காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label பௌத்தம். Show all posts
Showing posts with label பௌத்தம். Show all posts

Thursday, August 2, 2012

மனிதனும் இருப்பும் - மறுபிறப்புப் பற்றி - சாரிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல்




மனித இருப்பு மற்றும் அதன் இயக்க நிலை குறித்து பௌத்தத்தின் கோட்பாடு
விஸ்தாரமானது. மனிதன் இறந்த பின் என்னவாக மாறுகிறான்? அவனின் இருப்பு என்ன? உடல் என்பது என்ன? புலன் செயல்பாடுகள் எதனை பொறுத்து அமைந்துள்ளன? என்பதற்கானகேள்விகளுக்கு பௌத்தம் பதில் கண்டது. புத்தரின் சமகலாத்தவர்கள் இது குறித்து இரு வேறு கருத்துடையவர்களாய் இருந்தார்கள். ஒரு பிரிவினர்கள் அமரத்வ வாதிகள் என்றும் மற்றொரு குழுவினர் நிலையாமைவாதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆன்மா இறப்பதில்லை. எனவே வாழ்க்கை அமரத்வமானது. அது மறுபிறப்பை புதுப்பிக்கப்படுகிறது என்றனர் அவர்கள். நிலையாமைவாதிகளின் கோட்பாடு உத்சேதவாதம் என்னும் ஒரே சொல்லாக தொகுக்கப்படுகிறது. மரணம் அனைத்துக்கும் இறுதியானது. மரணத்திற்கு பின் எஞ்சுவது எதுவுமில்லை.

புத்தர் மறுபிறப்பை நம்பினாரா? என்பது இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புத்தரின் கருத்துப்படி ஓர் உடலை உருவாக்கும் மூலங்கள் நான்காகும்.

1) ப்ரித்வி (2) அபா (3) தேஜ் (4) வாயு.

உடல் மரணமடையும் போது இந்த நான்கு மூலங்களுக்கும் என்ன நேர்கிறது? அவைகளும் மரணமற்ற உடலோடு சேர்ந்து மரணித்து விடுகின்றனவா? அவ்வாறு தான் நடைபெறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். இதனை மறுத்தார் புத்தர். அவை வெளியோடு கலந்து அதனை ஒத்த மூலங்களின் தொகுதியோடு இணைந்து விடுகின்றன என்றார்.

இந்த மிதக்கும் தொகுதியில் இருந்து நான்கு மூலங்கள் ஒன்றாக இணையும் போது ஒரு புதிய பிறப்பு தோன்றுகிறது. மறுபிறப்பு பற்றி புத்தர் கருதியது இதுவே. இந்த மூலங்கள் இறந்த ஒரே உடலிலிருந்தவையாயிருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்பந்தமுமில்லை. அவை இறந்த வெவ்வேறு உடல்களிலிருந்து சேர்ந்த தொகுதியிலிருந்து ஈர்க்கப்பட்டிருக்கலாம். உடல் இறக்கிறது. ஆனால் மூலகங்கள் எப்போதும் வாழ்கின்றன. இம்மாதிரியான மறுபிறப்பிலேயே புத்தர் நம்பிக்கை கொண்டிருந்தார். மஹாகோத்திதரோடு சாரிபுத்திரர் மேற்கொண்ட உரையாடலில் இந்த விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை புத்தர் சிராவஸ்தியில், அநாதபிண்டிகாரின் ஆசிரமத்திலுள்ள ஜேதவனச் சோலை விகாரில் தங்கியிருக்கையில், மாலை நேர தியானங்களிலிருந்து எழுந்த மஹாகோத்திதர் சாரிபுத்திரரிடம் வந்து தம்மைத் தொல்லைப்படுத்தும் சில கேள்விகளை தெளிவுப்படுத்தும்படி கேட்டார்.

மஹாகேத்திதர் : முதற்பேரானந்தம் தியானம் வெளிவிடும் காரணிகளும் தானிருத்திக் கொள்ளும் காரணிகளும் எத்தனை?

சாரிபுத்திரர் சொன்னார் : ஒவ்வொரு வகைக்கும் விட்டு விடுபவை ஐந்து அவை காமம், குரோதம், சோம்பல், கவலை மற்றும் சந்தேகம். உற்று நோக்கல், உயத்துணரல், ஊக்கமுடிடமை, திருப்தி மற்றும் ஒருமைப்பட்ட மனம் ஆகியவை நிலைத்திருப்பவை.

மஹாகோத்திதர் : பார்வை, சப்தம், சுவை, ஸ்பரிசம், வாசனை ஆகியவற்றின் ஐம்புலன்களை எடுத்துக் கொள்வோம்.ஒவ்வொன்றும் அதன் சுயதளத்திலும், வரம்பிலும் தனித்தும், வேறுபட்டும் இயங்குகின்றன. இவற்றின் அடிப்படை யாது? அவற்றின் ஐந்தளங்களையும், வரம்புகளையும் அனுபவிப்பது எது?

சாரிபுத்திரர் சொன்னார் மனம். அப்படியானால் புலன்களின் இந்த ஐந்து செயல்திறன்களும் எதனை பொறுத்துள்ளன?

உயர்சக்தியை என்றார் சாரிபுத்திரர்.

கோத்திதர் கேட்டார் உயிர்சக்தி எதனை பொறுத்துள்ளது?

வெப்பத்தை என்றார்.

வெப்பம் எதை பொறுத்துள்ளது?

உயிர்சக்தியை என்றார்.

கோத்திதர் கேட்டார் உயிர்சக்தி வெப்பதை பொறுத்துள்ளது என்கிறீர்கள். வெப்பம் உயிர்சக்தியை பொறுத்திருக்கிறது என்று கூறுகிறீர்கள். அதன் சரியான அர்த்தம் தான் என்ன?

நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டை கூறுகிறேன். ஒரு விளக்கில் நிகழ்வது போல் ஒளி சுடரை வெளிப்படுத்துகிறது, சுடர் ஒளியை வெளிப்படுத்துகிறது. அதே போல் உயிர்சக்தி வெப்பத்தைப் பொறுத்துள்ளது. வெப்பம் உயிர்சக்தியை பொறுத்துள்ளது. கோத்திதர் கேட்டார் உணர்ச்சியற்ற ஒரு மரத்துண்டைப் போல உடல் தூக்கி எறியப்படும் முன், அதை விட்டு எத்தனை பொருட்கள் சென்று விடுகின்றன.

சாரிபுத்திரர் சொன்னார் உயிர்சக்தி, வெப்பம், தன்னுணர்வு.

மஹாகோத்திதர் கேட்டார் காணும் உணர்வும்,. உணர்ச்சிகளும் செயலற்று நிற்க, உறங்குகிற பிக்குவிற்கும் உயிரற்ற பிணத்திற்குமிடையே என்ன வேறுபாடு?

சாரிபுத்திரர் சொன்னார் பிணத்தில் உடலின் வேதியல் இயங்குசக்திகளும், பேச்சும் மனனும் அடங்கிச் செயலற்று போவதோடு மட்டுமன்றி, உயிர்சக்தி அற்று விடுகிறது. ஆனால் உறங்கும் பிக்குவிடம், சுவாசம் குறைந்து, கூர்நோக்கும் பார்வையும் செயலற்று நின்றிருப்பினும், உயிர்சக்தி நிலவுகிறது. வெப்பம் நிலைத்திருக்கிறது மற்றும் செயல்திறன்கள் தெளிவாகஇருக்கின்றன. அநேகமாக இது தான் இறப்பு அல்லது அழிவு குறித்த தெளிவான விஷயமாகும்.

மஹா கோத்திதருக்கும் சாரிபுத்திரருக்கும் இடையே நடந்த மேற்கண்ட உரையாடல் மனிதனின் மறுபிறப்பு குறித்த தர்க்கத்திற்கு வருகிறது. சாரிபுத்திரர் இறுதியில் சொன்ன வெப்பம் என்பது சக்தி தான். சக்தியே உடலின் இருப்புக்கு காரணமாக அமைகிறது. ஒருவன் இறக்கும் போது இந்த சக்தியின் உற்பத்தி தடைப்பட்டு போகிறது. என்ன மாதிரியான சக்திகள் உடலிலிருந்து விடுபட்டு போயிருக்கின்றனவோஅம்மாதிரியான சக்திகள்பிரபஞ்ச வெளியானது மறுசுழற்சியால் ஆனது. விஞ்ஞானம் இதனை பலமுறை நிருபித்திருக்கிறது. ஆகவே நிலையாமை இருவித அம்சங்களை உடையது. ஒன்று அதன் ஆற்றல் உருவாக்கம், மற்றொன்று மிதந்து செல்லும் வெளியில் இருப்பின் புதிய சேர்க்கை. அநேகமாக அழிவின் இந்த இருவிதமான அம்சங்களை வைத்து தான் புத்தர் தாம் ஒரு முற்றான அழிவு நிலை வாதி அல்ல என்று கூறினார். ஆன்மாவை பொறுத்தவரை அவர் ஓர் அழிவு நிலை வாதி தான். பருப்பொருளைப் பொறுத்தவரை அவர் ஓர் அழிவுநிலை வாதி அல்ல. பருப்பொருளின் மீட்டுருவாக்கத்தில் அவர் நம்பிக்கை கொண்டாரே ஒழிய ஆன்மாவின் மறுபிறப்பில் அல்ல.

மனிதனின் மறுபிறப்பு குறித்த புத்தரின் கோட்பாடு தெளிவானதாகவும், இயங்கியலாகவும் உள்ளது. மிதந்து செல்லும் உடல்களுக்கும், நிலைக்கும் உடல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மறுபிறப்பு கோட்பாட்டோடு நன்றாகவே பொருந்துகிறது.





Monday, July 23, 2012

மதமும் தம்மமும் - மதம் குறித்த பெளத்த கோட்பாடு




மதம் என்ற சொல்லாடல் முழுமுதல் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் அது பல்வேறு விதமான குறிப்பீட்டிற்குள் போய் நின்றிருக்கிறது. இயற்கையின் சார்பாக வாழ்ந்த ஆரம்ப கால மனிதனுக்கு மதம் என்ற சொல்லாடல் அறியப்படாதிருந்தது. அவனின் நனவிலி மனத்திற்குள் கூட அது வரவில்லை. புறவய உலகம் அனிச்சையாக இருந்தது. இயற்கையின் நடவடிக்கைகளான இடி, மின்னல், மழை, வெள்ளம் போன்றவற்றை அவன் வெறும் புலன்சார் அனுபவமாகவே குறுக்கிப் பார்த்தான். இனக்குழுவாக வாழ்ந்த மனிதன் தன் அடையாளங்களை அங்கங்களற்ற உடல் மீது வரைந்து கொள்வதற்கு முன் இயற்கையின் நடவடிக்கைகள் அவனுக்குள் ஒருவித பயச்சிக்கலை உருவாக்கின. நமக்கு சமகாலத்தில் மழை என்பது தேவைகளை நிறைவேற்ற கூடியதாக இருக்கிறது. அவனுக்கு நேர்மாறாக இருந்தது. அவனால் அதனை புரிந்து கொள்ள முடியாமல் போன போது அதனை தணிவிக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டான். இவைகள் தான் மந்திரங்கள். இதனை நீட்டித்துக் கொண்டு பல்வேறான தணிவிப்புகள் நடந்தன. அவையே நம்பிக்கைகளாக, சடங்குகளாக, யாகங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டன. ஆரம்பல கால மனிதனால் விளங்கி கொள்ள முடியாமல் போன சில கருதுகோள்களுக்கு பின் காரணம் இருப்பதாக யூகித்தான். காரண-காரிய நிலையோடு இவற்றை உட்படுத்தினான். அவன் காரணமாக கருதியது இறைவன் என்று அர்த்தப்படுத்தப்பட்டது. இதன் பின் தான் இறைவன் உலகையும் மற்ற இனங்களையும் படைத்தான் என்பது உணரப்பட்டது. ஆன்மா, மறுபிறப்பு, கர்மவினை போன்ற கருதுகோள்கள் இதன் பின்னர் வெளிவந்தன. உலகின் இருபெரும் மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் மூல கருத்தியல் இவ்வாறானது தான். அறிவின் படைப்பு ஏற்படுவதற்கு முன் அறியப்படாத ஒன்று தான் இருந்தது. விலக்கப்பட்ட கனி என்பதிலிருந்து தொடங்கும் அவற்றின் மூலக்கருத்தியல் அக்கனியை உண்டது மூலம் ஆதாம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். புறப்பொருட்கள் மீதான நம் புலன்களின் செயல்பாடே அறிவு என்பது. இங்கு கனி என்பது புறப்பொருள். அதை உண்பது என்பது புலன் நடவடிக்கை. அறிவின் படைப்பே இது தான். சாத்தான் என்பது புலணுணர்வின் தூண்டல். மனித உடலின் இருப்பு இதிலிருந்து தான் ஆரம்பமாயிற்று. மத்தின் தோற்றம் பற்றிய மேற்கண்ட அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் புத்தர். புத்தர் தன் கோட்பாட்டிற்கு தம்மம் என்று பெயாிட்டார். மதம் - அதாவது ரிலீஜியன்ஸ் என்ற சொல் குறிப்பிடுவது இவ்வுலகம் சாராது. மதம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவைப் பற்றி குறிப்பிடும். ஆனால் தம்மம் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயான உறவைப் பற்றி குறிப்பிடும். மதம் மறு உலகைப் பற்றி குறிப்பிடும். தம்மம் இவ்வுலகைப் பற்றி குறிப்பிடும்தம்மம் என்பதே பிரக்ஞை தான். மதம் பிரக்ஞையற்றது. மதத்தின் நோக்கம் வேறு. தம்மத்தின் நோக்கம் வேறு. ஒரு தடவை புத்தருக்கும் சுநக்கத்தருக்கும் இது குறித்து உரையாடல் நடந்தது. சுநக்கத்தர் புத்தரிடம் இப்போது நான் மேன்மை தங்கிய தங்களை விட்டு நீங்கி விடுகிறேன். இனி தங்களை என் போதகராக நான் ஏற்க போவதில்லை.

அதற்கு புத்தர் சுநக்கத்தரே நான் எப்போதாவது தங்களை என் சீடராக இருக்கும்படி அழைத்ததுண்டா ?

இல்லை. அவ்வாறு தாங்கள் என்னை அழைத்ததில்லை.

நல்லது. மேன்மை தங்கிய கோதமரே* தாங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்கள் எதையும் எனக்கு நிகழ்த்தவில்லையே*

சுநக்கத்தரே* நான் தங்களிடம் எப்போதாவது வாருங்கள் சுநக்கதரே* என்னை தங்கள் ஆசானாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்களை உமக்கு நிகழ்த்தி காட்டுகிறேன் என்று சொன்னதுண்டா ? இல்லை* தாங்கள் அவ்வாறு கூறியதில்லை. அல்லது நீங்கள் மேன்தங்கிய புத்தரே* எனக்காக சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்தி காட்டுங்கள் என்று கேட்டதுண்டா ? இல்லை. நான் அவ்வாறு கேட்டதில்லை. நானும் உங்களிடம் அவ்வாறு கூறியதில்லை. நீங்களும் என்னிடம் அதைக் கேட்டதில்லை. பின் என்னை விட்டு நீங்குவதைப் பற்றி பேச நீங்கள் யார் ? நான் யார் ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டாலும் நிகழ்த்தப்படாவிட்டாலும் நான் தம்மத்தை கற்றுத் தருவதன் நோக்கம். தீங்கு செய்பவன் தீங்கை அழிப்பது தானே*. ஆம்* அவ்வாறு நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் மேன்மை தங்கியவர் கற்றுத் தருவதன் நோக்கம் அது தான். ஆனாலும் மேன்மை தங்கிய புத்தரான நீங்கள் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி எனக்கு எதுவும் வெளிப்படுத்தவில்லையே. சுநக்கத்தரே* எப்போதாவது நான் உங்களிடம் வாரும் சுநக்கத்தரே, என் சீடராக நீங்கள் இருப்பின் பிரபஞ்ச பொருட்களின் தோற்றத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்று கூறியதுண்டா ?

இல்லை. நீங்கள் அவ்வாறு கூறியதில்லை. நானும் உங்களிடம் அவ்வாறு கூறியதில்லை. நீங்களும் என்னிடம் அவ்வாறு கேட்டதில்லை. பின் என்னை விட்டு நீங்குவதைப் பற்றி பேச நீங்கள் யார் ? நான் யார் ?

சுநக்கத்தரே* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். பிரபஞ்ச பொருட்களின் தோற்றம் குறித்து வெளிப்படுத்தப்பட்டாலும், வெளிப்படுத்தப்படாவிட்டாலும் நான் தம்மத்தை போதிப்பதன் நோக்கம் அதுவல்ல. தம்த்துக்கு அது முக்கியமானதுமல்ல. எல்லா மதங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கருத்துருவங்களை கொண்டுள்ளன. மதத்தின் நோக்கம் உலகின் தோற்றத்தை விளக்குவது. ஆனால் தம்மத்தின் நோக்கம் உலகை புனரமைப்பது. மார்க்சின் உலகை மாற்றியமைத்தல் என்பது இது தான். மதம் என்ற சொல்லாடலுக்கு எதிர்மறையாக இங்கு மதசார்பின்மை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ளநஉரடயச என்ற சொல்லுக்கு இவ்வுலகம் சார்ந்தது என்று அர்த்தம். அதன் காரணமாகவே இங்கு சிலர் மதநீக்கம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். மதத்திற்கு எப்பொழுதுமே சதுரவடிவம் என்ற ஒன்று உண்டு. அதற்குள் நின்று தான் அது தன் கருத்தியலை படைக்கும். இம்மாதிரியான சதுர எல்லைகள் மேலும் இறுகும் போது மதம் தன்னுடைய யதார்த்த நிலையிலிருந்து நிறுவனம் என்ற தன்மையை அடைந்து விடும். புத்தர் தன் கோட்பாட்டிற்கு இதனால் தான் தம்மம் என்று பெயரிட்டார். இன்று பெளத்தமே போலிவாத வடிவம் எடுத்து இனசுத்திகரிப்பு செய்யும் சூழலுக்கு ஆட்பட்டிருக்கிறது என்பது சாதாரணத்தனமானதல்ல. மதம் என்ற நிலையில் நிறுவனமாக்கலுக்கு இஸ்லாமும் ஆட்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஊடகங்கள் அங்குள்ள கிறிஸ்தவத்தின் நிறுவனத் தன்மையை அங்கீகரித்து ஒற்றை மயமான சூழ்நிலையின் விளைபொருளாக இஸ்லாமை சித்திகாிக்கின்றன. ஒரு கோட்பாடு நிறுவனத் தன்மையை அடையும் போது தன்னை தாண்டிய அந்நியப்பட்ட ஒன்றையே அது அர்த்தப்படுத்தும். கிரேக்க மற்றும் ரோமானிய வரலாறுகளிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் இது தான். ஆக பெளத்தம் என்பதே தம்மம். அது மதமல்ல என்பதற்கான புரிதலை நாம் உள்வாங்கி கொள்ள வேண்டியதிருக்கிறது.