுகின்றனர். இந்த விவாத களத்தில் நுழைந்தவர்கள் தாங்கள் தான் படித்தவர்கள். தங்களுக்கு தான் எல்லாம் தெரியும். அவர்களிடம் தான் உண்மை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். சினா
நீங்கள் மத்தியகிழக்கில் இருந்திருக்கிறீர்கள் என்பதற்காக
இஸ்லாமிய வல்லுநர் என்று நினைக்க வேண்டாம்.

நான் சினாவிடத்திலும், ஸ்பென்சரிடத்திலும் கத்தோலிக்க
பாதிரியார்களின் பெண் பற்றிய பார்வைக்கு பதிலளிக்க வேண்டுகிறேன். பெண்ணை பற்றிய இரு இஸ்லாமிய கல்வியாளர்களின்
பார்வை பற்றி இங்கு சொன்னார்கள். அது முற்றிலும் அவர்களின் சொந்த பார்வையாகும். அதற்கும் இஸ்லாமுக்கும் சம்பந்தமில்லை. நான் அந்த கல்வியாளர்கள் பற்றி கேள்விபட்டதே இல்லை. இனி யாராவது அதை ஒரு ஆதாரமாக கருதினால் உடனடியாக நான் அவர்களின் சிந்தனையை மாற்ற முயல்வேன்.

நீங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தை உதாரணமாக காட்டுவதன் மூலம் உங்கள் அறியாமையை நிரூபித்திருக்கிறீர்கள். இஸ்லாத்தில் ராஜ பரம்பரை முறைக்கு அனுமதி இல்லை. அவர்கள் புனித மெக்கா நகரின் ஆளுகைக்குட்பட்டிருந்த போதும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும், சொத்துக்களையும் பார்த்து இஸ்லாமிய உலகம் சிரிக்கிறது. நாங்கள் அரசர் பஹ்தை மோசடி பஹ்த்
என்கிறோம். காரணம் அவர் நாட்டு மக்களை வஞ்சிக்கிறார்.
குறிப்பாக பெண்களை. அவர்கள் முன்பு கார் ஓட்டுவதற்கு அனுமதியில்லை. ஆனால் இப்போது அது பரிகசிக்ககூடிய ஒன்றாக மாறி
விட்டது.
நான் உங்களிடத்தில் மற்ற முஸ்லிம்களை, அல்லது உங்கள் அடுத்தவர்களை, உங்களின் உடன் பணியாளர்களை பார்க்க வேண்டுகிறேன். அவர்கள் மனைவியை அடிக்கவில்லை.
மிருகங்களாக நினைக்கவில்லை. அவர்களின் நம்பிக்கை அவ்வாறு நினைக்க அனுமதிக்கவில்லை. நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் பாதிப்பினால்
பொய்யையே வாதமாக கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உங்களைமேற்கொண்டு இஸ்லாத்தை பற்றி அதிகம் படிப்பதற்கு தடையாக வேண்டாம்.

எந்த இஸ்லாமிய பெண்ணாவது தான் ஒடுக்கப்படுகிறேன் என்று
நினைத்தால் அல்லாஹ் அவர்களுக்கு உதவுகிறான். மரணத்தில் கூட. என்னை சிலர் விமர்சிப்பது இந்த விஷயத்தில் தான். அவள் கணவனிடம் அடி வாங்குவதை விட இறப்பதே மேல் என்பதை
நான் விமர்சிக்கிறேன். அவர்கள் அடி வாங்கட்டும் என்று சொல்கிறேன் என்கிறார்கள். ஆனால் நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன். குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் அமெரிக்க பெண்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்? "உன் சாதனங்களை கட்டு கட்டவும். குழந்தைகளுடன் எங்காவது சென்று விடு" இது பெண் இறப்பதற்கு சமமாகும். அவர்களின் கணவர்கள் அவளை எங்காவது சென்று தொலைக்க சொல்கிறார்கள். இது அமெரிக்க நிலை. ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு ஒரு வேளை இந்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக அவள் சொர்க்கம் புகுவாள்.
பெண்கள் அவர்களுக்கு இஸ்லாம் அளித்திருக்கக்கூடிய
உரிமையை அறிவதுடன் இஸ்லாமிய சட்ட திட்டங்களை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கான பாதுகாப்பு
நிலைபாடாகும். எந்த ஆண் அல்லாஹ்வை நேசிக்கிறாரோ அவர் தன் மனைவியை நேசிப்பார். நீங்கள் குர் ஆனை நன்றாக கற்று அதன் விரிவுரையை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து
கொண்டு இஸ்லாமின் உண்மையான அர்த்தம் பற்றி தெரிந்து
கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் புரிதலை விரிவுபடுத்தி
கொள்ளுங்கள். இங்கு விவாதிக்கப்பட்ட நல்ல விஷயங்கள்
அல்லாஹ்விடம் இருந்து வந்தவை. மோசமான விஷயங்கள் ஷைத்தானிடமிருந்து வந்தவை. அல்லாஹ் உங்களுக்கு இதை
வாசிப்பதற்கும், நேர்மையாக கவனிப்பதற்குமான கருணையை தந்தருளட்டும். இஸ்லாத்தில் உங்கள் சகோதரி ஜூலியா ரோச்.

மல்லா:- சினா மீண்டும் என்னுடைய சிறிய தர்க்கத்தை புரிந்து கொள்ளாமல் சில பெயரளவு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்ணிய அநீதியை சொல்லி இஸ்லாத்தை குற்றம் சாட்டுகிறார்.
மீண்டும் இது ஒன்றுமில்லை என்று சொல்லப்பட்டது. நான் ஏற்கனவே சொன்னது போன்று மூன்றாம் உலக நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு என்ன நிகழ்கிறது? சரி. மேற்கத்திய நாடுகளை எடுத்து கொள்ளுங்கள். குறிப்பாக அமெரிக்கா.
நான் இங்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். குர் ஆன் மற்றும்
ஹதீஸ் பற்றிய என்னுடைய புரிதலானது சில கல்வியாளர்களின் கருத்தாகும். ஆக சமத்துவம் பற்றி நான் சொன்னது எல்லாம் வெறும் என்னுடைய சொந்த கருத்தல்ல. நான் குறிப்பிட்ட அந்த கல்வியாளர்களுடைய கருத்து. முக்கிய பிரச்சினையே பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அவர்கள் மதத்தை பற்றிய
விழிப்புணர்வற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கு சிறிய ஆதாரமே அங்குள்ளவர்களில் குறைந்த அளவினரே ஐவேளை தொழுகையை நிறைவேற்றுகின்றனர். நீங்கள் எகிப்திய முஸ்லிம்களை எடுத்துக்
கொள்ளுங்கள். அங்கும் இதே நிலைமை தான். சினா இஸ்லாம் மற்றும் குர் ஆனை மதிப்பிடுவது இப்படிப்பட்டவர்களின்
நடத்தையை அடிப்படையாக வைத்து தான். அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய எவ்வித புரிதலுமில்லை. நான் அப்படிப்பட்ட முஸ்லிம்கள்
மீது தான் குற்றம் சாட்டுகிறேன். அவர்களின் அறியாமை அவர்களை அவ்வாறு செய்ய தூண்டுகிறது. அங்குள்ள அரசுகளும் அவர்களுக்கு மதக்கல்வி அளிப்பதில்லை.

நிச்சயமாக எல்லோருக்கும் சமமான வெகுமதி அளிக்க முடியாதது
தான். வெகுமதி என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட
செயல்பாட்டை பொறுத்திருக்கிறது. அதே மாதிரி
ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட வரம்பை பொறுத்திருக்கிறது. ஆக அரசரின் எதிர்பார்ப்புக்கும், ஒரு காவலாளியின்
எதிர்பார்ப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. மிக நெருங்கிய
உதாரணமாக அமெரிக்காவின் GRE மற்றும் SAT தேர்வுகளை எடுத்துக்கொள்வோம். அதில் கேட்கப்படும் கேள்விகள் கடினமானவை. அந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அதன் கடின தன்மையை பொறுத்து மதிப்பிடப்படுகின்றன.சினாவும் ஸ்பென்சரும் சொர்க்கத்தில் ஆண்களுக்கு மட்டும் தான் இஸ்லாம் வெகுமதி அளித்திருக்கிறது. பெண்களுக்கு அல்ல என்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி எடுக்கப்பட்ட வசனத்தின் மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார்கள். அல்லாஹ் சொல்கிறான். " அவர்களுக்கு அவர்கள்
விரும்புவது அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும். (அல்-ஜுமர் 34 ஆம் வசனம்)ஆக ஆணானாலும், பெண்ணானாலும் ஒவ்வொருவரும் அவர்களுக்குரியதை அடைவர். இதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

குர் ஆன் எளிமையானதும், பின்பற்றத்தக்கதுமாகும்.
யார் நம்பிக்கையாளர்களோ அவர்கள் இந்த உண்மை தங்கள் இறைவனிடமிருந்து என்று நம்புவார்கள். யார்
நம்பிக்கையற்றவர்களோ அவர்கள் இதன் மூலம் இறைவனின் உள்நோக்கம் என்ன என்று கேள்வி கேட்பார்கள். மேலும் இது தவறானதென்றும், தவறாக வழிகாட்டுகிறது என்றும்
விமர்சிப்பார்கள். அவர்கள் கலகக்காரர்கள், நம்பிக்கையற்றவர்கள்.

பெயரளவு முஸ்லிம் நாடுகளில் இஸ்லாம் முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது புரிந்து கொள்ள கடினமானது. ஆனால் இது மொத்தத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.சினா உதாரணம் காட்டிய வசனம் 30:21 என்பது சந்தேகத்திடமின்றி அதன் அர்த்தம் திரிபு செய்யப்பட்டதாகும். இறைவன் இதில் ஆண் பெண் ஆகிய இருவரையும் குறிப்பிடுகிறான். இருவர் சார்பாகவும் பேசுகிறான்.

சினாவுக்கு நான் ஞாபகமூட்டுகிறேன். குர் ஆனில் எங்கெல்லாம் ஆண் பால் ஒருமை குறிக்கப்படுகிறதோ அது அடிப்படையிலே இரு சாராருக்கும் பொதுவானது தான். சில விதிவிலக்கான வசனங்களில் மட்டும் தான் பெண் பால் தனியாக குறிக்கப்படுகிறது.
ஆனால் சினா இந்த மொழியியல் விதியை திரும்ப திரும்ப புறக்கணிக்கிறார்.

சினா ஆண் பெண்ணுக்காக படைக்கப்பட்டிருக்கிறான். பெண் ஆணுக்காக படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற வசனத்தை பற்றி
சொன்னார். ஆனால் இது கேளிக்கைக்கான வசனம் அல்ல. மாறாக இது அன்பு, அமைதி, கருணை ஆகியவற்றை குறிக்கிறது. சில தப்ஸீர்கள் (ராஸி) இந்த வசனத்தை குறிப்பிட்டு ஆதமிலிருந்து
ஏவாள் படைக்கப்பட்டதாக சொன்ன விஷயத்தை சினா இங்கு
சொன்னார். ஆனால் இது எவ்வகையிலும் ஆண் பெண்ணை விட உயர்ந்தவன் என்பதை குறிக்கவில்லை. ஆதம் மண்ணிலிருந்து தான் படைக்ப்பட்டார். உடனே நாம் மண் ஆணை விட சிறந்தது என்பதாக கொள்ள முடியுமா?

சினா சொன்ன அறிக்கையில் சபாவித் வம்ச காலத்து தத்துவவாதியான அல்-ஸிராசின் கருத்தை குறிப்பிட்டார். அல்ஸிராசை என்னை போன்றே பெரும்பாலான சுன்னிகள் அதிகாரபூர்வ நபராக கருதவில்லை. சினா இந்த ஸிராசை தவிர குர் ஆனுக்கு வேறு எந்த
அதிகார பூர்வ விளக்கத்தையும் கண்டுபிடிக்கவில்லை.
ஆனால் உண்மை என்னவென்றால் பழைய மற்றும் புதிய சுன்னி விரிவுரையாளர்கள் யாருமே குர் ஆன் பெண்ணை மிருகத்திற்கு இணையாக வகைப்படுத்துகிறது என்று சொல்லவில்லை.

சகோதரி ரோச் சொன்னார். நடப்புலகில் எங்குமே உண்மையான இஸ்லாமிய சமூகமில்லை. இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் எங்குமே முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதற்கு சினா சொன்னார் " இது ஆச்சரியமாக இருக்கிறது. 1400 வருடங்களுக்கு பிறகு 1.2
பில்லியன் முஸ்லிம்கள் யாருமே 57 நாடுகளில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தவில்லையா?
ஆங்கிலத்தில் "Does not exist now " என்பதற்கு 1400 வருடங்களாக நிலவில் இல்லை என்பதல்ல பொருள். இது நூற்றாண்டுகளாக
நிலவில் இருந்தது.. தற்போது இல்லை என்பது பொருள்.

வெளிப்படையாக பார்த்தால் இஸ்லாமிய வரலாறு மற்றும் செழுமை எல்லாவகைகளிலும் மறக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சினா இஸ்லாம் பற்றி திரும்ப திரும்ப சொல்லப்பட்ட கருத்தாக்கங்களை வெட்டி ஒட்ட வைக்கிறார். (cut & paste) அவர் ஒரு ஹதீஸை பற்றி சொன்னார். " பெண், கழுதை , நாய் ஆகியவற்றால் ஆணின் தொழுகை முறியும்" என்றார். புகாரியில்
சொல்லப்பட்ட இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதல்ல.
இப்னு ஹஜ்ர் பத்ஹில் பாரியில் சொல்கிறார். " புகாரியில் இது
சொல்லப்பட்டது எதற்காகவென்றால் தொழுகையில் ஆண் பெண்ணை கண்டால் அத்தொழுகை செல்லும் என்பதற்கு தான்.
உம்மு சல்மா அவர்கள் ஆயிஷா சொன்னதை குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் மாதவிடாய் காலத்தின் போது நபியை கடந்து சென்றிருக்கிறார்கள் மற்றும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். இறைவனின் தூதர் அம்மாதிரியான எந்த ஒன்றையும் சொல்லவில்லை. அலி மற்றும் இப்னு உமர் ஆகியோர் ஆயிஷா மற்றும் உம்மு சலமா சொன்னதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். (பார்க்க அல்-ஜுரைஜானி அல் காமில் பி துஆபா 2:397 , 7:104)

சினா இஸ்லாத்தில் கணவன் குடும்பத்தில் நிதிபொறுப்புடையவன். மனைவி கணவனுக்கு சேவை செய்யும் பணியாளர் மாதிரி கருதப்படுகிறாள் என்றார். மேலும் சொன்னார் எப்படி ஒரு ஏழை கணவன் அவளின் உணவிற்கு, உடைக்கு, மருத்துவத்திற்கு, இருப்பிடத்திற்கு, போக்குவரத்திற்கு, குழந்தை வளர்ப்பிற்கு செலவு செய்ய முடியும்?

மேற்கண்ட இரு விஷயங்களுமே இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பற்றி விவரிக்கவில்லை. கணவனின் பொறுப்பு என்பது குடும்ப மற்றும் மனைவியின் தேவையை பூர்த்தி செய்வது தான். ஆணுக்கும் பெண்ணுக்குமான சமத்துவத்தை பற்றி பேசும் பொழுது பொறுப்புகள் இருவருக்குமே சமமாக இருக்கிறது. பொறுப்பில்
யாருமே ஒருவரை ஒருவர் குறைந்தவர் இல்லை என்கிற போது புறநிலையான மனம் இஸ்லாம் அம்மாதிரியான வர்க்க பேதத்தை போதிக்கவில்லை என்ற முடிவுக்கே வரும்.
சினா சொன்னார் " நல்ல திருமண முறை என்பது கணவனும் மனைவியும் எல்லாவிதத்திலும் சம பங்காளிகளாக இருப்பது தான்.
நல்லது. மனைவி கணவனிடத்தில் கேட்கிறாள். ஏன் நான் குழந்தையை வயிற்றில் சுமக்க வேண்டும். ஏன் நீங்கள் சுமக்க கூடாது? ஏன் நான் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் ?. நீங்கள்
ஊட்டக்கூடாது.? இது கேட்பதற்கு அருவருப்பாக தோன்றவில்லையா? அது மாதிரி தான் இதுவும். சினாவின் அறிக்கைகள் எல்லாமே பொய்யானது. இஸ்லாம் இம்மாதிரியான விஷயங்களில் மிகுந்த விழிப்பாக இருக்கிறது. கணவனும் மனைவியும் அவரவர் கடமைகளில் வித்தியாசப்பட்ட போதும் கூட சம பங்கு
வகிக்கின்றனர்.

சினா பெண்களின் விவாகரத்து உரிமையை பற்றி சொன்னார். (இதை இல்லை என்று முந்தைய விவாதம் ஒன்றில் மறுத்திருந்தார்). இதை அவர் முற்றிலுமாக திசைதிருப்புகிறார். எந்த புறநிலை மனமும் இதை மறுக்காது. கணவன் திருமண உறவிற்காக
மனைவிக்கு பரிசத்தொகை அளிக்க வேண்டும். அவள் கணவனுடன் வாழ்க்கையை தொடர விரும்பவில்லையென்றால் அதை திருப்பி அளிப்பது நியாயமான ஒன்றே. இதில் எவ்விதமான அநீதியை சினா எதிர்பார்க்கிறார் என்றே தெரியவில்லை. மேலும் குலாஉவின் போது பெண்ணுக்கு ஆண் ஜீவானம்சம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை பற்றி சினா சொன்னார். ஆனால் இது எந்த
ஹதீஸிலும் சொல்லப்படவில்லை. சினா எங்கிருந்து இதை சொல்கிறார்.?

மேலும் அபூதாவூதிலுள்ள ஹதீஸை பற்றி சினா சொன்னார். " ஓர் ஆண் ஏன் தன் மனைவியை அடித்தான் என்று கேட்கப்படமாட்டாது." இது பலகீனமான ஹதீஸ் என்று பல அறிஞர்களால்
சொல்லப்பட்டிருக்கிறது.

நபி ஒரு பெண்ணை அடிப்பதற்கு கை ஓங்கிய கதையைப்பற்றி
சினா சொன்னார். அந்த ஹதீஸை சினா சாதாரணமாக திரித்து
விட்டார். அதாவது To Pat என்பதற்கு பதிலாக To beat என்றாக்கி விட்டார். இது இவர்கள் இந்த விவாதத்தில் எவ்வளவு தூரம்
அறிவுபூர்வமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
இஸ்லாத்திற்கு எதிரான சப்பைக்கட்டுகளை ஹதீஸிலிருந்து இவர்கள் எவ்வாறு கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

அபூஉஸைத் அறிவிக்கிறார்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ஸாத் என்றழைக்கப்படும் பேரீத்தப்பழ தோட்டத்திற்கு சென்றோம். அந்த தோட்டத்தை
நெருங்கியவுடன் நாங்கள் அதன் வாயிலில் உட்கார்ந்து கொண்டோம். நபி(ஸல்) உள்ளே போனார்கள். உமைமா பின்த் அபுநுமான்
பின் ஷரகில் என்பவருக்கு சொந்தமானது அந்த தோட்டம்.
அங்கிருந்து பனீ ஜான் என்ற குலத்தை சார்ந்த ஜனூய்யா என்ற பெண் வெளிவந்தாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் உன்னையே எனக்கு தந்து விடு (திருமணம் மூலம்) என்றார்கள். அதற்கு அவள் இளவரசிகள் ஒரு சாதாரண ஆணுக்கு தந்து விட முடியுமா? உடனே நபி(ஸல்) அவளை தட்டிக்கொடுத்தார்கள். உடனே அவள் அமைதியானாள். அவள் சொன்னாள் " நான் உங்களிடமிருந்து இறைவனிடத்தில் அடைக்கலம் தேடுகிறேன். அதற்கு நபி (ஸல்)
சொன்னார்கள். நீ யாரிடம் அடைக்கலம் தேடுகிறாயோ அவர் உனக்கு அடைக்கலம் தருவார். பின் எங்களிடம் திரும்பி வந்து "ஓ அபூஉஸைத் அவளுக்கு இரு வெள்ளை கோடிட்ட புடவைகளை அளித்து அவளிடம் குடும்பத்தாரிடம் செல்ல வை என்றார்கள்." (புகாரி 7:63:182)

மேலும் அத்தியாயம் அந்நிஸா வை பற்றி சொல்லும் போது இறைவன் நம்பிக்கை கொண்ட பெண்ணை பற்றி சொல்லி விட்டு அவர்களின் சமத்துவத்தை பற்றி சொல்கிறான். (4:124) ஆக இந்த அத்தியாயத்திலிருந்து இஸ்லாம் பெண்ணை இரண்டாம் தரமானவளாக பார்க்கவில்லை என்ற எளிதான முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.

பெண்ணுக்கான பொருளாதார பாதுகாப்பு மற்றும் பாத்தியதை
விஷயத்தை பொறுத்தவரை நான் ஏற்கனவே சொன்னது போன்று பெண்ணுக்கான பொருளாதார பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய கணவன் அதற்கு பொறுப்பாவான். அவளுக்கு கணவன் இல்லாத பட்சத்தில் அவளின் தந்தை, சகோதரன் அல்லது தந்தையின் சகோதரன் ஆகியோர் பொறுப்பாளர்கள்.
அவளுக்கு குடும்பம் இல்லாத பட்சத்தில் அரசானது அவளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஆக இஸ்லாத்தில் பெண் அவளை சுயமாக பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை.
அவள் வெளியில் வேலைக்கு சென்று கூடுதல் பணம் சேர்க்க
விரும்பினால் அவள் அவ்வாறே சேர்க்க முடியும். இது அவளுடைய பாத்தியதையோடு எவ்விதத்திலும் முரண்படாது.
ஆக அவள் விவாகரத்து ஆகும் சமயத்தில் அவளுக்கான
பொருளாதார தேவையை அவளின் ஆண் உறவினர்கள் அல்லது அரசு ஏற்க வேண்டும். அவளிடம் பணம் இல்லாத சமயத்தில் அவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதற்கு அவர்களின் கடமையாகும்.
வசனம் 33:50 யை பொறுத்தவரை ஸ்பென்சரின் ஆட்சேபம் ஒன்றுமேயில்லை. ஸ்பென்சரின் மொழிபெயர்ப்பு எவ்விதத்திலும்
பாலியல் பலாத்காரத்தை பற்றி குறிக்கவில்லை. அடிமைப்பெண்னின் பாலியல் உறவிற்கான சம்மதம் பற்றியது அது. அதில் ஸ்பென்சர் சொன்ன 24:33 வசனத்தை பற்றி ஜாபிர் இப்னு அப்துல்லா அறிவிக்கிறார்கள். " முஸைகா என்ற அடிமை பெண் வந்து சொன்னாள். என்னுடைய எஜமான் என்னை வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைக்கிறாள். இதற்கு பதில் சொல்லும் விதத்தில் தான் 24:33 வசனம் இறங்கியது. (அபுதாவூத் கிதாபுல் தலாக் 12 எண் 2304)
புகாரியில் மேலும் ஒரு ஹதீஸ் காணப்படுகிறது "நபி (ஸல்) ஒரு பெண்ணை நெருங்கியது அவள் சொன்னாள். நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட விரும்புகிறேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
சொன்னார்கள். உனக்கு யார் பாதுகாவலாக இருக்கிறாரோ அவரிடம் நீ பாதுகாப்பு தேடுகிறாய்". இது உறவுக்கு அப்பெண்ணின் சம்மதமின்மையையே தெளிவாக காட்டுகிறது. அவளை நபி(ஸல்) அவர்கள் நிர்பந்திக்கவுமில்லை." (புகாரி 7:63. 182)

ஸ்பென்சர் யூத எதிர்ப்பு வசனத்தைப் பற்றி குறிப்பிட்டார். அதாவது பிறக்கும் குழந்தை கோணலான கண்களோடு பிறக்கும் என்பது மூடநம்பிக்கை என்றார். அவரை நான் பாராட்டுகிறேன். மேலும் ஸ்பென்சர் பல்குச்சி பற்றி நான் என்ன சொன்னேன் என்பதை மறைத்து விட்டார். மேலும் நபி (ஸல்) தர்பன் கைர முபாரிஹ் என்பதற்கு பற்குச்சி என்று தான் விளக்கினார். அதை இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்களும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஹஜ் எண் 2137)

ஸ்பென்சர் மூன்றாம் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களின் பிரச்சினையை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த பார்க்கிறார். சரியான
புரிதல் இல்லாததே அதற்கு காரணம். ஆனால் அவர் மற்ற மதங்களை அதே கண்ணோட்டத்தோடு பார்க்க தயங்குகிறார்.

அமெரிக்காவின் 1995 ஆம் ஆண்டு தேசிய குடும்ப வன்முறை மற்றும் நீதித்துறை புள்ளி விபரம் தெளிவாக அங்குள்ள
நிலைமைகளை காட்டுகிறது.

12 வயதுக்குட்பட்ட பெண்கள் 1992 -1993 கால கட்டங்களில் ஐந்து மில்லியன் பேர் ஆண்டொன்றிற்கு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள். 12 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஐந்து இலட்சம் பேர் பலாத்காரத்திற்கும், 3.8 இலட்சம் பேர் உடல்ரீதியான வன்முறைக்கும் ஆளாகிறார்கள்.

பெண்கள் மீதான வன்முறைகளில் 29 % தனிநபரால்
நிகழ்த்தப்படுகிறது. (கணவர், முன்னாள் கணவர், ஆண் நண்பர், முன்னாள் ஆண் நண்பர்).
எப்.பி.ஐ அறிக்கை படி 1990 ல் 5328 பெண்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

குறைந்த பட்சம் 16% குடும்ப தம்பதிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் 40 % தம்பதிகள் கடும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
1993 ஆண்டு அறிக்கையின் படி 34% ஆண்கள் மனைவியை கணவன் அடிப்பதை நேரில் பார்த்த சாட்சிகளாக இருக்கின்றனர். 14% பேர் வன்முறை நேரில் பார்த்தவர்களாகவும் உள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் மருத்துவமனைகளில் அவசர வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட பெண்களை பார்க்கும் போது அதற்கான
காரணம் என்பது குடும்ப வன்முறையே. 20% முதல் 30% பெண்கள் அவ்வாறாக தான் இருக்கின்றனர். வ் அவர்களில் 10% பேர்
கர்ப்பிணி பெண்கள். மேலும் 10% அவர்களின் குழந்தைகள்
பாதிப்புக்குள்ளாகின்றன.

19 மற்றும் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் பத்தாயிரம் டாலருக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள் தான் இம்மாதிரியான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். மேற்கண்ட புள்ளி
விவரங்களெல்லாம் கிறிஸ்தவ நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில் பெண்களின் நிலைமையை காட்டுகிறது. இதற்காக நாம்
இஸ்லாத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?
பெண்களின் இந்த பிரச்சினைகளுக்கு பின்னால் இஸ்லாம் அல்ல
காரணம். இஸ்லாமிய புரிதல் குறைபாடே. இஸ்லாம் இமாதிரியான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குகிறது.

அலி சினா:- ரோச் அவருடைய பதிலுரையை என்னையும், ஸ்பென்சரையும் தீவிர மதவெறுப்பாளர்கள் என்று சொல்லி
ஆரம்பித்தார். நாங்கள் சொல்ல முடியும். மதக்குருடர்கள், இனக்குருடர்கள், பாலியல் குருடர்கள். அவர்களுக்கு குருடர்களாக தெரிகிறோம். ஆக நாங்கள் முஸ்லிம்களை நேசிக்கிறோம். அதே
மாதிரி கிறிஸ்தவர்களை, யூதர்களை, நாத்திகர்களை நேசிக்கிறோம். அதே நேரத்தில் சில கருத்தியல் போன்று மனித சமூகத்தை
நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையற்றவர்கள் என்று பிரித்து
பார்க்கவில்லை. அவர்களின் நம்பிக்கையை வைத்து நான் வெறுக்கவில்லை. தீவிர வெறுப்பான நம்பிக்கை முறையை நான்
விரும்பவில்லை. நான் அறியாமையை, வன்முறையை,
காட்டுமிராண்டித்தனத்தை, பாரபட்சத்தை வெறுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ரோச் சொன்னார் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.

2002 மார்ச் மாதம் ஈரான் பார்லிமென்ட் குற்றவியல் விசாரணகளில் கட்டாய வாக்குமூலம் மற்றும் சித்திரவதைகளை தடுப்பதற்கான மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதே ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி ஈரானின் மூத்த மதக்குருக்கள் 12 பேர் அடங்கிய கவுன்சிலில் இது நிராகரிக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் பணி என்பது
பார்லிமென்டால் இயற்றப்படும் சட்டங்கள் இஸ்லாத்திற்கு உட்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்வது. அதன் படி கவுன்சில் இந்த மசோதாவை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு முரணாக இருக்கிறது என்றது.

ஒரு வேளை ரோச் ஈரான் உண்மையான இஸ்லாமிய நாடு இல்லை என்று சொல்லலாம்.

புகாரியில் ஒரு சம்பவம் வருகிறது. நோயால் நலிவுற்ற ஒரு கூட்டம் நபியிடம் வந்து கேட்டது " அல்லாஹ்வின் தூதரே எங்கள் பசிக்கு உணவும், உறைவிடமும் தாருங்கள். அவர்கள் நலமானதுடன்
நபியிடம் சொன்னார்கள். மதினாவின் காலநிலை எங்களுக்கு ஒத்துவரவில்லை. அதனால் நபி அவர்களை அல் ஹரா என்ற இடத்திற்கு சில பெண் ஒட்டகங்களை கொடுத்து அதன் பாலை குடியுங்கள் என்று அனுப்பி வைத்தார். அவர்கள் நலமானதும் நபியின் செம்மறியாடுகளை கொன்று ஒட்டகங்களை விரட்டி விட்டார்கள். இதனால் நபி சில மனிதர்களை அனுப்பி அவர்களை பிடித்து வரச் சொன்னார். அவர்கள் பின்னர் பிடித்து வரப்பட்டு அவர்களின் கைகள் கட்டப்பட்டு கால்கள் வெட்டப்பட்டன. பின்னர் கண்கள் இரண்டும் சூடான இரும்பு கம்பிகளால் சூடு போடப்பட்டது. அவர்களில் சிலரை பார்க்கும் போது தாங்கள் இறப்பது வரைக்கும் நாக்கால் தரையை நக்கிக்கொண்டிருந்தார்கள். (புகாரி 7,7158)

வேறொரு நிகழ்ச்சியில் முஹம்மது கினானா என்ற யூதத்தலைவருடைய மனைவியான சபியாவை வலுக்கட்டாயமாக
திருமணம் செய்து கொண்டார். (தபரி)

ரோச் சொன்னார் " எந்த முஸ்லிம் பெண்ணாவது தான் ஒடுக்கப்படுகிறோம் என்று உணர்ந்தால் அவள் அல்லாஹ்விடம் உதவி தேடலாம். ரோச் உங்கள் அறிவார்ந்த உபதேசத்திற்கு
நன்றி. அநேக பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்றால் சட்டத்தின் மூலம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவத்தோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பதை தான் விரும்புகிறார்கள். வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமும் எல்லோருக்கும் பொதுவானது. மேற்கத்திய காபிர்
நாடுகளில் பெண்கள் அவர்களுக்கான உரிமைகளோடு
வாழ்கிறார்கள். இறைவனிடம் கையேந்தவில்லை.
அவரின் அற்பத்தனமான அறிக்கையின் மூலம் எல்லாவற்றையும் மறைக்கிறார். அவர் சொன்னார் " சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். நான் பெண்கள் கொடுமைகள் அனுபவிப்பதை விட இறப்பதே மேல் என்று சொல்கிறேன்." ஆனால் நான் கேட்கிறேன் " குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் அமெரிக்க பெண்களின் நிலைமை பற்றி என்ன சொல்ல? எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் மற்ற முஸ்லிம் அல்லாத நாடுகளை பொறுத்தவரை முஸ்லிம் நாடுகளுடன் ஒப்பிடும் போது இது ஒன்றுமேயில்லை. இரண்டாவது விஷயம் வன்முறையால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண்கள் சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தை அணுகி பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முடியும். நான் பயப்படுகிறேன். ஒரு இஸ்லாமிய நாட்டில் இது நடைபெற்றால் அவர்களின் பாதுகாப்பு என்பது கனவாகத்தான் இருக்கும். ஷரியா சட்டங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாதகமாக இல்லை. இஸ்லாமிய நாடுகளில் அவர்களுக்கான பாதுகாப்பு இல்லை. இரு வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று அவர்கள் அடிமைத்தனத்தை சகித்து கொள்ள வேண்டும். அல்லது மரணத்திற்காக இறைவனின் உதவியை நாட வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களை
பொறுத்தவரை ரோச் சொன்னார் " குறைந்த பட்சம் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்பட்டால் சொர்க்கம் புகுவார்கள்.
இது எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. கணவனால்
பாதிக்கப்படும் பெண்கள் அடிமையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ரோச் முந்தைய விவாதத்தில் சொன்னார். "அவர் ஆண்களால் கொடுமைக்குள்ளானால் அதை எதிர்த்து போராடுவேன்" ஏன் ரோச்? உங்களுக்கு
சொர்க்கம் செல்ல ஆர்வம் இல்லையா? இதற்காக நரகத்திற்கா செல்ல விரும்புகிறீர்கள்? வெளிப்படையாக உங்கள் தத்துவத்தின் படி மரணமே சிறந்தது. ஆனால் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு மட்டும் தான்.

மல்லா சொன்னது குர் ஆன், ஹதீஸ் பற்றிய அவரின் விளக்கங்கள் எல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து .அந்த கருத்துக்கள் குர் ஆன் மற்றும் ஹதீஸூடன் உடன்படுகிறதா? நீங்கள் முழுமையாக குர் ஆன், ஹதீஸை படித்திருக்கும் போது ஏன் அவர்களின் கருத்தை மேற்கோள் காட்ட வேண்டும்.

நான் கவனித்தவரை நீங்கள் எப்போதும் முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம்களை குற்றஞ்சாட்டி வந்திருக்கிறீர்கள். முஸ்லிம் நாடுகளில் உள்ளவர்கள் மதத்தை பற்றிய விழிப்புணர்வில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றீர்கள். முஹம்மது காட்டிய குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவை பெண்ணிய வன்முறைக்கு ஆதரவானவை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வசனம் 2:223 (பெண்கள் ஆண்களின் விளைநிலம்) வசனம் 2:228 (அந்தஸ்து பற்றியது)
வசனம் 4:11-12 (சாட்சி பற்றியது) 4:34 (பெண்ணை அடிப்பது பற்றியது) பெண்கள் ஆண்களை விட அறிவில் குறைந்தவர்கள், மற்றும் பெரும்பான்மையினோர் நரகத்தில் செல்வர். இது போன்ற
விஷயங்கள் பெண்ணை அதிகமாக மதிக்க கற்றுத்தருமா?

நான் சில முஸ்லிம்களின் நடத்தையை வைத்து இஸ்லாத்தை
விமர்சிக்கிறேன் என்றீர்கள். நான் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. அப்படி செய்யமாட்டேன். நான் முதலில் மேற்கோள்
காட்டுவது குர் ஆன் மற்றும் ஹதீஸின் வாக்கியங்கள். பின்னர் தான் முஸ்லிம்களிடத்தில் அதன் தாக்கம் பற்றி குறிப்பிடுகிறேன். என்னுடைய அளவுகோல் என்பதே நபி என்ன சொன்னார் மற்றும் செய்தார் என்பதாகும். மிகவும் வெளிப்படையாக குர் ஆன் மற்றும் ஹதீஸுகளில் உள்ள பெண்களுக்கு எதிரான விஷயங்களுக்கு
மாற்றாக இவர்கள் அமெரிக்கா மற்றும் மதசார்பற்ற நாடுகளில் உள்ள நிலைமையை குறிப்பிடுகிறார்கள். இந்த மனோபாவமே
தீவிர மனத்தடையாகும்.
நீங்கள் சொன்னீர்கள். அல்லாஹ் சொல்கிறான் "அவர்களுக்கு அவர்கள் விரும்புவது இறைவனிடத்தில் இருக்கிறது. இதுவே
நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்." (39:34)
ஆக இதில் குறிப்பிடப்பட்ட சொர்க்கம் என்பது குழந்தைகளுக்கான அதீத உலகம் போன்றது. அங்கு நாம் எதை விரும்பினாலும் அது நமக்கு சொந்தமானது. மேலும் குர் ஆனிய வசனங்கள் சொர்க்கம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கூர்லீன்கள் ஆண்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரிக்கிறது. (நான் பயன்படுத்திய Whore என்ற ஆங்கில
வார்த்தையானது hoor என்ற பாரசீக சொல்லை அடிப்படையாக கொண்டதும் , நபி பயன்படுத்திய வார்த்தையுமாகும். - அலி சினா) ஒரு வேளை உங்களுக்கு தேவை 75 அல்லது 750 கூர்லீன்கள். உங்கள் விருப்பமாக முடியுமா? அப்படியென்றால் ஏன் முஹம்மது ஒரு இடத்தில் 2 என்றும் மற்றொரு இடத்தில் 75 என்றும்
குறிப்பிட்டார். ஏன் இது நம்பிக்கையாளர்களின் விருப்பத்திற்கு
விடப்படவில்லை. இது தெளிவாகவே முரண்பாட்டை தான்
காட்டுகிறது. முஹம்மது நபி சொர்க்கத்தில் பாலாறு, தேனாறு,
ஒயினாறு போன்ற நான்கு ஆறுகள ஓடுவதாக சொல்லியிருக்கிறார்.
இது என்னை பொறுத்து இருக்கும் வகையில் எனக்கு பலவகைப்பட்டபழச்சாறு வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்.?எனக்கு தண்ணீர் பாட்டிலில் வேண்டும். நான் அந்த முறையை விரும்பவில்லை. இப்படி இருக்க ஏன் குர் ஆன் தேவைகளை நம்பிக்கையாளரின் வரம்பில் கொண்டு வருகிறது?

மல்லா நான் 30:21 வசனத்தை தவறாக அர்த்தம் செய்கிறேன் என்று என்னை குற்றம் சாட்டினார். ஆனால் நான் குறிப்பிட்டது பலதரப்பட்ட முஸ்லிம் அறிஞர்களின் பார்வையை தான். அவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு ஆண் பெண்ணை ஜமாய்த்தலை தான்
விளக்கமாக குறிப்பிடுகிறார்கள். இஸ்லாமிய நாடுகளில்
இவ்வழிகளில் பெண்கள் நடத்தப்படுவதற்கு அவர்கள் உடன்பட்டிருக்கிறார்கள். தெளிவான, எளிதான புத்தகமான குர் ஆன் எப்படி அநேக முஸ்லிம்களால் தவறாக புரிந்து
கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை மல்லாவால் விளக்க முடியுமா?
இறுதியாக மேற்கத்தியர்களுக்கு சமாதான இஸ்லாம் பற்றி
போதிக்கும் உங்களால் ஏன் முஸ்லிம்களின் தவறான புரிதலை சரி செய்ய முடியவில்லை.?

நான் சொன்னேன். இஸ்லாத்தில் கணவன் மனைவிக்கான உறவு முறை என்பது முதலாளி-தொழிலாளி முறை போன்றது.
உண்மையில் இது எஜமான் - அடிமை உறவுமுறையை போன்றதாகும். அதற்கு மல்லா வீடு என்பது ஒரு நிறுவனம் என்பதை உறுதி செய்தார். அவள் வீட்டில் வாழ்கிறாள். குழந்தைகளும் வீட்டில்
வாழ்கின்றன. விவாகரத்து சமயத்தில் அவள் குழந்தைகளை கணவனிடம் ஒப்படைத்து விடலாம். அவன் அந்த குழந்தையின் உணவிற்கு, உடைக்கு, மருத்துவசெலவிற்கு, போக்குவரத்திற்கு பொறுப்பாவான். இதை ஓர் அடிமையின் எஜமானன் செய்யமாட்டாரா?

மல்லாவும் ரோச்சும் இஸ்லாத்தில் பாலியல்ரீதியாக பெண்ணை
திருப்திப்படுத்துவது ஆணின் கடமை என்றார்கள். இது எனக்கு செய்தியாக தெரிகிறது. நடைமுறை என்ன என்பதை பார்ப்போம். ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் என்பதாக வைத்துக்
கொள்வோம் (சில முஸ்லிம்கள் மனைவி விஷயத்தில் வரம்பு
இல்லை என்பதாக நம்புகிறார்கள்.) ஆக ஒருவன் நான்கு தடவை உறவு வைத்துக்கொள்வதாக கருதுவோம். ஆக ஒரு மாதத்தில் அவன் 12 தடவை உறவு கொண்டால் அவனின் ஒரு மனைவி
மாதத்தில் மூன்று தடவை மட்டுமே இன்பம் அடைவாள். இந்த
விஷயமே அடிப்படையற்றது. மேலும் சில இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் பெண்ணுறுப்பை சிதைப்பது என்ற ஹதீஸால்
தாக்கமுற்றிருக்கிறார்கள். அவ்வாறு சிதைக்கப்படும் பட்சத்தில் அவளால் ஆர்கசம் அடைய முடியாது. கணவனின் செயல்பாடு
நன்றாக இருந்தால் கூட. ஆக முஸ்லிம்கள் கருப்பை வெள்ளையாகவும், வெள்ளையை கருப்பாகவும் மாற்றுகின்றனர்.

மல்லா சொன்னார் " இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் சமமாக
நடத்தப்படுகின்றனர். காரணம் இருவருக்குமே சம பொறுப்புகள் இருக்கின்றன. அவர் உரிமையை பொறுப்புகளோடு சேர்த்து குழப்புகிறார். ஆம். எங்களுக்கு தெரியும். இஸ்லாத்தில் பெண்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கணவனுக்கு பணிவிடைகள் செய்வது, அவள் நலமாக இல்லாவிட்டாலும்
பாலியல் தேவையை பூர்த்தி செய்வது இவைகள் தான்.
ஹதீஸ் குறிப்பிடுகிறது. " கணவன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் அதை மறுக்கும் பட்சத்தில் வானவர்கள்
விடியும் வரை அவள் மீது சாபமிடுகின்றனர்."
வேறொரு ஹதீஸில் அறிவிக்கப்படுகிறது " கணவன் தன்
மனைவியை அவன் ஆசையை பூர்த்தி செய்ய வருமாறு
அழைத்தால் அவள் அடுப்படியில் இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டும். (மிஸ்காத்துல் மஸாபிஹ் no :61)
இஸ்லாத்தில் மனைவிக்கு கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. ஆனால் எங்கே அவளுடைய உரிமைகள்? அவளுக்கு
சொந்தமாக ஏதாவது இருக்கிறதா? ஆக அரிதான உரிமைகளை தவிர இஸ்லாத்தில் பெண்ணுக்கு நிறைய பொறுப்புடமைகள்
இருக்கின்றன.

மல்லா நான் சொன்ன விஷயத்தைப் பற்றி சொன்னார். " நல்ல
திருமண முறை என்பது கணவனும் மனைவியும் எல்லா விஷயத்திலும் சம பங்காளிகளாக விளங்குவது தான்." அவர் சொன்னார் " அப்படியென்றால் கணவனிடத்தில் மனைவி ஏன் சொல்ல கூடாது? ஏன் நான் குழந்தையை என் வயிற்றில் சுமக்க வேண்டும். நீங்கள் சுமக்க கூடாது?"
இதைக்கேட்டு நான் பயந்து விட்டேன். என்னுடைய நண்பர் குழம்பி விட்டார். மீண்டும் பொறுப்புகளை உரிமையுடன் சேர்த்து
குழப்புகிறார். நிச்சயமாக ஆணும் பெண்ணும்
வித்தியாசப்பட்டவர்கள். உயிரியல் ரீதியாக, உணர்ச்சி பூர்வமாக, உளவியல் ரீதியாக வேறுபட்டவர்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கான சொந்த பலத்தை கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களை பங்காளிகள் என்றழைக்கிறோம். எந்த பங்குடைமையானலும் அதிலுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் இயைந்தவர்கள். உதாரணமாக நீங்கள் முதலீடு செய்கிறீர்கள். நான் தொழில் நுட்பமும், மனித வளத்தையும் தருகிறேன். ஆக நாங்கள் இணைந்து கூட்டு ஸ்தாபனத்தை உருவாக்கிறோம். இதில் கூட்டுடைமை என்பது ஒருவரிடத்தில் உள்ளது மற்றொருவரிடத்தில் இல்லை. ஆனால் இது தேவைகள் அடிப்படையிலானது.

திருமணத்தில் கணவனும் மனைவியும் அவர்களின் ஆற்றலையும், பலத்தையும் பொறுத்து பங்களிப்பு செய்கிறார்கள். நாம் இங்கே
உரிமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். கூட்டுடமை
ஸ்தாபனத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள். நான் மனித வளத்தை தருகிறேன். எல்லாம் உங்கள் பெயரில் இருக்கும் போது நீங்கள் உத்தரவிட்டால் நான் கீழ்படிகிறேன். உங்களுக்கு என்னை அடிக்க உரிமை இருந்தால் அதன் பெயர் கூட்டுடமையல்ல. அடிமைத்தனம். காரணம் வருடங்களாக உனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நீ சம்பளம் எதுவும் தருவதில்லை. எனக்கான சேமிப்பு எதுவும் இல்லை. நீ என்னை பராமரிக்க மட்டுமே செய்கிறாய். எனக்கான உணவையும், உடையையும் தருகிறாய். ஆகவே நான் உனக்காக உழைக்கிறேன். இப்போது நான் வயதாகி விட்டேன். ஆகவே என்னை நீ வெளியேற்றி விட்டாய். இப்போது எனக்காக ஒன்றுமேயில்லை. என்னால் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். அது அல்லாஹ்விடம் என்னை எடுத்து விடு என்று சொல்வதே. இது கூட்டுடமையல்ல. பணி கூட அல்ல. மாறாக அடிமைத்தனம்.

குலாஉ (விவாகரத்து) சமயத்தில் பெண் அவளின் மஹரை திருப்பி கொடுப்பதில் என்ன அநீதி இருக்கிறது என்று மல்லா கேட்டார்.
இதில் அநீதியான பகுதியே பெண் தன் மஹரை இழப்பது தான். கணவன் நினைத்தால் மனைவியை விரட்டலாம். அவளை
அதிகமாக அடித்து அவளுடைய உரிமையை பறித்து அவளாகவே விவாகரத்து வாங்கும் சூழலை ஏற்படுத்தலாம். அவள் அவளின் செல்வத்தை மட்டும் இழக்கவில்லை. மாறாக கணவனிடமிருந்து எதை பரிசாக பெற்றாளோ அதையும் இழக்க வேண்டும். நான் உறுதியாகவே இதை அநீதியாக நம்புகிறேன். ஆனால் மல்லா?

முஹம்மது நபிக்கும் பனூ ஜனிய்யா குலத்தை சார்ந்த ஜனிய்யாவுக்கு இடையில் நடந்த சம்பவம் ஹதீஸ் கிரந்தங்களில் தெளிவாக இருக்கிறது. முஹம்மது நபி பாலியல் ரீதியாக தான் அவளை அணுகி உன்னையே எனக்கு பரிசாக தந்து விடு என்றார். அதில் பயன்படுத்தப்பட்ட 'ஹப்பா' என்ற சொல்லுக்கு திருமணம் என்பது பொருளல்ல. மாறாக பரிசு என்பது தான் பொருள். இது ஆண் பெண்ணுக்கு பரிசை பொருளாகவோ அல்லது பணமாகவோ
பொட்டல வடிவில் தருவது என்பதாகும். மற்ற ஹதீஸ்கள் இந்த
விஷயத்தைப்பற்றி தெளிவாக குறிப்பிடுகின்றன. ஒரு ஹதீஸ் ஒரு சம்பவத்தைப்பற்றி குறிப்பிடுகிறது " ஒரு அரபு பெண்
முஹம்மதுவின் தந்தையான அப்துல்லாவை நெருங்கி என்னை
பரிசாக எடுத்துக்கொள் என்றாள். அப்போது அப்துல்லா அதை மறுத்தார். பின்னர் திரும்பி வரும் வழியில் அவளை சந்தித்த போது அவரின் விருப்பத்தை தெரிவித்தார். அதற்கு அவள் மறுத்து விட்டு சொன்னாள் " முன்னர் உங்கள் நெற்றியில் ஒளி இருந்தது.
இப்போது அது மறைந்து விட்டது. நீங்கள் வேறொரு பெண்ணுக்கு அளித்திருக்கிறீர்கள். ஆகவே திரும்பி செல்லுங்கள் என்றாள்''. (முஸ்லிம் 8:3253) இந்த ஹதீஸ் அக்காலத்தில் இருந்த தாராள
பாலுறவு நடைமுறையை காட்டுகிறது. முக்கியமாக இந்த
நடைமுறையானது ஹப்பா அரபுகளிடம் வழக்கத்தில் இருந்ததை
காட்டுகிறது. எங்கள் மொழியில் இதை விபசாரம் என்கிறோம்.

ஜனிய்யா விஷயத்தில் முஹம்மது கேட்டது ஹப்பா தான். அதற்கு தான் அவள் "இளவரசிகள் சாதாரண மனிதனுக்கு கொடுப்பார்களா? என்றாள். பின்னர் முஹம்மது அவளை தட்டிக்கொடுத்தார். எந்த
நியாயமான மனிதர்கள் என்ன நடந்தது என்பதை பற்றி சிந்திப்பார்களா? இதில் திருமணம் என்று அடைப்புக்குறிக்குள் இடப்பட்ட வார்த்தை ஹதீஸ் மொழிபெயர்ப்பாளருடையது. முஹம்மது அவளின் தோளை தட்டிக்கொடுத்த போது அவள் அமைதியானாள்.
வெளிப்படையாகவே அவள் அதிர்ச்சியானாள். பெண்கள் திருமண விருப்பத்திற்காக எப்போதும் அதிர்ச்சி அடைவதில்லை. பாலியல் உறவு விருப்பத்திற்காக தான் அதிர்ச்சி அடைவார்கள். அதன்
பிறகு அவள் சொன்னாள் " நான் உங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட விரும்புகிறேன். இது தெளிவாக காட்டுவது என்னவென்றால் Patting வன்முறையான இயல்பில் இருந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் இந்த விஷயத்தை லாவகமாக
கையாள்வதற்காக மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். அதனால் தான் அவள் "அல்லாஹ்விடம் நான்
பாதுகாவல் தேட விரும்புகிறேன்" என்றாள். இந்த முழுக்கதையும் ஆணின் மதிப்பை தெளிவாக உணர்த்துகிறது.

மல்லா சொன்னார். "முஸ்லிம் பெண்களுக்கான பொருளாதார
பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது." அவளின் கணவன் அதற்கு பொறுப்பாவான். கணவன் இல்லாதபட்சத்தில் தந்தையோ அல்லது சகோதரனோ அல்லது தந்தையின் சகோதரனோ
பொறுப்பாளர்கள். இவர்களும் இல்லாத பட்சத்தில் அரசு அதற்கு
பொறுப்பாகும். ஆக இஸ்லாமிய பெண் தானே தற்காத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

என்னுடைய எளிமையான கேள்வியே ஏன் இஸ்லாமிய பெண்ணுக்கு
பொருளாதார விஷயத்தில் சுதந்திரம் இல்லை. மற்றவர்களை
சார்ந்திருக்க வேண்டிய நிர்பர்ந்தத்திற்கு ஆளாகிறாள்? அவள் தன்மானத்துடன் சுதந்திரமாக வாழ வகுக்க வேண்டும். அவள் ஏன் வாழ்நாள் முழுவதும் ஆணின் கருணையை எதிர்பார்த்துக்
கொண்டிருக்க வேண்டும். அவளுடைய சகோதரனுக்கு சொந்தமாக குடும்பம் இருந்தால்? அவளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
சகோதரிகளும், ஒரு சகோதரனும், வயதான தந்தையும் இருந்தால்? ஏன் பெண் அடிமைத்தனமாக இருக்க வேண்டும்.? ஏன் அவள்
சிறைவாழ்க்கை அனுபவிக்க வேண்டும்.? ஏன் அவள் சுதந்திரமாகவும், சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராகவும் இருக்க கூடாது? ஏன் அவள் வாழ்நாள் முழுவதும் கவுரவத்தை, மானத்தை இழந்து ஒட்டுண்ணியாக வாழ வேண்டும்? யார் இதன் மூலம் பலன் அடைகிறார்?

மல்லா இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை
நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க புள்ளி
விபரங்களை எடுத்துக்காட்டினார். இந்த தர்க்கம் அநேக
முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது புகழ்பெற்ற "நீ கூட அப்படி தான் " கொள்கையை சார்ந்தது. அவர்கள் தங்களின்
நிலைபாட்டை நியாயப்படுத்துவதற்கு அவசரமாக இதை
கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆம். உண்மையாக எந்த நாடுமே வன்முறைக்கு விதிவிலக்கு கிடையாது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. ஆனால்
இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழும் போது அது குற்றமாக கருதப்படுவதில்லை. அது பொதுவான
நடைமுறையாக இருக்கிறது. குற்றத்திற்கு தண்டனையோ அல்லது குற்றங்கள் பதிவு செய்யப்படலோ இல்லை. காரணம் அது சட்டத்திற்கு எதிரான விஷயம் அல்ல. மேற்கத்திய நாடுகளில் வன்முறை என்பது குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாடுகளின் புள்ளி விபரங்களை காட்டினீர்கள்.அதே மாதிரி இஸ்லாமிய நாடுகளின் புள்ளி விபரங்களையும் காட்டுங்கள்.

நாம் இந்த விவாத அரங்கின் மூலம் இஸ்லாம் ஒரு தீவிர பெண்ணிய வெறுப்பைக் கொண்ட மதம் என்பதை நிறுவியிருக்கிறோம்.
இஸ்லாம் பெண்ணை மிருகத்தை விட கீழாக கருதுகிறது. திருமண உறவின் மூலம் அவள் உரிமைகளை இழந்து கணவனின் வீட்டில் அடிமையாக வாழ வேண்டும். ரோச் வெளிப்படையாகவே முஸ்லிம் பெண்களின் விடுதலை என்பது மரணம் தான் என்பதை
ஒத்துக்கொண்டார். ஆக நீங்கள் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ரோச் உபதேசிக்கிறார். "இறைவனிடம் துஆ செய்யுங்கள். அவன் உங்களை விடுதலை செய்வான்." ரோச் முஸ்லிம் அல்லாத நாட்டில் வாழ்ந்து கொண்டு அந்த சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு இவ்வாறு கூறுகின்றார். அவர் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக போராடத்
தேவையில்லை என்கிறார். அவருக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. இந்த விவாதத்தின் மூலம் நான்வருகின்ற முழுமையான முடிவு இது தான்.

ஸ்பென்சர்:- ரோச் வெறுப்பு பற்றிய தல்கீனின் மேற்கோளோடு ஆரம்பித்தார். இஸ்லாம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை சொல்லும் போது உங்களுக்கு வெறுப்பாக தெரிகிறது.
நானும் சினாவும் வெறுமனே கேள்வியை போட்டு விட்டு பதிலை சொல்லவில்லை. எங்களுடைய வாதமே இஸ்லாமிய மூலங்களிலிருந்து தான். ஹாஸ்டன் பல்கலைகழக முஸ்லிம் மாணவர் சங்க வலைத்தளத்தில் ஹதீஸ் பற்றிய சில கேள்விகளும் அதற்கான
பதிலும் காணகிடைக்கிறது.

கேள்வி:- நாங்கள் ஹதீஸ்கள் கேட்டிருக்கிறோம். அதாவது
இஸ்லாத்தில் பெண்கள் அறிவிலும், மதத்திலும் குறைபாடுடையவர்கள். இது பெண்ணை இழிவுபடுத்துவது மாதிரி உள்ளது. ஆகவே அந்த ஹதீஸின் அர்த்தம் குறித்து விவரிக்கவும்.

பதில்:- நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். " பெண்களின் அறிவிலோ அல்லது மதத்திலோ நான் எந்த குறைபாட்டையும்
பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில்அறிவில் சிறந்த ஆண்கள் உங்களை விட ஞானமாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே எங்களுடைய அறிவின் குறைபாடு என்பது என்ன? இரு பெண்களின் சாட்சி என்பது ஒரு ஆணின் சாட்சிக்கு சமம் என்பது தான் அது. அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மதத்தில் குறைபாடுடையவராக இருக்கிறோம்என்பது என்ன? அதற்கு அவர் " மாதவிடாய் காலத்தில் நீங்கள் தொழவோ , நோன்பு வைக்கவோ இயலாது என்பது தான் அது".

மேற்கண்ட ஹதீஸ் மூலம் நபி பெண்களின் நினைவு திறன் குறைவாகவும், ஒரு பெண்ணின் சாட்சிக்கு மற்றொரு பெண் வர வேண்டும் என்பதன் மூலமும் பெண் அறிவில் குறைபாடுடையவள் என்ற
உண்மையை வெளிப்படுத்தி விட்டார். இது ஆண் பெண்ணை விட எல்லாவிதத்திலும் உயர்ந்தவன் என்பதை காட்டவில்லையா? இது பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அல்லாஹ் சொல்கிறான்

" ஆண் பெண்ணுக்கு பாதுகாவலனும், பராமரிப்போனுமாவான். ஏனெனில் அல்லாஹ் அவர்களில் சிலரை மேம்படுத்தி வைத்திருக்கிறான். அவர்கள் அவர்களின் வருமானத்திலிருந்து செலவழிக்கின்றனர். (அந்நிஸா 34)

ஆனால் அவள் நிறைய விஷயங்களில் ஆணை விட மேலாக இருக்கிறாள். எத்தனை பெண்கள் அநேக ஆண்களை விட அறிவிலும், திறத்திலும், மதத்திலும் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்த விவாத அரங்கின் நோக்கம் பெண்களுக்கான உரிமை
பற்றியது. மல்லாவும் ரோச்சும் இதை முற்றிலுமாக திரித்து,
மாற்றி, மறுத்து திசைதிருப்புகின்றனர். தங்கள் கவனத்தை
கிறிஸ்தவத்தின் மீது திருப்புகின்றனர். ஆக முஸ்லிம் பெண்ணின் எதிர்காலம் என்பது நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறது.

நானும் சினாவும் குறிப்பிட்ட இஸ்லாமிய அறிஞர்களை ரோச் உண்மையான இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லை என்றார். நான் இஸ்லாத்தை பற்றி 1980 முதலே தீவிரமாக படித்து வருகிறேன்.
நான் குறிப்பிட்ட எவருமே பிரதிநிதிகள் இல்லாமல் இல்லை.
நானோ சினாவோ அமெரிக்க ஊடகத்தின் அல்லது அரசாங்கத்தின் பிரதிநிதியாக குர் ஆன் வசனங்களை குறிப்பிடவில்லை.

மல்லா 24:33 விபசாரம் பற்றிய வசனத்தைப் பற்றி குறிப்பிட்டு அடிமைப்பெண்கள் பலாத்காரத்திற்குட்படுத்தப்படவில்லை என்றார். ஆனால் இந்த வசனம் அவர் எதிர்பார்த்ததை அளிக்கவில்லை. குர் ஆன் வசனம் 33:50 ஆணுக்கு அடிமைப்பெண்ணுடன் உறவு
கொள்வது பற்றி குறிப்பிடுகிறது. வசனம் 24:33 வெறுமனே ஒரு
விஷயம் அல்ல . அது ஆணுக்கான அனுமதி. மல்லா இதன் வழி எதையுமே நிறுவ முடியாது. அவர் குறிப்பிட்ட ஹதீஸ் எதுவும் மேற்கண்ட விஷயத்திற்கு விளக்கமாக அமையவில்லை. எங்குமே உறவு கொள்ள அடிமைப்பெண்ணின் சம்மதம் அவசியம் என்று
குறிப்பிடப்படவில்லை. சினா குறிப்பிட்ட நிகழ்வின் படி நபி அடிமைப்பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே அவளுடன் உறவு கொள்ள ஆணை அனுமதித்திருக்கிறார். மேலும் அபுதாவூதில்
குறிப்பிடப்படுகிறது. " அல்லாஹ் மீதும் இறுதி நாளின்
மீதும் நம்பிக்கை கொண்ட ஆணுக்கு போரில் பிடிக்கப்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது சட்டபூர்வமானதல்ல. ஆனால் எந்த ஹதீஸுமே இப்படி இல்லை "ஆணுக்கு அடிமைப்பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளுடன் உறவு கொள்வது சட்டபூர்வமானதல்ல."மல்லா இங்கு சில தவறான கருத்துக்களை முன்வைத்தார். முஹம்மது நபி தன்னை பின்பற்றுபவர்களிடத்தில் தங்கள் மனைவியை மெல்லிய குச்சியால் அடிக்க வேண்டும் என்று சொன்னார்" என்றார். இது எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
மல்லா குறிப்பிட்டது ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஹஜ் 2137.
அதில்"மிஸ்வாக்" என்ற வார்த்தை எங்குமே குறிப்பிடப்படவில்லை. நான் மல்லா மற்றும் மற்றவர்களிடம் சவால் விடுகிறேன். மெல்லிய குச்சி என்ற வார்த்தை எந்த நம்பகமான ஹதீஸ் கிரந்தங்களில் இருக்கிறது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?
அவரின் அமெரிக்க பெண்கள் பற்றிய தரவின் மூலம் அவர்
மீண்டும் இவ்விவாதப்புள்ளியை விட்டு நகர்கிறார். இவர்களும் மற்றவர்களும் நழுவல் பந்து விளையாட்டு மூலம் இஸ்லாமிய பெண்களின் துயரங்களை மறைக்கின்றனர். இஸ்லாமிய பெண்
தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருகிறாள்.

பிரண்ட் பேஜ்:- மல்லா, ரோச், அலி சினா, ராபர்ட் ஸ்பென்சர் உங்கள் நேரம் கடந்து விட்டது. பயனுள்ள இவ்விவாதத்தில் கலந்து கொண்டதற்காக நன்றி. மீண்டும் சந்திப்போம்.